Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, September 14, 2024
Please specify the group
Home > Featured > மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான் மனசை பார்த்து தான் வாழ்வை மாத்துவான்!

மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான் மனசை பார்த்து தான் வாழ்வை மாத்துவான்!

print
சிலர் எதற்க்கெடுத்தாலும் “வாழ்க்கையே போராட்டமாக இருக்கிறது” என்று அங்கலாய்த்துக் கொள்வார்கள்.

உண்மையில் ‘போராட்டம்’ என்றால் என்ன தெரியுமா? இந்தப் பதிவை படியுங்கள். போராட்டம் என்றால் என்ன என்று புரியும்.

சுமார் ஒரு வருடத்துக்கு முன்பு இதே நேரம், யஸ்ரா மர்தினி என்னும் 17 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவிலிருந்து அகதியாக வெளியேறி ஐரோப்பா செல்ல துருக்கியிலிருந்து கிளம்பினார். ஆனால் இவருடன் சேர்த்து சுமார் 20 பேருடன் வந்த படகு துருக்கிக்கும் கிரீஸுக்கும் இடையே கடலில் மூழ்கத் தொடங்கியது. Yusra 2நீச்சல் தெரிந்தவர்கள் எல்லாம் உடனே கடலில் குதிக்க, நீச்சல் தெரியாத பெண்களும் வயதானவர்களும் குழந்தைகளும் நடுக்கடலில் மாட்டிக்கொண்டனர்.

சொந்த நாட்டிலேயே ஒவ்வொரு நொடியும் மரணத்தை எதிர்பார்த்து காத்திருந்தவர் யஸ்ரா மர்தினி என்பதால் தன் முடிவைப் பற்றி கவலைப்படாமல் அவரும் அவர் தங்கையும் உடனே கடலில் குதித்து நீந்தியபடி அந்த படகை இழுத்து வந்தனர். இதன் மூலம் படகில் இருந்த அனைவரும் காப்பாற்றப்பட்டனர்.

தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் இத்தனை பேரை காப்பாற்றிய யஸ்ரா மர்தினிக்கு ஆண்டவன் அதற்குள் END CARD போட்டுவிடுவானா என்ன?

மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்
மனச பாத்துதான் வாழ்வ மாத்துவான்
ஏ மனமே கலங்காதே வீணாக வருந்தாதே
பாரங்கள் எல்லாமே
படைத்தவன் எவனோ அவனே சுமப்பான்!

ரியோவில் சமீபத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் எந்த நாடும், இந்தக் கொடியும், எந்த தேசிய கீதமும் இல்லாத ‘அகதிகள் அணி’ என்கிற அணியின் சார்பாக கலந்துகொண்டு நீச்சல் போட்டியில் காலிறுதி வரை சென்று வந்துள்ளார் மர்தினி.

சர்வதேச அளவில் பல நாடுகளில் உள்நாட்டுப் போர் ஏற்பட்டு பலர் பல நாடுகளில் தஞ்சம் அடைந்தனர். இவர்களுக்கு பல்வேறு திறமைகள் இருந்தாலும் ஒலிம்பிக்கில் இவர்கள் பங்கேற்பது கேள்விக்குறியாக இருந்தது. எனவே ஒலிம்பிக் சம்மேளனம் இந்த ஆண்டு இத்தகையவர்களில் சுமார் 10 பேரை தேர்ந்தெடுத்து ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள அனுமதித்தனர். அவர்களுக்கு தனியாக கொடி இல்லாததால் ஒலிம்பிக் கொடியை ஏந்தி வர ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் ஒருவராக கலந்துகொண்டு வெற்றிக்கொடி நாட்டிவிட்டு வந்துள்ளார் மர்தினி.

refugee athlete
ரியோ ஒலிம்பிக்கில் அகதிகள் அணியின் சார்பாக பங்கேற்றவர்கள்…!

உங்கள் வீடு, வாசல், உடமைகள், குடும்பம், நாடு என எல்லாவற்றையும் நீங்கள் இழக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்?

உங்கள் வாழ்வை முடித்துக்கொள்வீர்களா அல்லது ‘அதனால் என்ன?’ என்று எழுந்து நிற்பீர்களா?

அல்லது மர்தினியைப் போல உங்களை நிரூபிப்பீர்களா?

சிரியாவை சேர்ந்த யஸ்ரா மர்தினி ஒரு சிறந்த நீச்சல் வீரர். நீச்சல் மேல் அவருக்கு தணியாத ஆர்வம் உண்டு. சிரியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரால் இவரது வீடு முற்றிலும் சீர்குலைந்து போனது. 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற படுகொலையில் அரசின் படைகளால் சொந்த நாட்டு மக்களே ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டனர்.

அதற்கு பிறகு அடுத்த மூன்றாண்டுகளும் யஸ்ராவாலும் அவரது குடும்பத்தினராலும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியவில்லை. அடிக்கடி பள்ளிக்கூடம் ஒத்திவைக்கப்பட்டது. பாடம் நடந்துகொண்டிருக்கும்போதே துப்பாக்கி குண்டுகள் சத்தம் கேட்கும். உயிரைக் காப்பாற்றிக்கொள்ள உடனே எழுந்து ஓடவேண்டும். இப்படி தான் அவர் படித்தார். நீச்சலும் பயின்றார்.

ஒரு கட்டத்தில் இப்படி தினம் தினம் செத்து செத்து பிழைப்பதற்கு பதில் நாம் வேறு எங்காவது தப்பிச் சென்றுவிடலாம் என்று கருதிய யஸ்ரா அவரது தங்கையை அழைத்துக்கொண்டு கிரீஸ் நாட்டுக்கு தப்பிச் செல்ல தீர்மானித்தார். மொத்தம் இருநூறு அல்லது முன்னூறு பேர் இவரைப் போலவே தப்பிச் செல்ல கடற்கரையில் குழுமியிருந்தனர்.

இது பற்றி யஸ்ரா கூறுகையில் “நாங்கள் அனைவரும் (COAST GUARD) போலீஸார் ரோந்தில் இல்லாத நேரத்திற்க்காக காத்திருந்தோம். அப்போது தான் தப்பிக்க முடியும் என்பதால்!”

இவரோடு சேர்த்து சுமார் இருபதுக்கும் மேற்பட்டோர் ஒரு படகில் ஏறி தப்பிக்க, நடுக்கடலில் சென்றவுடன் அதன் எஞ்சின் பழுதடைந்து நின்றுபோனது.

அந்த படகில் இருந்தவர்களில் இவர் மற்றும் இவரது தங்கை சேர்த்து மொத்தம் நான்கு பேருக்கு மட்டுமே நீச்சல் தெரியும். இவரோடு கடலில் குதித்த மற்ற இருவரும் கடல் நீரை தாக்குப்பிடிக்க முடியாமல் மூழ்கிப் போயினர்.

=======================================================

Don’t miss these articles…

சோதனைகளை சாதனைகளாக்கி வெற்றிக்கொடி நாட்டியுள்ள அருணிமா சின்ஹா வாழ்க்கை கூறும் பாடம்!

அருணிமாவை தேடிச் சென்ற அருணாச்சலேஸ்வரர்!

=======================================================

ஆனால் யஸ்ரா மனதை திடப்படுத்திக்கொண்டார். “நமக்கு தான் நீச்சல் நன்கு தெரியுமே… நாம் ஏன் பயப்படவேண்டும். நம்மால் நிச்சயம் தாக்குப்பிடிக்க முடியும்” என்று தனக்கு தானே தைரியம் கூறிக்கொண்டார்.

அனைவரையும் காப்பாற்றவேண்டிய பொறுப்பு இந்த இரண்டு சிறு பெண்களுக்கு ஏற்பட்டது. அடுத்த மூன்றரை மணிநேரம், இவர்கள் கடலில் தத்தளித்தபடி அந்த படகை பத்திரமாக இழுத்து வந்தார்கள்.

படகின் சுமையை குறைக்க அவர்கள் கொண்டு சென்ற மிச்ச சொச்ச உடமைகளை கூட கடலில் வீச வேண்டிய நிலை ஏற்பட்டது. உடமைகளைவிட உயிர் முக்கியமல்லவா?

“படகில் சிறு குழந்தைகள் இருந்தார்கள். அவர்களுக்கு தாங்கள் மரணத்தை முத்தமிட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதை தெரியாமல் பார்த்துக்கொள்ளவேண்டியிருந்தது…. கோணங்கித்தனமான சேட்டைகளை எல்லாம் அந்த நிலையிலும் செய்து காட்டியபடி அந்த குழந்தைகளுக்கு பயம் வராமல் பார்த்துக்கொண்டேன்” என்று கூறுகிறார் யஸ்ரா.

ஒருவழியாக பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு கிரேக்கத் தீவான லெஸ்போஸ்ஸில் அனைவரும் கரையேறினார்கள். பின்னர் அங்கிருந்து செர்பியா வழியாக, ஹங்கேரி, ஆஸ்திரியா சென்று இறுதியில் ஜெர்மனியில் தஞ்சமடைந்தனர்.

போகும் வழி முழுக்க அந்தந்த நாட்டு போலீஸாரின் கண்களில் படாமல் இருக்க வயல்வெளிகளில் பதுங்கிய படி தான் இவர்களால் செல்ல முடிந்தது. ஜெர்மனியை அடைந்த பிறகும் கூட இவர்களுக்கு உடனே வழி பிறக்கவில்லை. அகதிகள் முகாமில் உரிய ஆவணங்களை காட்டி அனுமதி பெற குளிர்காலம் முழுதும் அங்கு க்யூவில் நிற்பதிலேயே இவருக்கு சென்றது.

அது சரி யஸ்ரா எப்படி ஒலிம்பிக்கில் இடம் பிடித்தார்?

“எனக்கு நான் பட்ட துன்பங்கள், காயங்கள் அனைத்தும் நன்றாக நினைவிருக்கிறது. நான் எதையும் மறக்கவில்லை. ஏனெனில் அவைதான் என்னை இயக்கிக்கொண்டிருக்கும் உந்துசக்தி. நடந்தவற்றை நினைத்து மூலையில் உட்கார்ந்து அழும் பெண் அல்ல நான்!”

“எனக்கு நான் பட்ட துன்பங்கள், காயங்கள் அனைத்தும் நன்றாக நினைவிருக்கிறது. நான் எதையும் மறக்கவில்லை. ஏனெனில் அவைதான் என்னை இயக்கிக்கொண்டிருக்கும் உந்துசக்தி. நடந்தவற்றை நினைத்து மூலையில் உட்கார்ந்து அழும் பெண் அல்ல நான்!”

தனக்கு மிகவும் பிடித்த நீச்சலில் கவனம் செலுத்த விரும்பினார் யஸ்ரா. எனவே அங்கு பெர்லினில் இருந்த உள்ளூர் நீச்சல் கிளப் ஒன்றில் சேர்ந்து பயிற்சி மேற்கொண்டார். அங்கு அவரது திறமையை பார்த்து வியந்த உள்ளூர் நிர்வாகம் & மற்றும் ஜெர்மன் நீச்சல் அணி அவரை அகதிகள் அணி சார்பாக ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அரசுக்கு பரிந்துரை செய்தது.

யஸ்ரா அந்த வாய்ப்பை நழுவவிடாமால் பயன்படுத்திக்கொண்டார்.  ரியோவில் நடைபெற்ற 100m Freestyle, 100m Butterfly நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்றார்.

புயலுக்கு பிறகு, நிச்சயம் அமைதி உண்டு!

இதோ சரியாக ஒரு ஆண்டுக்கு பின்னர் ஏஜியன் கடலில் நிராயுதபாணியாக நீந்தி வந்த யஸ்ரா ரியோ ஒலிம்பிக்கில் அகதிகள் அணியில் அவரோடு சேர்ந்து மேலும் பல நாடுகளில் இருந்து அகதிகளாக வந்த பத்து வீரர்களுடன் பங்கேற்றார்.

Yusra 3

துவக்க விழாவில் சக வீரர்களோடு சிங்கமென நடந்து வந்தார் யஸ்ரா. “எல்லாருக்கும் நான் சொல்ல விரும்பியது என்னவென்றால் புயலுக்கு பிறகு, நிச்சயம் அமைதி உண்டு. வலிக்கு பிறகு வாழ்க்கை உண்டு. நம்பிக்கையிருந்தால். எல்லாரும் அவர்களால் முடிந்த நன்மையை இந்த உலகிற்கு செய்யவேண்டும். அதற்கு நான் இன்ஸ்ப்ரேஷனாக இருந்தால் அதைவிட எனக்கு மகிழ்ச்சி வேறு இல்லை!”

உங்கள் சூழ்நிலை எவ்வளவு கடினமாக இருந்தாலும் சரி கவலைவேண்டாம். ஏனெனில் அது தான் உங்களை உருவாக்கும்.

எனவே மூழ்குவதா அல்லது தொடர்ந்து நீச்சலடிப்பதா என்கிற சூழ்நிலை உங்களுக்கு வந்தால், தொடர்ந்து நீச்சலடியுங்கள். நிறுத்தவேண்டாம். ஒரு நாள் உங்கள் கனவுலகில் கரையேறுவீர்கள்.

நவீன ஒலிம்பிக்கில் தந்தை என்று கூறப்படும் பியரி கூபர்ட்டின் ஒலிம்பிக் போட்டிகள் பற்றி கூறும்போது இவ்வாறு சொன்னார் : “வாழ்க்கையில் முக்கியமான விஷயம் வெற்றி அல்ல. அதை அடைய நீங்கள் மேற்கொள்ளும் போராட்டம் தான்!”

யஸ்ரா அதை செய்து காட்டினார்.

Yusra 5

யஸ்ரா உலகிற்கு விடுக்கும் செய்தி என்ன?

“ஒவ்வொருவரும் அவர்கள் லட்சியத்தில் இருந்து விலகாது உறுதியோடு நிற்கவேண்டும். உங்கள் கண்கள் முன் உங்கள் லட்சியம் தெரிந்தால் உங்களால் எதையும் செய்யமுடியும். கனவுகளை நனவாக்குவது கஷ்டம் தானே தவிர அது ஒரு போதும் முடியாத விஷயம் அல்ல. என்னால் முடியும். உங்களால் முடியும். ஒவ்வொருவராலும் முடியும்!”

Even you can learn a lesson

நடந்து முடிந்த ஒலிம்பிக்கில் யஸ்ரா பதக்கம் பெறாமல் போயிருக்கலாம். ஆனால், அவருடைய சிரியா – நடுக்கடல் – ஜெர்மனி – ரியோ ஒலிம்பிக் பயணமே ஒரு தங்கப் பதக்கத்திற்கு தகுதியான பயணம் தான்.

உலகின் எங்கோ ஒரு மூலையில், ஏதோ ஒரு நாட்டில், முற்றிலும் வேறுபட்ட ஒரு மொழியில் அவரைப் பற்றி முன்பின் தெரியாத நாம் இப்படி ஒரு பதிவை அளிக்கிறோமே அது தான் உண்மையான பதக்கம். நமது நாட்டுக்கு பதக்கம் தேடித் தந்த பி.வி.சிந்துவைப் பற்றி கூட நாம் பதிவளிக்கவில்லை.

குறித்து வைத்துக்கொள்ளுங்கள். 2020 ஆம் ஆண்டில் ஜப்பானில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் யஸ்ரா மர்தினி பதக்கங்களை அள்ளுவார். அட்வான்ஸ் வாழ்த்துக்கள் யஸ்ரா!

We love you!! Your life and journey is a true inspiration for us!!!

Refugee swimmer Yusra Mardini wins her heat becoming supporters favourite – Youtube video

=======================================================

We need your help…

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்! For more information click here!

Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215  |  E-mail : editor@rightmantra.com

=======================================================

Also check :

கீழே விழும்போதெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டிய ஒரு வீரனின் கதை!

வாழ்க்கையில் வெற்றி என்பது உண்மையில் என்ன?

உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான, அவசரமான கேள்வி!

தோல்வியிலும் வென்ற ஒரு உண்மை வீரன் நமக்கு போதிக்கும் பாடம்!

எது உண்மையான வெற்றி? எது உண்மையான தோல்வி?

எல்லோருக்கும் பொதுவான ஒரு மிகப் பெரிய சொத்து!

‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது?’

==========================================================

[END]

3 thoughts on “மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான் மனசை பார்த்து தான் வாழ்வை மாத்துவான்!

  1. Most apt article in RM. Lots to learn from Yusra Mardini. Unbelievable courage and will power. Kudos to Sundar for bringing this extraordinary real life champion to us. Highly inspirational real life story.

  2. டியர் சுந்தர்,

    பெயரோ எஸ்ரா மர்தினி – தெலுகுவில் எஸ்ரா என்றால் ஆமாம்டா. உடன் மகிஷாசுர மர்தினி பெயரின் இரண்டாவது புகுதியை சேர்த்து இனைத்து பாருங்கள் !!

    திக்கறவர்க்கு தெய்வமே துணை !!

    அன்புடன்
    நெ வீ வாசுதேவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *