Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > யோகி ராம்சுரத்குமார் அற்புதம் – வயிறும் நிறைந்து மனமும் குளிர்ந்து வேலையும் கிடைத்தது!

யோகி ராம்சுரத்குமார் அற்புதம் – வயிறும் நிறைந்து மனமும் குளிர்ந்து வேலையும் கிடைத்தது!

print
சென்ற வாரம் டிசம்பர் 1 அன்று யோகி ராம்சுரத் குமார் அவர்களின் அவதாரத் திருநாளை முன்னிட்டு புகைப்படங்களுடன் ஒரு சிறப்பு பதிவு அளித்திருந்தது நினைவிருக்கலாம். யோகி அவர்களை பற்றி பதிவளிக்கவேண்டும் என்று ஒரு வாசகர் நம்மிடம் கேட்டுகொண்டது, மகா பெரியவாவும் அதற்கு இசைந்ததை போல சூழ்நிலை அமைந்து, தொடர்ந்து நாம் சென்னையில் இருக்க எங்கோ வேறு ஒரு மூலையில் இருக்கும் வாசகர் ஒருவரின் உதவியால் அது இனிதே நடைபெற்றது வரை அனைத்தும் ஒரு DIVINE MIRACLE தான்.

சில நேரங்களில் நீங்கள் லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கத் தயாராக இருந்தாலும் நினைக்கும் வேலை நடக்காது. ஆனால் குருமார்களின் அருள் இருந்தால் எப்பேற்பட்ட கடினமான பணியும் மிகச் சுலபமாக நிறைவேறிவிடும். அதற்கு இந்த சம்பவம் உதாரணம்.

இந்த பதிவை முழுக்க முழுக்க எழுதியிருப்பவர் பிரசன்னகுமார் தான். ஒரு சிலை பிழைத் திருத்தங்களை மட்டும் நாம் செய்திருக்கிறோம்…!

OVER TO பிரசன்னகுமார், ஆம்பூர்.

===============================================================

யோகி ராம்சுரத்குமார் ஆஷ்ரம தரிசனம் – மனமும் குளிர்ந்தது… வயிறும் நிறைந்தது…!

சென்ற 30-11-2014 காலை 7.15க்கு ஒரு தொலைபேசி அழைப்பு. பார்த்தால் ரைட்மந்தரா சுந்தர் அண்ணா அவர்கள். “எப்படி இருக்கிறீர்கள்?” என்றெல்லாம் விசாரித்துவிட்டு, ” உடனேயே ஒரு உதவி செய்ய முடியுமா?” என்றுதான் கேட்டார். பிறகு என்ன நினைத்தாரோ… “இல்லை இல்லை கண்டிப்பாக செய்ய வேண்டும்” என்று சொன்னார்.

“சரி சொல்லுங்கள் அண்ணா” என்றேன்.

Yogi Ramsurathkumar Ashram 1

நாளை டிசம்பர் 1. யோகி ராம்சுரத் குமார் அவர்களைப் பற்றி ஒரு பதிவை அளிக்க இருக்கிறேன். எனவே திருவண்ணாமலையில் யோகி ராம் சுரத்குமார் ஆசிரமம் சென்று புகைப்படம் எடுத்து மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் அதுவும் இன்று மாலைக்குள்.

எனக்கு தலை சுற்றாத குறைதான். ஏனென்றால் என்னுடைய ஊர் ஆம்பூர். பேருந்தில் சென்றால் 3.30 மணி நேரம் ஆகும் இதை சுந்தர் அண்ணாவிடம் தெரிவித்த போது “அடடா நீ திருவண்ணாமலை என்றுதானே நினைத்துகொண்டிருக்கிறேன்” என்று கூறினார்.

Yogi Ramsurathkumar Ashram 2

பின் இதை பற்றி விரிவாக பேசிய பிறகு இந்த வாய்ப்பு அண்ணாமலையின் கருணையோடு யோகிராம் சுரத் குமாரின் ஆசியோடுதான் அமைகிறது என்று. ஏனென்றால் அதற்கு முன்பு ஒரு வார காலமாக விசை சொற்களை பயன்படுத்தி தியானம் செய்து வருகின்றேன். அந்த வாக்கியம் இதுதான் FIND DIVINE ORDER YOGI RAM SURATKUMAR (ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும்). எப்போதும் இதை சொல்லலாம். (ஒரு முறை மட்டும் இதனை சொல்லி கொண்டு கிரிவலம் சென்று வாருங்கள் முழுமையான மனதோடு பின் இதனை விட மாட்டீர்கள். அவ்வளவு இரகசியங்களை கொண்டுள்ளது இவ்வாக்கியம்)  அதன் மகத்துவம்தான் ஆசிரமம் செல்ல எனக்கு வாய்ப்பாக அமைந்தது என்பதை 100% உணர்ந்தேன். (அண்ணாமலையில் ஆசிரமம் சென்ற உடன் 1000% சதவீதம் உணர்ந்தேன்).

இதை கூறிய உடன் சுந்தர் அண்ணா மிக சந்தோசம் அடைந்தார்.

“அண்ணா பஸ்ல போனா மூன்றரை மணிநேரத்துக்கும் மேல ஆகும். டூ-வீலர்ல போனா இரண்டரை மணிநேரத்துல போய்டலாம்” என்றேன். நான் இதற்கு முன்பு கிரிவலம் சென்றிருந்தாலும் ராம்சுரத் குமார் ஆஸ்ரமத்துக்கு சென்றிருந்தேன். “சரி கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்லவேண்டும்!” என்று கூறிய போது அவரின் பொறுப்புணர்ச்சி அங்கு வெளிபட்டது.

“கேமிரா இருக்கிறதா உன்னிடம்?” என்று கேட்டார்.

“என்னிடம் இல்லை. வேண்டுமானால் நண்பர்கள் யாரிடமாவது வாங்கிச் செல்கிறேன் அண்ணா” என்றேன்.

Yogi Ramsurathkumar Ashram 4

“இதற்காக அதிகம் சிரமப்படவேண்டாம். காமிரா கிடைக்கவில்லைஎன்றால், திருவண்னாமலையில் யாராவது ஸ்டூடியோ போட்டோகிராபரை அழைத்துக்கொண்டு போய் விஷயத்தை முடித்துவிடு. அதற்கு ஆகும் செலவை நான் ஏற்றுகொள்கிறேன்” என்றார்.

“இல்லைண்ணா நான் சமாளிச்சிடுவேன். ப்ரெண்ட்ஸ் கிட்டே கேட்டுப் பார்க்குறேன்” என்றேன்.

Yogi Ramsurathkumar Ashram 3

காமிரா வைத்திருக்கும் நண்பன் முகிலனின் ஞாபகம் வந்தது. என் நண்பன் சமூக சேவையில் ஆர்வம் உள்ளவன். மேலும் இது போன்ற ஆலய தரிசனம் மற்றும் ஆன்மிக விஷயம் என்றால் முதலில் ஓடி வருபவன் (இதுவரை 8 வருடங்கள் தொடர்ச்சியாக கார்த்திகை தீப தரிசனம் பெற்றவன்) சரி நண்பனை அழைத்து விஷயத்தை முழுமையாக கூறினேன்.

அவன் ஒப்புகொண்டதையடுத்து காலை 9.00 மணிக்கு எங்கள் பயணம் தொடங்கியது. (வீட்டை விட்டு வாகனங்களில் செல்லும் போது 18 முறை ”வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மை காக்கும் சுப்பிரமண்ய வேல்” [அகத்தியர் விஜயம் புத்தகத்தில் படித்தது] என்று கூறிவிட்டுத்தான் வண்டியை எடுப்பேன். இது விபத்தை மற்றும் இடையில் ஏற்படக்கூடிய தேவையற்ற இடைஞ்சல்களை தடுக்கும் சக்தி கொண்டது.

Yogi Ramsurathkumar Ashram 5

மேலும் மிருத்யுஞ்சய மந்திரம் சொல்லிவிட்டு) திருப்பத்தூர் வழியாக சிங்காரப்பேட்டை, செங்கம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்ல புறப்பட்டு விட்டோம். வண்டியில் செல்லும் போது சாய்ராம் சாய்ராம் என்று ஓடி கொண்டே இருந்தது. மணி 10.48 பசி வேறு ஞாயிற்று கிழமை என்பதால் ஓட்டல் அதிகம் இல்லை சிங்காரபேட்டை தாண்டினால் அவ்வளவுதான் செங்கம்தான் அப்போதுதான் கண்ணில் பட்டது சாய்பவன் சுத்த சைவ உணவகம். எல்லாம் அவரின் கருணையோ. உள்ளே சென்று குறைவாக உண்டு விட்டு கிளம்பினோம். வழி நெடுகிலும் சீதோஷ்ண நிலை ஊட்டியில் இருப்பதை போன்று இருந்தது.

செல்லும் வழி எல்லாம் கண்ணில் பட்ட அனைத்து மூலிகை செடிகளை பற்றி நண்பனுக்கு எடுத்து கூறிகொண்டே சென்றேன். அதில் முக்கியமானது பேய்மிரட்டி மற்றும் துத்தி. ஆங்காங்கே நிறைய இருந்தது.

Yogi Ramsurathkumar Ashram 6

ஒரு வழியாக திருவண்ணாமலை கிரிவல பாதையில் நுழைந்தோம். ஆசிரமத்தை பற்றி விசாரத்து கொண்டே சென்றோம். சரியாக ரமணாசிரமம் அடுத்து யோகிராம் சுரத்குமார் ஆசிரம நுழைவாயில் பலகையை பார்த்தோம். அப்பாடா ஒரு வழியாக வந்தோம் என்று உள்ளே நுழைந்து வாகனத்தை நிறுத்தி விட்டு புகைப்படம் எடுக்க ஆரம்பித்தேன். கண்ணில் பட்ட இடமெல்லாம் எடுத்தேன். யோகி ராம் சுரத்குமார் சித்தி இடத்தை நோக்கி நடந்தான் என் நண்பன் புகைப்படம் எடுப்பதில் கவனமாக இருந்ததால் முக்கியமான ஒன்றை மறந்து விட்டேன். யோகி ராம் குமார் பிரதான மந்திர் நுழைவாயிலுக்குள் காலடி வைத்த உடன் ஏற்பட்ட உணர்வை வார்த்தைகளால் வடிக்க முடியாது. என் உடல் முழுதும் ஏதோ ஒரு சக்தி ஆக்கிரமித்ததை உணர்ந்தேன். என்னால் நிதானமாக இருக்க முடியவில்லை. சரியாக புகைப்படம் கூட எடுக்க முடியவில்லை. ஏதோ மறந்து விட்டேன் என்று கூறினேன் அல்லவா ஆம் கால்களை கழுவாமல் உள்ளே நுழைந்தேன். உடனடியாக நண்பனை அழைத்து வா கால் கழுவ வேண்டும் என்று கூறினேன். அவ்வளவு பெரிய இடத்தில் எங்கு சென்று கழிப்பறையை கண்டுபிடிப்பது என்று கேட்டான். அவர் நமக்கு காண்பிப்பார் என்று கூறினேன் வெளியே வந்து உடன் தூரத்தில் இருந்த கழிப்பறை கண்ணில் பட்டது.

Yogi Ramsurathkumar Ashram 8

அப்போதுதான் உணர்ந்தேன் எந்நிலையை ஏதோ உடலிலும் மனதிலும் பழைய மாற்றம் ஏற்பட்டு சகஜ நிலைக்கு வந்தேன். அந்த அளவிற்கு சூட்சும அலையின் தாக்கம் இருந்தது (பெருமைக்காக கூறவில்லை நேரில் வந்து உணர்ந்தால்தான் தெரியும் அதன் அருமை).

Yogi Ramsurathkumar Ashram 9

நேரம் அப்போது 1.15 மணி. சரியான பசி. கால்களை கழுவி விட்டு வரும்போது பெரிய வரிசை. என்னடா என்று பார்த்தால் அன்னதானம். அடடா இதற்குத்தான் நம்மை அழைத்தாரோ என்று நினைத்தேன். போய் வரிசையில் நின்றோம். பெரிய தட்டை முதலில் கொடுத்தார்கள். அப்படியே நகர்ந்தால் ஒரு இனிப்பு, அப்பளம், வடை, பாயசம், கோஸ் பொரியல், வாழைக்காய் பொரியல், சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் மற்றும் காட்டு நெல்லி ஊறுகாய் (ஆசிரமம் சுற்றி காட்டு நெல்லி மரத்தில் இருந்து பறித்த நெல்லிகாயில் செய்த ஊறுகாய்) இவ்வளவு வைத்த பிறகும் தட்டில் இடம் இருந்தது அவ்வளவு பெரிய தட்டு. சாப்பாடு போடுபவர்கள் அனைவரும் யோகி ராம்சுரத்குமார், யோகி ராம்சுரத்குமார், யோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா என்று சொல்லி கொண்டே அனைவருக்கும் அளிக்கின்றார்கள். இதன் மூலம் உணவில் அந்த மந்திர வார்த்தை படிந்து ஒரு மாமருந்தாக திகழும் என்று சொல்லவும் வேண்டுமோ? எல்லாமே அருமையாக இருந்தது. தேவையெனில் இன்னும் வாங்கி கொள்ளலாம்.

Yogi Ramsurathkumar Ashram 10

சாப்பிட்டு முடித்த உடன் மறுபடியும் யோகி ராம் குமார் பிரதான மந்திர்குள் நுழைந்த உடன் மறுபடியும் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தேன். என் நிலையை இழந்தேன். மிக கஷ்டப்பட்டு தான் புகைப்படத்தை எடுத்தேன் ஏனோதானோ என்று. புகைப்படத்தை எடுத்து முடித்த உடன் சிறிது நேரம் தியானம் மற்றும் பிரதட்சணம் என்று முடித்து விட்டு தன்னை பிச்சைக்காரர் என்று கூறிக்கொண்ட அந்த வள்ளலிடமிருந்து விடைப்பெற்றேன். இந்த பிச்சைகாரன். வெளியே வந்த உடன் பக்கத்திலேயே இணைய மையத்திற்கு சென்றேன்.அப்போது நேரம் 2.30. அங்கு சாய்பாபா ஆட்கொண்டார். பிரவுசிங் சென்டர் உரிமையாளர் சாய்பாபா பக்தர். அனைத்து ஃபோட்டக்களின் அளவு 200 MB அளவு கண்டிப்பாக 1 மணி நேரம் ஆகும் என்று நினைத்தேன் ஆனால் அரை மணி நேரத்தில் அனைத்தும் மிக வேகமாக சுந்தர் அண்ணாவிற்கு அனுப்பிவிட்டு கிளம்பினேன்.

Yogi Ramsurathkumar Ashram 11

திருச்சிற்றம்பலம்
அண்ணாமலைக்கு அரோகரா.
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
யோகி ராம்சுரத்குமார், யோகி ராம்சுரத்குமார், யோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா.

நன்றி
மு. பிரசன்ன குமார்,
ஆம்பூர்

===============================================================

ANTI-CLIMAX

சென்ற வாரமே மேற்கண்ட இந்த அனுபவத்தை பிரசன்னகுமார் நமக்கு அனுப்பிவிட்டார். இன்று குருவாரம் என்பதால் இன்று காலை இதை பதிவளிக்க தயார் செய்துவிட்டு கணினியில் அமர்ந்தோம். அனைத்தையும் ரெடி செய்துவிட்டு பிரசன்னகுமாருக்கு போன் செய்து தகவல் சொன்னோம். அப்போது அவர் சர்வ சாதாரணமாக இன்னொரு தகவல் சொன்னார்.

Yogi Ramsurathkumar Ashram 12

“ஏம்பா இது தான் ஹைலைட்டே… இதை ஏன் நீ முதல்லேயே சொல்லலே?” என்று கடிந்துகொண்டோம்.

அதாவது இவருடன் யோகி ராம்சுரத்குமாரின் ஆஸ்ரமத்துக்கு வந்திருந்த முகிலன் என்ற நண்பர் திருமணமாகி குழந்தை பெற்றுவிட்ட நிலையில், சரியான வேலை இன்றி சிரமப்பட்டு வந்துள்ளார். யோகியின் ஆஸ்ரமத்துக்கு அழைத்தபோது, அவரிடம் “நீ ஆஸ்ரமத்துக்கு வந்து அங்கு யோகி ராம்சுரத்குமார் அவர்களிடம் இன்னும் ஒரு வாரத்தில் எனக்கு வேலை கிடைக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு தியானம் செய். நிச்சயம் நடக்கும்!” என்று கூறியிருக்கிறார்.

அவரும் அவ்வாறே செய்திருக்கிறார்.

முந்தைய ஞாயிறு 30/11/2014 சென்றிருக்கிறார்கள். இதோ கடந்த ஞாயிறு 07/12/2014 க்குள் மூன்று இடத்தில் இருந்து அவருக்கு ஆஃபர் வந்திருக்கிறதாம். எதை தேர்ந்தெடுப்பது என்று தெரியவில்லையாம்.

ஓம் யோகி ராம்சுரத் குமார். ஓம் யோகி ராம்சுரத் குமார். ஓம் யோகி ராம்சுரத்குமார்.

===============================================================

இதன் முந்தைய பாகத்திற்கு :

“மூன்று முறை அழைத்தால் போதும், இந்தப் பிச்சைக்காரன் ஓடி வந்து உதவி செய்வான்!” – யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி SPL

===============================================================

நமது முப்பெரும் விழா முடிந்ததும், அடுத்து வரும் ஞாயிறுகளில் ஒருநாள் திருவண்ணாமலை பயணம் திட்டமிடப்பட்டு வருகிறது. (வேன் பயணம்). வர விருப்பம் உள்ள வாசகர்கள் நமக்கு தகவல் அனுப்பவும்.

===============================================================

Also check from our archives…

காங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்!

தீயவர்கள் சுகப்படுவதும் நல்லவர்கள் துன்பப்படுவதும் ஏன்?

தீராத வினைகளை தீர்க்கும் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் – A must visit place!

பித்தனாகியும் பரமனைப் பாடிய ஸ்ரீ அப்பைய தீட்சிதர் திவ்ய சரிதம் + அதிஷ்டான தரிசனம்!

ராம நாம மகிமை & போதேந்திராள் வாழ்க்கை வரலாற்று நாடகம்! ஒரு நேரடி அனுபவம்!!

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

பொருள் தெரியாமல் ஒரு ஸ்லோகத்தை உச்சரிப்பதால் பலன் உண்டா? MUST READ

திருவாரூர் தந்த திருஞானசம்பந்தருடன் நம் தியாகேசர் தரிசனம்!

ஊழ்வினையை அனுபவித்தே தீரவேண்டுமா? அது அத்தனை சக்திமிக்கதா? கர்மா Vs கடவுள் (1)

உருகிய பக்தை… வீட்டுக்கே வந்த நடராஜர்! உண்மை சம்பவம்!!

ஆங்கிலேயே கலெக்டருக்கு அருள்புரிந்த அன்னை மீனாக்ஷி! சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!

சிவபெருமான் தன் பக்தனுக்கு காட்டிய கண்ணனின் ராசலீலை (உண்மை சம்பவம்)!

வள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!

பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

ஆருத்ரா தரிசனம் – சிவபெருமானின் திருநடனத்தை காண ஆதிசேடனை அனுப்பிய திருமால்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்! – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்!

‘என் கடைக்காலம் அரங்கன் சேவைக்கே!’ – கண்கலங்க வைத்த ரங்கநாயகி – திருநீர்மலை உழவாரப்பணி UPDATE!

வாழ்வுக்கு வழிகாட்டும் 27 நட்சத்திரங்களுக்குரிய பரிகாரத் திருத்தலங்கள்!

உங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியுமா?

பிறந்தநாளன்று நாம் செய்ய வேண்டியது என்ன? செய்யக் கூடாதவை என்ன?

எங்கே ‘தேடல்’ உள்ளதோ அங்கே தோல்வியில்லை!

சிவன் கோவிலில் காணக் கிடைக்காத அனுமன் சன்னதியுடன் கூடிய மூல நட்சத்திர பரிகாரத் தலம்

ஜொலிக்கப்போகும் சிங்கீஸ்வரர் – ஓரடி எடுத்து வைத்தவர்களிடம் நூறடி எடுத்து வைத்த ஈசனின் பெருங்கருணை!!

பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்!

கைமேல் பலனைத் தந்த ‘வேல்மாறல்’ பாராயணம் — யாமிருக்க பயமேன்? (Part 4)

இழந்த வாழ்க்கையை மீட்டுத் தந்த ‘வேல்மாறல்’ — யாமிருக்க பயமேன்? (Part 3)

வினைகளை தகர்க்கும் ‘வேல்மாறல்’ எனும் மஹாமந்த்ரம் — யாமிருக்க பயமேன்? (Part 2)

வேல் தீர்க்காத வினை உண்டா? உண்மை சம்பவம்! — யாமிருக்க பயமேன்? (Part 1)

உன்னை தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம்!

முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!

சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!

முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2

ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

கருவறையில் மட்டுமா இருக்கிறான் கந்தன் ? தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 2

ஏற்பது இங்கே இகழ்ச்சியல்ல!

நல்லதை நினைத்தால் போதும்… நடத்திக்கொள்ள ஆண்டவன் தயார்!

கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1

தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!

ஏழை திருமணத்துக்கு உதவிய வள்ளல் & வாரியாரின் வாழ்வும் வாக்கும் – தமிழ் புத்தாண்டு SPL & வீடியோ!

காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!

================================================================

[END]

[END]

8 thoughts on “யோகி ராம்சுரத்குமார் அற்புதம் – வயிறும் நிறைந்து மனமும் குளிர்ந்து வேலையும் கிடைத்தது!

  1. திரு பிரசன்ன குமாரின் மெய் சிலிர்க்கும் அனுபவத்தை பதிவாக படிக்கும் பொழுது மனம் உடனடியாக யோகி ராம் சுரத் குமார் ஆசிரமத்திற்கு சென்று விட்டது. இந்த அழகிய பதிவை படிக்கும் பொழுது நாமும் ஆசிரமத்தில் இருந்த உணர்வு ஏற்படுகிறது. மிகவும் உயிரோட்டமுள்ள , யோகியின் மேல் அளவற்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் தத்ரூபமான பதிவு. தாங்கள் ஒரு கருவியாக இருந்து திரு பிரசன்னா குமாரையும், திரு முகிலனையும் ஆசிரமத்திற்கு அனுப்பி இருக்கிறீர்கள்.

    ஆசிரமத்திற்கு சென்றதால் குருவின் அருளால் திரு முகிலனுக்கு வேலையும் கிடைத்ததை அறிய மட்டற்ற மகிழ்ச்சி.குருவின் கருணையோ கருணை. ……குருவின் அதிஷ்டானத்தை வணங்கினால் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஏற்றம் தான்

    படங்கள் அனைத்தும் அருமை.

    ”ஓம் ராம் சுரத் குமார் ..ஓம் ராம் சுரத் குமார் ..ஓம் ராம் சுரத் குமார் ”

    குருவே ……சரணம்…….

    ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ்

    நன்றி
    உமா .

  2. போன வாரம் இவரை பற்றிய பதிவை படித்த போதே சொல்ல முடியாத ஒரு நிம்மதி,சந்தோசம், கண்களில் கண்ணீர்.
    திருவண்ணாமலை செல்ல முடியா விட்டாலும் அவரைப் பற்றி உங்கள் மூலம் தெரிந்து கொண்டதற்கு நன்றி.
    FIND DIVINE ORDER YOGI RAM சுரத்குமார் என நானும் இப்போதிலிருந்து முழு மனத்தோடும்,நம்பிக்கையோடும் சொல்ல ஆரம்பித்து விட்டேன்.

    வாழ்க வளமுடன்
    நன்றி

  3. அன்புள்ள சுந்தர் அண்ணா அவர்களுக்கு ,
    நான் கடந்த வாரம் இந்த பதிவை படித்தவுடன் எனது காரியங்களுக்காக நான் மூன்று மூறை இந்த மகா யோகியின் பெயரை உச்சரித்து வந்தேன் மூன்று நான்கு நாட்களாக உச்சரித்து வந்தேன் , எனது உதியோகத்தில் சமிப காலமாக சுணக்கம் தீபத்தை தரிசிக்க நண்பர்களுடன் புறப்பட்டேன் கோவிலுக்குள் செல்ல முடியாவிட்டாலும் கோவில் கோபுரம் அருகில் நின்று தீபத்தை தரிசித்து விட்டு அருகில் இருக்கும் ஒரு வீட்டின் சாய்வான திண்ணையில் அமர்ந்தேன் அதில் அமர முடியாத படி கற்கள் பதித்து இருந்தார்கள் இருபினும் சிறிது இடைவெளி இருந்தாதால் அமர்ந்தேன் அமர்ந்து சற்று அந்த வீட்டை திரும்பி பார்த்தேன் எனக்குளே ஒரு இன்ப அதிர்ச்சி அது யோகி ராம்சுரத்குமார் அவர்கள் 6 வருடங்கள் வாழ்ந்த வீடு என்று கல்வெட்டு பொரிக்க பட்டு இருந்தது வாசலில் அவர் அமர்ந்து இரு கைகளை உயர்த்து ஆசிர்வதிக்கும் படம் இருந்தது நிச்சயம் அப்புறம் நான் உணர்ந்து கொண்டேன் அவரை மூன்று நாட்கள் அழைத்தவுடன் அவர் வாழ்ந்த வீடு வாசலில் என்னை அமர வெய்து விட்டார் நேரமான காரணத்தினால் வீடு பூட்ட பட்டு இருந்தது இருந்தாலும் வீடு திண்ணையில் இருந்து உள்ளே பாற்கும் படி கிரில் இருந்தது மெயின் கதவு பூட்ட பட்டு இருந்தாலும் கதவிற்கு முன் அவர் அமர்ந்து ஆசிர்வதிக்கும் படம் இருந்தது மனதார கும்பிட்டு விட்டு புற பட்டேன் அவரை நினைத்த மாத்திரத்தில் அவர் வாழ்ந்த வீட்டு திண்ணையில் அமர வெய்து விட்டார் அப்புறம் எனக்கு புரிந்தது அவர் அனுகிரகம் இருக்கும் எனக்கு இந்த சுணக்க நிலை ஏதோ ஒரு காரணத்தினால் தான் என்று அதுவும் அவர் அருளால் தீரும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டு விட்டது
    யோகி ராம்சுரத்குமார் ,யோகி ராம்சுரத்குமார்,யோகி ராம்சுரத்குமார் ஜெயா குரு ராயா

    குருவே சரணம் ,
    ரவி

    1. ரவி, உங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொண்டு அந்த மகிழ்ச்சியை எங்களுக்கும் தந்தமைக்கு நன்றி.

      யோகியை கெட்டியாக பிடித்துக்கொள்ளவும். அவரது புகழை மட்டும் பாடிக்கொண்டிராமல் அவர் கூறிய கருத்துக்களை பின்பற்றவும். அதுவே ஒரு குருவுக்கு அவர் சீடன் தரும் மெய்யான காணிக்கையாகும்.

      நன்றி.

      – சுந்தர்

  4. திரு.பிரசன்னகுமார் அவர்களின் அனுபவம் என்றாலும் அதை அங்கங்கே திருத்தி உங்கள் கை வண்ணத்தில் மிளிர வைத்து உள்ளீர்கள்.
    படங்கள் அனைத்தும் அருமை. குருவின் சொல்படி நடக்கும் சீடன் போல நீங்கள் எப்படி எப்படி எடுக்க சொன்னிர்களோ அதன்படி நன்றாக வந்துள்ளது.
    எப்போதும் குருவின் பெருமை சொல்ல வார்த்தைகள் இல்லை.
    குருவின் மகிமை படிக்கும் எல்லா சமயத்திலும் நம் மனம் படும்பாடு, முட்டி வரும் கண்ணீர், வார்த்தையில் சொல்ல முடியாத உணர்வுகள்,
    எல்லாம் முடிந்தபிறகு நம் நெஞ்சின் நடுவே நிற்கும் மகா பெரியவா அவர்களின் அன்பு உருவம் நமக்கு மிக பெரிய அமைதியை தரும்.
    அந்த உணர்வு இந்த பதிவுக்கும் எனக்கு ஏற்பட்டது.
    படிக்கும் எங்களுக்கே மிக பெரிய புண்ணியம் என்றால் அதை ஏற்படுத்தி தந்த உங்களுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கம்.
    நன்றி

  5. வணக்கம்………..

    யோகி அவர்களைப் பற்றி அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி……..அதற்காக உழைத்த நண்பர்களைப் பற்றி அறிந்து நெகிழ்ச்சி……….

    ரூபங்கள் பலவாயினும் நிலையாக நிலைத்திருப்பது எந்தை ஒருவரே என்று யோகி அவர்கள் கூறியதைப்போல் ரூபங்கள் பலவாயினும் அதில் எல்லாம் நமது குரு மஹா பெரியவா அவர்களே தெரிகின்றார்……….. குருவே சரணம்…………

  6. மிக மிக அருமையான கட்டுரை. யோகியின் வரலாறு கேட்பதற்கே பெரும் பேரு. நான் சாயி பாபாவின் 9 வார விரதத்தில் இருக்கிறேன். இன்று யோகி ராம் சுரத்குமார் பற்றி படிக்க போகிறேன் என்று நினைத்து படித்தால் அதில் எப்படி சாயி ராம் வந்தார் என்றே தெரியவில்லை. அனைத்தும் அவன் செயல். ஓம் சாயி நாத் மகாராஜ்கி ஜெய். ஜெய் யோகி ராம் சுரத்குமார். திரு பிரசன்னா குமார் மற்றும் திரு முகலனுக்கு எங்களது பாராட்டுக்கள். ” ஓவர் டு பிரசன்னா குமார் ” ஒரு லைவ் டெலிகாஸ்ட் போல இருந்தது. பாராட்டுக்கள்.

  7. ஆம்பூர் பிரசன்ன குமார், முகிலனின் நேரடி தரிசனம், நம்மையும் அழைத்துப்போகும் அவர் வரிகள் அருமை…

    உண்மையான பக்தியுடன் இறைவன் நாமம் சொன்னால், உயர்ந்த நிலையை அடையலாம், நிறைய வியப்பூட்டும் அனுபவங்களை பெறலாம்..

    சந்தேகமற்ற நம்பிக்கையே உண்மையான பக்தி. வாக்கு, மனது, காரியம் மூன்றிலும் ஒருமைப்பாடு இருந்தால் இறைத்துணை நிச்சயம் கிடைக்கும்…

Leave a Reply to Thamarai Vengat Cancel reply

Your email address will not be published. Required fields are marked *