Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, July 19, 2024
Please specify the group
Home > Featured > தனயனை காத்த தந்தையின் தருமம் – நெகிழ வைக்கும் கதை!!

தனயனை காத்த தந்தையின் தருமம் – நெகிழ வைக்கும் கதை!!

print

வாசக அன்பர்களுக்கு வணக்கம். கடந்த சனிக்கிழமை (04/03/2017) இரவு திடீர் பயணமாக திருவாரூர், திருக்குவளை, கஞ்சனூர் போன்ற தலங்களுக்கு சென்று வந்தோம். செவ்வாய் அதிகாலை தான் சென்னை திரும்பினோம். இது திட்டமிடப்படாத பயணம். அவனிடமிருந்து அழைப்பு வந்தது. சென்றுவந்தோம். அவ்வளவே. சனிக்கிழமை மதியம் தான் பயண திட்டம் முடிவானது. இறையருளால் கடைசி நேரம் டிக்கட் கன்பார்ம் (கம்பன் எக்ஸ்பிரஸ்) ஆனது. சென்ற அனைத்து தலங்களிலும் நமது பிரார்த்தனை கிளப் பதிவை வைத்து சுவாமியிடம் அனைத்து பிரார்த்தனையாளர்களுக்கும் அர்ச்சனை செய்யப்பட்டது. ஞாயிறு மாலை பிரார்த்தனை நேரம் நாம் திருக்கன்றாப்பூர் என்னும் பாடல் பெற்ற தலத்தில் இருந்தோம். பார்க்க பார்க்கக் சொக்க வைக்கும் படங்களுடன் பல தகவல்களை திரட்டிக்கொண்டு வந்துள்ளோம். விரைவில் ஒவ்வொரு பதிவாக அளிக்கப்படும்.

அவிநாசி பிரார்த்தனை பதிவில் சேர்க்கச் சொல்லி சில வாசகர்கள் கோரிக்கை அனுப்பியிருக்கிறார்கள். அவர்கள் பெயர்கள் பிரார்த்தனை பதிவில் சேர்க்கப்பட்டு தனிப் பிரார்த்தனை பதிவு அடுத்த வாரம் அளிக்கப்படும். இடையே அவர்களுக்கு சேர்த்து பிரார்த்தனை செய்து வருவோம். எனவே பதிவளிக்க தாமதம் ஏற்பட்டால் கவலைவேண்டாம்.

இதற்கிடையே மகளிர் தினத்தை முன்னிட்டு நம் அலுவலகத்துக்கு ஒரு பெண் சாதனையாளர் வருகை தரவிருக்கிறார். மகளிர் தின சிறப்பு பதிவை இன்று மாலைக்குள் அளிக்க முயற்சிக்கிறோம்.

நன்றி!

– ரைட்மந்த்ரா சுந்தர்

==========================================================

தனயனை காத்த தந்தையின் தருமம்!

துறையூரில் வாழ்ந்து வந்தவர் சபாபதி முதலியார். மிகுந்த பரோபகார சிந்தனை உடையவர். இவரது கொடைத்தன்மையையயும் நற்பணிகளையும் பற்றி கேள்விப்பட்ட கவிச்சக்கரவர்த்தி கம்பர் ஒரு முறை இவரது திருமனையில் எழுவதற்கு விருப்பங்கொண்டார்.

இராமாயணத்தை அரங்கேற்றியிருந்தபடியால் அப்போது கம்பரின் புகழ் தென்னாடு முழுவதும் பரவியிருந்தது.

கம்பரை வரவேற்க சபாபதி முதலியார் வீடு மட்டுமன்றி மொத்த ஊருமே பரபரப்பாக இருந்தது. துறையூர் மக்கள் கம்பரைக் காண மிகுந்த ஆவலாக இருந்தனர்.

முதலியாரின் வீட்டில்  வரவேற்பு மற்றும் விருந்திற்கான ஏற்பாடுகள் முழுமூச்சில் போய்க்கொண்டிருந்தபோது, கொல்லையில் விளையாடிக்கொண்டிருந்த முதலியாரின் மகன் பசுபதி என்பவனை நல்ல பாம்பு ஒன்று தீண்டிவிட்டது.

“ஐயோ என்ன செய்வேன்… இங்கே வந்து பாருங்க. நம்ம குழந்தையை பாம்பு கடிச்சிடுச்சுங்க” என்று முதலியாரின் மனைவி வள்ளியம்மை ஓலமிட்டாள்.

உடனே வைத்தியர்களுக்கு தகவல் பறந்தது. அடுத்த சில வினாடிகளில் வைத்தியர்கள் முதலியார் வீட்டுக்கு வந்தனர். பல்வேறு வைத்தியங்களை செய்தனர். கிராமத்து பூஜாரிகள் வந்து வேப்பிலை அடித்தனர். கடிவாயில் வேப்பிலையை அரைத்து சுண்ணாம்பு கலந்து பூசினர்.

ம்… ஹூம்… அவர்கள் முயற்சிக்கு பலனின்றி பசுபதி இறந்துவிட்டான்.

கொண்டாட்ட கோலத்தில் இருந்த முதலியாரின் வீடு களையிழந்து போனது.

சற்று நேரத்தில் ஒருவர் ஓடி வந்து, “கம்பர் ஊர் எல்லையில் வந்துகொண்டிருக்கிறார்” என்று முதலியாரிடம் கிசுகிசுத்தார்.

“உடனே ஒரு பாயைக் கொண்டு வாருங்கள்” என்று கட்டளையிட்டார் முதலியார்.

பாயில் மகனைச் சுருட்டி, புழக்கடையில் வைக்கோல்கள் புதருக்குள் கொண்டு போய் போட்டார்.

கூடத்தை உடனே தண்ணீர் விட்டு அலம்பி கோமியம் தெளிக்குமாறு வீட்டுப் பெண்களிடம் கூறினார்.

சுற்றியிருந்த சொந்த பந்தங்களை கடுமையாக எச்சரித்தார்.

“யாராவது மூச்சு விட்டீங்க தெரியும் சேதி. கம்பர் இங்கிருந்து போறவரைக்கும் யாரும் விசும்பக் கூட கூடாது. எவ்ளோ பெரிய கவிஞர் ராமாயணத்தையே எழுதினவர், நம்ம வீட்டுக்கு வர்றார். அவர் வர்றதுக்கு கொடுத்து வெச்சிருக்கணும்….”

அவர் மேல் உள்ள பயகத்தில் அனைவரும் தலையாட்டினர்.

“ம்…  மச மசன்னு நிற்காம உடனே போய் ஆகவேண்டியதை பாருங்க… விருந்து தயாராகட்டும்” என்று கட்டளையிட்டுவிட்டு தெருமுனைக்கு ஊர் முக்கிய பிரமுகர்களுடன் கம்பரை வரவேற்க சென்றார்.

கம்பர் வந்தவுடன் அவரை எதிர்கொண்டு வரவேற்று மாலையிட்டு பல்லக்கில் வைத்து தெருமுனையிலிருந்து தன் வீடு வரை தானே சுமந்துகொண்டு வந்தார் முதலியார்.

கம்பரிடம் தனது மனைவியை உறவினர்களை ஊர் பிரமுகர்களை அறிமுகப்படுத்தினார்.

பேசிக்கொண்டிருக்கும்போதே ‘விருந்து தயார்’ என்கிற செய்தி வந்தது.

“முதலில் தாங்கள் பசியாரவேண்டும். பிறகு பேசலாம்” என்று கம்பரை கேட்டுக்கொண்டார் முதலியார்.

உதடுகள் சிரித்தாலும் உள்ளம் வாடியிருப்பதை கம்பர் உணர்ந்துகொண்டார். அனைவரும் ஒருவித இறுக்கத்தில் இருப்பதையும் கம்பர் புரிந்துகொண்டார்.

காப்பியம் இயற்றியவருக்கு கவலை ரேகை தெரியாதா என்ன?

தலை வாழையிலையில் கம்பருக்கு விருந்து பரிமாறப்பட்டது.

“நீங்களும் என்னுடன் உணவருந்தலாமே…”

“உங்களை உபசரிக்கும் பாக்கியம் வேண்டியே நான் உங்களுடன் அமரவில்லை”

“உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல் அல்லவா?”

முதலியார் மறுப்பேதும் சொல்லாமல் தனக்கும் இலை போடும்படி மனைவியிடம் சொன்னார்.

“உங்களுக்கு ஒரு மகன் உண்டல்லவா? எங்கே அவன்? அவனையும் வரச் சொல்லுங்கள். சேர்ந்தே உண்ணலாம்”

“அவன் விளையாடப் போயிருக்கிறான்”

அழுவதுங் கொண்டு புலம்பாது நஞ்சுண் டதுமறைத்தே
ரெழுபதுங் கொண்டு புகழ்க்கம்ப வாணனெழுப்பவிசை
முழுவதுங் கொண்டொரு சொற்பேச நெய்யின் முழுகிக்கையின்
மழுவதுங் கொண்டு புகழ்கொண்ட தாற்றொண்டை மண்டலமே

தனது அரங்கேற்றம் நல்ல முறையில் நடக்க தனது உயிரை தியாக செய்தவனை கம்பர் விட்டுவிடுவாரா?

உடனே,

ஆழியான் பள்ளி யணையே யவன் கடைந்த
ஆழிவரையின் மணித் தாம்பே – பூழியான்
பூணே புரமெரித்த பொற்சிலையிற் பூட்டுகின்ற
நாணே யகல நட.

மங்கை யொருபங்கர் மணிமார்பில் ஆரமே
பொங்குங் கடல்கடைந்த பொற்கயிறே – திங்களையும்
சீறியதன் மேலூருந் தெய்வத் திருநாணே
ஏறிய பண்பே யிறங்கு.

பாரைச் சுமந்த படவரவே பங்கயக்கண்
வீரன் கிடந்துறங்கு மெல்லணையே – ஈரமதிச்
செஞ்சடை யான்பூணுந் திருவா பரணமே
நஞ்சுடை யாய்தூர நட

“கவிச்சக்கரவர்த்தி கம்பர் வாழ்க… கவிச்சக்கரவர்த்தி கம்பர் வாழ்க… ” என்று அந்த தெருவே வாழ்க கோஷத்தால் அதிர்ந்தது.

அடியார்களுக்கு அதிசயங்கள் ஒரு பொருட்டா?

(பொதுவாகவே கவிஞன் வாக்கு பொய்க்காது என்று கூறுவார்கள். அக்காலங்களில் கவிஞர்களிடம் வித்தையை பொருளுக்கு விற்கும் வழக்கம் இருந்ததில்லை. இதன் பொருட்டு உயிரை துச்சமாக மதித்து தியாகம் செய்தவர்கள் கூட உண்டு. எனவே அவர்கள் நாவில் கலைமகள் வாழ்ந்து வந்தாள். எனவே அவர்களின் எண்ணங்கள் பலித்தது என்று கூறுவார்கள்.)

தங்களுக்கு ஒன்று எனும்போது கூட கம்பர் போன்றவர்கள் அதிசயங்கள் புரிய விரும்பியதில்லை. ஆனால், பிறருக்கு அதுவும் சபாபதி முதலியார் போன்ற கொடையுள்ளம் கொண்டவர்களுக்கு ஒன்று எனும்போது தங்கள் வாக்கின் சக்தியை பயன்படுத்தினர்.

தர்மம் தலைகாக்கும் என்பார்கள். இங்கே அது பிள்ளையை காத்தது. அதன் மூலம் குலத்தை காத்தது.

(இதே போல விடம் தீண்டி மாண்ட அப்பூதியடிகளின் மகனை திருநாவுக்கரசர் திங்களூரில் பதிகம் பாடி உயிர்ப்பித்தது மற்றுமொரு வரலாறு!)

* நமது தளத்தின் ஓவியர் ரமீஸ் அவர்களின் கைவண்ணத்தில் தயாரான ஓவியம் இது. 

==========================================================

Your financial support is important…

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. We are striving to sustain. Help us. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break or Donate us liberally.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

==========================================================

Please check :

“மீனை வாயில் வைத்து பாடு, வாதம் தீரும்” – இது குருவாயூரப்பன் லீலை!

அரங்கனை நம்புகிறவர்களுக்கு அற்புதங்களுக்கு குறைவேது?

உழைப்புக்கேற்ற கூலியும் மந்திர மரக்காலும்!

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா விளக்கிய ஒரு வியக்கவைக்கும் கணக்கு!

மகாபாரதத்திலேயே மிக நல்லவன் யார்? MUST READ

கீதை பிறந்த இடம் – ஒரு சிறப்பு பார்வை!

தற்காலிக சோகங்களுக்காக வருந்துவானேன்? தங்கக் கதவை திறப்பதற்கே இரும்புக் கதவு மூடப்படுகிறது!

எத்தகைய பூஜையை சிவபெருமான் ஏற்றுக்கொள்கிறார்?

கர்வத்துக்கும் தன்னம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம் ?

கடவுளின் டிக்ஷனரியில் இரு வார்த்தைகள்

கொடையாளிகள் பலர் இருக்க கர்ணனுக்கு மட்டும் பெயரும் புகழும் கிடைப்பது ஏன்? 

குன்றத்தூர் கோவிந்தனின் கதை!

தீராத வினை தீர்க்கும் அடியார்கள் பாத தூளி  – நம் இராமநவமி அனுபவம்!

108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் தவறவிடக் கூடாத ஒரு தலம்!

புடவை கட்டிக்கொள்ளும் பெருமாள் – சென்னை புறநகரில் ஒரு அதிசய மலைக்கோவில்!

வரங்களை அருள்வதில் திருமலைக்கு நிகரான ‘திருநீர்மலை’ திவ்யதேசம்!

சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி… “இதோ எந்தன் தெய்வம்” – (4)

==========================================================

Also check :

ராமநாமத்தின் விலை!

ஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா…

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு!

“எல்லாம் அவ பாத்துப்பா!”

எது நிஜமான பக்தி?

சலவைத் தொழிலாளி அரங்கனுக்கு சூட்டிய பெயர்! நெகிழ வைக்கும் வரலாறு!!

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்! சமையற்காரர் படைத்த காவியம்!!

“நான் உனக்காக காத்திருக்கிறேன்!”

ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

அரங்கன் மீது கொண்ட காதலால் ‘துலுக்க நாச்சியார்’ ஆன சுல்தானின் மகள்! 

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்!

பாண்டுரங்கன் சுமந்த மூட்டை!

==========================================================

[END]

2 thoughts on “தனயனை காத்த தந்தையின் தருமம் – நெகிழ வைக்கும் கதை!!

 1. Got goosebumbs reading this. Eyes filled with tears….

  Rama Rama Rama Rama Rama Rama

  When Rama namam cures us of all sins, When reading Ramayanam helps come out of misery, its no wonder that Kambar was able to bring back life. He would have lived his life with Lord Ram while writing Ramayanam

  Rama Rama Rama Rama Rama Rama

 2. Oviyam arumai
  Vallthukkal Rameesh
  aalndha bakthi
  adiyaargalai ubasarikkum uyariya gunam
  paraobhaghara sindhanai udayavarai andha paramporul orupodhum kai vittadhillai enbadharkku indha sambavam oru nalla saandru
  ellorum inbuttrirukka venduvom

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *