Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, April 19, 2024
Please specify the group
Home > Featured > சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி ? தன்னையுமறியாமல் விரதம் இருந்து கயிலை வாசம் பெற்றவள் கதை!

சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி ? தன்னையுமறியாமல் விரதம் இருந்து கயிலை வாசம் பெற்றவள் கதை!

print

சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்? சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி? அதன் பலன் என்ன? என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.

விரதங்களிலேயே கடுமையானதும் அதையே நேரம் எளிமையானதும் சிவராத்திரி தான். புரியவில்லையா?

தன்னையுமறியாமல் விரதம் இருந்து கயிலை வாசம் பெற்றவள் கதை!

வேடன் ஒருவன் இரவு முழுதும் விழித்திருந்து தன்னையுமறியாமல் சிவலிங்கத்துக்கு விலாவதில் அர்ச்சனை செய்து உய்வு பெற்ற கதை உங்களுக்கு தெரிந்திருக்கும். அதே போன்று வேறு ஒரு கதை.

முன்பொரு காலத்தில் ரூபாவாதி என்றொரு வயதான நீசப்பெண் ஒருத்தி இருந்தாள். (நீசம் என்றால் தீய ஒழுக்கங்கள் உடைய என்று பொருள்).

தன்னுடைய துர்நடத்தைகளால் அவளுக்கு கொடுநோய் ஏற்பட்டு உடல் முழுதும் பாதிக்கப்பட்டு வாடிவந்தாள். நோய் பாதிப்பினால் எந்தவித வேலையும் செய்ய இயலாமல் அலைந்து திரிந்து பிச்சை எடுத்து அதை புசித்து உயிர் வாழ்ந்து வந்தாள்.

ஒரு சமயம் அவளுக்கு பிக்ஷை எதுவும் கிடைக்கவில்லை. பசி மயக்கம் வருத்த ஓரிடத்தில் வீழ்ந்துவிட்டாள். அன்று மகா சிவராத்திரி. அன்று இரவு முழுதும் உணவு எதுவும் கிடைக்காதபடியால் உறங்காமல் பிராண அவஸ்தையோடு முனங்கிக்கொண்டிருந்தவள் மறுநாள் காலை மாண்டுபோனாள்.

சிவராத்திரி அன்று அவளையுமறியாமல் உபவாசம் இருந்து கண்விழித்தபடியால் கருணைக்கடலான பரமேஸ்வரன் அவளுக்கு சிவராத்திரி விரத பலனை அளிக்க திருவுள்ளம் கொண்டார். இதையடுத்து சிவகணங்கள் விரைந்து வந்து அவளுக்கு திவ்யஸ்ரூப வதனத்தை நல்கி, கயிலைக்கு ஒரு புஷ்பக விமானத்தில் அழைத்துச் சென்றனர்.

தெரியாமலே சிவராத்திரி அன்று கண்விழித்து பட்டினி கிடந்ததற்கான பலன் இது என்றால் பக்தியோடும் நம்பிக்கையோடும் விரதமிருப்பவர்கள் அடையக்கூடிய பலனை சொல்லவும் வேண்டுமா?

விரதங்களில் மகத்துவம் மிக்கதும் தனிச் சிறப்பு மிக்கதும் சிவராத்திரி விரதமே ஆகும்.

சிவராத்திரி விரதம் குறித்து சாட்சாத் சிவபெருமான் கூறுவது என்ன தெரியுமா?

“இந்த விரதம் யாவருக்குமே தர்ம சாதனமானது. அனைத்து தரிப்பினரும் பிரம்மசாரி முதலிய ஆசிரமத்தினரும் மங்கையரும். குழந்தைகளும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். மாசி மாதத்தில் வருகின்ற கிருஷ்ணபக்ஷ சதுர்த்தியின் நள்ளிரவு பதினான்கு நாழிகையானது கோடி பிரம்மஹத்திகளை நசிக்கச் செய்யும். ஆகையால் அந்தத் தினத்தில் செய்யத்தக்க செயல்களைச் சொல்லுகிறேன். அன்று விடியற்காலையில் எழுந்து மகிழ்ச்சியுடன், ‘மானுட பிறவி’ எடுத்தல் அரிது அது துக்கமுடையதும் சாரமற்றதுமாய் இருத்தலால் அந்த மானுட பிறவியை இந்த விரதத்தால் பயன்படுத்தும் படிச்செய்வேன்’ என்று நிச்சயித்துக்கொண்டு, அருளிருப்பவரையும் இந்த விரதத்தை அனுஷ்டிக்க செய்ய வேண்டும்.

சிவராத்திரி அன்று விரதமிருந்து உறக்கம் தொலைத்து சிவபெருமானை வணங்குபவர்களின் பிரார்த்தனைகள் மற்றும் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேறிவிடும் என்பது அனுபவபூர்வமான உண்மை.

விரதம் கடைப்பிடிப்போர் அன்றைய தினம் (வெள்ளி 24/02/2017) காலை எழுந்து நீராடி நித்யகர்மாநுஷ்டானங்களை முடித்துக்கொண்டு ஒரு பொழுது மட்டும் உணவருந்தி பின்னர் இரவு முழுதும் சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து நான்கு ஜாம வழிபாடு செய்ய வேண்டும்.

மறுநாள் காலையில் (சனிக்கிழமை) தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அன்னதானம் செய்தொ அடியார்களுடன் சேர்ந்து உணவருந்தியோ விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவராத்திரி அன்று கண் விழித்த பின்னர் மறுநாள் பகல் பொழுதில் தூங்கக்கூடாது.

மனம் போனபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதம் இருப்பதன் அடிப்படை நோக்கமாகும். உணவை தவிர்க்கும் போது உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிது என்று கருதப்படுகிறது. சாதாரண விழிப்பு, உறக்க நிலைகள் இறைவனை உணர்வதற்குத்தடையாக இருப்பவனவாகக் கருதப்படுகின்றன. தினமும் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் போய் வரும் நாம் உயர் விழிப்பு நிலை பற்றி உணர்வதேயில்லை. சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும் போது புலன்கள் கட்டுப்படுகிநது. அந்த நிலையில் நின்று இறைவனைப் போற்றி வழிபடும்போது உணர்வுகள் வெண்ணை போல உருகி, நாம் உயர்ந்த விழிப்பு நிலைக்குச் செல்ல வழி வகுக்கிறது.

அந்த புனிதமான நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும் கூடும். பொருளாதார நிலையும் உயரும். ஒரு நாள் முழுவதும், ஆறு கால பூஜையிலும் சிவனை நினைத்து வழிப்பட்டு சிவாலயங்களில் சிவன் சன்னதியில் அமர்ந்து சிவன் பெயரை உச்சரித்து வந்தால் ஒரே நாளில் ஓர் ஆண்டிற்கான பலனும் நமக்கு கிடைக்கும். அதனால் தான் “சிவராத்திரி” விரதம் சிறந்த பலனைக் கொடுக்கிறது.

கடுமையான விரதம் இருக்க இயலாதவர்கள் சிவராத்திரி அன்று இரவு முழுதும் ஆலயத்திலோ வீட்டிலோ சிவசிந்தனையுடன் கண்விழித்திருந்து வயிற்றை காயப்போட்டால் கூட போதும்.

ஒரு மஹா சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா ஸ்நானம் செய்த பலனும் தரக்கூடியது என்பது நம்பிக்கை. சிவராத்திரி விரதத்தின் பலன்களை இன்னது தான் என்று கல்பகோடி காலம் ஆனாலும் எவராலும் அறுதியிட்டு கூறமுடியாது என்று கூறுகிறது சிவமஹா புராணம்.

==========================================================

Please check :

சிவராத்திரி – செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும்!

சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!

சிவராத்திரியன்று பிரசாதத்தை திருடிக்கொண்டு ஓடிய திருடனுக்கு என்ன ஆனது?

12 ஜோதிர்லிங்கங்கள் தரிசனம் – ஒரு நேரடி அனுபவம் – மகா சிவராத்திரி சிறப்பு பதிவு

==========================================================

உங்கள் உதவியை எதிர்நோக்கி….

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்! For more information click here!

Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215  |  E-mail : editor@rightmantra.com

==========================================================

Similar articles…

கனவில் தோன்றி கோவில் கட்டச் சொன்ன மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர்!

யார் வேண்டுமானாலும் ருத்ராட்ஷம் அணியலாமா…?

சிலிர்க்க வைத்த சிவபக்தி –  ஈசனின் பிறை முழுநிலவான கதை!

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை!

சிவன் சொத்து…. ஒரு கண்கலங்க வைக்கும் உதாரணம்!

சிவபெருமானின் முக்கண் எவை தெரியுமா?

ஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை!

கபாலீஸ்வரருடன் ஒரு பொன்மாலைப் பொழுது!

‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ செய்த ஒரு சிவபக்தி!

பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்?

சிவராத்திரியன்று பிரசாதத்தை திருடிக்கொண்டு ஓடிய திருடனுக்கு என்ன ஆனது? – சிவராத்திரி SPL 5

கிரக லட்சணம், கோ சம்ரட்சணம்!

சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!

சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!

திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!

ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!

Thalaivar is always great!

தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!

மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

மனதில் ஏற்பட்ட திடீர் குழப்பம் – கற்பகாம்பாளுடன் தோன்றி விடை சொன்ன கபாலீஸ்வரர்!

தண்டியடிகளுக்கு தியாகராஜர் காட்சி கொடுத்த இடம் – ஒரு நேரடி ரிப்போர்ட்!

பதிகங்கள் புரியாத அதிசயம் உண்டா?

தலைவருடன் ஒரு சந்திப்பு!

நாள் கிழமை விஷேடங்களின் போது ஏன் அவசியம் ஆலயத்திற்கு செல்லவேண்டும்?

கேட்காமலே அள்ளிக் கொடுப்பவனிடம் கேட்க என்ன இருக்கிறது?

==========================================================

சிவபுண்ணியக் கதைகள் முந்தைய பாகங்களுக்கு…

கனவிலும் செய்யக்கூடாத சிவாபராதங்கள் சில! – சிவபுண்ணியக் கதைகள் (14)

தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்ட எமதர்மன்! ஏன்? எதற்கு? – சிவபுண்ணியக் கதைகள் (13)

வீசியெறிந்த ஓலைச்சுவடியும் கீழே கொட்டிய அரிசியும் – சிவபுண்ணியக் கதைகள் (12)

சிவபூஜைக்கு வெற்றிலை வாங்க உதவியவன் கதை – சிவபுண்ணியக் கதைகள் (11)

‘சாகுற நேரத்தில சங்கரா’ – பழமொழியின் பொருள் என்ன? சிவபுண்ணியக் கதைகள் (10)

இடையன் செய்த சிவபுண்ணியமும் கிருஷ்ணாவதாரமும் – சிவபுண்ணியக் கதைகள் (9)

உழவாரப்பணி என்னும் உன்னத தொண்டு – சிவபுண்ணியக் கதைகள் (8)

ருத்ராக்ஷம் தந்த புது வாழ்வு – சிவபுண்ணியக் கதைகள் (7)

கயிலை அலங்கரிக்கப்பட்டது யாரை வரவேற்க தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (6)

திருடிய நெய்யும் சிவபுண்ணியமும் – சிவபுண்ணியக் கதைகள் (5)

வாழைப்பழ திருடனுக்கு கிடைத்த பேறு – சிவபுண்ணியக் கதைகள் (4)

பசுவின் பால் கொடுத்த சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (3)

தந்தையை காத்த, தனயனின் சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (2)

கூற்றுவன் அஞ்சுவது யாரைக் கண்டு தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (1)

==========================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *