Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, October 10, 2024
Please specify the group
Home > Featured > திருவாரூர் தந்த திருஞானசம்பந்தருடன் நம் தியாகேசர் தரிசனம்!

திருவாரூர் தந்த திருஞானசம்பந்தருடன் நம் தியாகேசர் தரிசனம்!

print
திருவாரூர் தியாகேசரின் அருளால் நமது ஆலயதரிசனம் + சாதனையாளர் சுற்றுப் பயணம் மிக மிக சிறப்பாக நடந்தேறியது. நமது வாசகர்களும் அதில் பங்கேற்று சிறப்பித்தது மறக்க முடியாத ஒன்று. இப்போதைக்கு நமது சுற்றுப் பயணம் ஒரு குவிக் அப்டேட்.

என்ன சொல்வது… எதை சொல்வது… எப்படி சொல்வது… திணறித்தான் போனோம்!

DSC00177

வாசகர் ஒருவர் கேட்டுக்கொண்டையடுத்து முன்னதாக வால்பாறை செல்லும் வழியில், ஆழியாரில் அமைந்துள்ள வேதாத்திரி மகரிஷியின் அறிவுத் திருக்கோவில் சென்றிருந்தோம். நம்முடன் திருப்பூரை சேர்ந்த நண்பர் விஜய் ஆனந்தும் வந்திருந்தார்.

Azhiyar - Temple of Conscience
ஆழியார் அறிவுத் திருக்கோவிலின் உள்ளே ஒரு ரம்மியமான காட்சி!

அறிவுத் திருக்கோவில் அலுவலகத்தில் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும் ஆஸ்ரமத்தை பற்றிய அனைத்து தகவல்களையும் நமக்கு கூறி ஆஸ்ரமத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் நம்முடன் வந்திருந்து, முழு வளாகத்தையும் (வேதாத்திரி மகரிஷி தங்கியிருந்த அறை உட்பட) சுற்றிக் காண்பித்தார்.

DSCN0949

பூலோக சொர்க்கம் என்றே கூறலாம். நகரத்தின் பரபரப்புக்களில் இருப்பவர்கள் அவசியம் இங்கு வந்து தங்கியிருந்து புத்துணர்வு பெற்று செல்லவேண்டும். இது பற்றி விரிவான ஒரு பதிவு வரும்.

DSCN0983

அவசியம் அனைவரும் தெரிந்துகொண்டு பயன்பெறவேண்டும்.

பிறகு அங்கிருந்து வால்பாறை பயணம். வால்பாறையை சுற்றிபார்த்துவிட்டு அங்கு தேயிலை தோட்டங்களுக்கு நடுவே அமைந்துள்ள பாலாஜி திருக்கோவிலை தரிசித்துவிட்டு பொள்ளாச்சி திரும்பினோம்.

DSCN1001

அடுத்து அன்று மாலை பொள்ளாச்சியில் திருமண வரவேற்பில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி பரிசளித்துவிட்டு அன்று இரவு திருவாரூர் பயணம்.

DSC00291

DSCN1053

நமது ஆலய தரிசன + சாதனையாளர் சந்திப்பு பற்றிய பதிவை பார்த்துவிட்டு திருவாரூரில் வசிக்கும் நம் தளத்தின் தீவிர வாசகி பாண்டீஸ்வரி என்பவர் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வந்திருந்தார்.

அவரை வைத்தே நாம் சந்தித்த சாதனையாளரை கௌரவித்து நினைவுப் பரிசுகள் வழங்கினோம்.

DSC00303

தொடர்ந்து திருவாரூர் தியாகேசரை தரிசிக்க சென்றபோது நாம் சந்தித்த சாதனையாளரும் நம்முடன் வந்திருந்து, தியாகராஜர் + கமலாம்பாள்  தரிசனத்தை மேலும் பவித்திரமாக்கினார்.

DSCN1170

திருவாரூர் - தண்டியடிகள், சுந்தரர், மனுநீதிச் சோழனுக்கு இறைவன் காட்சி கொடுத்த இடம்!
திருவாரூர் – தண்டியடிகள், சுந்தரர், மனுநீதிச் சோழனுக்கு இறைவன் காட்சி கொடுத்த இடம்!
DSCN1088
திருவாரூர் ஆலயத்தில் நம் வாசகர்களுடன்… நடுவே இருக்கும் சிறுவன் தான் நாம் சந்திக்க சென்ற வி.ஐ.பி.

புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் வேறு யாருமல்ல… திருவாரூரில் நாம் சந்தித்த சாதனையாளர்களுள் ஒருவர்! இவரது சாதனை இருக்கிறதே… அப்பப்பா… இவருடன் நாம் தியாகராஜரை தரிசிக்க நேர்ந்தது நாம் பெற்ற பாக்கியம் என்றே சொல்லலாம். விஷயத்தை சொன்னால், “அடடா நாம இவங்க கூட இல்லாம போய்விட்டோமே…!!!!!” என்று உங்கள் அனைவருக்கும் ஒரு கணம் தோன்றும்!

திருவாரூர் ஆலய கோ-சாலையில் சம்பந்தனுடன் அளவளாவியபோது...
திருவாரூர் ஆலய கோ-சாலையில் சம்பந்தனுடன் அளவளாவியபோது…

திருவாரூர் தந்த திருஞானசம்பந்தன் இந்த சிறுவன் என்றால் மிகையாகாது! எனவே தான் வாசகியர் நமக்களித்த (திருவாரூர் திருத்தல வரலாறு) பரிசை சம்பந்தன் கைகளில் உங்கள் சார்பாக பெற்றுக்கொண்டோம். அதுவும் கோ-சாலையில் வைத்து.

DSC00382
மகன் தந்தைக்காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்.

நமக்கு அணிவிக்க வாசகர்கள் கொண்டு வந்த பொன்னாடையை நாம் சந்தித்த சாதனைக் சிறுவனுக்கு அணிவிக்கச் செய்தோம்.

அப்படி என்ன சாதனை செய்துவிட்டார் இந்த சிறுவன்? விரைவில் விரிவான பதிவு வரும். அதுவரை சஸ்பென்சை அனுபவியுங்களேன்…!

திருவாரூர் ஆலயத்தை பற்றி என்ன சொல்வது? இந்த யுகம் முடியும் வரை அதன் பெருமையை எழுதிக்கொண்டேயிருக்கலாம். இப்படி ஒரு ஆலயத்தை இத்தனை நாள் தரிசிக்காமல் வாழ்க்கையை கழித்துவிட்டோமே என்று மனம் கிடந்து அடித்துக்கொள்கிறது.

வாசகி பாண்டீஸ்வரி தனது கணவருடன் சேர்ந்து நாம் சந்தித்த சாதனையாளருக்குநினைவுப் பரிசை வழங்குகிறார்
வாசகி பாண்டீஸ்வரி தனது கணவருடன் சேர்ந்து நாம் சந்தித்த சாதனையாளருக்குநினைவுப் பரிசை வழங்குகிறார்

மூலவர் வன்மீக நாதர் சுயம்புவாக எழுந்தருளியவர். தியாகராஜர், திருமாலின் திருமார்பிலிருந்து தோன்றியவராம். தியாகராஜரின் அழகு வார்த்தைகளில் வடிக்க இயலாதது.

DSC00410

அப்புறம் சொல்ல மறந்துவிட்டோம்… நமது சாதனையாளர் சந்திப்புக்கும் ஆலய தரிசனத்துக்கும் வந்திருந்த வாசகி பாண்டீஸ்வரி அவர்களுக்கு எதிர்பாராத பரிசு ஒன்றையளித்து அவரை திக்குமுக்காடச் செய்தோம். மகிழ்ச்சியில் ஒரு சில நிமிடங்கள் அவருக்கு வார்த்தைகள் வரவில்லை.

அப்படி என்ன பரிசு? சற்று பொறுங்களேன்…!!!

அடுத்து அங்கிருந்து திருக்கடவூர் பயணம். திருக்கடவூரில் அமிர்தகடேஸ்வரரையும் அன்னையையும் தரிசித்தது நாம் செய்த பாக்கியம். தலைமை அர்ச்சகர் தனது மருமகன் மகாலிங்கம் குருக்கள் அவர்களை தரிசனத்துக்கு உடன் அனுப்பி வைத்தார். அப்பனையும் அன்னையையும் அருகில் இருந்து தரிசிக்கும் பாக்கியம் பெற்றோம். கோவில் அப்படி ஒரு பழைமை + அழகு. அபிராம பட்டருக்காக அன்னை தாடங்கத்தை வீசி நிலவை வரவழைத்த தலத்தில் நாம் இருக்கிறோம் என்கிற பிரமிப்பு ஆலயத்தில் இருந்த ஒவ்வொரு கணமும் இருந்தது.

சாரை சாரையாக பக்தர்கள் வந்தவண்ணமிருந்தனர்.
நம் எதிர்பார்த்ததைவிட ஆலயம் மிகவும் பரபரப்பாக இருந்தது.

DSC00443

அற்புதமான வைப்ரேஷன் இருந்தபடியால் கோவிலில் இருந்த நேரம் முழுக்க நமது வாசகர்களின் நல்வாழ்வுக்காகவும், பிரார்த்தனை கோரிக்கை சமர்பித்தவர்களுக்காகவும் வேண்டியபடி இருந்தோம்.

அவசியம் அனைவரும் தரிசிக்க வேண்டிய ஆலயத்தில் திருக்கடவூரும் ஒன்று!

DSC00472

கோவிலில் விஷேட தரிசனம் செய்விக்கப்பட்டு பிரசாதம் அளிக்கப்பட்டு பின்னர் நமக்கு பரிவட்டம் கட்டி மாலை அணிவிக்கப்பட்டது. காலசம்ஹார மூர்த்தியை அருகில் இருந்து தரிசிக்கும் பாக்கியம் பெற்றோம். அவனுக்கு அணிவித்த அந்த மாலை கழுத்தில் விழுந்த அந்த தருணம், வார்த்தைகள் ஏதும் வரவில்லை. கண்களில் கண்ணீர் மட்டுமே பெருகி வழிந்தது.

நாயினும் கடையேன் என்செய்வேன் பிணியால் நலிகின்ற நலிவினை அறிந்தும்

தாயினும் இனியாய் இன்னும்நீ வரவு தாழ்த்தனை என்கொலேன் றறியேன்

மாயினும் அல்லால் வாழினும் நினது மலரடி அன்றிஒன் றேத்தேன்

காயினும் என்னைக் கனியினும் நின்னைக் கனவினும் விட்டிடேன் காணே!

DSCN1206

எதுவுமே கேட்கத் தோன்றாமல் காலசம்ஹாரமூர்தியின் அழகையே பார்த்து உருகிக்கொண்டிருந்தொம்.

இந்த கௌரவம் தனிமனிதனுக்கு கிடைத்ததல்ல. நாம் அனைவரும் சென்றுகொண்டிருக்கும் பாதைக்கு அமிர்தகடேஸ்வரரின் திருவுளப்படி கிடைத்தது. எல்லாப் பெருமையும், புகழும், என்றும் நல்லவற்றையே நாடும் நம் நண்பர்களையும் ரைட்மந்த்ரா வாசகர்களையுமே சாரும். ‘ரைட்மந்த்ரா’ என்னும் பாதைக்கு, முயற்சிக்கு அவர்கள் ஆதரவும் ஊக்கமும் கொடுத்ததாலேயே இது சாத்தியமாயிற்று.

நமது ஆலய தரிசன பதிவுகளுக்கு வாசகர்களும் நண்பர்களும் அளித்த வரவேற்ப்பை தொடர்ந்தே நமக்கு இது போன்ற ஆன்மீக பயணத்தில் / சாதனையாளர் சந்திப்பில் நமக்கு ஈடுபாடு அதிகரித்தது.

DSC00435

தரிசனம் முடிந்த பிறகு தலைமை குருக்கள் விஸ்வநாத சிவாச்சாரியார் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து விடைபெற்றோம். திருக்கோவில் பிரசாதங்களையும் காலசம்ஹார மூர்த்தி + அன்னை அபிராமி ஆகயோரின் படங்களையும் நமக்கு தந்தார்.

முன்னதாக நம் தளம் சார்பாக அவருக்கு பழங்களும், முக்கியஸ்தர்களுக்கு நாம் அளிக்கும் சிறப்பு பரிசு ஒன்றையும் அளித்தோம். மணிவிழா கண்ட அவரின் கால்களில் விழுந்து ஆசிபெற்றோம்.

DSCN1259

அங்கு அனைத்தையும் முடித்து கோவிந்தபுரம் செல்வதற்குள் நேரம் மிகவும் ஆகிவிட்டது. இருப்பினும் எப்படியோ கோவிந்தபுரம் சென்று பாண்டுரங்கனை தரிசித்து, கோ-சாலையையும் சுற்றி பார்த்துவிட்டு அங்கு சற்றுய் நேரம் தியானமும் பிரார்த்தனையும் செய்தோம்.

DSCN1255

DSCN1220

போதேந்திராள் அதிஷ்டானத்திற்கு செல்ல தான் நேரம் கிடைக்கவில்லை. இரவு திருவாரூர் வந்து ரயிலை பிடிக்கவேண்டும் என்பதால் அடுத்தமுறை சற்று ஆற அமர  குருவை தரிசிப்போம் என்று வந்துவிட்டோம். குரு மன்னிக்கவேண்டும்.

பயணத்தின் ஒவ்வொரு கட்டத்தை பற்றியும் விரிவான பதிவு வரவிருக்கிறது. எனவே மேலும் சுவாரஸ்யமான தகவல்களுடனும் புகைப்படங்களுடனும் உங்களை சந்திக்கிறோம்.  இது ஜஸ்ட் ஒரு ட்ரெயிலர்!

நன்றி!

[END]

9 thoughts on “திருவாரூர் தந்த திருஞானசம்பந்தருடன் நம் தியாகேசர் தரிசனம்!

  1. Trailer super.
    எல்லா புகைபடங்களும் அருமை.
    திருக்கடையூர் கோயில் கோபுரம் பார்த்து கண்கள் பனித்தது
    பாண்டுரங்கன் ஆலயம் ஜகஜோதியாக மின்னுகிறது.
    மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பார்கள் அதுபோல சாதனையாளர் வயதில் சிறியவராக இருந்தாலும் அவர் செய்த சாதனை பெரிது என்பதால் தான் எங்கள் சாதனையலரால்(சுந்தர்)
    அவரை பேட்டி எடுக்க முடிந்தது.
    உங்கள் பயணம் நல்லபடியாக முடிந்ததில் மகிழ்ச்சி.
    உங்கள் வாசகர்களாகிய எங்களால் உங்களுடன் இருக்க, வர முடியவில்லையே என்ற ஏக்கம் எங்களுக்கு அதிகமாக உள்ளது.
    உங்கள் எழுத்தின் மூலம் அதை நாங்கள் தணித்துகொள்கிறோம்.
    விரைவில் தாமதம் பண்ணாமல் உங்கள் பதிவை எதிர்பார்கிறோம்.
    பரிவட்டம் கட்டிய புகைப்படம் தவறாமல் இடம்பெறவேண்டும்
    என்பது எங்கள் வேண்டுகோள்.

  2. சுந்தர்ஜி
    பெரியவா அவர்கள் சொல்வது போல், ” நமது லட்சியம் நன்றாக இருந்தால் அம்பாள் நல்லபடி படியளப்பா” ஒருமுறை யாத்திரையின் போது செலவுக்கு பணம் இல்லை என சொன்ன மடத்து மேலாளரிடம் பெரியவா சொன்ன வார்த்தைகள் அவை. அதே போல் படியில் அடுத்தநாள் மடத்தில் காசை கொட்டி அளந்தார்கள் என படித்தேன்.

    அது போல் சுந்தருக்கு கிடைத்த தரிசனங்கள் எல்லாம் நன்றாக அமைய காரணம் அவரது லட்சியம். இவ்வளவு கஷ்டப்பட்டு பயணங்கள் சென்று மற்றவர்களுக்கு நலம் வேண்டும் மனம் எல்லோருக்கும் வாய்க்காது. புகைப்படங்கள் அருமை. பயணம் வராத அனைவருக்கும் காட்சி கிடைக்க எடுத்த உங்களின் சிரத்தை அதில் தெரிகிறது. நம் தளம் சார்பாக உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்! விரைவில் சாதனையாளர் மற்றும் மற்ற பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.

  3. அத்தனை இடங்களுக்கும் உங்களுடன் சென்று வந்தது போல ஓர் உணர்வு .உங்களது நீரோடை போன்ற எழுத்தும் கண்ணைக்கவரும் புகைப்படங்களும்தான் அதன் காரணங்கள்
    வாழ்த்துக்கள் …

  4. பார்க்கவும் படிக்கவும் பரவசமாக உள்ளது சுந்தர் சார்..

  5. சுந்தர் சார் காலை வணக்கம்

    அனைத்து தகவலும் அருமை, வரவிருக்கும் தகவலுக்காக எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

    நன்றி

  6. டியர் sundarji
    திருவாரூர் தியாகேசரின் அருளால் நமது ஆலயதரிசனம் + சாதனையாளர் சுற்றுப் பயணம் மிக மிக சிறப்பாக நடந்தேறியது அறிய மிக்க மகிழ்ச்சி . தங்கள் பதிவு மிக அருமை. All the photos are very nice பயணத்தின் ஒவ்வொரு கட்டத்தின் விரிவான பதிவை எதிர்பார்கிறோம். குருவருளும் திருவருளும் ஒருங்கிணைந்து மேலும் பல ஆன்மிக பயணங்கள் அமைய எனது வாழ்த்துக்கள். new year பதிவு என்ன ஆயிற்று? நமது தள வாசகி பாண்டீஸ்வரிக்கும் எனது
    வாழ்த்துக்கள்.

    நன்றி
    உமா

  7. நன்றி; அறிவுத்திருகோயில் + அன்பு திருக்கோயில்கள்…

  8. \\\அப்படி என்ன சாதனை செய்துவிட்டார் இந்த சிறுவன்? விரைவில் விரிவான பதிவு வரும். அதுவரை சஸ்பென்சை அனுபவியுங்களேன்…! ///
    திருவாரூர் தந்த சம்பந்தன் பதிவை ஆவலுடன் எதிர்பார்கிறோம்.

    நன்றி
    உமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *