Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > தோல்வி என்றால் உண்மையில் என்ன? MONDAY MORNING SPL 87

தோல்வி என்றால் உண்மையில் என்ன? MONDAY MORNING SPL 87

print
வீரமும் பராக்கிரமும் மிக்க மன்னன் ஒருவன் போரில் தோற்றுவிட்டான். எதிரி நாட்டு மன்னன், தோற்றுவிட்ட மன்னனை சங்கலியால் பிணைத்து தனது அரசவைக்கு இழுத்து வரச் செய்தான்.

“எங்கே உனது கோட்டை? ஹா…ஹா…ஹா…” என்று எகத்தாளமாக சிரித்தான்.

“இங்கே இருக்கிறது எனது கோட்டை!” என்று தனது மார்பின் மீது கைவைத்து கம்பீரத்துடன் சொன்னான் இழுத்து வரப்பட்ட மன்னன்.

அவன் சும்மா சொல்லவில்லை. நிரூபித்து காட்டினான்.

சிறையில் இருந்த‌ப‌டியே த‌ன் எண்ண‌ங்க‌ளை கூர்தீட்டி, தப்பிப்பதற்குரிய திட்டங்களை வகுத்து, க‌டுமையான க‌ட்டுக் காவ‌லையும் மீறி சிறையில் இருந்து எப்படியோ த‌ப்பினான். பிறகு காட்டிலிருந்தபடியே கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ தனது ஆதரவாளர்களை தேடி கண்டுபிடித்து ஒரு பெரும் படையை திரட்டினான்.  தகுந்த நேரத்திற்காக காத்திருந்தவன் தன்னை சிறைபிடித்த மன்னன் மீதும் அவன் நாட்டின் மீதும் எதிர்பாராத நேரத்தில் மோதி வெற்றிகொண்டான்.

“கதைல கேக்குறதுக்கு நல்லாத் தான் இருக்கு. ஆனா, நிஜத்துல இதெல்லாம் சாத்தியமா?” என்று தானே கேட்கிறீர்கள்.

அட இது நிஜ கதை தாங்க!

Karikalan

சிறையில் இருந்து தப்பித்து படைகளை திரட்டி போரில் வெற்றி வாகை சூடிய மன்னன் வேறு யாருமல்ல நம் கல்லணை கட்டிய கரிகாலன் தான்.

சோதனைகள் அடுக்கடுக்காக சூழ்ந்தபோது அவற்றை தன்னம்பிக்கையுடன் தகர்த்தெறிந்து வெற்றி கொண்ட கரிகால சோழனை 2000 ஆண்டுகளுக்கு பிறகும் நினைவு கூர்கிறோம். (கரிகாலன் வாழ்ந்த காலம் கி.மு.180. அதாவது 2195 ஆண்டுகளுக்கு முன்பு). தப்பிப்பது கடினம் என்று நினைத்து சிறையிலேயே கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தால் கல்லணை ஏது காவியங்கள் போற்றும் கதாநாயகன் ஏது?

‘தோல்வி’ என்கிற ஒரு வார்த்தையை சரியாக புரிந்துகொண்டு அதன் அர்த்தத்தை தன் அகராதியில் ஒருவர் திருத்தி எழுதவதன் மூலம் மிகப் பெரிய சாதனையாளராக மாறலாம்.

தோல்வி என்றால் என்ன தெரியுமா?

தோல்வி என்றால் நீங்கள் தோற்றவர் என்று அர்த்தம் கிடையாது.
நீங்கள் இன்னும் வெற்றி பெறவில்லை என்று அர்த்தம்.

தோல்வி என்றால் நீங்கள் இன்னும் எதையும் சாதிக்கவில்லை என்று அர்த்தம் கிடையாது.
நீங்கள் ஏதோ விலைமதிப்பற்ற ஒன்றை கற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

தோல்வி என்றால் நீங்கள் முட்டாளாக இருந்தீர்கள் என்று அர்த்தம் கிடையாது.
நீங்கள் யாரிடமோ எதனிடமோ ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தீர்கள் என்று அர்த்தம்

தோல்வி என்றால் அது கேவலம் கிடையாது.
நீங்கள் எதையோ முயற்சித்தீர்கள் என்று அர்த்தம். (ஒரு முயற்சியை மேற்கொள்பவர்களுக்கு தானே தோல்வியோ வெற்றியோ கிடைக்கும்!)

Success Failure

தோல்வி என்றால் உங்களுக்கு ஏதோ ஒன்று கிடைக்கவில்லை என்று அர்த்தம் கிடையாது.
நீங்கள் வேறு வழிகளில் அதை அடைய முயற்சிக்க வேண்டும் என்று அர்த்தம்.

தோல்வி என்றால் நீங்கள் தாழ்ந்தவர் என்ற அர்த்தம் கிடையாது.
நம்மிடம் சரிசெய்துகொள்ளக் கூடிய குறைகள் சில இருக்கிறது என்று அர்த்தம்.

தோல்வி என்றால் வாழ்க்கையை வீணடித்துவிட்டீர்கள் என்று அர்த்தம் கிடையாது.
தோல்வி மட்டுமே கொடுக்க கூடிய விலைமதிப்பற்ற பாடங்களை நீங்கள் கற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

தோல்வி என்றால் உங்கள் முயற்சியை கைவிட்டுவிடவேண்டும் என்ற அர்த்தம் கிடையாது.
நீங்கள் இன்னும் கடினமாக முயற்சி செய்யவேண்டும் என்று அர்த்தம்.

தோல்வி என்றா நம்மால் எப்போதுமே முடியாது என்ற அர்த்தம் கிடையாது.
கிடைக்கவேண்டிய வெற்றி கொஞ்சம் தாமதமாக சிறப்பாக கிடைக்கும் என்று அர்த்தம்.

தோல்வி என்றால் கடவுள் நம்மை கைவிட்டுவிட்டார் என்று அர்த்தம் கிடையாது.
கடவுள் நமக்காக வேறு ஏதோ நல்ல திட்டம் ஒன்றை வைத்திருக்கிறார் என்று அர்த்தம்.

தோல்வி என்றால் நம் கதை முடிந்துவிட்டது என்று அர்த்தம் கிடையாது.
புதிதாக வித்தியாசமாக முயற்சிக்க நமக்கு இன்னும் சந்தர்ப்பம் இருக்கிறது என்று அர்த்தம்.

தோல்வி என்பது வெற்றியின் நேரெதிர் கிடையாது. தோல்வி என்பது வெற்றியின் ஒரு அங்கம்.
தோல்வி என்னும் படிக்கட்டுக்களை தாண்டாமல் வெற்றி என்னும் சிகரத்தை எவரும் எட்டமுடியாது.

அடுத்த முறை உங்களிடம் ‘தோல்வி’ என்கிற வார்த்தையை எவரேனும் கூறினால், “தோல்வியா? நம்ம அகராதியில அதுக்கு அர்த்தமே வேறப்பா!” என்று இந்த கதையையும் இந்த பதிவையும்  நீங்கள் எடுத்து விடவேண்டும்.  செய்வீர்களா?

=====================================================================

அடுத்தவர் உழைப்பில் ‘பதக்கம்’ பெற துடிக்கலாமா?

மது பதிவுகளை முகநூல், மின்னஞ்சல், டுவிட்டர் உள்ளிட்டவற்றில் பகிர்வதற்கு தனித்தனி வசதிகள் பதிவின் துவக்கத்திலும் இறுதியிலும் தரப்பட்டுள்ளது. அதைக் கொண்டு தான் பகிரவேண்டுமே தவிர இங்கேயிருந்து எதையும் எடுப்பது தடை செய்யப்படுகிறது.

காரணம், ஒவ்வொரு பதிவையும் தயாரிக்க நாம் எடுக்கும் முயற்சிகள் சொல்லி மாளாது. ஒரு சில துளி தேனை எடுக்க ஆயிரக்கணக்கான பூக்களை தேனீ தேடி செல்வது போல நாம் பல விஷயங்களை பார்த்து படித்து அங்கும் இங்கும் தேடி ஓடி பதிவுகளை தயார் செய்கிறோம். ஆனால் ஒரு சில பதிவுத் திருடர்கள் இதை திருடி தங்கள் வலைகளிலும் முகநூலிலும் நமது தளத்தின் பெயரை இருட்டடிப்பு செய்து தங்கள் பதிவுகள் போல வெளியிட்டு பேர் பெற்று வருகிறார்கள். இதைவிட கேவலமான செயல் வேறு ஏதேனும் இருக்க முடியுமா? அடுத்தவர் உழைப்பில் பதக்கம் பெற துடிக்கும் இந்த சிறுபிள்ளைத்தனத்தை என்னவென்று சொல்வது? ஐயா… இந்த தளம் என்னுடைய பொழுதுபோக்கு அல்ல. வாழ்வியல் அனுபவங்கள். இது ஒரு வாழ்வா சாவா போராட்டம். ஆயிரக்கணக்கானவர்களை கரைசேர்த்து நானும் கரைசேர நடக்கும் ஒரு புனித வேள்வி. ஒன்று உதவுங்கள். அல்லது ஒதுங்கி நில்லுங்கள்.

=====================================================================

An appeal – Help us in our mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to join in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?

=====================================================================

Also check earlier Monday Morning Special articles:

ஒரு சிறு புன்னகை செய்த மாயம்! – MONDAY MORNING SPL 86

ஒரு சாதாரண மனிதனை சாதிக்க வைத்தது எது ? MONDAY MORNING SPL 85

சுவாரஸ்யமான, மனநிறைவான வாழ்க்கை வேண்டுமா? – MONDAY MORNING SPL 84

‘அணுகுமுறை’ என்கிற மந்திரச்சொல் – MONDAY MORNING SPL 83

எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? – MONDAY MORNING SPL 82

அகத்தின் அழகு முகத்தில் தெரியும், எச்சரிக்கை! MONDAY MORNING SPL 81

பராசக்தியின் உடலில் தோன்றிய கொப்புளங்கள் – MONDAY MORNING SPL 80

சிரித்தவர்களை பார்த்து சிரித்த நிஜ ஹீரோ – MONDAY MORNING SPL 79

வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா? MONDAY MORNING SPL 78

ஒரு சிறிய பேட்ஜ் செய்த அற்புதம் – MONDAY MORNING SPL 77

மனுஷனா பிறந்துட்டு எதுக்குங்க மாட்டைப் போல உழைக்கணும்? MONDAY MORNING SPL 76

நல்ல செய்தியா கெட்ட செய்தியா எது வேண்டும்? MONDAY MORNING SPL 75

வாழ்க்கையில் உயர என்ன வழி? – MONDAY MORNING SPL 74

கடவுளிடம் நமக்காக ஒரு கேள்வி – MONDAY MORNING SPL 73

மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா? – MONDAY MORNING SPL 72

பல நாள் திருடன் ஒரு நாள்… MONDAY MORNING SPL 71

ஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு! MONDAY MORNING SPL 70

நீங்கள் எந்தளவு ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று தெரியுமா? MONDAY MORNING SPL 69

திருடனிடம் கொடுக்கப்பட்ட சாவி — MONDAY MORNING SPL 68

வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67

பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா? — MONDAY MORNING SPL 66

உங்கள் வாழ்க்கையை இறைவன் மதிப்பிடுவது எப்படி தெரியுமா? – MONDAY MORNING SPL 65

முன்னேற துடிப்பவர்கள் மனதில் செதுக்க வேண்டிய வைர வரிகள் — MONDAY MORNING SPL 64

முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….

http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6

======================================================================

[END]

18 thoughts on “தோல்வி என்றால் உண்மையில் என்ன? MONDAY MORNING SPL 87

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

    மிகவும் அருமையான energetic ஸ்பெஷல் இந்த பதிவு. தோல்வியே நாம் வெற்றி என்னும் மலையை அடைவதற்கு உண்டான ஆயுதம்.

    தோல்வியை பற்றிய ஒவ்வொரு definition ம் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.

    இந்த இனிய காலைப் பொழுதில் நான் இந்த தளத்தின் மூலம், என் பெற்றோருக்கு இன்று 60 வது திருமண நாள் என்பதையும், எனக்கும் இன்று திருமண நாள் என்பதையும் மிகவும் மகிழ்ச்சியாக ஷேர் பண்ணிக் கொள்கிறேன் . இந்த வாரம் அனைவருக்கும் இனிமையான வாரமாக அமையட்டும்.

    ஆசிரியருக்கு, monday மோர்னிங் ஸ்பெஷல் போல் saturday energetic ஸ்பெஷல் ஒன்றை அளிக்கவும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து week end யை தங்கள் பதிவு அனைவரையும் உற்சாக படுத்தும் .

    நன்றி
    உமா வெங்கட்

    1. என் உளம் கனிந்த வாழ்த்துக்கள். தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று வாழ பிரார்த்திக்கிறேன்.

    2. என் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் உமா மேடம்.

    3. இன்று திருமண நாள் காணும் தங்களுக்கும், தங்கள் பெற்றோருக்கும் எங்களின் வணக்கங்கள்……….. தாங்கள் அனைவரும் நலமுடனும், வளமுடனும் வாழ குருவருளையும், திருவருளையும் வேண்டுகிறோம்……..

    4. வணக்கம்………..தோல்வி என்கிற மூன்றெழுத்து வார்த்தைக்கு இத்தனை அர்த்தங்கள் இருப்பதை இன்றுதான் தெரிந்து கொண்டோம்………. இனிமேல் தோல்வி ஏற்படின் எங்களின் கண்ணோட்டம் வேறாக இருக்கும்…….

      கரிகால் பெருவளத்தானை நினைக்கையில் ஒருவித சிலிர்ப்பு உண்டாகிறது………தோல்வியை எண்ணி வருந்தாமல் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்…….. அவர் கட்டிய கல்லணை இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு அவரின் வெற்றியை எடுத்துச் சொல்லும்………

  2. மிக சிறந்த பதிவு.
    “Positive thinking” இருந்தால் தாங்கள் கூறிய அனைத்தும் சாத்தியமே.

    “தோல்விகள் வெற்றிக்கான படிக்கட்டுகள்”

    நன்றி

  3. Dear Sundar,
    Good Morning. Monday Spl as usual super. Very Interesting and Energetic. Had a nice Start of the week.

    FAILURE IS NOT A DEFEAT, ITS JUST AN DELAY..

    With Warm Regards,
    S.Narayanan.

  4. அற்புதமான அருமையான விளக்கங்கள், தோல்வி என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தம் உணர்ந்தேன் . சுந்தர் அவர்களுக்கு நன்றி.

  5. தோல்வி என்ற வார்த்தைக்கு இவ்வளவு அர்த்தங்களா எனும் அளவிற்கு இவ்வளவு +ve ஆன அருமையான விளக்கங்களை தந்து எங்களை உற்சாகப் படுத்தியமைக்கு நன்றி.
    Now we are waiting for success and success is also waiting for us(in right time).

    vaazhga valamudan
    nandri

  6. உமா வெங்கட்
    அவர்களுக்கு எங்கள் உள்ளம் கனிந்த திருமண நல் வாழ்த்துகள் .
    சுந்தர்ஜி
    தோல்வி இல்லை என்றால் வெற்றி இல்லை . தோல்வி தான் வெற்றிக்கு அடிப்படை.
    கட்டுரை சூப்பர் எல்லோரும் அவசியம் படிகவேண்டிய கட்டுரை

  7. சுந்தர் அண்ணா.

    மிகவும் உயர்ந்த கருத்துக்கள்.

    உமா அம்மா அவர்களுக்கு என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்.

    மிக்க நன்றி அண்ணா..

  8. Thanks Sundar ji for considering my request for prayer, I know i am writing this comment in irrelevant article but wanted to write here as this is the latest post.

    I have shared my request for prayer only after Sundarji had taken personal care and requested me to share my request in prayer club multiple times (Almost after 6 to 7 months since he had told me to send the request). I think i had sent my request around 5 months back and left it to Sundar to publish it whenever he wanted.

    Some of the significance which made this prayer request being published last week which made me really happy are

    – I had expected that the prayer request would be published in the week of Sri Rama Navami and it so happened that the same was published the very next week.

    – My parents got married in Maduranthakam Eri Kaththa Ramar temple only.

    – My grandfathers Istha Devatha was Sri Ramachandramurthy.

    What else can one expect. A great significance with respect to time, place, deity and temple for the prayer to be submitted to. I feel really blessed that the request has been placed at the feet fo Sri.Ramachandra murthy by the head priest of the ERI KATHA RAMAR temple in Madurantakam

    Pray Sri Rama to bless those who have submitted the prayers and those who have prayed for others welfare to bless one and all and make this planet a better place to live

    RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA

    1. சரியான நேரத்தில் தங்களின் பிரார்த்தனை கோரிக்கை நம் தளத்தில் நம் ஆசிரியர் பதிவு செய்து இருப்பது சாட்சாத் அந்த ராமர் கடாக்ஷத்தினால் தான், தங்கள் கோரிக்கை வெகு விரைவில்………. நிறைவேறப் போகிறது அந்த ராமச்சந்திர மூர்த்தி அருளால். வாழ்த்துக்கள் . உங்கள் பின்னூட்டத்தில் உங்கள் சந்தோசம் தெரிகிறது

      நன்றி
      உமா வெங்கட்

    2. it’s great. you are really blessed.

      To add to this, i too want to share a small but significant information related to this.

      Yesterday i was in Panchamuga Anjaneyar temple at Panchavadi,Pondy.
      Anjaneyar Thirumanjanam was performed, which was preceded by Thirumanjanam to “SHRI RAMAR PAADHUGAI” {This Thirumanjanam happens on first sunday of every english month between 04.30 to 06.00pm}

      During that time i had submitted our reader’s prayers to Lord Rama’s feet. I had been to this temple many times but never attempted this. This is the first time that i had offered our prayer there and i really don’t know what made me to do this.Now after going through your comments,i understood that the power of your request made me to do this.I repeat, you are really blessed.

      The day of hearing good news is not far off.

      A special thanks to our editor who never forgets our reader’s request, and he has the knack of fulfilling our reader’s request at the appropriate place and at appropriate time

      1. Yes sir. I believe Rajan Ganesh will soon tell good news.

        Btw, I am just a tool. The hands holding me belongs to the ALMIGHTY.

        எல்லாப் புகழும் இறைவனுக்கே!

        thanks sir

      2. Thanks a lot for the wishes and Prayers Shri Sampathkumar ji.

        Its really the blessings of my Grandfather and the Rama nama that he had chanted throughout his life that has been instrumental in the prayer being kept at the Lotus feet of Sri Ramachandramurthy.

        Thanks to Shri.Sundar ji for accepting my prayer request

        With so many good hearts praying for me i am very confident that i will be sharing the good news very soon

  9. வாழ்க வளமுடன்

    மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என்றார் அண்ணா, அனால் மானம் கெட்டவர்தான் மாற்றானின் மதியை தன் மதியாக காட்டிகொள்வர் . ஒருவரின் உழைப்பை உறிஞ்கும் கயவருக்கு அவருடைய வலியோ , வேதநையோ தெரியாது .

    “நீ வாழ பிறரை கெடுக்கதே”

    “வாழு வாழவிடு”

    நன்றி

  10. திருமதி உமா அவர்களுக்கு வாழ்த்துகள். அவர் தம் அம்மா மற்றும் அப்பாவுக்கு எங்கள் அனந்த கோடி நம்ஸ்கரங்கள். அவர்கள் தரிசனம் கிடைக்க புண்ணியம் செய்து இறுக்க வேண்டும்.

    வயதான அவர்கள் பார்வதி, பரமேஸ்வர். அவர்கள் ஆசி வேண்டுவோம்.

    வாழ்க பல்லாண்டு.

    கே. சிவசுப்ரமணியன்.

Leave a Reply to Nithyakalyani Cancel reply

Your email address will not be published. Required fields are marked *