Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > மகா பெரியவாவும் தமிழ் புத்தாண்டும்! MUST READ!!

மகா பெரியவாவும் தமிழ் புத்தாண்டும்! MUST READ!!

print
சித்திரை முதல் நாளாம் தமிழ் புத்தாண்டை எல்லோரும் வரவேற்று கொண்டாடும் இந்த தருணத்தில் நடமாடும் தெய்வமாக விளங்கிய காஞ்சி மகா பெரியவா அவர்கள் தாம் வாழ்ந்தபோது சங்கர மடத்தில் தமிழ் புத்தாண்டை எப்படி கொண்டாடினார் என்று பார்ப்போமா?

முக்கிய நாள் மற்றும் விசேஷங்களின்போது நாம் என்ன செய்யவேண்டும் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று அதை வைத்தே தெரிந்துகொள்ளலாம்.

மகா பெரியவா தமிழ் புத்தாண்டை கொண்டாடிய விதத்தை பற்றி படிக்கும்போது கடந்த ஆண்டுகளில் நாம் புத்தாண்டுகளை எப்படி கொண்டாடினோம் என்பதை பார்க்கும்போது மனம் குற்ற உணர்வில் தவிக்கிறது.

நாள் கிழமை மற்றும் விஷேட நாட்களை கொண்டாடுவது போற்றுவது என்றால் தனியார் டி.வி.க்களில் அன்று ஒளிபரப்பப்படும் சூப்பர் ஹிட் (?!) மசாலா படங்களை பார்ப்பதே என்று நாமும் வழக்கப்படுத்திக் கொண்டுவிட்டோம். நமது குழந்தைகளையும் அவ்வாறே வழக்கப்படுத்திவிட்டோம். எத்தனை அறியாமை? எத்தனை பேதைமை?

ஏன் குடும்பத்துல கஷ்டம் வராது? பிரச்னை வராது?

இறைவனின் எதிர்பார்ப்புகளுக்கு மாறான ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு கடைசீயில் நம் எதிர்பார்ப்புப்படி மட்டும் இறைவன் நடந்துகொள்ளவேண்டும் என்று ஆசைப்படுவது எத்தனை அறிவீனம்?

இறைவா…. தீயதை தீ போல விளக்கி நல்வாழ்வு வாழ நீ தான் அருள் புரியவேண்டும்.

காஞ்ச மகா பெரியவா அவர் வாழ்ந்த காலத்தில் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய விதம் பற்றி நேற்றைக்கு வெளியான தினமலர்-ஆன்மீக மலரில் வெளியாகியிருக்கும் இந்த கட்டுரையை படியுங்கள். பயன்பெறுங்கள்.

பல விஷயங்களை பெரியவா இதில் உணர்த்தியிருக்கிறார்.

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

(Double click the image to ZOOM & READ)

[END]

12 thoughts on “மகா பெரியவாவும் தமிழ் புத்தாண்டும்! MUST READ!!

  1. தங்கள் பணி மேலும் சிறக்க இறைவனை வணங்கி வாழ்த்துகிறோம்
    .தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  2. ‘விஜய (=உயர்வாகை)’ வருட சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்… 🙂 உங்களது பயணம் இறைவனின் அருளுடன் வெற்றிப் பயணமாக அமையட்டும் ..

  3. மஹா பெரியவா ஆசிர்வதத்துடன் தமிழ் புத்தாண்டை

    துவங்குவது மிகமகிழ்சியாக உள்ளது.

    -மனோகர்.

  4. காஞ்சி மகா பெரியவா ஆசியுடன் புத்தாண்டை துவங்க தங்கள் கட்டுரை ஒரு நல்ல ஆரம்பம் சுந்தர்.
    கட்டுரையில் ஒரு சில எழுத்து தவறுகளை திருத்தி இருக்கலாமே…

    1. சார் நீங்கள் எதை கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை. நான் பார்த்தவரை எந்த தவறும் இல்லை. இருப்பின் சுட்டிக்காட்டவும் அல்லது மின்னஞ்சல் அனுப்பவும். நன்றி.’
      – சுந்தர்

  5. லோகா சமஸ்தா சுகினோ பவந்து !!!

    மஹா பெரியவாளின் ஆசி அனைவருக்கும் கிட்டி எல்லோரும் மன அமைதி, நீள் ஆயுள், நிறை செல்வம் மற்றும் குறைவில்லா மகிழ்ச்சியுடன் வாழ உளமார பிரார்த்திப்போம் !!!

  6. மஹா பெரியவாளை பற்றி வரும் ஒவ்வொரு பதிவிலும் மனதை உருகிவிட செய்கிறீர்கள் சுந்தர். எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.

    உங்களைப் பார்த்தால்
    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
    இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.
    என்றே நினைவுக்கு வருகிறது

    அன்பே சிவம்

  7. சுந்தர்ஜி,

    மஹா பெரியவா ஆசியுடன் புத்தாண்டை அவர் கொண்டாடும் விதத்தை விளக்கியமைக்கு நன்றி. மஹா பெரியவாளை பற்றி ஒவ்வொரு பதிவும் தாங்கள் எழுதும்போது ஒவ்வொரு முறையும் கண்ணீர் வருகின்றது.

    நன்றி

  8. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல வாழ்த்துக்கள் ,கொஞ்சம் தாமதமாக சொன்னதுக்கு மன்னிக்கவும் எனது (நெட் கார்டு ) கொஞ்சம் பழுதாகி இருந்தது. இன்று தான் திரும்ப கிடைத்தது.

  9. புத்தாண்டு அன்று kaanchipuram
    காஞ்சி மடம் சென்று பெரியவாவின் பிருந்தாவனத்தை வணங்கி வந்தேன்.

  10. அனைவரின் திருவடிக்கும் நன்றி எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *