Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, September 11, 2024
Please specify the group
Home > Featured > இறைவா உன் காலடியில்… என் நம்பிக்கையின் ஒளி விளக்கு!

இறைவா உன் காலடியில்… என் நம்பிக்கையின் ஒளி விளக்கு!

print
Temple lampகுன்றத்தூர் முருகன் நமக்கு மிகப் பெரிய பேறு ஒன்றை அளித்திருப்பதாகவும் அதை அடுத்த பதவில் பார்க்கலாம் என்று கூறியிருந்தேன் அல்லவா? இதோ அந்த பதிவு.

கந்தசஷ்டியை முன்னிட்டு சமீபத்தில் குன்றத்தூருக்கு முருகன் கோவிலுக்கு சென்று வந்ததில் அங்கு விளக்குகள் ஏற்ற எண்ணை தேவைப்படுவதாக தெரிந்தது. (கோவில்களுக்கு அரசு தனது கோட்டாவில் தரும் சொற்ப எண்ணை உண்மையில் எந்தக் கோவிலுக்கும் ஒரு வேளை விளக்கேற்ற கூட போதாது.)  முருகப் பெருமான் ஏன் நம்மை குன்றத்தூருக்கு அழைத்தான் என்று அப்போது தான் நமக்கு புரிந்தது .

இது பற்றி தகவல் நமக்கு தெரிந்ததும், கோவிலுக்கு எண்ணை வாங்கித் தரும் திருப்பணியை நாம் ஏற்றுகொள்வதாக கூறினோம்.

இதையடுத்து ஞாயிறு மதியம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் நம் தளம் சார்பாக தீப எண்ணை ஒரு டின்னும் பக்தர்களுக்குக் வழங்க தரமான குங்குமம் ஐந்து கிலோவும் வழங்கப்பட்டது.

முன்னதாக இதற்காக குன்றத்தூர் செல்ல நம்முடன் துணைக்கு நண்பர்களை கூப்பிட்டபோது வரக்கூடிய சூழ்நிலையில் இருந்தவர் நண்பர் சௌந்தரவேல் மட்டும் தான். (நம் உழவாரப்பணிகளில் இவர் கலந்துகொள்வதுண்டு. நம் ஆண்டுவிழாவிற்கும் வந்துள்ளார்.

தீப எண்ணை மற்றும் குங்குமம் ஆகியவற்றை கோவிலில் ஒப்படைக்க உடன் வரவேண்டும் என்று கேட்டபோது, குன்றத்தூருக்கு இதுவரை தாம் சென்றதில்லை என்றும், முருகனை தரிசிக்க மிகவும் ஆவலாக இருப்பதாகவும் கூறி வருவதற்கு மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.

DSC05514

இதையடுத்து அவரை அடையாரிலிருந்து போரூர் வரச்சொல்லி போரூர் சந்திப்பில் அவரை பிக்கப் செய்துகொண்டேன். ஏற்கனவே பாரிமுனை சென்று குங்குமம் வாங்கி தயாராக வைத்திருந்தேன். எண்ணை மட்டும் குன்றத்தூரிலேயே ஒரு ஆயில்ஸ் ஸ்டோர்ஸில் வாங்கிக்கொண்டோம். 15 லிட்டர் டின்.

கோவிலுக்கு சென்று ரகு ஐயரை பார்த்து எண்ணையும் குங்குமமும் வாங்கி வந்திருப்பதாக கூறினேன்.

“ரொம்ப சந்தோஷம். முதல்ல தரிசனம் பண்ணிடுங்க. சன்னதியை கொஞ்ச நேரத்துல அடைத்து விடுவோம்” என்றார்.

எனவே முதலில் சென்று குமரனை தரிசித்தோம். முருகனுக்கு அர்ச்சனை செய்யப்பட்டது.

லட்சார்ச்சனை பை ஆளுக்கு ஒன்று தந்தார்கள். அடுத்து முருகன் திருமேனியை சூடிய மாலையை எங்களுக்கு ஆளுக்கு ஒன்றாக போட்டார்கள்.

நண்பர் சௌந்தரவேலுக்கு ஒரே சந்தோஷம். “ரொம்ப தேங்க்ஸ் சுந்தர் சார். இத்தனை கிட்டத்துல இருந்து முருகனை தரிசிப்பேன்னு கனவுல கூட நினைச்சு பார்த்ததில்லை. இன்னைக்கு காலையில நீங்க ஃபோன் பண்றதுக்கு முன்னாடி வரைக்கும் இங்கே வரப்போறோம்னு தெரியாது. எல்லாமே ஏதோ அதிசயம் மாதிரி இருக்கு” என்றார்.

ரைட்மந்த்ரா சார்பாக நம் வாசகர் திரு.சௌந்தரவேல் மூலம் தீப எண்ணையும் குங்குமமும் ஒப்படைக்கப்படுகிறது
ரைட்மந்த்ரா சார்பாக நம் வாசகர் திரு.சௌந்தரவேல் மூலம் தீப எண்ணையும் குங்குமமும் ஒப்படைக்கப்படுகிறது (நடுவே இருப்பவர் தான் ரகு குருக்கள்)

அவர் கூறுவதை போல, தீப எண்ணை ஒப்படைக்கும் இந்த தொண்டை எவரை வைத்து செய்வது என்று கடைசி வரை முடிவெடுக்கவில்லை.

தீபாவளியை முன்னிட்டு நடைபெற்ற நமது பல்வேறு அறப்பணிகளுக்கு தன்னால் இயன்ற உதவியை மனமுவந்து செய்த நபர்களில் இவரும் ஒருவர். திருப்பணிக்கு இவர் உதவியதால் இவரை அழைக்கவேண்டும் என்று நான் நிச்சயம் நினைக்கவில்லை. அது அப்படி அமைந்துவிட்டது என்பது தான் உண்மை.

பிரசாதத்தை வாங்கிக்கொண்டு வெளியே வந்த பின்னர் சுப்ரமணிய சுவாமி உற்சவர் முன்பாக வைத்து எண்ணையும் குங்குமமும் ஒப்படைக்கப்பட்டது.

இந்த எளிய தொண்டை தொடர்ந்து நிறைவேற்றும் வல்லமையை முருகன் நமக்கு தரவேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டேன்.

இனி தொடர்ந்து இந்த கோவிலுக்கு மாதமிருமுறை தீப எண்ணை & குங்குமம் நம் தளம் சார்பாக வழங்கப்படும்.

சில பேறுகள் கோடிகள் கொட்டிக்கொடுத்தாலும் அவன் அருளின்றி வாராது! அந்த வகையில் இந்த பேற்றை நமக்கு அளித்த முருகப் பெருமானுக்கு நம் நன்றி! நன்றி!! நன்றி!!!

இறைவா உன் மாளிகையில்…
எத்தனையோ மணி விளக்கு…
தலைவா உன் காலடியில்…
என் நம்பிக்கையின் ஒளி விளக்கு…
நம்பிக்கையின் ஒளி விளக்கு…

[END]

7 thoughts on “இறைவா உன் காலடியில்… என் நம்பிக்கையின் ஒளி விளக்கு!

  1. கோடான கோடி மக்களின் இல்லங்களில் அருள் புரியும் குன்றத்தூர் முருகன் கோயிலில் தொடர்ச்சியாக விளக்கு போடும் பாக்கியம் நமது ரைட் மந்த்ரா தளத்திற்கு கிடைபதற்கு முக்கிய காரணமாக இருந்த திரு.சுந்தர் அவர்களுக்கு கந்தன் கருணையால் அடுத்த வருடம் சஷ்டியின் போது தம்பதி சமேதராக குன்றத்தூர் முருகனை சேவிக்க வேண்டும்.

  2. நல்லது சுந்தர் சார்
    எந்த கோவிலிலும் எண்ணெய் வாங்கி கொடுத்தாலும் அதன் பலன் அளவிடமுடியாது.
    அதிலும் நீங்கள் முருகன் திருகல்யாண உற்சவம் பார்த்தபிறகு கொடுத்துள்ளிர்கள். விரைவில் நல்லது நடக்க வாழ்த்துக்கள்.
    இந்த எளிய தொண்டை தொடர்ந்து நிறைவேற்றும் வல்லமையை முருகன் நமக்கு தருவான்.
    தேங்க்ஸ்

  3. டியர் சுந்தர்ஜி

    கோவிலுக்கு தீப எண்ணை மற்றும் கும்குமம் வாங்கி கொடுத்த உங்களுக்கு இறைவனின் தீப ஒளி உங்கள் மேல் விழ வாழ்த்துக்கள். உங்களால் நண்பர் சௌந்தரவேலுக்கு நல்ல வாய்ப்பு இறைவனை தரிசிப்பதற்கு.

    மேலே உள்ள ஒரு லைனில் ஒரு சிறிய பிழை. ப்ளீஸ் கரெக்ட் தி SAME . ‘அடிச்சிடுவோம்” என்பது ‘அடைத்திடுவோம்’ என்று CHANGE பண்ணவும்

    நன்றி
    உமா

  4. சுந்தர்ஜி
    அவன் கருணை அல்லால் ஒரு அணுவும் அசையாது. முருகனின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது.தொடரட்டும் உங்கள் சேவை.

  5. Sundarji,

    இறைவா உன் காலடியில்… என் நம்பிக்கையின் ஒளி விளக்கு!

    தலைப்பே பிரமாதம். முருகன் உங்களுக்கு வாழ்வில் நல்லதொரு வெளிச்சத்தை காட்டுவார்.
    தங்களுக்கு
    கந்தனுண்டு கவலையில்லை .குகன் உண்டு குறைவில்லை
    வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை .

    எலியானது தீபத்தை தெரியாமல் நின்தியதற்கே வெளிச்சத்தை காட்டிய பகவான் தங்களுக்கு ஒரு குறையும் வைக்கமாட்டார்.

    நன்றி

  6. இறைவனின் வீட்டில் ஒளியேற்ற உதவிடும் உங்களைபோன்றோருக்கு
    வாழ்க்கையில் ஒளி ஏற்றப்படும் அந்த இறைவனால் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *