Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, April 13, 2024
Please specify the group
Home > Featured > குழந்தை வடிவில் வந்து குழந்தையை காத்த காமாக்ஷி!

குழந்தை வடிவில் வந்து குழந்தையை காத்த காமாக்ஷி!

print
Maha Periyava1ஹா பெரியவா அவர்கள் பக்தர்கள் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களை பற்றிய படிக்கும்போது நம்மையுமறியாமல் கண்களில் நீர் கசிந்துவிடுவதுண்டு. எனக்கு பலமுறை அது போல ஏற்பட்டிருக்கிறது. நம் வாசகர்களுக்கும் அப்படியே. ஜாதி மத பேதமின்றி அனைவருக்கும் அந்த கருணைக் கடல் அருள் மழை பொழிந்தது, பொழிந்துவருகிறது.

அவரையே கதி என்று சரணடைந்த பக்தர்களுக்காக பல நேரங்களில் இறைவனிடம் மன்றாடி பல மகத்தான விஷயங்களை சாதித்து தந்துள்ளார். இத்தனைக்கும் அந்த மகான் தனக்கென்று இறைவனிடம் எதுவுமே கேட்டதில்லை. எனவே கேட்பவர் கேட்கும்போது அதுவும் மற்றவர்களுக்காக கேட்கும்போது இறைவன் அதை கொடுத்துத் தானே ஆகவேண்டும்.

நண்பர் ராம்ஜி என்பவர் மஹா  பெரியவா குறித்து தான் படித்து உருகிய ஒரு சம்பவத்தை நமக்கு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்.  நீங்களும் படித்து உருக… இதோ!

காமாக்ஷியை தர்சனம் பண்ணிட்டுப் போ!

பெரியவாளை தர்சனம் செய்வதற்காக ஒரு தம்பதி தங்கள் ஐந்து வயதுப் பெண்குழந்தையுடன் காரில் காஞ்சிபுரம் கிளம்பினார்கள். அவர்களோடு அந்த பக்தரின்அப்பாவும் கிளம்பினார். சுங்குவார் சத்திரம் அருகில் வரும்போது, கூட வந்ததாத்தாவுக்கு சிறுநீர் கழிக்க வேண்டியிருந்ததால், ரோடின் ஒரு ஓரமாக வண்டியைநிறுத்திவிட்டு, அப்பாவும் மகனும் ரோடைக் க்ராஸ் பண்ணி எதிர் பக்கம் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.

ஐந்து செகண்டுக்கு ஒருமுறை குறைந்தது இரண்டு வண்டிகளாவது போய்க்கொண்டிருந்தன. காருக்கு வெளியே தன் அம்மாவுடன் நின்று கொண்டிருந்த குழந்தை,எதிர்பக்கம் வரும் தாத்தாவை பார்த்து விட்டு, ஏதோ இப்போதுதான் புதுஸாகப்பார்ப்பது போல், “தாத்தா!..” என்று கத்திக் கொண்டு, திடீரென்று ஒரேயடியாகத் துள்ளிக்கொண்டு ரோடை க்ராஸ் செய்ய ஆரம்பித்தாள் ! வண்டிகளைப் பற்றிய பயமே அந்தக்குழந்தைக்கு இல்லை! அம்மாவும் அப்பாவும் தாத்தாவும் பதறிப் போன சமயம்,வேகமாக வந்த லாரி, அந்தக் குழந்தையை தூக்கி வீசி எறிந்தது! கண் இமைக்கும்நேரத்தில் நடந்து விட்ட இந்த விபத்து அத்தனை பேரையும் ஸ்தம்பிக்கவைத்துவிட்டது!

அலறிக்கொண்டு குழந்தையைத் தூக்கிக் கொண்டு காஞ்சிபுரத்தில் ஒரு ஹாஸ்பிடலில் சேர்த்தனர்.

“கொழந்தையை ஒடனே மெட்ராஸுக்கு கொண்டு போய்டுங்க! ரொம்ப ஸீரியஸ்கேஸ்!..” டாக்டர்கள் கைவிரித்து விட்டு, ஏதோ முதலுதவியைச் செய்தனர்.விஷயத்தை கேள்விப்பட்டு, காஞ்சிபுரத்தில் இருந்த அவர்களுடைய சொந்தக்காரர்ஆஸ்பத்ரிக்கு ஓடி வந்து குழந்தையைப் பார்த்து விட்டு, நேராக பெரியவாளிடம்ஓடினார்.

“பெரியவாளைப் பாக்கறதுக்காக வர்றச்சே வழில கொழந்தை மேல லாரி மோதிடுத்து!டாக்டர்கள் கைவிரிச்சுட்டா! பெரியவாதான் கொழந்தையைக் காப்பாத்தணும்..”அழுதார்.

“என்னைப் பாக்க வரச்சேயா ஆக்ஸிடென்ட் ஆய்டுத்து?…” என்று கேட்டுவிட்டு, சற்றுநேரம் கண்களை மூடிக் கொண்டிருந்தார். அப்புறம் பக்கத்தில் இருந்த ஒரு ஆப்பிள்பழத்தை எடுத்து அவர் கையில் ப்ரஸாதமாகப் போட்டுவிட்டு,

sri_kamakshi_amman“மெட்ராஸுக்கு கொழந்தையைப் பாக்க போறச்சே இதைக் குடு. போறதுக்குமுன்னாடி, காமாக்ஷியை தர்சனம் பண்ணிட்டுப் போ!…” என்று உத்தரவிட்டார்.உறவினரும் உடனேயே காமாக்ஷி கோவிலுக்குச் சென்று தர்சனம் பண்ணப் போனார்.ஆனால், நடை சார்த்தும் நேரம் என்பதால், அவரால் ஒரே ஒரு க்ஷணம் மட்டுமேஅம்பாளை தர்சனம் பண்ண முடிந்தது.

நெய்தீபச் சுடரில் ஸர்வாலங்கார பூஷிதையாக பச்சைப் பட்டுப் புடவையுடன், அருள்பொழியும் முகத்தோடும் அமர்ந்திருந்த அம்பாளை ஒரு க்ஷணமே தர்சனம்பண்ணினாலும், மனஸில் அந்தக் கோலத்தை இருத்தியபடி மெட்ராஸுக்கு பஸ்ஏறினார். நேராக ஹாஸ்பிடலுக்கு சென்று, ICU வில் இருந்த குழந்தையின்தலைமாட்டில் பெரியவா அனுக்ரஹித்துக் கொடுத்த ஆப்பிளை எப்படியோ வைத்துவிட்டார். அழுது கொண்டிருந்த பெற்றோரிடம் பெரியவாளிடம் விஷயத்தைச்சொன்னதைப் பற்றி கூறினார்.

“கொழந்தை “கோமா”க்குப் போய்ட்டா! மணிக்கணக்கோ, நாள்கணக்கோன்னு டாக்டர்சொல்றார்….” அம்மா கதறினாள். சில மணி நேரங்கள் கழிந்தது. ICU வாசலில்குடும்பமே அமர்ந்திருந்தது.

இதோ! குழந்தையின் உடலில் சிறு சிறு அசைவுகள்! “கோமா”;மணிக்கணக்கு; நாள்கணக்கு என்று பெரிய பெரிய டாக்டர்கள்சொன்னதையெல்லாம் அடித்து த்வம்ஸம் பண்ணிவிட்டு, “அம்மா!…”என்று குழந்தையை அழைக்க வைத்தது தெய்வத்தின்அனுக்ரஹம் ! அழுகையெல்லாம் நிமிஷத்தில் காணாமல் போனது. ஓரிரண்டுநாட்களில் ஓரளவு நன்றாகத் தேறிய குழந்தையைத் தனி ரூமுக்கு ஷிப்ட்பண்ணினார்கள். ஆப்பிள் கொண்டு வந்த உறவினரும் கூடவே இருந்தார்.

“அம்மா…..” தீனமாகக் கூப்பிட்டாள் குழந்தை.

“என்னம்மா?….”

“எங்கூட இருந்த பாப்பா எங்கேம்மா?…”

Bala Tiripura Sundari“பாப்பாவா? இங்க ஏதும்மா பாப்பா? நீ ஆஸ்பத்ரிலன்னா இருக்கே! இங்க பாப்பா யாரும்இல்லியேடா!..”

குழந்தை சிணுங்கினாள். “அந்தப் பாப்பா எங்கேம்மா? எனக்கு அவகூடவெளையாடணும்..”

ஏதோ அரைகுறை ஞாபகத்தில் உளறுகிறாள் என்று எண்ணி அவளைசமாதானப்படுத்த வேண்டி “எந்தப் பாப்பா? எப்டி இருந்தா சொல்லு! நான் கூட்டிண்டுவரேன்” என்றாள்.

“பச்சைப் பட்டுப்பாவாடை கட்டிண்டு எங்கூடவே இருந்தாளே! அந்த பாப்பாதான்!…”

மற்றபேருக்கு புரியாவிட்டாலும், ஆப்பிள் கொண்டு வந்த உறவினருக்கு பொட்டில்அடித்தார்ப்போல் புரிந்தது!

“போறதுக்கு முன்னாடி, காமாக்ஷியை தர்சனம் பண்ணிட்டுப் போ!…” பெரியவாசொன்னதும், அம்பாள் ஒரு க்ஷணமே தர்சனம் தந்தாலும், ஹ்ருதயத்தை விட்டுஅகலாவண்ணம், பச்சைப் பட்டுப் புடவையில் காஷி அளித்ததும் அவருக்குப் புரிந்தது;மேனியெல்லாம் புல்லரித்தது!

பெரியவா சொன்னதுக்கு எத்தனை மஹத்தான அர்த்தம்! அம்பாளே அந்தக்குழந்தைக்கு ஒரு குழந்தை உருவில் வந்து கூட விளையாடி, அவளுக்குஉயிரூட்டியிருக்கிறாள்!

உறவினர், மற்றவர்களுக்கு இதைச் சொன்னதும், திக்கற்றோருக்கு துணை வரும்பெரியவா இருந்த காஞ்சிபுரம் நோக்கி விழுந்து விழுந்து நமஸ்கரித்தனர்.

[END]

12 thoughts on “குழந்தை வடிவில் வந்து குழந்தையை காத்த காமாக்ஷி!

 1. நம்பினோர் கைவிடபடார் இது நான்கு மறை தீர்ப்பு. இதற்கு எடுத்துகாட்டு தான் இக்கட்டுரை.ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.

  மோகன் முருகப்ரியன்.

 2. கண்களில் கண்ணீர், உடலில் புல்லரிப்பு, இனம் புரியாத சிலிர்ப்பு. வார்த்தைகள் இல்லை. மனதார காஞ்சி காமாட்சியை தரிசனம் செய்தேன். மனம் கரைந்துவிட்டது சுந்தர். மகா பெரியவாளின் கருணைக்கு எல்லையே இல்லை. ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர!

 3. குருவருள் இல்லையேல் திருவருள் பெறவே

  குருவாரத்தில் (வியாழகிழமை) மஹா குருவின் அருளை பற்றி மேலும் தெரிந்து கொண்டது மிகவும் பாக்கியம்.

  சத்குருவே சரணம்.

  நன்றி
  ப.சங்கரநாராயணன்

 4. டியர் சுந்தர்ஜி

  ஹாப்பி morning டு ரைட் mantra readers

  படிக்கும் பொழுதே மெய் சிலிர்கிறது. அந்த குழந்தை எவ்வளவு மாபெரும் தவம் செய்திருக்கிறது அன்னை காமாட்சியை காண.

  இன்று காலையில் தான் ஹரியிடம் சொல்லி கொண்டிருந்தேன் காஞ்சிபுரம் சென்று மஹா பெரியவரையும், அன்னை காமாட்சியையும் தரிசிக்க வேண்டும் என்று. இன்று உங்கள் பதிவின் மூலமாக அன்னையை தரிசித்து விட்டேன்.

  Tons of thanks to you
  உமா

 5. நம்பினோர் கெடுவதில்லை.
  இது நான்குமுறை தீர்ப்பு

  கண்ணில் நீர் வரவழைத்த, மனதில் நெகிழ்சியை உண்டாக்கிய பதிவு.

  நன்றி

 6. சுந்தர்ஜி

  படித்தவுடன் கண்கள் குளமாகியது. பெரியவா மஹிமைகளின் அளவிற்கு ஈடு ஏது? இன்று காலையில் தான் காமாட்சி முன்பும் மஹா பெரியவா முன்பும் என் வேண்டுதலுக்கு புலம்பி கண்ணீர் விட்டு வந்தேன். வந்ததும் நம் தளத்தில் இருவர் தரிசனமும் மகிமையுடன். எனக்காகவே போட்ட பதிவு மாதிரி இருந்தது. என் குறை நிவர்த்தி ஆகிவிடும். நன்றி

 7. very excellent article. இனிமேல் நானும் பெரியவாவின் பக்தை.
  நன்றி. வள்ளி

 8. Sundar சார் வணக்கம்

  படிக்கும் பொழுதே கண்ணீர் விட வைக்கிறது சார்

  மிகவும் அருமையான பதிவு

  நன்றி

 9. சுந்தர்ஜி
  அவள் பதங்களில் சரண் அடைந்துவிட்டால் அவள் நிச்சயமாக நம்மை காப்பாள்.மகா பெரியவாளின் கருணைக்கு எல்லையே இல்லை. அவர் நம்மை காககவந்த கலியுக தெய்வம்.
  நோட்:
  காஞ்சி மகா பெரியவாளின் மஹிமை பற்றி திரு சுவாமிநாதன் அவர்கள் “ஜி தமிழ் தொலைக்காட்சி தினம் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

 10. மிக்க நன்றி. பதிவுக்கு பாங்காக பாலா திரிபுர சுந்தரி படம் அருமை

 11. மிகவும் நன்றாக உள்ளது.
  கண்ணில் கண்ணீரை வரவைத்தது. அன்னையின் பெருமைக்கும் அவர் புகழுக்கும் நாம் எத்தனையோ நிகழ்சிகளை படித்து இருந்தாலும் இந்த பதிவை படிக்கும் போது கண்ணீரும் மனதில் நெகிழ்ச்சியும் உண்டானது.
  மகா பெரியவாவின் மற்றுமொரு நம்மை புல்லரிக்க வைக்கும் நிகழ்வாகும்.
  அவர் பாதங்களில் சரணடைந்தால் நம் தீவினை யாவும் காணாமல் போகும்.
  எனக்கும் நீண்ட நாட்களாக அதிஷ்டனதிற்கு செல்ல விருப்பம். ஆனால் இன்னும் அவர் உத்தரவு கிடைக்கவில்லை.

 12. “பச்சைப் பட்டுப்பாவாடை கட்டிண்டு எங்கூடவே இருந்தாளே! அந்த பாப்பாதான்!…”

  -நெகிழ்ச்சியான ,மிரட்சியான பதிவு ……

  வாழ்த்துக்களுடன் ,
  -மனோகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *