திருமணத் தடை ஏற்பட்டாலோ பல ஆண்டுகள் திருமணம் நடைபெறாமல் இருந்தாலோ மற்றும் ஜாதகத்தில் இராகு தோஷம், களத்திர தோஷம், காலசர்ப்ப தோஷம் ஆகிய தோஷங்கள் இருந்தாலும் இந்த சிறுவாபுரி முருகனை மனம் உருகி நாடி வந்தால் கைமேல் நல்ல பலன் கிடைக்கும். தொடர்ந்து ஆறு வாரங்கள் சென்றால் திருமணம் விரைவில் நிறைவேறும்.
திருமணம் நடக்க வேண்டிய பெண்கள் ஆறுவாரமும் ஒரு நாள் தவறாமல் வந்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும். பிரார்த்தனை செய்பவர்கள் வள்ளி நாயகனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். ஆறாவது வாரம் ஆறு அர்ச்சனைப் பொருள்களுடன் மரகத விநாயகர் வள்ளி மணவாளப் பெருமான் அண்ணைமலையார், உண்ணாமுலையார், ஆதிமூலவர் ஆகிய தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.
மேலும் முருகன் சந்நிதியில் தரும் மாலையை திருமணமாலையாக எண்ணி அணிந்து ஆறுமுறை ஆலயத்தைச் சுற்றி வந்த பிறகு அந்த மாலையை வீட்டிற்கு எடுத்துச் சென்று திருமணம் நடக்கும் வரையில் பாதுகாக்க வேண்டும்.
இதனைத் தவிர வீடு, பிள்ளைப்பேறு உடலில் உள்ள நோய், வாழ்வில் ஏற்படும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் இந்த முருகனை ஆறுவாரம் தொடர்ந்து வழிபட்டால் நாம் நினைத்த எண்ணங்கள் நிறைவேறும். மற்ற அனைத்துப் பிரச்னைகளும் விலகும்.
ஒவ்வொரு வாரமும் நம்மிடம் அர்ச்சகர் கொடுக்கும் எலுமிச்சம் பழத்தை வீட்டில் வைத்து பூவைத்து பூஜை செய்ய வேண்டும். அடுத்த வாரம் வரும்போது எலுமிச்சம் பழத்தை கடல் அல்லது கிணற்றில் போட வேண்டும். ஆறாவது வாரம் நாம் ஆலயத்திலிருந்து பெற்று வந்த பழத்தை பிரார்த்தனை நிறைவேறும் வரை பூஜிக்க வேண்டும்.
இந்தப் பிரார்த்தனை காலங்களில் திருப்புகழ் படிக்க வேண்டும். பிரார்த்தனை நிறைவேறியதும் சிறுவாபுரிக்கு வந்து அர்ச்சனை செய்து வணங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் விசாகம், பௌர்ணமி, ஷஷ்டி, வாராவாரம் செவ்வாய், வெள்ளி, வியாழன் ஆகிய நாள்களில் சிறப்பான வழிபாடுகளும் நடக்கும். செவ்வாய்க் கிழமைகளில் காலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையில் ஆலயம் திறந்திருக்கும். சிறுவாபுரி முருகனைத் தரிசனம் செய்தால் வாழ்வில் தொடங்கும் செயல்களில் வெற்றி கிடைக்கும். பகை விலகி மன நிம்மதியும் அனைத்துச் செல்வங்களும் கிடைக்கும்.
முருகன் திருக்கல்யாண மஹோத்சவம் – ஏன், எப்படி, என்ன செய்யவேண்டும்?
6 வாரம் தொடர்ந்து வர முடியாமல் சிரமப்படுபவர்களுக்காக அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழுவினர் ஆண்டுதோறும் சிறுவாபுரியில் வள்ளி. முருகனுக்கு கல்யாண மகோற்சவத்தை நடத்துகிறார்கள்.
இதில் பங்கேற்பவர்கள் அபிஷேகத்தையும், கல்யாணத்தையும் கண்டுகளித்து பிரார்த்தனை செய்யும் பக்தர்களில் ஆண்களுக்கு வள்ளி மாலையும், பெண்களுக்கு முருகன் மாலையும் வழங்கப்படும்.
கல்யாண மகோற்சவம் முடிந்ததும் வள்ளியும், முருகபெருமானும் கோவில் பிரகாரத்தை சுற்றி 6 முறை வலம் வருவார்கள். அப்போது திருமண பிரார்த்தனையாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு ’வள்ளி மணவாளா போற்றி’ என்ற மந்திரத்தை உச்சரித்தபடி வரவேண்டும்.
இந்த பிரார்த்தனையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு கட்டணம் கிடையாது. இதை அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழுவினர் இலவசமாக நடத்துகிறார்கள்.
இந்த ஆண்டு செப்டம்பர் 4–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கல்யாண மகோற்சவ விழா நடக்கிறது. கடந்த முறை கல்யாண மகோற்சவத்தில் பங்கேற்று திருமணம் கைகூடியவர்கள் தம்பதியராக செப்டம்பர் 3–ந்தேதி மாலை 6 மணிக்கு கோவிலுக்கு வரவேண்டும்.
வள்ளி முருகனுக்கு வைக்கப்படும் சீர்வரிசையை கோவிலை சுற்றி தம்பதிகள் எடுத்து வந்து நன்றி செலுத்த வேண்டும். மகோற்சவத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் செப்டம்பர் 4–ந் தேதி காலையில் சிறுவாபுரிக்கு வரவேண்டும். இதற்கு முன்பதிவு ஏதும் தேவையில்லை.
4–ந்தேதி காலை 6 மணிக்கு விநாயகர், ஆதிமூலவர், அண்ணாமலையார், அம்மன் அபிஷேகம் நடக்கிறது. காலை 6.30 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம் நடக்கிறது. 9 மணிக்கு வள்ளி மணவாள பெருமானுக்கு அபிஷேகம் நடக்கிறது. 10 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. 11 மணிக்கு சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 12 மணிக்கு கல்யாண விருந்து நடக்கிறது.
மேலும் விபரங்களுக்கு 99443 09719 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது www.annamalaiyar.com என்கிற தளத்தை பார்க்கவும்.
கோயம்பேட்டிலிருந்து பெரியபாளையம் செல்லும் நேரடி பேருந்து உள்ளது. அந்த பேருந்தில் வரலாம். அல்லது செங்குன்றதிலிருந்து பெரியபாளையம் செல்லும் பேருந்திலும் வரலாம். ரூ.50/- பாஸ் எடுத்துவிட்டீர்கள் என்றால் இரவு வரை செல்லுபடியாகும்.
==========================================================
To download the above invitation please click the following link:
http://rightmantra.com/wp-content/uploads/2016/09/Siruvapuri-Thirukkalyanam-1.jpg
திருக்கல்யாண மஹோத்சவத்தில் கலந்துகொள்பவர்கள் மனதில் கொள்ளவேண்டிய குறிப்புக்கள்
1) இது முற்றிலும் இலவச சேவை. மாலை உட்பட அனைத்தும் இலவசம்.
2) திருமண வரம் வேண்டி திருக்கல்யாண உற்சவத்திற்கு வருபவர்கள் காலை 8.00 மணிக்கு ஆலயத்தில் இருக்கவேண்டும். முன்னதாக கோவிலின் எதிரே ‘அண்ணாமலையார் அறப்பணி குழு’வினர் அமைத்துள்ள ஸ்டாலில் தங்கள் பெயர், ராசி, கோத்திர விபரங்களை பதிவு செய்துகொள்ளவேண்டும்.
3) ஆலயத்தின் உள்ளே சங்கல்பம் செய்யுமிடத்தில் தங்கள் பெயர் ராசி நட்சத்திரம் மறக்காமல் சங்கல்பம் செய்துகொள்ளவேண்டும். சங்கல்பம் என்பது இறைவனிடம் உள்ள ATTENDANCE REGISTER இல் கையெழுத்து போடுவது போன்றது.
4) திருமணத்திற்காக காத்திருக்கும் ஆண்கள், பெண்கள் அவசியம் இந்த பிரார்த்தனையில் கலந்துகொள்ளவேண்டும். அப்படி வரவியலாத பட்சத்தில் அவர்களின் சார்பாக அவர்களின் பெற்றோர் வந்தால், கோவில் மிக சிறிய கோவில் பிராகாரம் மிகச் சிறிய பிரகாரம் என்பதால் அவர்கள் சங்கல்பம் செய்துவிட்டு ஒதுங்கி பிரார்த்தனையாளர்களுக்கு வழிவிடவேண்டும். அவர்கள் சுவாமியுடன் சுற்று வரத் தேவையில்லை. முடிந்தால் அவர்கள் சேவைகளில் உதவுவது வரவேற்கத்தக்கது.
5) பிரார்த்தனை ஆண்கள் தனியாக வருவது நலம். பெண்கள் துணைக்கு பெற்றோரை அழைத்து வரலாம். துணைக்கு பெற்றோரை அழைத்து வந்தால் சங்கல்பம் செய்வதோடு அவர்களை விலகியிருக்கச் செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே வைபவத்தை காண அமரவேண்டும். சுவாமியுடன் சுற்று வரவேண்டும். (கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு).
6) மறுமணம் வரம் வேண்டி கலந்துகொள்ளும் பிரார்த்தனையாளர்களும் சங்கல்பம் செய்துவிட்டு ஒதுங்கி மற்றவர்களுக்கு வழிவிடுதல் நலம்.
7) திருமண பிரார்த்தனையாளர்கள் திருக்கல்யாணம் முடிந்து சுவாமியுடன் ஆறு சுற்று வந்த பிறகே கல்யாண போஜனம் சாப்பிட செல்லவேண்டும். மற்றவர்கள் விருந்து துவங்கியதும் சாப்பிட செல்லலாம்.
8) திருக்கல்யாணம் முடிந்தவுடன் சுவாமியுடன் ஆறு சுற்று வருதலே மிகவும் முக்கியம். “என் திருமண ஊரவலத்தில் என்னுடன் வா. அடுத்த முறை உன் துணையுடன் வா” என்பதே இதன் தாத்பரியம்.
9) இது திருமண வரம் வேண்டி தவிப்பவர்களுக்கு உதவும் பொருட்டு சேவை நோக்கோடு நடத்தப்படும் ஒரு மஹோத்சவம். எனவே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு உங்கள் முழு ஒத்துழைப்பை நல்கிடவேண்டும். அரிபரி, அவசரப்படுதல், குற்றம் குறை கூறுதல், கூச்சலிடுதல், பந்திக்கு முந்துதல் போன்றவற்றை தவிர்த்து, திருமண வைபவம் சிறப்பாக நடந்தேற மனப்பூர்வ ஒத்துழைப்பு நல்கினாலே முருகன் மனம் குளிர்ந்துவிடும். உங்கள் எண்ணங்கள் ஈடேறும் என்பது உறுதி.
10) கடந்த முறை திருக்கல்யாண மஹோத்சவத்தில் பங்கேற்று திருமணம் கைகூடியவர்கள், செப்டம்பர் 3 ஆம் தேதி அதாவது சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் வரவேண்டும். இவர்கள் வள்ளி மணவாளப் பெருமானுக்கு வைக்கப்படும் சீர்வரிசையை சுமந்தபடி கோவிலை சுற்றி வரவேண்டும். இது இறைவனுக்கு திருமணம் கைக்கூடியமைக்கு நாம் செலுத்தக்கூடிய நன்றி அறிவிப்பு ஆகும். இவர்களுக்கு அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழு சார்பில் வரவேற்பும் விருந்தும் அளிக்கப்படும். திருமண வரம் வேண்டி மஹோத்சவத்தில் பங்கேற்க விரும்புகிறவர்கள் காலை 8.00 மணிக்கு நேரடியாக ஆலயத்திற்கு வரலாம். முன்பதிவு தேவையில்லை.
==========================================================
முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற சிறுவாபுரி வள்ளி மணாளன் திருக்கல்யாண உற்சவத்தின் காணொளியை காண…
==========================================================
Also check :
இல்லறமும் நல்லறமும் கூடவே சொந்த வீட்டையும் அருளும் சிறுவாபுரி பாலசுப்ரமணியர் !
திருவள்ளுவர் கோவிலில் நடைபெற்ற ஏகாம்பரேஸ்வரர் & காமாட்சி திருக்கல்யாணம் – நேரடி கவரேஜ்!
கந்தனின் கருணையில் திளைத்து அதில் மூழ்கி எழுந்த ஒரு ஆத்மானுபவம்!
இறையருளை பெற இதோ மலரினும் மெல்லிய ஒரு ஷார்ட் கட்!
விஸ்வரூப தரிசனம் என்றால் உண்மையில் என்ன?
==========================================================
மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க… ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க…
கந்தரந்தாதியைப் பாராதே, கழுக்குன்றத்து மலையை நினையாதே!
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு!
சித்தர்கள் இன்றும் தவம் செய்யும் ஒரு அதிசய மண்டபம் – வள்ளிமலை அற்புதங்கள் (2)
புத்தாண்டு அன்று பார்க்கவேண்டியது யாரைத் தெரியுமா? வள்ளிமலை அற்புதங்கள் (1)
நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!!
அடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் !
மணிகண்டனை தேடி வந்த முருகன்! ஒரு உண்மை சம்பவம்!!
களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!
முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!
“முதுகுல குத்திட்டாங்க சாமி…!” அழுத மெய்யன்பர். வாரியார் சொன்னது என்ன?
செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!
சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!
முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2
ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?
கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1
தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!
காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!
“நான் உன்னை மறவேன். நீ என்னை மறக்காதே!”
==========================================================
Also check Sandow Chinnappa Devar’s experiences with Lord Muruga…
மொதல்ல அவரை எழுப்பு… எழுப்புடா பழனியாண்டி!
“முருகா! முட்டாளே, மவனே, உன்னைச் சும்மா விடமாட்டேன்!!”
சின்னப்பா தேவரை முருகன் தடுத்தாட்கொண்ட முதல் சம்பவம் எது தெரியுமா?
“முருகன் அடிமையா நான் வாழ்ந்தது சத்தியம்னா இப்போ மழை பெய்யும்டா!”
மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க… ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க…
‘கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்’ என்று வாழ்ந்த ஒரு உத்தமர்!
==========================================================
[END]