Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > மகா பெரியவா – அனைத்தும் அறிந்தவர்; முக்காலமும் உணர்ந்தவர்!

மகா பெரியவா – அனைத்தும் அறிந்தவர்; முக்காலமும் உணர்ந்தவர்!

print
27/05/2014 செவ்வாய்க்கிழமை என் வாழ்க்கையின் மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது. எங்கள் அம்மாவின் அம்மா அதாவது என் பாட்டி சீதாலக்ஷ்மி அம்மாள் திடீர் மாரடைப்பு காரணமாக இறைவனடி சேர்ந்துவிட்டார்.

பொதுவாக தனிப்பட்ட விஷயங்களை தளத்தில் நான் பதிவு செய்வதை தவிர்த்து வருகிறேன். ஆனால் ரைட் மந்த்ரா வாசகர்கள் அனைவரும் என்  குடும்பத்தினர் என்கிற உரிமையில் அன்பில் இதை பகிர்ந்துகொள்கிறேன்.

ஏனெனில் இது சாதாரண நிகழ்வு அல்ல. காரணம்… படியுங்கள் நீங்களே புரிந்துகொள்வீர்கள்.

Seethalakshmi Amma copy copyஎன் தாத்தா என் அம்மாவுக்கு திருமணம் செய்து முடித்த ஒரு வருடத்தில் (1973) காலமாகிவிட்டார். (என் பெற்றோருக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கழித்து தான் நான் பிறந்தேன்.) நான் பிறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே தாத்தா காலமாகிவிட்டார். அப்போது அவருக்கு சிறு வயது தான். அதற்கு பிறகு என் அம்மாவின் உடன் பிறந்த இரண்டு தங்கைகள் மற்றும் ஒரு தம்பி (சித்தி, மாமா) ஆகியோரை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பு என் பாட்டி மீதே விழுந்தது. எப்படி எப்படியோ கஷ்டப்பட்டு அவர்களை வளர்த்து ஆளாக்கினார் என் பாட்டி. புகுந்த வீட்டில் இருந்து என் அம்மா தன் உடன்பிறந்தோருக்கு உதவி வந்தார். இதில் ஒரு தங்கை ஜன்னி வந்து 1982 ஆம் ஆண்டு காலமாகிவிட்டார்.

சிறு வயதில் பட்ட துன்பம் மற்றும் கஷ்டம் காரணமாக என் மாமா பிராமணர்களுக்கே உரிய சமயச் சடங்கான பூணூல் அணிந்துகொள்வதில் விருப்பமில்லாமல் இருந்தார். அனைவரும் எத்தனையோ முறை வற்புறுத்தியும் அவரை அதற்கு ஒப்புக்கொள்ள வைக்கமுடியவில்லை. சிறு குழந்தை என்றால் அடித்து சம்மதிக்க வைக்கலாம். தோளுக்கு மீறி வளர்ந்த ஒருவரை என்ன செய்வார்கள்? அதுவும் ஆண்பிள்ளை இல்லாத வீடு.

அவரை உறவினர்கள் மற்றும் உடன்பிறந்தோர் மற்றும் என் பாட்டி ஆகிய அனைவரும் அதற்கு ஒப்புக்கொள்ள வைக்க முயல்வதும் அவர் பிடிவாதமாய் மறுப்பதும் என்றே ஆண்டுகள் உருண்டோடியது.

இந்நிலையில் பாட்டியை அவரது வயதான காலத்தில் நாங்கள் வைத்துக்கொள்ள விரும்பி 1996 ஆம் வருடம் எங்கள் சொந்த ஊரான திருச்சியில் இருந்து எங்களுடன் அழைத்து வந்துவிட்டோம். அது முதல் எங்களுடன் தான் அவர் இருக்கிறார். என் கண்ணுக்கு கண்ணாக அவரை பாதுகாத்து வந்தேன்.

கடுமையாக உழைத்த உடம்பு என்பதால் என் பாட்டிக்கு சுகர், பி.பி. உள்ளிட்ட எந்த நோயும் இல்லை. அம்மாவுக்கு வீட்டு பணிகளில் உதவியாய் இருப்பது, டி.வி.சீரியல் பார்ப்பது, புத்தகங்கள் படிப்பது என்று தான் அவரது நேரம் கழிந்தது. வயது ஏற ஏற வெளியே அதிகம் போகமாட்டார்கள். அவர்களால் சகஜமாக நடக்கமுடியாது. டாக்சி, பஸ், ட்ரெயின், ஆட்டோ போன்றவற்றில் ஏற முடியாது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்துவர சிரமப்படுவார்கள்.

அவர்கள் கடைசியாக வெளியே வந்த நிகழ்வு 2007 இல் நடைபெற்ற என் தங்கை திருமணம் தான். அதற்கு பிறகு அவர் அரிதாகவே வெளி நிகழ்சிகளுக்கு வந்துள்ளார்.

என் தங்கைக்கு குழந்தை பிறந்தவுடன், வீட்டில் அம்மாவுக்கு பன் மடங்கு வேலை அதிகரித்துவிட்ட நிலையில் பாட்டி தான் மிகவும் ஒத்தாசையாக இருந்தார்கள். சமைப்பது, பாத்திரம் துலக்குவது, காபி போடுவது, கிரைண்டரில் இட்லி தோசைக்கு மாவரைப்பது என அனைத்து வேலையும் எங்கள் பாட்டி தான் செய்வாள்.

வயோதிகத்துக்கே உரிய சிற்சில உடல் உபாதைகள் அவருக்கு இருந்ததே தவிர, நோய் கொண்டாடும் பழக்கம் என்றுமே அவருக்கு இருந்ததில்லை. படுத்த படுக்கையாக படுக்கையில் வீழ்ந்ததும் இல்லை.

சமீபத்தில் நாங்கள் குடும்பத்தோடு திருச்சி போய்விட்டு வந்தபோது, இரண்டு நாட்கள் வீட்டில் தனியாக இருந்து அனைத்தையும் பார்த்துக்கொண்டாள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

அதுமட்டுமா, சமீபத்தில் நடந்த தேர்தலில் கூட நாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நம்முடன் வாக்குச் சாவடிக்கு வந்து தயங்காமல் தன் ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். இதற்காக அவரை வாக்குச் சாவடிக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றேன்.

தேர்தலன்று ஓட்டளிக்க வாக்குச் சாவடிக்கு நடந்து வரும் அம்மாவும் பாட்டியும் (குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் எந்த வாகனமும் அனுமதியில்லை என்பது நீங்கள் அறிந்ததே!)
தேர்தலன்று ஓட்டளிக்க வாக்குச் சாவடிக்கு நடந்து வரும் அம்மாவும் பாட்டியும் (குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் எந்த வாகனமும் அனுமதியில்லை என்பது நீங்கள் அறிந்ததே!)

என் பாட்டிக்கு இருந்த ஒரே கவலை, தாமதமாகிவிட்டாலும் மகனுக்கு உபநயனம் செய்துவிடவேண்டும்…. என் திருமணத்தை பார்த்துவிடவேண்டும் என்பது தான். அதில் ஒன்று நிறைவேறிவிட, மற்றொன்று எப்போது என்று தெரியவில்லை.

இதற்கிடையே பாட்டிக்கு கண்ணில் புரை ஏற்பட, சென்ற வருடம் ராமச்சந்திரா மருத்துவமனையில் கேட்டராக்ட் அறுவை சிகிச்சை செய்தோம். கேட்டராக்ட் அறுவை சிகிச்சை எப்போதும் இரண்டு கண்களிலும் ஒரே நேரத்தில் செய்யமாட்டார்கள். ஒவ்வொரு கண்ணாக ஆறுமாத இடைவெளி விட்டு தான் செய்வார்கள்.

DSC00504

ஒரு கண்ணில் திரை விழுந்து பார்வை மங்கிய நிலையில், மறுகண்ணில் காட்டாரக்ட்  ஆப்பரேஷன் செய்த நிலையில், வீட்டில் நான் வாங்கி வரும் மகா பெரியவா தொடர்பான புத்தகங்கள் அனைத்தையும் பாட்டி ஒவ்வொன்றாக எடுத்து படிக்க ஆரம்பித்தாள். ஒரு கட்டத்தில் நான் வாங்கி வந்த மகா பெரியவா தொடர்புடைய புத்தகங்கள் அனைத்தையும் நான் படித்திருக்கிறேனோ இல்லையோ என் பாட்டி படித்து முடித்திருந்தாள்.

குரு மகிமையை படித்ததற்கு பலன் இல்லாமல் இருக்குமா? அதுவும் அவர் இருந்த நிலையில் படித்தது எவ்வளவு பெரிய விஷயம்….?

DSC02606 copy
பாட்டி படித்த நூல்களுள் சில…

முன்பெல்லாம் பிராம்மணர்களின் வீடுகளில் உபநயனம் என்பதே ஒரு மிகப் பெரிய திருமணம் போல  நடக்கும். பூணூல் கல்யாணம் என்றே அதை அழைப்பார்கள். ஆனால் இன்று விற்கும் விலைவாசியில், பலருக்கு அப்படி செய்ய சக்தி இருப்பதில்லை. எனவே இப்போதெல்லாம் சமஷ்டி உபநயனத்தில் தான் தங்கள் பிள்ளைகளுக்கு உபநயனம் செய்து வைக்கின்றனர். (சமஷ்டி உபநயனம் – கூட்டாக நடக்கும் இலவச பூணூல் கல்யாணங்கள்) இந்நிலையில் சேலம் நகர பிராம்மணர் சங்கம் சார்பாக சேலம் வியாசராஜ மடத்தில் சமஷ்டி உபநயனம் நடப்பதாகவும், அதில் நம் உறவினர் மகன் ஒருவருக்கு உபநயனம் செய்விக்கப்பொவதாகவும் செய்தி வந்தது.

வழக்கம்போல கேட்டுப் பார்ப்போமே என்று இம்முறை எங்கள் மாமாவிடம் உபநயனம் குறித்து பேச, அவர் “சரி நான் போட்டுக்கொள்கிறேன்!” என்று ஒத்துக்கொண்டு எங்களுக்கெல்லாம் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

தொடர்ந்து ஏற்பாட்டாளர்களிடம் பேசி, உபநயனத்தில் இவர் பெயரையும் சேர்த்துவிட்டோம். சென்ற வருடம் மே மாதம் இரண்டாம் வாரம் சேலத்தில் நடைபெற்ற சமஷ்டி உபனயனத்துக்கு குடும்பத்தினர் அனைவரும் சென்றிருந்தோம்.

108 வடுக்களில் எல்லாரும் சிறு சிறு பையன்களாக இருந்தனர். +2, மற்றும் கல்லூரி மாணவர்கள் என மீசை முளைத்தவர்கள் ஒரு சிலரே அதில் காணப்பட்டனர். அவர்களுக்கு நடுவே எங்கள் மாமாவை பார்ப்பது எங்களுக்கே தர்மசங்கடமாக இருந்தது. இவருக்கு பூணூல் அணிவிக்க அவர்கள் ஒப்புக்கொண்டதே பெரிய விஷயம். குருவின் கட்டளையை தடுக்கும் சக்தி எவருக்கும் உண்டா என்ன?

நாங்கள் காசு செலவு செய்து நடத்தியிருந்தாலும் அப்படி ஜோராக நடத்தியிருக்க முடியாது என்னுமளவிற்கு உபநயனம் வெகு சிறப்பாக நடைபெற்றது. உபநயனம் முடிந்தவுடன் வியாசராஜா மடத்தில் இருக்கும் ஸ்ரீ ராகாவேந்திரர் பிருந்தாவனதில் குருவின் தரிசனம் வேறு.
IMG_0139

அனைத்தும் முடிந்த பின்பு, வடுக்களுக்கு அளிக்கப்பட பரிசில், மஹா பெரியவா அவர்கள் உபநயனம் செய்துகொண்டவர்களுக்கு என்றே அளித்த அறிவுரைகள் அடங்கிய தினமலர் நாளிதழின் இணைப்பு ஒன்றை அளித்தனர். மஹா பெரியவா அவர்களின் அருமையான படம் அட்டையை அலங்கரித்தது.

அனைத்தும் முடிந்த பிறகு பஸ்ஸில் சென்னை திரும்பிகொண்டிருந்தோம்.

அம்மாவிடம் சொன்னேன்… “அம்மா…. இத்தனை நாள் பூணூல் போட ஒப்புக்கொள்ளாத மாமா தற்போது ஒப்புக்கொண்டதும், அதற்கு ஏற்றார்போல ஒரு சமஷ்டி உபநயனம் அமைந்ததும் உண்மையிலேயே ஆச்சரியம் தான். ஏதோ நான் செய்துகொண்டிருக்கும் (?!) தர்ம காரியங்களால் தான் சாத்தியப்பட்டது என்று நினைக்கிறேன். இல்லையெனில் இவ்வளவு நாள் ஒப்புக்கொள்ளாத மாமா இப்போது ஏன் ஒப்புக்கொள்ளவேண்டும்?” நம் தற்பெருமை தலைதூக்கியது.

என் அம்மா… “அடே முட்டாள்…. உபநயனம் நடந்தது நீ செய்த புண்ணியத்தால் அல்ல. மஹா பெரியவரின் அருளால். பாட்டி நீ வாங்கி வரும் மஹா பெரியவரின் புத்தகங்கள் எல்லாவற்றையும் உனக்கு தெரியாமல் எடுத்து எடுத்து படித்துக்கொண்டிருந்தாள். அதன் புண்ணியம் தான் மாமா அதற்கு ஒப்புக்கொண்டதும் இத்தனை ஆண்டுகள் தாமதமானாலும் அது சிறப்பாக நடைபெற்றதன் காரணமும்” என்றாள்.

IMG_0110

ஆம்… அம்மா சொல்வது சரிதான்.  இது முழுக்க முழுக்க மஹா பெரியவரின் அருளால் தான் நடைபெற்றது என்று நமக்கு புரிந்தது.

தற்பெருமை கருதியதற்காக “குருவே என்னை மன்னித்துவிடுங்கள்.” என்று மானசீகமாக மஹா பெரியவரிடம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டேன்.

போன மே மாதம் மகனுக்கு பூணூல் போடப்பட்டது. இதோ இந்த மே மாதம் என் பாட்டி தவறிவிட்டார்கள்.

இதை மஹா பெரியவா முன்கூட்டிய அறிந்திருந்ததால் தான் போனவருடமே என் மாமாவுக்கு பூணூல் போட ஏற்பாடு செய்துவிட்டார்.

தன்னையே நம்பி உருகி உருகி தனது அற்புதங்களை, வரலாற்றை படித்த ஒரு தாய்க்கு அவர் செய்த அனுக்கிரகம் இது. இல்லையெனில், என் மாமாவிற்கு காட்டுப் பூணூல் போடவேண்டியிருந்திருக்கும்.

(உபநயனம் செய்து கொள்ளாதவர்கள் இறுதிச் சடங்கு செய்ய நேர்ந்தால் அவர்களுக்கு சுடுகாட்டில் பூணூல் அணிவிப்பர். அதற்கு தான் காட்டுப் பூணூல் என்று பெயர்.)

என் பாட்டிக்கு இறுதிக்காலம் நெருங்கிவிட்டதை அறிந்த மஹா பெரியவா தான் என் மாமாவின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி உபநயனத்துக்கு சம்மதிக்க வைத்திருக்கிறார்.

இதற்கிடையே என் பாட்டியை நான் கவனித்துக்கொண்ட விதம் பற்றி உங்களிடம் கூறவேண்டும்.

தினமும் அலுவலகம் கிளம்புவதற்கு முன்னர் என் பெற்றோரின் கால்களில் வீழ்ந்து அவர்களை நமஸ்கரித்துவிட்டு பின்னர் தான் புறப்படுவோம். அந்நேரம் என் பெற்றோர் வீட்டில் இல்லையென்றால் என் பாட்டி காலில் வீழ்ந்து ஆசி பெற்றுவிட்டு செல்வேன். என் பெற்றோருக்கு இணையாக என் பாட்டி மீது அன்பு செலுத்திவந்தேன்.

நாள் கிழமை விஷேடங்களில் அவர்களுக்கு துணி மணி எடுத்து தருவது கைகளில் பணம் தருவது அவர்கள் விருப்பப்படுவதை வாங்கித் தருவது என்று என்னால் அவர்களுக்கு முடிந்ததை செய்வேன்.

நான் முன்பே கூறியது என் பாட்டி நோய் வந்து படுத்ததே கிடையாது. தேனீ போல சுறுசுறுப்பாக இருப்பார். சில சமயம் வயோதிகம் காரணமாக ஏதாவது உடல் உபாதைகள் வரும்போது டாக்டரை வீட்டுக்கு வரவழைத்து அவருக்கு வைத்தியம் செய்வோம். உடனே அவருக்கு சரியாகிவிடும்.

மறுநாள் சகஜமாக எழுந்து உட்கார்ந்துவிடுவார். முன்பைப் போல வேலை செய்ய ஆரம்பித்துவிடுவார்.

பாட்டிக்கு இப்போதும் ஏதாவது என்றால் அந்த டாக்டருக்கு போன் போட்டால் போதும் அவர் உடனே வந்து, செக்கப் செய்துவிட்டு போய்விடுவார். அவர் வந்துவிட்டு போனதும் பாட்டி சகஜமாகிவிடுவார். இதுவே ஒரு வகையில் சைக்காலஜி ஆனது.

என் பாட்டிக்கு இருந்த மனக்கிடைக்கைகளுள் ஒன்றான மகனுக்கு பூணூல் அணிவிக்கவேண்டும் என்கிற ஆசை நிறைவேறிவிட்ட நிலையில், அவருக்கு இருந்த மற்றொரு கவலை நம்மை திருமண கோலத்தில் பார்க்கவேண்டும் என்பதே. அது குறித்து அடிக்கடி தனது கவலையை வெளிப்படுத்திவந்தார்.

வீட்டில் நான் இருக்கும்போது என் அம்மாவிடம் பேசுவதைவிட என் பாட்டியிடமே அதிகம் பேசுவேன்.

நேற்று முன்தினம் (செய்வாய்) காலை நான் வேலைக்கு கிளம்பிக்கொண்டிருந்தபோது, எழுந்து வீட்டு வேலைகளை எல்லாம் செய்து முடித்துவிட்டு அமர்ந்த பாட்டி, லேசாக நெஞ்சு வலிக்கிறது என்று சொன்னார்கள். திடீர் திடீர் என்று அவர் ஏதாவது ஒரு உடல் பிரச்னையை கூறுவார்கள். நாங்களும் டாக்டரை வரவழைப்போம். அவர் வந்து பார்த்துவிட்டு சென்றதும் அவருக்கு உடனே சரியாகிவிடுவார்கள். எனவே இம்முறையும் நாங்கள் உடனே டாக்டரை வரவழைத்தோம். அம்மாவிடம் டாக்டர் ஃபீஸை  கொடுத்துவிட்டு, நான் அலுவலகம் கிளம்பிவிட்டேன்.

ஆனால் இம்முறை நெஞ்சு வலி என்றதால், “அப்புறம் எனக்கு போன் செய்யும்மா… பாட்டிக்கு எப்படி இருக்குன்னு சொல்லு” என்று கூறிவிட்டு பாட்டியிடம் சிறுது நேரம் பேசிவிட்டு நாம் புறப்பட்டுவிட்டோம். நம்மை பற்றிய கவலையே அவரை அரித்துக்கொண்டிருந்தது.

11.00 மணிக்கு அம்மா போன் செய்தார்கள்.

“பயப்படுவதற்கு ஒன்னும் இல்லை. LOW BP யாம். டாக்டர் இன்ஜெக்ஷன் போட்டிருக்கிறார். மாத்திரை தந்திருக்கிறார்!” என்றார்கள்.

அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு விட்டேன். காரணம் பாட்டி ஒவ்வொரு முறையும் உடம்பு சரியில்லை என்று சொல்லும்போதும் பக், பக்கென்று இருக்கும். வயதானவராயிற்றே படுக்கையில் வீழ்ந்துவிட்டால்? விற்கும் விலைவாசியும் மருத்துவ செலவினங்களும் அடிக்கடி நம்மை கலவரப்படுத்தும். இருப்பினும் அப்படி எல்லாம் ஒன்றும் ஆகாது. நாம் வணங்கும் தெய்வம் நம்மை கைவிடாது என்று மனம் ஆறுதல் படுத்திக்கொள்ளும்.

மாலை சுமார் 5.00 மணிக்கு அப்பாவிடம் இருந்து போன் வந்தது.

“பாட்டிக்கு ரொம்பவும் சீரியஸா இருக்கு உடனே வீட்டுக்கு வா…” இது தான் எனக்கு வந்த தகவல்.

அலுவலகத்தில் விஷயத்தை சொல்லிவிட்டு ஓடோடி வந்தேன்.

ஆனால்… நடக்கக் கூடாதது நடந்துவிட்டிருந்தது. நான் வந்த போது பாட்டி மூச்சை நிறுத்தியிருந்தாள்.

பாட்டிக்கு 85 வயது என்றாலும் எங்களை பொருத்தவரை அவர் இருந்த நிலைக்கு இன்னும் ஒரு ஐந்து வருடம் எங்களோடு இருப்பார் என்று தான் அனைவரும் நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால் தெய்வம் நினைப்பது வேறாயிற்றே…

“பாட்டீ……….” கதறிக்கொண்டே அவர்கள் காலை பிடித்துக்கொண்டேன்.

“இன்று உங்கள் உயிர் பிரியும் என்று தெரிந்திருந்தால் உங்கள் அருகிலேயே இருந்திருப்பேனே… பாவியாகிவிட்டேனே…. பாட்டி…..”

நடந்து என்னவென்றால், டாக்டர் வந்து சென்றவுடன் மதியம் டி.வி. பார்த்தபடி உறங்கிவிட்டாள். உறக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு அவர் மஹா பெரியவாவின் திருவடிகளை அடைந்துவிட்டார். சங்கர ஜோதியில் அவர் ஆன்மா ஐக்கியமாகிவிட்டது.

பாட்டி இறந்துவிட்டது தெரிந்தால் எங்கே நான் பதட்டத்துடன் வண்டி ஓட்டிவருவேனோ என்று என்னிடம் சீரியசாக இருக்கிறார்கள் என்று என் வீட்டில் கூறியிருக்கிறார்கள்.

எவருக்கும் எந்த துன்பமும் கொடுக்காமல், படுத்த படுக்கையில் வீழாமல் எங்களுக்கு எந்த பெரிய மருத்துவ செலவும் வைக்காமல் எங்கள் பாட்டியின் ஆன்மாவை மஹா பெரியவா எடுத்துக்கொண்டார். அன்று மாத சிவராத்திரி வேறு.

நான் ஏற்கனவே சொன்னது போல, 60 – 65 வயதை கடந்துவிட்டால், நன்றாக வாழ்வதைவிட நன்றாக போய் சேர்வதே பலருக்கு பெரு விருப்பமாக உள்ளது. காரணம் இன்றைய உலக சூழல் அப்படி. இந்த அவசர யுகத்தில் யாருக்கும் யாரையும் கவனிக்க நேரம் இல்லை. மனமும் இல்லை.

நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்து பாட்டி காலமாகியிருந்தால் எனக்கு பெரிய பாதிப்பு ஒன்றும் இருந்திருக்காது. அவரது முடிவை மெல்ல மெல்ல ஏற்றுக்கொள்ள மனம் பழகியிருக்கும். நன்றாக இருந்தவர், முந்தைய தினம் வீட்டு வேலைகள் எல்லாம் செய்தவர், எனக்கு காலை காபி போட்டு கொடுத்தவர், மாலை உயிருடன் இல்லை எனும்போது என்னால் அந்த அதிர்ச்சியை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

தேம்பி தேம்பி அழுதுகொண்டிருந்தேன். எத்தனையோ முயன்றும் என்னால் அழுகையை கட்டுப்படுத்தமுடியவில்லை.

முதல் வேலையாக பாட்டிக்கு அருகில் சுவற்றில் மஹா பெரியவாவின் பெரிய போஸ்டரை ஒட்டினேன். (இது அந்த நேரம் வீட்டில் இருந்த கதையே தனி! அதை பின்னர் சொல்கிறேன்!!)

ஒரு விஷயத்தை குறிப்பிட்டே ஆகவேண்டும். பாட்டி, தெரு நாய் ஒன்றுக்கு தினமும் சோறிட்டு வந்தார்கள். அதனுடன் கிட்டதட்டே அவர் வாஞ்சையாக பேசவே செய்வார். பாட்டி ஆசையாக சோறிடும் நாய் என்பதாலேயே அந்த நாயை நாங்கள் வீட்டுக்கு வந்தால் விரட்டுவதில்லை. (அந்த நாய் மட்டுமல்ல எந்த ஜீவனையும் நாங்கள் அடிப்பதோ துன்புறுத்துவதோ இல்லை.) அது பாட்டுக்கு வெளியே ஓரமாக படுத்துக்கொண்டிருக்கும். யாருக்கும் எந்த உபத்திரவமும் கொடுக்காது.

நான் வெளியே போகும்போதும் வரும்போது என்னை பார்த்து வாலாட்டும்.

பாட்டி இறந்துவிட்டதை அறிந்தவுடன், வாசல்படியில் படுத்துக்கொண்டு அவரது உடலையே பார்த்துக்கொண்டு அந்த நாய் அழுதுகொண்டிருந்தது நெஞ்சை உருக்கும் காட்சி. செவ்வாய் மாலை நண்பர் ஹரிஹரசுதனும் குட்டி சந்திரனும் பாட்டிக்கு அஞ்சலி செலுத்த வந்த போது  அதை பார்த்து கண் கலங்கிவிட்டனர்.

எனக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது.

DSC02602
பாட்டியின் உடலை பார்த்து அழுதபடி வாசலில் படுத்துக்கிடக்கும் நாய்

“பாட்டி… நீ தியாகத்தின் சுடர். மெழுவர்த்தி போல உன்னை உருக்கி குடும்பத்தை காப்பாற்றினாய். எத்தனையோ கஷ்டப்பட்டு சமையல் வேலை செய்தெல்லாம் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினாய். போகும் காலத்தில் ஒரு நாயைக் கூட கண்ணீர் விட வைத்துவிட்டாய். கருணை கடல் நீ. கொள்ளுப் பேத்தியையும் பார்த்துவிட்டாய். என் திருமணத்தை பார்ப்பதற்கு முன்பு அவசரப்பட்டுவிட்டாயே… உன் போல அன்பு செலுத்த எங்களுக்கு இனி யார் இருக்கிறார்கள். உன் மூச்சு காற்றும் நினைவும் கலந்த இந்த வீட்டில் உன் நினைவின்றி நான் எப்படி வசிப்பேன்…? இரவு நீண்ட நேரம் கணினியில் அமர்ந்திருந்தால், “போய் படுத்துக்கோப்பா காலைல ஆபீஸ் போகனுமில்லே” என்று எனக்கு இனி யார் சொல்லப்போகிறார்கள். நீ மீண்டும் என் வீட்டில் பிறக்கவேண்டும். உன்னை கொஞ்சி கொஞ்சி நான் மகிழவேண்டும்!” என்று கதறியபடி இருந்தேன்.

இதை தட்டச்சு செய்யும்போது கூட கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டுதானிருக்கிறது. அழுதுகொண்டே தான் தட்டச்சு செய்கிறேன்.

சில நாட்களுக்கு முன்பு வடலூர், சிவப்பிரகாச சுவாமிகள் ஆஸ்ரமத்தில் உள்ள முதியோர்களுக்கு எடுத்துச் செல்ல நாம்  சேலை, வேஷ்டி, சீலிங் ஃபேன்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்து வீட்டில் குவித்தபோது, விஷயத்தை கேள்விப்பட்டு மிகவும் சந்தோஷப்பட்டார்கள். “பாட்டி உங்களுக்கு நான் இருக்கிறேன். ஆனால் யாருமே இல்லாத ஆதரவற்ற பல தாத்தா பாட்டிகள் அங்கு இருக்கிறார்கள். அவர்கள் அனைவரிலும் உன்னைத் தான் நான் பார்க்கிறேன். அவர்களுக்கு தான் இதெல்லாம் என் நண்பர்கள் சார்பாக வாங்கிச் செல்கிறேன்” என்றேன்.

இப்படி பாட்டியுடன் பேசிய ஒவ்வொரு தருணமாக நினைவுக்கு வர நொறுங்கிப் போய் அழுதுகொண்டிருந்தேன்.

அவரை நான் ஏற்கனவே நல்லமுறையில் பார்த்துக்கொண்டேன் என்றாலும் அவர் நம்மை விட்டுப் போகப்போகிறார் என்று தெரிந்திருந்தால் இன்னும் நன்றாக பார்த்துக்கொண்டிருந்திருப்பேன். அவருடன் கூடுதல் நேரம் செலவழித்திருப்பேன்.

ஆனால்…. இருக்கும்போது உறவுகளின் அருமை நமக்கு முழுமையாக தெரிவதில்லை.

ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டவர் மீள்வதுண்டோ?

என் பர்சனல் முகநூலிலும் ரைட்மந்த்ரா முகநூலிலும் பாட்டி சிவலோகப் ப்ராப்தி அடைந்த விஷயத்தை அப்டேட் செய்தேன். தளத்தில் SCROLLING TEXT ஓடவிட்டேன். முகநூலிலும் தளத்திலும் பார்த்துவிட்டு ரைட்மந்த்ரா நண்பர்கள் சிலர் போனில் விசாரித்தார்கள். சிலர் மின்னஞ்சல் அனுப்பி தங்கள் வருத்தத்தை பகிர்ந்துகொண்டனர். சிலர் நேரில் வந்து பாட்டிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு நமக்கும் ஆறுதல் சொல்லிவிட்டு சென்றனர். அனைவருக்கும் நன்றி.

நண்பர் குட்டி சந்திரன் கூடவே இருந்து அனைத்து வேலைகளிலும் உதவியாக இருந்தார்.

நேற்று இடுகாட்டில் பாட்டி உடல் தகனம் செய்யப்பட்டபோது அவர் உடலை தீ கங்குகள் சூழும்போது, “ராமா” “ராமா” “ராமா” என்று தான்  கத்திக்கொண்டிருந்தேன். ராம நாம மகிமையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

என் பாட்டி நன்றாக நிம்மதியாக மாரடைப்பு ஏற்பட்டு சிவபதம் அடைந்ததற்கு முக்கிய காரணம் மஹா பெரியவா.

அவர் இறுதி நேரத்தின் போது ராம நாமம் என் நினைவுக்கு வந்து இடுகாடே அதிரும் வண்ணம் நான் ராம நாமத்தை முழங்கியதற்கு காரணம் பாம்பே ஞானம் அவர்களின் போதேந்திராள் நாடகத்தை பார்த்த பாதிப்பு. இல்லையென்றால் அழுது அழற்றிக்கொண்டிருக்கவேண்டிய நேரத்தில் ராம நாமத்தை என் நா உச்சரித்திருந்திருக்காது.

என்ன தான் ராம நாமத்தின் மகிமையை நாம் உணர்ந்திருந்தாலும் தேவையான நேரத்தில் அது நம் இதயத்திலிருந்து வாய் வழியே வெளியே வரவேண்டுமே? அது எத்தனை பேருக்கு சாத்தியம்?

போதேந்திராள் ராம நாம மகிமை நாடகத்தில் ஒரு காட்சி
போதேந்திராள் ராம நாம மகிமை நாடகத்தில் ஒரு காட்சி

ராம நாம கோஷத்திற்கு இடையே என் பாட்டி அக்கினிக்கு இரையானதால் நிச்சயம் அவர் எந்தை ஈசனின் திருவடிகளில் நிச்சயம் சேர்ந்திருப்பார்.

காசியில் இறக்கும் அனைவருக்கும் முக்தி என்று ஏன் சொன்னார்கள் தெரியுமா?

அங்கு இறக்கும் ஜீவன்கள் அனைவர் காதிலும் சாட் சாத் அந்த சிவபெருமானே ராம நாமத்தை சொல்வாராம்.

ராம நாமத்தின் மகத்துவம் அளவிடற்கரியது.

வாழ்க ராம நாமம். வளர்க அதன் புகழ்.

நான் உங்களிடம் கேட்டுக்கொள்வதெல்லாம் எங்கள் அன்பு பாட்டியின் இழப்பு தாளாமல் துன்பத்தில் மூழ்கியிருக்கும் நான், என் தங்கை, உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் இறைவன் இந்த துன்பத்தை தாங்க கூடிய சக்தியை தர வேண்டிக்கொள்ளவேண்டும் என்பதே.

நன்றி!

==========================================================

* உறவுகளின் அருமை இருக்கும்போது தெரியவே தெரியாது. எனவே எப்போதும் யாரிடமும் அன்போடு பேசுங்கள்.

“It is easy to love the people far away. It is not always easy to love those close to us. It is easier to give a cup of rice to relieve hunger than to relieve the loneliness and pain of someone unloved in our own home. Bring love into your home for this is where our love for each other must start.”

Mother Teresa Quotes

* உங்கள் வீட்டில் வயதானோர் இருந்தார் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். அவர்கள் உணர்வுகளை மதியுங்கள். அவர்களின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றுங்கள். அவர்கள்  கேட்பதை வாங்கிக்கொடுங்கள்.

* நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு. (குறள் 336)

பொருள் : இன்னைக்கு பார்க்கிறவங்களை நாளைக்கு மறுபடியும் பார்ப்போம்னு எந்த நிச்சயமும் இந்த உலகில் கிடையாது.

==========================================================

[END]

27 thoughts on “மகா பெரியவா – அனைத்தும் அறிந்தவர்; முக்காலமும் உணர்ந்தவர்!

  1. சுந்தர் அவர்களுக்கு,

    இந்த பதிவினை படிக்கும் போதே கண்ணீர் வந்து விடுகிறது. நீங்கள் உங்களின் பாட்டியின் மீது வைத்துள்ள அன்பு தெரிகிறது.

    கவலை பட வேண்டாம் சகோதரனே, எல்லாவற்றுக்கும் காரண காரியங்கள் இருக்கின்றன.

    அனைத்து நல்லதும் இனி நிச்சயம் நடக்கும். ஏனெனில், உங்களின் பாட்டி தெய்வமாகி விட்டார். ஆதலால், உங்களுக்கு மற்றும் உங்களின் குடும்பத்தாருக்கும் பல நன்மைகளை செய்வார்.

    இனி உங்களின் வாழ்வில் பல நல்ல மாற்றங்கள் நடக்கும்.
    **
    அனுதாபங்களுடன்,
    **சிட்டி**.

  2. இவ்வுலகில் ஈடு செய்ய முடியாத இழப்பு உயிர் இழப்பு தான்.
    No words to console you sir.My eyes are filled with tears.
    சிறு வயதிலேயே கணவரை இழந்தும், தனது சந்தோசங்களை எல்லாம் தனது குழந்தைகளுக்காக தியாகம் செய்து தனது கடமைகளை செவ்வனே செய்து முடித்த அந்த நல்ல உள்ளம் இறைவனடியில் சேர்ந்திருக்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.
    அந்த நல்ல உள்ளத்தின் நிறைவேறாத ஆசை உங்கள் திருமணம்.
    கூடிய விரைவில் அதுவும் நடக்க பிராத்தனை செய்வோம்.
    அந்த நல்ல உள்ளம் யாரோ ஒரு மூதாட்டியின் கண்கள் வழியே அதையும் கண்டு களிக்கும்.

  3. சார் இந்த பதிவை படிக்கும் பொழுது மனது மிகவும் கனக்கிறது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்த காலத்தில் வயதான பெற்றோர்களையே கவனிக்க தயங்குகிறார்கள். ஆனால் நீங்கள் உங்கள் பாட்டியை இவ்வளவு அழகாக கண்ணுக்கு கண்ணாக பார்த்து கொண்டிருக்கிறீர்கள். இதை படிக்கும் ஒவொருவருக்கும் தாமும் அவ்வாறு வயதானவர்களை பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக வரும். உங்கள் பாட்டியின் ஆசை கண்டிப்பாக நிறைவேறும். உங்கள் திருமணத்தை வெகு விரைவில் நடத்தி வைப்பார். அன்று செவ்வாய் கிழமை. உங்கள் குல தெய்வம் முருகன் நாள். முருகனின் திருவடியிடம் கண்டிப்பாக சென்று இருப்பார்கள்.

    இந்த வயது காலத்திலும் ஒட்டு போட்டு ஜனநாயக தார்மிகத்தை காப்பற்றி இருக்கிறார்கள்.

    உங்கள் மாமாவிற்கு பூணல் போட்டும் பார்த்து விட்டார்கள். இது மகா பெரியவரின் அருளால் நிகழ்ந்தது.

    உங்கள் ராம நாம உச்சரிப்பு உங்கள் பாட்டியின் ஆன்மா கண்டிப்பாக உணர்ந்திருக்கும். உங்கள் பாட்டியின் ஆன்மா சாந்தி அடைய நாங்கள் பிரார்த்திக்கிறோம். உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ராம் ராம் ராம்

    நன்றி
    உமா .

  4. Dear Sundar,
    My Heartiest Condolence to your Grand Ma. Nallavarkalai Kadavallu thandudan ayathu kondar. May his soul rest in peace.

    Narayanan.

  5. சுந்தர், உங்கள் பாட்டி சமையலில் சாப்பிட சாப்பாடு இன்னுமும் மனதில் உள்ளது.
    உங்கள் பாட்டியின் ஆன்மா கண்டிப்பாக உங்கள்ளுக்கு நல்ல வழி ஏற்படுத்தும். உங்கள் பாட்டியின் ஆன்மா சாந்தி அடைய நாங்கள் பிரார்த்திக்கிறோம். உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  6. பாட்டியின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.தங்களின் எழுத்துக்கள் மனதை உருக்குவதாக உள்ளது.உங்கள் பாட்டி உண்மையிலேயே புண்ணியம் செய்தவர்தான் இப்படி ஒரு பிரியமான பேரனை பெற்றதற்கு.

  7. பாட்டியின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். உங்கள் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். இறைவன் இந்த துன்பத்தை தாங்க கூடிய சக்தியை தர இறைவனை வேண்டிக்கொள்கிறேன் சுந்தர்.

  8. அவர் உங்களுக்கு பாட்டி மட்டுமல்ல தாயுமானவராய் தெரிகிறார். அவரை பிரிந்து வாடும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம். யார் கண்டது நாளை அவரே உங்கள் மகளாக பிறக்கும் பாக்கியம் உங்களுக்கு கிடைக்கும். மனதை தேற்றிக்கொண்டு உங்கள் பணியை மிக சிறப்பாக செய்யுங்கள். பாட்டியின் ஆன்மா உங்களை சுற்றியே இருக்கும். மகா பெரியவரின் அருளை பெற்றவர் ஆன்மா வழி, உங்களை வழி நடத்துவார்.

  9. டியர் சுந்தர்

    தங்களது பாட்டியின் இழப்பு தங்களை மிகவும் பாதித்துள்ளதை அறிந்து மிகவும் வருத்தபடுகிறேன். எப்படி இருந்தாலும் சில இழப்புகளை நாம் ஜீரணித்து கொள்ள தான் வேண்டும். மஹா பெரியவா தங்களுக்கும் தங்கள் அன்பு குடும்பத்தாருக்கும் இந்த சூழலில் இருந்து மீண்டு வர சக்தியை கொடுப்பார்..

    பாட்டியின் ஆன்மா தங்களையும் நம் ரைட் மந்திரா குடும்பத்தையும் ஆசிர்வதிப்பார்.

    அனுதாபங்களுடன்

    ரம்யா

  10. உற்றா ராருளரோ – உயிர்
    கொண்டு போம்பொழுது
    குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக்
    குற்றார் ஆருளரோ. [அப்பர் ]
    …………………………………………………………

    நந்தி நாமம் நமச்சிவா யவெனுஞ்
    சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல்
    சிந்தை யால்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம்
    பந்த பாசம் அறுக்கவல் லார்களே. [சம்பந்தர்]

    ”””””””””””””””””””””””””””””””””””””””””””””

    உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக்
    கரைவினாற் காரைக்காற் பேய்சொல் – பரவுவார்
    ஆராத அன்பினோ டண்ணலைச்சென் றேத்துவார்
    பேராத காதல் பிறந்து.[காரைக்கால் அம்மையார்]
    ………………………………………………………………….

    உய்யும் மருந்திதனை உண்மின் எனஉற்றார்
    கையைப் பிடித்தெதிரே காட்டியக்காற் – பைய
    எழுந்திருமி யான்வேண்டேன் என்னாமுன் நெஞ்சே
    செழுந்திரும யானமே சேர். [ஐயடிகள் காடவர்கோன்]

    ………………………………………………………………………..

    ………கழுக்குன்றத் துச்சியாய் கடவு ளேநின்
    பூவார்ந்த பொன்னடிக்கே போது கின்றேன்
    பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. [அப்பர்]

  11. அண்ணா
    மனது கனத்து விட்டது.உங்களுக்கு எப்படி அறுதல் சொல்ல என்று தெரியவில்லை.கவலை படாதிர்கள் அண்ணா பாட்டி உங்கள் வீடேலேயே வந்து பிறப்பார்கள்.
    சுபா

  12. உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் ஆண்டவன் மன நிம்மதியை அருள வேண்டி கொள்கிறேன். பாட்டியின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

  13. உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் ஆண்டவன் மன நிம்மதியை அருள வேண்டி கொள்கிறேன். பாட்டியின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

    ganatha manadudan
    manohar

  14. டியர் சுந்தர் சார்

    தங்கள் பதிவு எனது அம்மாவின் அம்மா , என் ஆச்சி
    ( முத்துலட்சுமி வயது- 85 ) தான் நினைவுக்கு வந்தார்கள்.கண் கலங்கி விட்டேன் . தங்கள் பாட்டி போல , என் ஆச்சி என்னிடம் மிகுந்த அன்பு , பாசம் வைத்து இருந்தார்கள். நான் ,, அப்போது இருந்த நிலையில் தான் நீங்கள் இருக்கிறீர்கள். காலம் அனைத்திற்கும் மருந்தாகும்.

    என் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.

    பாட்டியின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

    சகோதரி சுபா சொன்னது போல சீதாலக்ஷ்மி பாட்டி, தங்களுக்கு பெண் குழந்தையாக பிறந்து தங்களுக்கு அன்பு , பாசம் அனைத்தையும் தருவார்கள். கவலை வேண்டாம்.

    – ராஜாமணி –

  15. உங்கள் பாட்டியின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.

  16. தங்கள் பாட்டியின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

  17. Dear sundar, accept our heartfelt condolences. May HER SOUL rest in peace. As said by Adi Sankara in Bhaja Govindam,
    ‘punarapi jananam punarapi maranam’ it is sure that your grandma will certainly bless you all again in some other form. Genuine wishes and prayers will always be accepted and granted by Almighty. May Lord Rama provide enough mental and physical strength to bear the irreparable loss. Mohan

  18. உங்கள் சரிதம் படித்தேன் , அழுதே ன் ,ஆறுதல் சொல்ல வார்த்தை இல்லை . மகா பெரியவாளின் மகிமையை சொல்லுவதா ! உங்களுக்கு வேண்டிய மனோ பலத்தையும் , பண பலத்தையும்
    தர அம்பிகையை வேண்டிகிறேன்
    ma. ilakkuvan..

  19. Dear Sundar,
    My hearfelt condolences…May pattis soul rest in Peace….

    Pray God that he gives you and your family strength to tide over this loss.

    Hara Hara Shankara …Jaya Jaya Shankara….

  20. டியர் சுந்தர் அவர்களே,

    எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு துணை நிற்பான் கவலை வேண்டாம்….

    விசு

  21. திரு சுந்தர் அவர்களே,

    என் ஆழ்ந்த அனுதாபங்கள். தங்கள் பாட்டி இறைவனாக என்றும் தங்களுக்கு துணை நிற்பார்கள்.

    Heartfelt condolences sir….

    இப்படிக்கு….
    சீனு……..

  22. Dear mr.sundar,
    Really feel sorry for u and ur beloved geand mother. Dont woory she will attain sivapatham. I too had an incident during my beloved father attained sivapatham. He was my last last blood relation in this world. Ofcourse i was married at that time, but having a mither, sister & brother makes lot of difference. I was left alone in this world and i could not even offer him a small tvs 50. He had been using only a old bicycle all along. He has been affected by one of the cruel disease, which u feel no one shoukd be affected by that. Daily i am feeling guilty that i did not take care of father and being very kind to him. My wealth status also prevented me to offer certain comfort to him that time. I only pray Maha periyava that my dad should be happy and peaceful at the heaven atleast after he left me. Naan oru maha pavi. I shoukd have taken bwtter care of him. I am literally crying when i am writing this comment. Pl forgive me mt dear amma and appa. Pleaseeeeeeeeeeeee. Ram Ram Ram.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *