Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, September 14, 2024
Please specify the group
Home > Featured > ஜகத்குரு ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாறு – ஒரு (வி)சித்திர அனுபவம்!

ஜகத்குரு ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாறு – ஒரு (வி)சித்திர அனுபவம்!

print
காலடி & மதுரை பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு சென்னை திரும்பிவிட்டோம். மதியம் அலுவலகம் வந்துவிட்டோம். காலடி பயண அனுபவத்தை எழுதிவருகிறோம். இந்த பயணத்தில் நாம் சேகரித்த தகவல்களையும் ஏற்கனவே தொகுத்து வைத்திருந்த தகவல்களையும், ஒருங்கிணைத்து எழுத வேண்டிய சவாலான பணி. கரும்பு தின்ன நமக்கு கசக்குமா? ஆனால் நேரம் தான் பிடிக்கிறது. இன்று எப்படியாவது அந்த பதிவை அளித்திட முயற்சிக்கிறோம். அல்லது அக்ஷய திரிதியை அனுபவங்கள் குறித்த பதிவு இடம்பெறும்.

இது தான் காலடியில் உள்ள பூர்ணா நதி. ஆதிசங்கரர் துறவறம் மேற்கொள்ள நடத்திய 'முதலை காலை கவ்விய' நாடகம் இங்கு தான் அரங்கேறியது. இந்த இடத்திற்கு CROCODILE GHAT என்று பெயர். எத்தனை அழகான நதி தெரியுமா?
இது தான் காலடியில் உள்ள பூர்ணா நதி. ஆதிசங்கரர் துறவறம் மேற்கொள்ள நடத்திய ‘முதலை காலை கவ்விய’ நாடகம் இங்கு தான் அரங்கேறியது. இந்த இடத்திற்கு CROCODILE GHAT என்று பெயர். எத்தனை அழகான நதி தெரியுமா?

இன்று ஆதிசங்கரர் ஜெயந்தி என்பதால் இப்போதைக்கு இந்த பதிவை அளிக்கிறோம். மற்றபடி, காலடி பயணத்தில் பல சுவாரஸ்யமான வரலாற்று நிகழ்வுகள் கிடைத்தன. சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள் நிகழ்ந்தன. சனாதன தர்மத்தின் விதைகளாக விளங்கும் பல இடங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Sankara Temple

மேலே நீங்கள் காண்பது அவரது அவதார பூமியில் அவருக்கு எழுப்பப்பட்டுள்ள கோவில். இந்த கோவில் சரியாக 110 வருடங்களுக்கு முன்னர் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தால் கட்டப்பட்டது.

உள்ளே சங்கரரை ஈன்றெடுத்த அவரது தாய் ஆர்யாம்பாளின் சமாதி உள்ளது.

 ஆர்யாம்பாள் தினமும் தரிசனம் செய்த கிருஷ்ணர் ஆலயம்!
ஆர்யாம்பாள் தினமும் தரிசனம் செய்த கிருஷ்ணர் ஆலயம்!

நேற்று மாலை மதுரையில் காலை அம்மையப்பன் தரிசனம். மாலை சித்திரை திருவிழா உற்சவத்தில் பங்கேற்று புகைப்படம் எடுக்கும் பாக்கியம் கிடைத்தது. தலைவரின் விழாவில் புகைப்படம் எடுப்பதென்றால் அது எத்தனை இனிமையான விஷயம்? அடித்து நொறுக்கிவிட்டோம்.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருவீதி உலா!
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருவீதி உலா!
திருவீதி உலாவில் முதலாவதாக வந்த யானையும் ஒட்டகமும்!
திருவீதி உலாவில் முதலாவதாக வந்த யானையும் ஒட்டகமும்!

அடுத்தடுத்து மிகப் பெரிய விருந்துகள் உங்களுக்கு காத்திருக்கின்றன. பதிவுகள் லேட்டானாலும் லேட்டஸ்ட்டாக வரும் என்பது மட்டும் உறுதி. சற்று பொறுங்கள்… !

ஜகத்குரு ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாறு – ஒரு (வி)சித்திர அனுபவம்!

ஷண்மதங்களை ஸ்தாபித்து அறியாமை இருளை அகற்றிய ஞானசூரியன் ஸ்ரீ ஆதிசங்கரர். சங்கரரின் அவதாரம் மட்டும் சரியான நேரத்தில் நிகழவில்லை என்றால் இந்து மதம் என்னவாகியிருக்கும் என்பதை கற்பனை கூட செய்துபார்க்கமுடியவில்லை.

எட்டாம் நூற்றாண்டில் மிகவும் நலிவுற்றிருந்த சனாதன தர்மத்தின் மறுமலர்ச்சிக்காக விஷ்ணு மற்றும் ப்ரஹ்மாவை முன்னிலையாக வைத்துக் கொண்டு தேவதைகள் மற்றும் ரிஷிகள் கயிலாயத்திற்குச் சென்று ஸ்ரீபரமேஸ்வரனைப் ப்ரார்த்தனை செய்தனர். பரமேஸ்வரன் அவர்களுடைய வேண்டுகோளை ஏற்றுப் பூலோகத்தில் அவதாரம் செய்வதாக தெரிவித்தார். இது சங்கராசாரியாரின் அவதாரத்திற்கு மூல காரணமாயிற்று.

2.கேரளத்தில் பூர்ணா நதிக் கரையிலிருந்த காலடி என்ற அக்ரஹாரத்தில் இருந்த சிவகுரு – ஆர்யாம்பாள் தம்பதி திருச்சூரின் வ்ருஷாசலேஸ்வரனிடம் சந்ததிக்காக வேண்டிக் கொண்டிருந்தார்கள்.
3.தர்மிஷ்டர்களான அந்தத் தம்பதியின் பக்திக்கு மகிழ்ந்த ஈஸ்வரன் கனவில் தரிசனம் அளித்து அவர்களை அனுக்ரஹித்தார்.
4.சிவனுடைய ஆசீர்வாதத்தால் பிறந்த குழந்தைக்குச் சிவகுரு தம்பதி சங்கரன் என்று நாம கரணம் செய்தார்கள்.
5.ஐந்தாவது வயதில் ஸ்ரீ சங்கரருக்கு உபநயன ஸம்ஸ்காரம் நடைபெற்றது.
6.உபநயனத்திற்குப் பிறகு பால சங்கரர் குருகுலவாஸம் செய்து கொண்டு பிக்ஷைக்காக வீடு வீடாகச் சென்று ப்ரஹ்மசர்ய வ்ரதத்தைக் கடைப்பிடித்தார்.
7.வடுவான ஸ்ரீ சங்கரரை கதன்வன் தர்சனம் செய்து தன் இலக்கிய ஏடுகளை அர்ப்பணித்தான்.
8.பூர்ணா நதிக்கு ஸ்நானத்திற்காகப் புறப்பட்டுச் சோர்வடைந்த தாயாரைப் பரிவுடன் ஸ்ரீ சங்கரர் தேற்றுகிறார்.
9.ஸ்ரீ சங்கரர் கடவுளைப் ப்ரார்த்தனை செய்து பூர்ணா நதி வீட்டிற்கு அருகில் ஓடுமாறு செய்து தாயின் தினசரி நதி ஸ்நானத்திற்கு அனுகூலத்தை ஏற்படுத்தினார்.
10.முதலை கால் பிடித்த காரணத்தைக் காட்டி  ஸ்ரீ சங்கரர் தாயாரின் அனுமதியைப் பெற்று அவசர சந்யாஸத்தை ஏற்றுக் கொண்டார்.
11.க்ரம சந்யாஸத்திற்குப் புறப்படுவதற்கு முன்பு ஸ்ரீ சங்கரர் தாயாரின் ஆசீர்வாதத்தைப் பெற்றார்.
12.நர்மதா நதிக் கரையிலிருக்கும் ஸ்ரீ கோவிந்த பகவத்பாதரின் சந்நிதியில் ஸ்ரீ சங்கரர் க்ரம சன்யாஸத்தை ஏற்றுக் கொண்டு வேதாந்த அத்யயனம் செய்தார்.
13.கரை புரண்டு ஓடத் தொடங்கிய நதியின் வெள்ளப் பெருக்கை ஸ்ரீசங்கரர் தன் கமண்டலத்தில் அடக்கினார்.
14.காசியில் சிஷ்யர் சநந்தனனுக்கு குரு ஸ்ரீ சங்கரருடைய க்ருபா கடாக்ஷம். ஸநந்தனர் ஆசார்யரை நினைத்துக் கொண்டு பொங்கி ஓடும் கங்கா நதியைக் கடக்கும் போது ஒவ்வோர் அடிக்கும் ஒவ்வொரு தாமரை தோன்றி ஆதாரமாகியது. சனந்தனர் நதியைக் கடந்து வந்தார். அன்று முதல் சனந்தனர் பத்மபாதர் என்றே அழைக்கப்பட்டார்.
15.ஸ்ரீ சங்கரர் வாராணஸியில் இருக்கும் பொழுது பரமேஸ்வரன் சண்டாளனின் ரூபத்தில் வழியில் குறுக்கிட்ட போது உண்மையை அறிந்த ஸ்ரீ சங்கரர் மனீஷா பஞ்சக ஸ்தோத்திரத்தை இயற்றினார்.
16.ஸ்ரீ சங்கரரின் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களைப் பார்த்து முழுமையாக மகிழ்வுற்ற ஸ்ரீ வேதவ்யாஸர் ஸ்ரீ சங்கரரை அனுக்ரஹித்தார்.
17.ஆச்சார்யாருக்குச் செய்த அபராதத்திற்குப் ப்ராயச்சித்தமாக துஷாக்னியில் (எரியும் உமியில்) எரிந்து கொண்டிருந்த குமாரில பட்டரை ஸ்ரீ சங்கரர் சந்தித்தார்.
18.குமாரிலபட்டரின் சிஷ்யரும் கர்ம வீரருமான மண்டனமிச்ர (விஸ்வரூப)ருக்கும் ஸ்ரீ சங்கரருக்கும் வாதமேற்பட்டு அந்த வாதத்தில் சங்கரர் வெற்றியடைந்தார்.
19.வாதத்தின் நியமப்படி மண்டனமிச்ரர் ஸ்ரீ சங்கரரிடமிருந்து சந்யாஸத்தை ஏற்றுக் கொண்டு சுரேச்வரர் என்ற பெயரை அடைந்தார்.
20.பத்மபாதரின் வேண்டுதலால் ஆனந்தமடைந்த நரசிம்ம சுவாமி சிம்ம ரூபத்தில் வந்து, தலை வெட்டுவதற்கு வந்த காபாலிகனை சம்ஹாரம் செய்து ஸ்ரீ சங்கரரைக் காப்பாற்றினார்.
21.யாத்திரை சமயத்தில் ஸ்ரீ சங்கரர் கொல்லூர் மூகாம்பிகை கோவில் அருகில் இருக்கும் ஸ்ரீ பலி கிராமத்தில் ஊமையாயிருந்த பாலகனைச் சிஷ்யனாக ஏற்றுக் கொண்டு, அவன் பரமாத்ம தத்துவத்தை உள்ளங்கையில் இருக்கும் நெல்லிக் கனி போல் தெள்ளத் தெளிவாகச் சொன்னதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்து ஹஸ்தாமலகர் என்ற யோகப் பட்டத்தினால் சந்யாஸாஸ்ரமத்தை அனுக்ரஹித்தார்.
22.ஸ்ரீ சங்கரர் கிரி என்ற சிஷ்யனின் சேவைக்கு மகிழ்ச்சியடைந்து முழுமையாக அனுக்ரஹித்தார். தோடக விருத்தத்தின் பத்யங்களால் ஆச்சார்யரை ஸ்துதி செய்த சிஷ்யன் கிரிக்குத் தோடகர் என்ற பெயருடன் சந்யாஸத்தைக் கொடுத்தார்.
23.சிருங்கேரியில் கடும் வெயிலில் ப்ரசவ வேதனையால் தவித்துக் கொண்டிருந்த தவளை ஒன்றிற்கு அதன் இயற்கை எதிரியான பாம்பு தன் படத்தால் நிழலைக் கொடுத்துக் கொண்டு இருந்த காட்சியைப் பார்த்த ஸ்ரீ சங்கரர் அங்கே தம்முடைய முதன் முதலான பீடத்தை (தக்ஷிணாம்நாய ஸ்ரீ சாரதா பீடம்) நிறுவினார்.
24.மரணப்படுக்கையிலிருந்த தன் தாயாரை ஸ்ரீ சங்கரர் விஷ்ணு பதத்தை அடையச் செய்தார்.
25.சுதன்வராஜன் தன்னுடைய இலக்கிய ஏடுகள் தீயில் எரிந்தன என்று ஸ்ரீ சங்கரரிடம் அறிவித்துக் கொண்ட பொழுது தன்னுடைய அற்புதமான நினைவாற்றலால் சிறு வயதில் கேட்ட அந்த இலக்கியங்களை முன்பு இருந்தவாறு சுதன்வ ராஜனுக்குச் சொல்லி அவனை அனுக்ரஹித்தார்.
26.ஸ்ரீ சங்கரர் காஷ்மீரத்தில் ஸர்வக்ஞ பீடத்தில் அமர்ந்தார்.
27.தன்னுடைய அவதாரத்தின் கடமைகள் முடிந்த பிறகு ஸ்ரீ சங்கரர் இமயமலையில் கேதாரத்தில் சிஷ்யர்களுக்கு இறுதியாகக் காட்சி அளித்து மறைந்தார்.

6 thoughts on “ஜகத்குரு ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாறு – ஒரு (வி)சித்திர அனுபவம்!

  1. ஸ்ரீ ஆதி சங்கரரின் ஜெயந்தி அன்று பொருத்தமான பதிவு. படிக்கும் போதே சிலிர்த்து விட்டது. உங்களின் மூலம் இன்று அருமையான தரிசனமும் வாழ்க்கை வரலாறும் கிடைக்கப்பெற்றோம்.

    நன்றி சுந்தர் சார்.

    வாழ்த்துக்கள்.

  2. குருவே சரணம்…………….. பரமகுரு சங்கரரின் திவ்ய சரிதையை குரு வாரம் மற்றும் சங்கர ஜெயந்தியன்று அறிந்து கொள்ளவும் அவர் வாழ்ந்த பூமியை தரிசிக்கவும் நாங்கள் தன்யர்கள் ஆனோம்………..

    தங்களின் காலடி பயணம் சிறப்பாக அமைந்ததை அறிந்து மகிழ்கிறோம்…….. இந்த இனிய நாளில் குருவின் சரிதையை எங்களுக்கு அளித்தமைக்காக நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்……..

    மதுரை அம்மையப்பர் ஆலய தரிசனம் மற்றும் சித்திரைத் திருவிழா பற்றிய விரிவான பதிவுகளை எதிர்நோக்கியுள்ளோம்………

    குருவே சரணம்……..

  3. ஆதி சங்கரர் வாழ்க்கை வரலாறு படிக்க படிக்க மெய் சிலிர்த்தோம்.
    படங்களுடன் மிகவும் இனிமையாக இருந்தது.
    சிறுக சிறுக தெரிந்த கதையாக இருந்தாலும் படங்களுடன் நீங்கள் கொடுத்த விளக்கமும் நம் பார்த்த பஜ கோவிந்தம் நாடகமும் கண் முன்னால் படமாக விரிந்தது.
    அந்த கால கோவில்களில் சுவற்றில் மற்றும் தலைக்கு மேல் உள்ள சுவற்றில் படமும் விளக்கமும் பார்த்த மாதிரியான உணர்வை இந்த பதிவு கொடுத்தது.
    நன்றி

  4. அழகான பரவசமளிக்கும் பதிவு . படங்களும் அருமை

    பிரியதர்சினி

  5. சுந்தர் அண்ணா..

    குரு தரிசன பதிவு வருமா ? என்று காத்திருந்த போது, வழக்கமான பதிவாக இல்லாமல், சித்திரங்கள் மூலமாய் அமைந்த இந்த பதிவு என்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது என்றே
    சொல்ல வேண்டும்.

    மிக மிக அருமை அண்ணா..

    குருவே சரனம.

    மிக்க நன்றி அண்ணா.

  6. பதிவை படிக்கும் பொழுதே சிலிர்பூட்டுவதாக உள்ளது. ஒவ்வொரு படமும் ஒன்றை ஒன்று விஞ்சி நிற்கிறது. நாம் ஆதி சங்கரர் காலத்தில் வாழ்ந்து இருக்க மாட்டோமா என்ற எண்ணம் மனதில் எழுகிறது. பஜகோவிந்தம் நாடகத்தை பார்த்து விட்டு இந்த பதிவை படித்ததால் இந்த பதிவு என் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தது.

    தங்கள் மதுரை பயணமும், மீனாக்ஷி அம்மன் கோவில் தரிசனமும் , சித்திரை திருவிழாவும் என்றும் மறக்க முடியாது.
    தங்கள் மதுரை மற்றும் காலடி பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    நன்றி
    உமா வெங்கட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *