Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, April 24, 2024
Please specify the group
Home > Featured > பக்கிரிக்கு யானை கொடுத்தவர்!

பக்கிரிக்கு யானை கொடுத்தவர்!

print

.வே.சா. என்னும் தமிழ்க் கடலில் நீந்தி வருகிறோம். எண்ணற்ற விஷயங்களை அறிந்துகொள்ள முடிகிறது. பொதுவாக சென்ற நூற்றாண்டை சேர்ந்தவர் யாருடைய எழுத்தையும் அத்தனை சீக்கிரம் நம்மால் கிரகித்துக்கொள்ள முடியாது. மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் தமிழ்த் தாத்தாவிடம் அந்த பிரச்சனை இல்லை. தெளிந்த நீரோடை போன்ற அவருடைய எழுத்தை எந்தக் காலத்தில் எந்த யுகத்தில் வாசித்தாலும் புரியும். அந்தக் காலத்திற்கே நம்மை இட்டுச் செல்லும்.

எந்த வித வசதிகளும் இல்லாத காலத்தில் வாழ்ந்தவர் உ.வே.சா. அவர்கள். இருப்பினும் தான் வாழ்ந்த காலத்தில் ஏன் அதற்கு முந்தைய காலத்தில் நடைபெற்றவைகளை கூட தங்குதடையின்றி விவரிக்க அவரால் முடிகிறதென்றால் அதற்கு காரணம் இறையருள் அன்றி வேறு என்னவாக இருக்கமுடியும். அவருடைய நாவிலும் பேனா முனையிலும் சாட்சாத் அந்த சரஸ்வதி தேவியே வசித்திருக்கிறாள் என்பதே உண்மை. நம் தளத்தில் உ.வே.சா அவர்களைப் பற்றியும் அவரது படைப்புக்களும் பல வெளிவந்துள்ளன. இறுதியில் சுட்டி தரப்பட்டுள்ளது. மறக்காமல் அவற்றையும் படியுங்கள். ஒவ்வொன்றும் முத்துக்கள்.

சமீபத்தில் படித்த அவருடைய கட்டுரை ஒன்றை இங்கே தருகிறோம். தர்மத்தின் பக்கம் தைரியமாக நின்றால் நிச்சயம் இறையருள் உண்டு என்பதை ஆணித்தரமாக உணர்த்துகிறது இந்த சம்பவம்.

அவரது சுய சரிதையான ‘என் சரித்திரம்’ நூலிலும் பிற படைப்புக்களிலும் அரியிலூரைப் பற்றிய குறிப்புக்கள் (இன்றைய அரியலூர்) அதிகம் காணப்படுகிறது. இந்த ஒரு ஊரை மையமாக வைத்தே பல கதைகள் சம்பவங்களை உ.வே.சா. குறிப்பிட்டிருக்கிறார். ஒவ்வொன்றும் மாஸ். எனவே அவரது பிறந்த ஊரான உத்தமதானபுரத்திற்கு பிப்ரவரி மாதம் சென்றது போல அரியலூர் ஒரு முறை சென்றால் மேலும் பல தகவல்களை திரட்டிக்கொண்டு வரமுடியும் எனக் கருதுகிறோம். விரைவில் அரியலூர் பயணம் இருக்கும் என நம்பலாம். விஷ்ணுவின் பெயரால் இந்த ஊர் இப்பெயர் பெற்றது எனக் கூறப்படுகிறது. அரி+இல்+ஊர்= அரியிலூர். பின்னர் அரியலூர் என்று மருவியது.

பக்கிரிக்கு யானை கொடுத்தவர்!

by டாக்டர்.உ.வே.சாமிநாதய்யர்

டநாட்டில் நவாப் ஒருவர் ஆண்டு வந்தார். துறவு பூண்ட பக்கிரி ஒருவர் அவரிடம் இருந்தார். அவருக்கு நவாப் யானையொன்று கொடுத்திருந்தனர். அதன்மேல் அவர் சில சமயம் ஏறி வருவதுண்டு. ஒரு சமயம் அந்தப் பக்கிரியை நவாப் அவமதித்து, யானையையும் கைப்பற்றிக் கொண்டார். அது பொறாத பக்கிரி, “நான் உன்னை விட்டு நீங்கிவிடுகிறேன்” என்றார்.

elephant

நவாப்:- இந்த இடத்தை விட்டால் உமக்கு வேறு போக்கிடம் ஏது? உம்மை யார் மதிப்பார்கள்? என்னுடைய தயையினாலல்லவோ நீர் இங்கே இருந்து வந்தீர்?

பக்கிரி:- உம்மை எண்ணித்தானா என்னை ஆண்டவர் படைத்தார்? உலக முழுவதும் எனக்கு உதவி செய்யும். நம்முடைய பாஷையே தெரியாத இடங்களிலும் நான் போய் யானைப் பரிசும் நன்மதிப்பும் பெறுவேன். அல்லாவின் அருள் இருக்கும் பொழுது எனக்கு என்ன குறை?

நவாப்:- இந்தப் பயமுறுத்தலெல்லாம் இங்கே வேண்டாம். காரியத்தில் உம்முடைய அல்லாவின் அருளைக் காட்டும்; போம்.

பக்கிரி:- “பேதையே, பார்; தென்னாட்டுக்குப் போய் யானையை வாங்கி வந்து இன்னும் சில நாட்களுள் உன்னிடம் காட்டுகிறேன்” என்று சபதஞ் செய்து புறப்பட்டார்.

‘துறவிக்கு வேந்தன் துரும்பு’ அல்லவா?

பக்கிரி பல பாஷைகளிற் பயிற்சி பெற்றவர். அவர் பல அரசர்களிடமும் பல ஜமீன்தார்களிட மும் சென்று தமக்கு யானை வேண்டுமென்று கேட்டார். “யாரும் இவருக்கு யானை கொடுக்கக் கூடாது” என்று நவாப் உத்தரவு அனுப்பியிருந்தமையால் அவர்களெல்லாம் பயந்து பக்கிரியிடம் தாம் கொடுக்க முடியாத காரணத்தைக் கூறி வருந்தி மறுத்து விட்டார்கள்.

நாடெல்லாம் சுற்றிவந்த பக்கிரி இந்த அரியிலூர் வந்து சேர்ந்தார். அப்பொழுது இங்கே இருந்த ஜமீன்தாரிடம் சென்று தமக்கு யானை ஒன்று வேண்டுமென்று கேட்டார்; நவாபினுடைய கடுமையான செயல்களையும் எடுத்துக் கூறினார். எந்த மதத்தினராயினும் ஞானமுடையவர்களாக இருப்பவர்களை மதிக்க வேண்டுமென்ற கொள்கையையுடைய ஜமீன்தார் பக்கிரிக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்தார்; யானையொன்றையும் வழங்கினார்; அதனைக் காப்பாற்றுவதற்கும் பிற செலவுகளுக்குமாக ஒரு தக்க பொருளை உதவி, ஒரு பாகனையும் உடன் அனுப்பினார். பக்கிரி, “அல்லா உங்களூக்கு வெற்றியையும் புகழையும் உண்டாக்குவார்” என்று மனமார ஜமீன்தாரை வாழ்த்திவிட்டு யானையுடனும் பரிசில்களுடனும் நவாபுக்கு முன் போய் நின்றார்.

நவாபுக்கு ஒருபக்கம் வியப்பும் மற்றொரு பக்கம் சினமும் உண்டாயின. “நம்முடைய உத்தரவை மீறி எந்த மனுஷன் யானை கொடுத்தான்?” என்று கர்ஜனை செய்தார்; “பார்க்கிறேன் அவனுடைய ஆண்மையை” என்று மீசையை முறுக்கினார்; படையாளரை அழைத்து ஆரியிலூரின்மேற் படையெடுக்க வேண்டுமென்று கட்டளையிட்டார்.

அரியிலூர் கோதண்டராமசாமி திருக்கோவில்

நவாபின் படைகள் அரியிலூருக்கு வெளியே வந்து தங்கின. பக்கிரிக்கு யானை கொடுத்த குற்றத்திற்காக நவாப் யுத்தம் செய்யப் படையை அனுப்பியுள்ளாரென்பதை ஜமீன்தார் அறிந்தார்.

“அல்லா வெற்றியும் புகழும் தருவார்” என்று பக்கிரி வாழ்த்தியது அவருடைய ஞாபகத்துக்கு வந்து ஊக்கத்தை உண்டாக்கியது. தாம் செய்தது ஒரு நல்ல காரியமென்றும், நல்ல காரியத்திற்கு இடையூறு வாராமற் கடவுள் காப்பாரென்றும் அவர் எண்ணி, அரியிலூரிலுள்ள தம் வழிபடு கடவுளாகிய ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி கோயிலை அடைந்து அவரை வணங்கினார். அவருடைய உண்மையன்பை மெச்சிய பெருமாள் ஒருவர் மீது ஆவேச ரூபமாக வந்து, “நீ படைகளோடு சென்று யுத்தம் செய்; வெற்றி உண்டாகும்” என்று கட்டளையிட்டார். ஜமீன்தார் கடவுளின் கருணைத் திறத்தை எண்ணி உருகி மகிழ்ந்து போர் புரியச் சென்றனர். போரில் நவாபின் படை தோல்வியடைந்து ஓடிற்று. அப்பொழுதுதான் தம் படை பெரிதானாலும் அல்லாவின் அருள் எல்லாவற்றினும் பெரிதென்னும் எண்ணம் நவாபுக்கு உண்டாயிற்று. பக்கிரியின் பாதங்களில் விழுந்து தாம் செய்த குற்றத்தைப் பொறுக்கும்படி வேண்டினார்.

பக்கிரிக்கு யானை வழங்கி அதனால் நிகழ்ந்த போரிலும் வெற்றியுற்றதனால் ‘பக்கிரிக்கு யானை கொடுத்தவர்’ என்னும் பட்டம் ஜமீன்தாருக்கு உண்டாயிற்று. அதுமுதல் அவர் சந்ததியாருடைய பட்டங்களில் ஒன்றாக அது வழங்கி வருகிறது. பல செய்யுட்களிலும் கீர்த்தனங்களிலும் அந்தப் பட்டப் பெயரைக் காணலாம்.

  • டாக்டர்.உ.வே.சா | ரைட்மந்த்ரா.காம்

========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்! For more information click here!

Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215  |  E-mail : editor@rightmantra.com

========================================================

Also check :

ஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை!

கடைசியில் வந்தவன் முதல் பரிசை தட்டிச் சென்ற கதை!

திருவிடைமருதூரில் உ.வே.சா அவர்கள் கொடுத்த வரம்! யாருக்கு, ஏன்?

பிரம்படி வாத்தியாரும் படிப்பு ஏறாத பிச்சு ஐயரும்!

வேங்கடசுப்பையர் கனவில் தோன்றிய கிழவனும் கிழவியும் ! MUST READ

‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ செய்த ஒரு சிவபக்தி!

பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்?

ஒரு விரத பங்கமும் அதனால் உதயமான உத்தமதானபுரமும்!

ஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை!

கோவிந்த தீட்சிதர் – மன்னராட்சியிலும் மக்களுக்கான ஆட்சியை தந்த மகான்!

========================================================

[END]

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *