வழி வழியாக, வாழையடி வாழையாக, பரம்பரை பரம்பரையாக நம் பாட்டனார், முப்பாட்டனார், உள்ளிட்ட முன்னோர்கள் வணங்கி வந்த அவர்கள் ஊர் தெய்வமே ‘குல தெய்வம்’ எனப்படும்.
(திருமலை செல்பவர்கள் பார்த்திருக்கலாம்… பிரசாதப் பையில், “திருமலைக்கு வருவதற்கு முன்பு அவரவர் குல தெய்வத்தை முதலில் வணங்கிவிட்டு பின்னர் தான் வர வேண்டும்” என்று முதலில் அச்சிடப்பட்டிருக்கும். கவனித்திருக்கிறீர்களா?)
குல தெய்வ வழிபாடு என்பது ‘நன்றி’ சம்பந்தப்பட்டது. தமிழகத்தில் ஏதோ ஒரு குக்கிராமத்தில் பிறந்த ஒருவர் படித்து ஆளாகி சென்னை போன்ற ஒரு நகரிலோ அல்லது யூ.எஸ்., யூ.கே. போன்ற மேல்நாடுகளில் செட்டிலாகிவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம்… அவர்களை போன்றவர்கள் இங்கு வரும்போது பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு அடிக்கடி செல்வார்கள். அக்கோவில்களுக்கு நிறைய செய்வார்கள். இங்கே சென்னை போன்ற நகரங்களில் வசிப்பவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பமும் அடிக்கடி கிடைக்கும். ஆனால் அவர்கள் பிறந்து வளர்ந்த ஊரில் / கிராமத்தில் உள்ள அவர்கள் குல தெய்வத்தின் கோவிலில் நித்திய பூஜைகள் கூட நடக்க வழியில்லாது இருக்கும். பல கிராம கோவில்களில் மேற்கூரை கூட இல்லாமல் அந்த தெய்வம் வெயிலிலும் மழையிலும் கிடப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் அந்த ஊரில் பிறந்த அந்த மண்ணின் மைந்தர்கள் செல்வச் செழிப்புடன் எங்கோ இருப்பார்கள். ஜீரணிக்க இயலாத விஷயமல்லவா இது?
எனவே உங்கள் குல தெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி – இயன்றபோது – (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள். அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள். அக்கோவிலுக்கு உதவுங்கள். பூஜைகள் நடைபெற ஏற்பாடு செய்யுங்கள். பிறகு பாருங்கள் உங்கள் வாழ்க்கை போகும் போக்கை…
அடிக்கடி செல்ல முடியாதவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. உங்கள் வீட்டிலேயே குல தெய்வபடத்தை அலங்கரித்து, பாரம்பரிய, வழக்கமான படையலை வைத்து மனம் உருக வழிபாடு செய்யுங்கள். நிச்சயமாக உங்கள் குல தெய்வத்தின் அருளாசி உங்கள் குடும்பத்துக்கு கிடைக்கும்.
தெய்வம் எல்லாமே ஒன்னு தானே? அப்படி என்ன இருக்கு குல தெய்வ வழிபாட்டுல? அதே சாமி இங்கே எங்க ஊர்லயே இருக்கு. அதுக்கு நான் எவ்ளோவோ பண்றேனே…. என்று வாதம் செய்கிறவரா நீங்கள்?
சாட்சாத் அந்த பரமேஸ்வரின் அம்சம் மகா பெரியவா அவர்கள் குல தெய்வ வழிபாட்டின் முக்கியத்துவத்தையும் மகத்துவத்தையும் நம் அனைவருக்கும் புரியும் வண்ணம் மிக மிக எளிமையாக கூறியிருக்கிறார். அது மட்டுமா அவரது ஆலோசனையின் பேரில் – மறந்து போன குல தெய்வ வழிபாட்டை செய்த ஒருவருக்கு வாழ்வில் எத்தனை மேன்மை கிடைத்தது என்பதை பற்றியும் கட்டுரை ஆசிரியர் மகா பெரியவா வாயிலாக கூறியிருக்கிறார்.
விரைவில்:
குல தெய்வ வழிபாட்டின் அவசியம் குறித்து மகா பெரியவா கூறியிருக்கும் கருத்துக்கள்…!
குல தெய்வ வழிபாடு என்பது நமக்கு மிக முக்கியம் ,வருடம் ஒரு முறை கண்டிப்பாக நம் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும் ,குல தெய்வம் தெரியாதவர்கள் முருக பெருமானை குல தெய்வமாக ஏற்று வணங்கலாம்
குல தெய்வ வழிபாட்டின் அவசியம் குறித்து,விடுமுறை நாளில் நமது வழி தோன்றலுக்கு அவசியம் உணர்த்த வேண்டும் .பாரம்பரிய வழிபாட்டு முறை மாறாமல் வழிபாடு செய்யவேண்டும் .{பொங்கல் வைத்தல் ,உறவினர்கல்,அனைவரும் ஒன்று சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடவேண்டும் .}
சரியான நேரத்தில் உணர்த்தியமைக்கு நன்றி .
மகா பெரியவா சொன்னதை படித்து அறிந்துகொள்ள ஆவலுடன் உள்ளேன் .
நல்ல செய்தி. நன்றி.
சுந்தர்ஜி,
அருமையான பதிவு.
நன்றி
அருமையான பதிவு !!!
மிக்க நன்றி !!!
குல திவா VALIPATTIRKU CELLA UKANTHA NALL OR NALLA KILAMAI ETHU.