பொதுவாக நாம் ஒரு அறப்பணியையோ அல்லது இது போன்ற நிகழ்ச்சியையோ செய்யப்போவதாக சொன்னால் திருவருள் துணையுடன் நாம் திட்டமிட்டதைவிட அதை சிறப்பாக நடத்திவிடுவோம். சற்று தாமதமானாலும் அது குறித்த பதிவு தளத்தில் நிச்சயம் வெளியாகும். சில சமயங்களில் நேரமோ சூழலோ அமையாது பதிவளிக்கமுடியாமல் போய்விடுகிறது. மன்னிக்கவும்!
மேற்கொண்டு தொடர்வதற்கு முன்னர் ‘அகத்தியர் தேவாரத் திரட்டு’ என்றால் என்ன என்று இந்த பதிவை பார்த்து தெரிந்துகொள்ளவும். (Please check : அகத்தியர் தேவாரத் திரட்டு!)
எப்படி இந்த யோசனையை தோன்றியது?
குன்றத்தூரில் உள்ள திருநாகேஸ்வரம் கோவில் திருமுறை பாடசாலையில் ஒவ்வொரு ஞாயிறு மாலையும் திருமுறை வகுப்பு நடைபெறுவது வழக்கம். குன்றத்தூர் நகரத்திலும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கும் பல மாணவர்கள் இந்த வகுப்புக்கு வருகிறார்கள். அது தவிர மார்கழி மாதம் முழுக்க அதிகாலையில் குழந்தைகள் வந்திருந்து திருமுறை பாடியபடி திருவீதி உலா வருவார்கள். பார்ப்பதற்க்கே அத்தனை இதமாக இருக்கும்.
இக்காலத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் பிள்ளைகளை தேவாரம் படிக்க யார் அனுப்புகிறார்கள்? எனவே இவர்களையும் இவர்கள் பெற்றோர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என விரும்பினோம். இந்த குழந்தைகளுக்கு நம் தளம் சார்பாக ஏதாவது நிச்சயம் செய்யவேண்டும் என்று முடிவு செய்து அவர்களின் தேவைகளை கேட்ட போது நோட்டு, பேனா, பென்சில் உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்கள் பல அவர்களுக்கு தேவை என்று தெரிந்தது. இந்த குழந்தைகளும் மாணவர்களும் அரசு பள்ளிகளில் படிக்கும் நடுத்தர வர்க்கத்து வசதி குறைந்த வீட்டு குழந்தைகள்.
நாமாக ஏதாவது வாங்கித் தருவதற்கு பதிலாக அவர்களுக்கு என்ன தேவையோ அதை வாங்கித் தரலாமே என்று தோன்றியது. எனவே முன்னதாக ஒரு ஞாயிறு மாலை பாடசாலைக்கு சென்று மாணவர்களிடம் கலந்து பேசி, யார் யாருக்கு என்ன தேவை என்று பட்டியல் தயார் செய்துகொண்டோம். நோட்டு புத்தகம், ஹீரோ பேனா, ஜெட் பேனா, கலரிங் ஸ்கெட்ச், கலர் பென்சில், ஜியாமெட்ரி பாக்ஸ், கால்குலேட்டர் (+2 மாணவர்கள் சிலருக்கு) என்று ஒவ்வொருவருக்கும் ஒரு தேவை இருந்தது.
தளத்தில் அது பற்றி அறிவித்தோம். வாசகர்கள் சிலர் உதவிக்கரம் நீட்டியதையடுத்து, இப்பொருட்களை பாரிமுனைக்கு சென்று அலைந்து திரிந்து WHOLESALE கடைகளில் பார்த்து பார்த்து பொருட்களை வாங்கினோம். பல கடைகளில் ஏறி இறங்கி விலை விசாரித்து இது மாணவர்களுக்கு பரிசாக கொடுப்பது என்று எடுத்துச் சொல்லி அதிகபட்ச டிஸ்கவுண்ட் தருவதாக சொன்ன கடையில் தான் பொருட்களை வாங்கினோம். ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொன்று சொல்லியிருந்தனர். அதையெல்லாம் வாங்கிக்கொண்டு, அவை தவிர எல்லா மாணவர்களுக்கும் ஒரு நோட்டுப் புத்தகமும், மினி ஸ்கெட்ச் பேனா ஒரு செட்டும் வாங்கிக்கொண்டோம். மொத்த 100+ மாணவர்கள்.
இக்குழந்தைகள் பற்றி ஏற்கனவே சற்று விரிவாக சிவனின் செல்லப்பிள்ளைகள் போதித்த பாடம்! என்ற பதிவில் விளக்கியிருக்கோம்.
மாணவர்களுக்கு திட்டமிட்டதைவிட அதிகமாக, தரமான பொருட்களை வாங்க முடிந்தது. இந்த பரிசை எப்படி எப்போது கொடுக்கலாம் என்று தேவார ஆசிரியர் திரு.சங்கர் அவர்களிடம் பேசியபோது அவர் கொடுத்த யோசனை தான் இந்த முற்றோதல் நிகழ்வு. பொதுவாக திருநாகேஸ்வரம் பாடசாலை சார்பாக ஒவ்வொரு மாதமும் குன்றத்தூர் சடையாண்டீஸ்வரர் கோவிலில் திருவாசக முற்றோதல் நடத்துவது வழக்கம். ஆனால் நாம் தான் ‘அகத்தியர் தேவார திரட்டு’ நூலை முற்றோதல் செய்யலாம் என்ற நமது அவாவை சொன்னோம்.
அவர் ஒப்புக்கொண்டதையடுத்து பாடியில் உள்ள காசி ஸ்ரீ வா.சொ.சேது ஐயா அவர்களிடம் பேசி மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வை ஒரு சாதாரணமான நிகழ்வாக இல்லாமல் ஒரு முற்றோதல் நடத்தி அதில் பங்குபெறும் மாணவர்களுக்கு பரிசாக வழங்கினால் நன்றாக இருக்கும் என்கிற நமது யோசனையை அவரிடம் தெரிவித்து அவர் வந்திருந்து இந்த முற்றோதலை நடத்தித் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.
திரு.சேது ஐயா அவர்கள் மூன்று முறை பாடல் பெற்ற தலங்கள் அனைத்திற்கும் பாதயாத்திரை சென்று வந்தவர். (இவரது சந்திப்பு குறித்த பதிவு விரைவில் வரும்!) இதற்கு சில வாரங்களுக்கு முன்னர் தான் அவரை பாடியில் திருவலிதாய சகோதரிகள் இல்லத்தில் நடைபெற்ற முற்றோதல் ஒன்றின் போது சந்தித்து பேட்டி எடுத்திருந்தோம். எனவே நமது வேண்டுகோளை ஏற்று தான் குன்றத்தூர் வந்து முற்றோதலை நடத்தித் தருவதாக சொன்னார்.
இதையடுத்து அனைத்து ஏற்பாடுகளும் மளமளவென துவங்கியது. தளத்தில் அது பற்றிய பதிவை அளித்து நமது வாசகர்களை வருமாறு கேட்டுக்கொண்டோம்.
முற்றோதல் நடைபெற்ற நாள் அன்று காலை சிற்றுண்டியும், மதியம் விஷேஷ உணவும் நம் தளம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தவிர நண்பர் முல்லைவனம் அவர்களிடம் பேசி வரும் அனைவருக்கும் மரக்கன்று வழங்கவும் ஏற்பாடு செய்திருந்தோம்.
இந்த மொத்த நிகழ்வும் நான்கு நிலைகளில் நடைபெற்றது
1) அன்னம்பாளிப்பு
2) முற்றோதல்
3) பாடசாலை நிர்வாகிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களை கௌரவிப்பது
4) மாணவர்களுக்கு பரிசளிப்பது
மாணவர்கள் மற்றும் விருந்தினர்கள் அனைவரும் காலை சிற்றுண்டி அருந்திய பிறகு சுமார் 8.00 மணியளவில் முற்றோதல் துவங்கியது.
அப்போது கலாம் அவர்கள் அமரத்துவம் எய்து சில நாட்களே ஆகியிருந்தபடியால் கலாம் அவர்களின் புகைப்படத்திற்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்தி பின்னர் தான் முற்றோதல் துவக்கினோம்.
திரு.வா.சொ.சேது அவர்கள் மற்றும் திருவலிதாய சகோதரிகள் மஹேஸ்வரி, மஹாலக்ஷ்மி மற்றும் அவரது குடும்பத்தினர், குன்றத்தூர் தேவார பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் சங்கர் மற்றும் புருஷோத்தமன், நம் வாசகர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் என அனைவரும் கலந்துகொண்டனர்.
தொடக்கத்திலும் நிறைவிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சுமார் மூன்றரை மணிநேரம் முற்றோதல் நடைபெற்றது. முற்றோதலில் கலந்துகொண்ட சிறு குழந்தைகள் சிலர் மிக அழகாக தேவாரம் பாடியது கண்கொள்ளா காட்சி.
மதியம் சுமார் 12.30 அளவில் முற்றோதல் நிறைவு பெற்றவுடன் வா.சொ.சேது ஐயா, மற்றும் குன்றத்தூர் தேவார பாடசாலையின் ஆசிரியர் திரு.சங்கர், உதவி ஆசிரியர் திரு.முருகன், மற்றும் இந்த முற்றோதலில் சிறந்த பங்களிப்பு நல்கிய அனைவரும் நமது வாசகர்களை கொண்டு கௌரவிக்கப்பட்டனர்.
இதில் சிறப்பு விருந்தினர்களை கௌரவிப்பதை நம் வாசகர்களை கொண்டே அவர்கள் கரங்கள் செய்தோம். பரிசளிப்பதை சேது ஐயா துவக்கி தந்தவுடன் நாமும் நமது வாசகர்களும் மாணவர்களிடமும் அனைத்து பொருட்களையும் ஒப்படைத்தோம்.
பின்னர் கலாம் அவர்கள் மாணவர்களுக்கு விடுத்த உறுதிமொழிகள் நாம் வாசிக்க அனைவரும் அதை திருப்பி வாசித்தனர்.
இறுதியில் நமது வாசகர்களை கொண்டு மாணவர்களுக்கு நாம் வாங்கிச் சென்ற பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
நமது அன்புப் பரிசு மழையில் மாணவர்கள் திக்குமுக்காடிப் போனார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் அனைவருக்கும் நண்பர் முல்லைவனம் அவர்களின் TREE BANK சார்பாக இலவச மரக்கன்று வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் மட்டுமல்லாமல், அந்த தெருவில் வசித்த மக்களும் ஆர்வமுடன் மரக்கன்றை வாங்கிச் சென்றனர்.
இறுதியில் அனைவருக்கும் இறுதியில் அனைவருக்கும் சிறப்பு மதிய உணவு வழங்கப்பட்டது.
ஒத்துழைப்பும் ஆதரவும் நல்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி. இதே போன்று இந்த ஆண்டும் ஆயுத பூஜையின் போது செய்ய ஆசை. பார்ப்போம். திருவருள் துணைபுரியட்டும்!
========================================================
Support Rightmantra in its mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.
Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
========================================================
Also check :
சிவனின் செல்லப்பிள்ளைகள் போதித்த பாடம்!
நண்பர் வீட்டு திருமண விருந்து vs தெய்வச் சேக்கிழார் குருபூஜை விருந்து!
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் – எப்படி?
பள்ளி மாணவர்களுக்கு இலவச திருமுறை வகுப்பு – சங்கர் அவர்களின் அயராத சிவத்தொண்டு!
திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!
பன்னிரு திருமுறைகளின் பெருமையும் அதை மீட்டுத் தந்த நம்பியாண்டார் நம்பியும்!
இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!
ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!
தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!
பணத்தை தேடி வரவழைத்த பதிகம்! மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!
உணவும், உறக்கமும், நிம்மதியும், செல்வமும் நல்கி இறுதியில் சிவபதம் அருளும் பதிகம்!
வசிஷ்டர் அருளிய தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்
நமக்கென்று ஒரு சொந்த வீடு – உங்கள் கனவு இல்லத்தை வாங்க / கட்ட வழிகாட்டும் பதிகம்!
ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?
அகத்தியரின் ‘திருமகள் துதி’ – இது வீட்டில் இருந்தாலே திருமகளின் அருள்மழை நிச்சயம்!
மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம், வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக!
ஆஞ்சநேய பக்தர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் – கிடைப்பதர்க்கரிய ஸ்ரீஹநுமத் சுப்ரபாதம்!!
வறுமையை விரட்டி, பொன் பொருள் சேர்க்க எளிய தமிழில் ஒரு அழகிய ஸ்லோகம்!
களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!
‘திருவாசகம்’ என்னும் LIFESTYLE MANTRA – கருவுற்றிருக்கும் பெண்கள் கவனத்திற்கு!
கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!
அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!
பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!
செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!
‘பாதத்தால் சுழலும் மாந்தர்கள் தொல்வினை’ – பன்னிரு திருமுறை இசைவிழாவில் ஒரு அரிய செய்தி!
நான்கு யுகங்களில் சிறந்தது எது? ஏன்? MUST READ!
இறைவனையே குருவாக பெற்ற மாணிக்கவாசகர் தன்னை நாயேன் என்று கூறிக்கொண்டது ஏன் ?
கடவுள் என்ற ஒருவர் இருந்தால் ஏன் இத்தனை துன்பங்கள்?
========================================================
[END]
சுந்தர் ஜி
அருமையான புகைப்படங்கள்
நீங்கள் நமது வாசகர்களுக்காகவும் லோக ஷேமத்துக்காகவும் செய்யும் காரியங்கள் மிகவும் மகத்தானவை
ஒரு சிறு விண்ணப்பம்
முடிந்தால் தங்கள் திருப்பணி நடவடிக்கைகளை யு டியூபில் காணொளியாக பதிவேயற்றம் செய்யவும்
அயல்நாட்டில் வசிக்கும் எம்மைப்போன்ற வாசகர்கள் ஒரு சில மணித்துளிகள் தங்கள் திருப்பணிகளையும் இது போன்ற முற்றோதல் நிகழ்வுகளையும் காணொளியாக காண மிகவும் ஆவலாக இருக்கிறோம்
இது உங்களுக்கு கூடுதல் பணி சுமை என்பது நாம் அறிவோம்
எனினும் ஒரு சில நிகழ்வுகளை எம்மைப்போன்றவர்களுக்காக யு டியூபில் பதிவேயற்றம் செய்வீர்கள் என்று நம்புகிறேன்
தொடரட்டும் உங்கள் திருப்பணி
லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து
தங்கள் ஆலோசனைக்கு நன்றி. நமது தளத்தின் நிகழ்சிகள் ஏற்கனவே சில, நமது யூட்யூப் சானலில் பதிவேற்றப்பட்டுள்ளன.
https://www.youtube.com/user/rightmantra
மற்ற நிகழ்சிகளும் ஒவ்வொன்றாக பதிவேற்றப்படும்.