Home > episode (Page 3)

திருடிய நெய்யும் சிவபுண்ணியமும் – சிவபுண்ணியக் கதைகள் (5)

சிவபுண்ணியம் பற்றி கண்வ மகரிஷி கூறிய கதையை தற்போது பார்ப்போம். மாளவ தேசத்தில் உள்ள கல்யாணபுரம் என்ற நகரில் கார்கவன், வைணவன் என்கிற இரண்டு வணிகர்கள் வசித்து வந்தார்கள். வணிகர்களுக்கு உரிய எந்த தர்மத்தையும் பின்பற்றாமல் அடுத்தவர்களை வஞ்சித்து ஏமாற்றி பொருளீட்டி, அந்த பொருளை கொண்டு அனேக குற்றங்களை செய்து மலையென பாவங்களை குவித்து வந்தார்கள். இவர்கள் பகலில் வியாபாரிகள் போல திரிவார்கள். சக வியாபாரிகளிடம் மெல்ல பேச்சு கொடுத்து அவர்கள் சொத்து மற்றும்

Read More

“நான் யாருக்கும் நமஸ்காரம் பண்ணமாட்டேன். என்னை கட்டாயப்படுத்தக்கூடாது”

பல நதிகள் எப்படி இறுதியில் சமுத்திரத்தை அடைகிறதோ அதே போல இறைவனை அடைவதற்கு பல வழிகள் உண்டு. ஒவ்வொரு ஞானியரும் ஒவ்வொரு மார்க்கத்தை பின்பற்றி மக்களை நல்வழிப்படுத்தினார்கள். அவர்களுள் ரமணர் பின்பற்றியது 'ஆன்ம விசாரம்'. ஆன்மவிசாரம் அத்தனை எளிதல்ல. ஆனால் மிக மிக கடினமான கருத்துக்களைகூட மிக மிக அற்புதமாக பாமரர்களுக்கும் புரியும் வண்ணம் அன்றாட ஆஸ்ரம நடவடிக்கைகளை கொண்டே பகவான் ரமணர் புரியவைத்தார். அது தான் ரமணரின் சிறப்பு! கடும்கோடையில்

Read More

வாழைப்பழ திருடனுக்கு கிடைத்த பேறு – சிவபுண்ணியக் கதைகள் (4)

சிவபுண்ணியம் தொடரில் இந்த அத்தியாயத்தில் நாம் பார்க்கப்போகும் சம்பவம் விராட தேசத்தில் நடைபெற்றது. விராட தேசம் பற்றிய குறிப்புக்கள் மகாபாரதத்தில் நிறைய இடங்களில் காணப்படுகிறது. (அநேகமாக இன்றைய ஜார்கண்ட் மாநிலமாக இருக்கலாம்). இப்போது நம் நாட்டில் உள்ள மாநிலங்கள் போல, அந்தக் காலத்தில் (பல ஆயிரம் வருடங்கள் முன்பு) மொத்த 56 தேசங்கள் இருந்தன. இப்போதுள்ள 35 மாநிலங்களும் இந்த 56 தேசத்தில் அடங்கிவிடும். விராட தேசத்தில் சீமந்தபுரம் என்னும் நகரம்

Read More

பசுவின் பால் கொடுத்த சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (3)

சிவபுண்ணியக் கதைகளை நீங்கள் படிக்கும்போது அவை சற்று விசித்திரமாக உங்களுக்கு தோன்றலாம். மிக மிகக் கொடிய பாபங்கள் கூட, சிவபுண்ணியம் என்னும் நெருப்பு படும்போது பொசுங்கி காணாமல் போய்விடுகின்றன. மாபாபிகள் என்று தூஷிக்கப்படும் துராத்மாக்கள் கூட, அவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த சிறு சிவபுண்ணியத்தின் மகிமையால் அனைவராலும் வணங்கப்படும் நிலைக்கு உயர்வது இக்கதைகளில் சகஜம். இப்போதெல்லாம் ஹேண்ட்வாஷ் பிரபலமாகிவிட்டது. சாப்பிடுவதற்கு முன் அவற்றை கொண்டு கையை அலம்பிக்கொண்டால், நோய்நொடிகள் அண்டாது என்று

Read More

தந்தையை காத்த, தனயனின் சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (2)

சிவபுண்ணியக் கதைகள் தொடர் நம் தளத்தில் மாபெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. தற்போது நமது பொறுப்பு அதிகரித்துவிட்டது போன்றதொரு உணர்வு. சாதாரணமாக நாம் ஒவ்வொரு பதிவையும் ஒரு தவம் போலக் கருதி தான் தயார் செய்வோம். அப்படியிருக்கையில் 'சிவபுண்ணியம்' பற்றிய தொடர் என்றால் நாம் எடுக்கும் சிரத்தையை கேட்கவேண்டுமா? அவனருளாலே அவன் தாள் வணங்கி! இந்த கதை சற்று வித்தியாசமானது. சிவபுண்ணியம் அதை செய்பவருக்குத் தான் சென்று சேரும் என்றில்லை. அவர்களை சார்ந்தவர்களுக்கும்

Read More

கர்மாவை வென்ற காருண்யம் – கர்மா Vs கடவுள் (5)

கர்மா Vs கடவுள் தொடரில் மிக மிக முக்கியமான அத்தியாயம் இது. இந்த கதை (நிகழ்வு) உங்களில் பலருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் இதில் உள்ள சூட்சுமம், பின் ஒளிந்திருக்கும் தாத்பரியம் தெரிந்திருக்காது என்று நம்புகிறோம்! எனவே கவனத்துடன் கருத்தூன்றி படிக்கவும்!! 'கர்மா என்பது மாற்றக்கூடியதே... ஜென்ம ஜென்மாக தொடரும் வல்வினையானாலும் அதை நிச்சயம் நமது அணுகுமுறையாலும், நடவடிக்கைகளாலும் மாற்றிக்கொள்ள முடியும்' என்பதை ஆணித்தரமாக உணர்த்துவதே இந்த தொடரின் நோக்கம். சரித்திரத்தில் விதி மாற்றி

Read More

கூற்றுவன் அஞ்சுவது யாரைக் கண்டு தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (1)

சிவபுண்ணியமும் கர்மாவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. கர்மாவை கரைக்கவும் உடைக்கவும் வல்லது சிவபுண்ணியமே என்பதை சென்ற பதிவில் பார்த்தோம். முதலில் 'சிவபுண்ணியம்' என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள அது குறித்த முழுமையான புரிதல் தேவை. கடுகளவு சிவபுண்ணியம் கூட மலையளவு பாவத்தை உடைத்து தூள் தூளாக்கிவிடும். அதே நேரம், கடுகளவு சிவநிந்தனை கூட மலையளவு புண்ணியத்தை தகர்த்து நரகில் தள்ளிவிடும். எனவே இது குறித்த முழு புரிதல் வேண்டும். அப்போது தான் அளவற்ற

Read More

விதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம் – கர்மா Vs கடவுள் (4)

நமது 'கர்மா Vs கடவுள்' தொடரில் மிக மிக முக்கியமான அத்தியாயம் இது. 'ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட நமது விதிப்படி தான் அனைத்தும் நடக்கிறது. அதை மாற்ற முடியாது' என்கிற கருத்து பலரை ஆட்டிப்படைக்கிறது. ஆனால் 'அதை மாற்ற முடியும். இந்த மண்ணில் யாவரும் நல்ல வண்ணம் வாழலாம், எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை' என்று உணர்த்துவதே இந்த தொடரின் நோக்கம். ஆனால் இது மந்திரத்தில் மாங்காய் வரவழைக்கும் முயற்சியல்ல. உங்கள்

Read More

ரமணர் விளக்கிய கிரி பிரதட்சண மாண்பு!

இன்று சித்ரா பௌர்ணமி. மிகவும் விசேஷம். அதுவும் திருவண்ணாமலையில் மிக மிக விசேஷம். எனவே இன்றைய குருவார சிறப்பு பதிவில், அருணாச்சலம் மற்றும் கிரி பிரதட்சிணம் தொடர்பான சில ரமண மகிமைகளை பார்ப்போம். கூடவே, தியானம் பற்றியும் யாரை குருவாக ஏற்றுகொள்வது என்பது பற்றியும் பகவான் ramanar தெளிவுபடுத்தியிருக்கும் சில முத்துக்களையும் பார்ப்(ரசிப்)போம். இவை மேலோட்டமாக படித்துவிட்டு செல்லக்கூடிய விஷயங்கள் அல்ல. ரமணரைப் பற்றிய பதிவுகளை அவசியம் திரும்ப திரும்ப படிக்க வேண்டியவை. பார்ப்பதற்கு சாதரணமாக

Read More

எதுக்குமே டயம் இல்லை சார்… என்ன பண்றது?

இறைவனின் படைப்பில் நாம் அவசியம் புரிந்துகொள்ளவேண்டிய ஆனால் புரிந்துகொள்ள மறுக்கும் அம்சம் - TIME என்று சொல்லக்கூடிய நேரம் தான். கடிகாரத்தை வைத்தோ, சூரிய சந்திரனை வைத்தோ உணரக்கூடியது அல்ல 'நேரம்' என்பது. 'நேரம்' என்பது இவை எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட ஒன்று. இன்று பலர் தாங்கள் செய்யக் கூடிய செய்ய வேண்டிய பொன்னான விஷயங்களை / கடமைகளை செய்யத் தவறுகிறமைக்கு சொல்லும் விஷயம் : "எனக்கு நேரமேயில்லை!" என்பது தான். "இன்னைக்கு ரொம்ப

Read More

அன்னபூரணிக்கு முதல் நைவேத்தியம்!

குருவானவர் சொல்வதைவிட விட செய்வதையே அவரது சீடர்கள் பின்பற்றுவார்கள். எனவே மெய்ஞானிகள் தங்கள் 'வாழ்க்கையே ஒரு உபதேசம் தான்' என்பதில் கண்ணுங்கருத்துமாக் இருப்பார்கள். நாவைவிட செயலில் தான் அவர்கள் உபதேசம் பிரதானமாக இருக்கும். சொல்வதற்கும் செயலில் காட்டுவதற்கும் உள்ள வித்தியாசத்தை அவர்கள் அறிவார்கள். பகவான் ரமணரை பொறுத்தவரை அவர் எது செய்தாலும் அது உபதேசம் தான். ஒரு முறை மோன நிலையில் (தக்ஷிணாமூர்த்தி கோலத்தில்) பல மணிநேரங்கள் மெளனமாக இருந்து கூட

Read More

காக்கா குருவிக்கு ஏது ஓய் உக்கிராணம்?

சிலரது பெயரைக் கேட்டாலே மனசுக்கு இதமாக இருக்கும் ஏதோ பாரம் குறைந்தது போல இருக்கும். நம்பிக்கை பீறிடும். அப்படிப்பட்ட அருளாளர்களுள் ஒரு தான் பகவான் ரமண மகரிஷி. தமது சாந்நித்தியத்தாலும் சொல்லாலும் நோக்காலும், ஒவ்வோர் அசைவாலும் அடுத்தோர் துன்பத்தையகற்றி, அமைதியையும் மெய்யுணர்வையும் அருளிவந்த அண்ணல் ஸ்ரீ ரமணர். ரமணரை பற்றி நமது தளத்தில் பல பதிவுகள் வெளிவந்துள்ளன. இன்று குருவாரம் என்பதால் ரமணரின் திருவிளையாடல்கள் சிலவற்றை பார்ப்போம். திருவண்ணாமலைக்கு வந்தது முதல் பலகாலம்

Read More

கர்மாவும் ஒன்றுக்கு பத்தும் – கர்மா Vs கடவுள் (3)

கர்மா என்றால் என்ன? அதை நாம் வெல்ல முடியாதா? அனுபவித்தே தீரவேண்டுமா? அப்படியெனில் கடவுள் எதற்கு? கோவில்கள் எதற்கு? வழிபாடு எதற்கு? பரிகாரங்கள் எதற்கு? என்ற கேள்விகள் எழுகிறதல்லவா...! அதற்கு விடை கூறவே இந்த தொடரை துவக்கினோம். இரண்டு அத்தியாயங்கள் முடிந்த சூழ்நிலையில், தற்போது மூன்றாம் அத்தியாயத்தை தருகிறோம். பல வாசகர்கள் மூன்றாவது அத்தியாயம் எப்போது வரும் என்று கேட்டபடி இருந்தனர். முதலில் கர்மாவை பற்றி சரியாக புரிந்துகொள்வோம். சுவற்றில் அடித்த பந்து திரும்ப வரும்.

Read More

ஆடுகளமும் ஆட்டக்காரர்களும் – ஆளுமை முன்னேற்றத் தொடர் – (5)

நம் தளத்தில் வெளியாகும் பதிவுகள் சில தொடராக வந்து கொண்டிருக்கிறது. பதிவுகளை ஒரு வகைப்படுத்தி ஒரு குடையின் கீழே கொண்டு வரவே தொடராக தருகிறோம். மற்றபடி தனித் தனியாக அவற்றை படித்தாலும் சரி, முன்னும்பின்னும் படித்தலும் சரி அது புரியும் வண்ணமே எழுதி வருகிறோம். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு குறித்த மெஸ்ஸேஜை கன்வே செய்யும். That's all. நமது ஆளுமை முன்னேற்றத் தொடரில் இது ஐந்தாம் அத்தியாயம். நாளுக்கொரு சவால், நொடிக்கொரு பிரச்னை...

Read More