சிறுவாபுரிக்கு உள்ள மிகப் பெரியதொரு சிறப்பு என்னவென்றால், இங்குள்ள முருகன் பேரழகன். பார்வையினாலேயே தோஷங்களை மாய்ப்பவன். பாலசுப்பிரமணியப் பெருமானின் அருட்பார்வை நம்மை நோக்கிப் பாய்ந்துவர, சிறுவை மேவி வரம் மிகுந்த பெருமாள் நாம் வேண்டும் வரங்களை அள்ளி அளித்தர, முருகனை தரிசிக்கும்போதே உடலும் உள்ளமும் லேசாகிவிடும்.
===============================================================
Also check : இல்லறமும் நல்லறமும் கூடவே சொந்த வீட்டையும் அருளும் சிறுவாபுரி பாலசுப்ரமணியர் !
===============================================================
முருகனுக்கு பல பெயர்கள் உண்டு…. ஆகம சார சொரூபன், சேவல மாமயில் பிரீதன், தேவசேனாதிபதி, தன்தரள மணிமார்பன், தண்தமிழ்மிகு நேயன், சந்தமும் அடியார் சிந்தையில் குடிகொண்டவன், செம்பொன் எழில் சொரூபன், புண்டரிக விழியாளன் என்று பல பெயர்கள் உண்டு.
பிரம்மனைத் தண்டித்து பிரம்மனின் படைத்தல் தொழிலை ஏற்றுக்கொண்ட கோலம் கொண்ட முருகப்பெருமானை வணங்கினால் வித்தைகள் பல கற்ற பேரறிஞர் ஆகலாம் என “பந்திநிறை அறிவாள்” எனும் திருப்புகழில் அருணகிரிநாதர் பாடியுள்ளார். முக மண்டபத்தில் அருணகிரிநாதர் சிறுவை பாலசுப்பிரமணிய பெருமானை கண்ட பெருமிதத்துடன் திருப்புகழ் பாடி நிற்கும் கோல வடிவைக் காணலாம்.
அருணாசலேசுவரர், அபீதகுஜாம்பிகை (உண்ணாமுலை) இருவருக்கும் நடுவே அற்புதத் தோற்றமாய், அச்சம், மடம், நாணம், பயிர்ப்புடன் கூடிய வள்ளிநங்கை தம் மணவாளப் பெருமான் முருகனை தைத்தலம் பற்றும் திருமண காட்சியாய் எழுந்தருளி இருக்கிறார். கைத்தலம் பற்றுகின்ற பொழுது இயற்கையாய் பெண்ணுக்கு ஏற்படும் கூச்சம், நாணம், பயிர்ப்பு காரணமாக வள்ளி ஒய்யாரமாக லேசாக முன் சாய்ந்து, ஒரு கண்மூடிய நிலையில் நிற்கின்ற கோலத்தைக் காணக்கண் கோடி வேண்டும்.
பின்புறத்திலிருந்து நோக்கும் பொழுது வள்ளி கள்ளத்தனமாக அரைக்கண் பார்வையாக முருகனை நோக்குவது போல் சிற்பி சிலையை வடித்திருக்கிறார். மிக நேர்த்தியான வேலைப்பாடு. இதுபோன்ற சிலை வடிவம் வேறு எங்கும் இல்லை. ஓவியமாக வள்ளி மலையில் இருக்கும் கோலத்தை, சிலை வடிவமாக இங்கு அமைத்து இருப்பது மிகச்சிறப்பாக வள்ளி மணவாளப்பெருமானின் அழகைக்காண கண்கோடி வேண்டும்.
சிறுவாபுரிக்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு?
அருணகிரிநாதர் நான்கு திருப்புகழ்களினால் இந்த ஸ்தலத்தைப் பாடியுள்ளார். அருணகிரிநாதர் பாடிய 10000 திருப்புகழ்களில் நம் கைக்கு கிடைத்து இருப்பவை 1330 திருப்புகழ்தாம். அவற்றுள் 224 ஸ்தலங்களை பாடியுள்ளார். திருப்புகழ் பாடல் பெற்ற ஸ்தலங்களில் 9 இடங்கள் இதுவரை கண்டறியப்படாமல் இருக்கின்றன. கண்டறியப்பட்ட 215 ஸ்தலங்களில் 35 ஸ்தலங்களில்ச் சிறப்பாக பாடியுள்ளார்.
8 ஸ்தலங்களில் 4 திருப்புகழ் பாடி இருக்கிறார். 6 ஸ்தலங்களுக்கு அர்ச்சனை திருப்புகழ் பாடியுள்ளார். திருப்புகழில் பாடப்படும் நாயகனாக முருகன் இல்லாமல் 6 பாடல்களில் பாடும் நாயகனாக விநாயகப் பெருமானை பாடியுள்ளார். மேற்கண்ட திருப்புகழ் ஆய்வின்படி 6 அர்ச்சனைத் திருப்புகழில் ஒன்றாக சிறுவைக்கு “சீதளவாரிஜ பாதா நமோ நம:” என ஒரு பாடலுடன் நான்கு திருப்புகழ் பாடிய 8 ஸ்தலங்களில் ஒன்றாக சிறுவாபுரியும், அமைந்து இருப்பது சிறப்பு.
`அண்டர்பதி குடியேற’ என்ற முதல் திருப்புகழில் “மகிமீற, மகிழ்கூர, மகிழ்வாக, மகிகூற, இன்பமுற’ என ஐந்து இடங்களில் மகிழ்ச்சிப் பெருக்கு கூறப்பட்டது போல் வேறு எந்த திருப்புகழிலும் சிறப்பாக ஐந்து முறை சொல்லப்படவில்லை என்பது இன்னும் ஒரு சிறப்பு. இந்த திருப்புகழின் ஈற்றடியில் கடைசியில் சொற்கள் ஒரு வாக்கியமாக பொருள்பட அமைந்து இருப்பதும் ஓர் அரிய சிறப்பாகும்.
“அருளாலே, மகிழ்வாக, எதிர்காண, வரவேணும், உயர்தோளா, வடிவேலா, முருகேசா, பெருமாளே!” என ஒரு வாக்கியமாக அமைவதுபோல் வேறு எந்த ஒரு திருப்புகழிலும் அமையவில்லை. இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்த ஸ்தலத்துக்கு வருபவர் கடுமையான விரதமாக பசி பட்டினி இருந்து நோன்பு நோற்று இறைவனை அடைய வேண்டியதில்லை.
“சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான தண் சிறுவைதனில் மேவு பெருமாளே!” என்று இவரை “எப்போதும் நினைத்தாலே போதும் அடியவர்க்கு எளிமையாக முருகன் எழுந்தருளி வருவார்” எனக்கூறுகிறார் அருணகிரிநாதர். இரண்டாவது திருப்புகழ் அர்ச்சனை திருப்புகழாக இருப்பது சிறப்பு. பழனிக்கு “நாதவிந்து கலாதி நமோ நம” என்றும் திருப்புகழைப்போல் சிறுவைக்கு “சீ தள வாரிஜ பாதா! நமோ நம” எனும் திருப்புகழை அருணகிரிநாதர் பாடியுள்ளார்.
அர்ச்சனை திருப்புகழ் 6-ல் சரணாகதியின் மேன்மையான முருகனின் பாத சரணத்தைக் குறித்து சிறுவைக்கு எழுதி இருப்பது சிறப்பு. “வானவர் ஊரினும் வீறாகிலீறளகாபுரி வாழ்வினும் மேலாக திருவாழ் சிறுவாபுரி வாழ்வே சுதாரிபர் பெருமாளே எனப்பாடி இங்கு வருபவர்கள் தேவேந்திர பட்டணத்தை காட்டிலும் வளமாக வாழ்வர் என அழுத்தம் திருத்தமாக எடுத்துச்சொல்கிறார். மூன்றாவது திருப்புகழில் மானிடப்பிறப்பின் துன்பம் எல்லாம் நீங்குவதற்கு வழிகூறுகிறார் அருணகிரி நாதர்.
நான்காவது திருப்புகழில் “ஜெயமதான நகர்” என்று சிறுவையே வெற்றி கொண்டநரம் என்கிறார். ஜெயமதான நகர் அளகை போல வளமிகுந்த சிறுவைமேலி வரமிருந்த பெருமாளே என வெற்றியை தன்னிடம் அமைத்துக் கொண்ட சிறுவை நகரம்.
குபேரப்பட்டணம் என அழைக்கப்பட்ட அளகாபுரி போல் எல்லா வளங்களும் அதிகமாகக் குடிகொண்டுள்ள சிறுவாபுரியில் குடிகொண்டு உள்ள சிறுவை முருகன் வரம் அதிகம் தன்னிடம் இருப்பு உள்ளவன் என அருணகிரிநாதர் சொல்வது. வரமிகுந்தவனை அடிக்கடி நாடி வந்து அவனிடம் இருப்புள்ள வரங்களைப் பெற்று செல்ல வாருங்கள், வாருங்கள்! என அழைப்பதுபோல உள்ளது.
தரிசனப் பலன்
தொடர்ந்து ஆறு வாரங்கள் சென்றால் திருமணம் விரைவில் நிறைவேறும். திருமணத் தடை ஏற்பட்டாலோ பல ஆண்டுகள் திருமணம் நடைபெறாமல் இருந்தாலோ மற்றும் ஜாதகத்தில் இராகு தோஷம், களத்திர தோஷம், காலசர்ப்ப தோஷம் ஆகிய தோஷங்கள் இருந்தாலும் இந்த சிறுவாபுரி முருகனை மனம் உருகி நாடி வந்தால் கைமேல் நல்ல பலன் கிடைக்கும்
திருமணம் நடக்க வேண்டிய பெண்கள் ஆறுவாரமும் ஒரு நாள் தவறாமல் வந்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும். பிரார்த்தனை செய்பவர்கள் வள்ளி நாயகனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். ஆறாவது வாரம் ஆறு அர்ச்சனைப் பொருள்களுடன் மரகத விநாயகர் வள்ளி மணவாளப் பெருமான் அண்ணைமலையார், உண்ணாமுலையார், ஆதிமூலவர் ஆகிய தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.
மேலும் முருகன் சந்நிதியில் தரும் மாலையை திருமணமாலையாக எண்ணி அணிந்து ஆறுமுறை ஆலயத்தைச் சுற்றி வந்த பிறகு அந்த மாலையை வீட்டிற்கு எடுத்துச் சென்று திருமணம் நடக்கும் வரையில் பாதுகாக்க வேண்டும்.
இதனைத் தவிர வீடு, பிள்ளைப்பேறு உடலில் உள்ள நோய், வாழ்வில் ஏற்படும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் இந்த முருகனை ஆறுவாரம் தொடர்ந்து வழிபட்டால் நாம் நினைத்த எண்ணங்கள் நிறைவேறும். மற்ற அனைத்துப் பிரச்னைகளும் விலகும்.
ஒவ்வொரு வாரமும் நம்மிடம் அர்ச்சகர் கொடுக்கும் எலுமிச்சம் பழத்தை வீட்டில் வைத்து பூவைத்து பூஜை செய்ய வேண்டும். அடுத்த வாரம் வரும்போது எலுமிச்சம் பழத்தை கடல் அல்லது கிணற்றில் போட வேண்டும். ஆறாவது வாரம் நாம் ஆலயத்திலிருந்து பெற்று வந்த பழத்தை பிரார்த்தனை நிறைவேறும் வரை பூஜிக்க வேண்டும்.
இந்தப் பிரார்த்தனை காலங்களில் திருப்புகழ் படிக்க வேண்டும். பிரார்த்தனை நிறைவேறியதும் சிறுவாபுரிக்கு வந்து அர்ச்சனை செய்து வணங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் விசாகம், பௌர்ணமி, ஷஷ்டி, வாராவாரம் செவ்வாய், வெள்ளி, வியாழன் ஆகிய நாள்களில் சிறப்பான வழிபாடுகளும் நடக்கும். செவ்வாய்க் கிழமைகளில் காலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையில் ஆலயம் திறந்திருக்கும். சிறுவாபுரி முருகனைத் தரிசனம் செய்தால் வாழ்வில் தொடங்கும் செயல்களில் வெற்றி கிடைக்கும். பகை விலகி மன நிம்மதியும் அனைத்துச் செல்வங்களும் கிடைக்கும்.
முருகன் திருக்கல்யாண மஹோத்சவம் – ஏன், எப்படி, என்ன செய்யவேண்டும்?
6 வாரம் தொடர்ந்து வர முடியாமல் சிரமப்படுபவர்களுக்காக அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழுவினர் ஆண்டுதோறும் சிறுவாபுரியில் வள்ளி. முருகனுக்கு கல்யாண மகோற்சவத்தை நடத்துகிறார்கள்.
இதில் பங்கேற்பவர்கள் அபிஷேகத்தையும், கல்யாணத்தையும் கண்டுகளித்து பிரார்த்தனை செய்யும் பக்தர்களில் ஆண்களுக்கு வள்ளி மாலையும், பெண்களுக்கு முருகன் மாலையும் வழங்கப்படும்.
கல்யாண மகோற்சவம் முடிந்ததும் வள்ளியும், முருகபெருமானும் கோவில் பிரகாரத்தை சுற்றி 6 முறை வலம் வருவார்கள். அப்போது திருமண பிரார்த்தனையாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு ’வள்ளி மணவாளா போற்றி’ என்ற மந்திரத்தை உச்சரித்தபடி வரவேண்டும்.
இந்த பிரார்த்தனையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு கட்டணம் கிடையாது. இதை அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழுவினர் இலவசமாக நடத்துகிறார்கள்.
இந்த ஆண்டு செப்டம்பர் 6–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கல்யாண மகோற்சவ விழா நடக்கிறது. கடந்த முறை கல்யாண மகோற்சவத்தில் பங்கேற்று திருமணம் கைகூடியவர்கள் தம்பதியராக செப்டம்பர் 5–ந்தேதி மாலை 6 மணிக்கு கோவிலுக்கு வரவேண்டும்.
வள்ளி முருகனுக்கு வைக்கப்படும் சீர்வரிசையை கோவிலை சுற்றி தம்பதிகள் எடுத்து வந்து நன்றி செலுத்த வேண்டும். மகோற்சவத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் செப்டம்பர் 6–ந் தேதி காலையில் சிறுவாபுரிக்கு வரவேண்டும். இதற்கு முன்பதிவு ஏதும் தேவையில்லை.
6–ந்தேதி காலை 6 மணிக்கு விநாயகர், ஆதிமூலவர், அண்ணாமலையார், அம்மன் அபிஷேகம் நடக்கிறது. காலை 6.30 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம் நடக்கிறது. 9 மணிக்கு வள்ளி மணவாள பெருமானுக்கு அபிஷேகம் நடக்கிறது. 10 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. 11 மணிக்கு சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 12 மணிக்கு கல்யாண விருந்து நடக்கிறது.
மேலும் விபரங்களுக்கு 99443 09719 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது www.annamalaiyar.net என்கிற தளத்தை பார்க்கவும்.
கோயம்பேட்டிலிருந்து பெரியபாளையம் செல்லும் நேரடி பேருந்து உள்ளது. அந்த பேருந்தில் வரலாம். அல்லது செங்குன்றதிலிருந்து பெரியபாளையம் செல்லும் பேருந்திலும் வரலாம். ரூ.50/- பாஸ் எடுத்துவிட்டீர்கள் என்றால் இரவு வரை செல்லுபடியாகும்.
=============================================================
உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
=============================================================
To download the above invitation please click the following link:
http://rightmantra.com/wp-content/uploads/2015/08/Siruvapuri-Murugan-thirukalyanam-invitation-11.jpg
திருக்கல்யாண மஹோத்சவத்தில் கலந்துகொள்பவர்கள் மனதில் கொள்ளவேண்டிய குறிப்புக்கள்
1) இது முற்றிலும் இலவச சேவை. மாலை உட்பட அனைத்தும் இலவசம்.
2) திருமண வரம் வேண்டி திருக்கல்யாண உற்சவத்திற்கு வருபவர்கள் காலை 8.00 மணிக்கு ஆலயத்தில் இருக்கவேண்டும். முன்னதாக கோவிலின் எதிரே ‘அண்ணாமலையார் அறப்பணி குழு’வினர் அமைத்துள்ள ஸ்டாலில் தங்கள் பெயர், ராசி, கோத்திர விபரங்களை பதிவு செய்துகொள்ளவேண்டும்.
3) ஆலயத்தின் உள்ளே சங்கல்பம் செய்யுமிடத்தில் தங்கள் பெயர் ராசி நட்சத்திரம் மறக்காமல் சங்கல்பம் செய்துகொள்ளவேண்டும். சங்கல்பம் என்பது இறைவனிடம் உள்ள ATTENDANCE REGISTER இல் கையெழுத்து போடுவது போன்றது.
4) திருமணத்திற்காக காத்திருக்கும் ஆண்கள், பெண்கள் அவசியம் இந்த பிரார்த்தனையில் கலந்துகொள்ளவேண்டும். அப்படி வரவியலாத பட்சத்தில் அவர்களின் சார்பாக அவர்களின் பெற்றோர் வந்தால், கோவில் மிக சிறிய கோவில் பிராகாரம் மிகச் சிறிய பிரகாரம் என்பதால் அவர்கள் சங்கல்பம் செய்துவிட்டு ஒதுங்கி பிரார்த்தனையாளர்களுக்கு வழிவிடவேண்டும். அவர்கள் சுவாமியுடன் சுற்று வரத் தேவையில்லை. முடிந்தால் அவர்கள் சேவைகளில் உதவுவது வரவேற்கத்தக்கது.
5) பிரார்த்தனை ஆண்கள் தனியாக வருவது நலம். பெண்கள் துணைக்கு பெற்றோரை அழைத்து வரலாம். துணைக்கு பெற்றோரை அழைத்து வந்தால் சங்கல்பம் செய்வதோடு அவர்களை விலகியிருக்கச் செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே வைபவத்தை காண அமரவேண்டும். சுவாமியுடன் சுற்று வரவேண்டும். (கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு).
6) மறுமணம் வரம் வேண்டி கலந்துகொள்ளும் பிரார்த்தனையாளர்களும் சங்கல்பம் செய்துவிட்டு ஒதுங்கி மற்றவர்களுக்கு வழிவிடுதல் நலம்.
7) திருமண பிரார்த்தனையாளர்கள் திருக்கல்யாணம் முடிந்து சுவாமியுடன் ஆறு சுற்று வந்த பிறகே கல்யாண போஜனம் சாப்பிட செல்லவேண்டும். மற்றவர்கள் விருந்து துவங்கியதும் சாப்பிட செல்லலாம்.
8) திருக்கல்யாணம் முடிந்தவுடன் சுவாமியுடன் ஆறு சுற்று வருதலே மிகவும் முக்கியம். “என் திருமண ஊரவலத்தில் என்னுடன் வா. அடுத்த முறை உன் துணையுடன் வா” என்பதே இதன் தாத்பரியம்.
9) இது திருமண வரம் வேண்டி தவிப்பவர்களுக்கு உதவும் பொருட்டு சேவை நோக்கோடு நடத்தப்படும் ஒரு மஹோத்சவம். எனவே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு உங்கள் முழு ஒத்துழைப்பை நல்கிடவேண்டும். அரிபரி, அவசரப்படுதல், குற்றம் குறை கூறுதல், கூச்சலிடுதல், பந்திக்கு முந்துதல் போன்றவற்றை தவிர்த்து, திருமண வைபவம் சிறப்பாக நடந்தேற மனப்பூர்வ ஒத்துழைப்பு நல்கினாலே முருகன் மனம் குளிர்ந்துவிடும். உங்கள் எண்ணங்கள் ஈடேறும் என்பது உறுதி.
10) கடந்த முறை திருக்கல்யாண மஹோத்சவத்தில் பங்கேற்று திருமணம் கைகூடியவர்கள், செப்டம்பர் 5 ஆம் தேதி – முந்தைய நாள் – மாலை 6.00 மணியளவில் வரவேண்டும். இவர்கள் வள்ளி மணவாளப் பெருமானுக்கு வைக்கப்படும் சீர்வரிசையை சுமந்தபடி கோவிலை சுற்றி வரவேண்டும். இது இறைவனுக்கு திருமணம் கைக்கூடியமைக்கு நாம் செலுத்தக்கூடிய நன்றி அறிவிப்பு ஆகும். இவர்களுக்கு அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழு சார்பில் வரவேற்பும் விருந்தும் அளிக்கப்படும். திருமண வரம் வேண்டி மஹோத்சவத்தில் பங்கேற்க விரும்புகிறவர்கள் காலை 8.00 மணிக்கு நேரடியாக ஆலயத்திற்கு வரலாம். முன்பதிவு தேவையில்லை.
To download the above invitation please click the following link:
http://rightmantra.com/wp-content/uploads/2015/08/A4Leaflet1.jpg
=============================================================
சென்ற ஆண்டு நடைபெற்ற சிறுவாபுரி வள்ளி மணாளன் திருக்கல்யாண உற்சவத்தின் காணொளியை காண…
=============================================================
Also check :
திருவள்ளுவர் கோவிலில் நடைபெற்ற ஏகாம்பரேஸ்வரர் & காமாட்சி திருக்கல்யாணம் – நேரடி கவரேஜ்!
கந்தனின் கருணையில் திளைத்து அதில் மூழ்கி எழுந்த ஒரு ஆத்மானுபவம்!
இறையருளை பெற இதோ மலரினும் மெல்லிய ஒரு ஷார்ட் கட்!
விஸ்வரூப தரிசனம் என்றால் உண்மையில் என்ன?
=============================================================
Also check :
இல்லறமும் நல்லறமும் கூடவே சொந்த வீட்டையும் அருளும் சிறுவாபுரி பாலசுப்ரமணியர் !
மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க… ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க…
கந்தரந்தாதியைப் பாராதே, கழுக்குன்றத்து மலையை நினையாதே!
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு!
சித்தர்கள் இன்றும் தவம் செய்யும் ஒரு அதிசய மண்டபம் – வள்ளிமலை அற்புதங்கள் (2)
புத்தாண்டு அன்று பார்க்கவேண்டியது யாரைத் தெரியுமா? வள்ளிமலை அற்புதங்கள் (1)
நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!!
அடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் !
மணிகண்டனை தேடி வந்த முருகன்! ஒரு உண்மை சம்பவம்!!
களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!
முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!
“முதுகுல குத்திட்டாங்க சாமி…!” அழுத மெய்யன்பர். வாரியார் சொன்னது என்ன?
செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!
சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!
முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2
ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?
கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1
தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!
காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!
“நான் உன்னை மறவேன். நீ என்னை மறக்காதே!”
=============================================================
Also check Sandow Chinnappa Devar’s encounter with Lord Muruga…
மொதல்ல அவரை எழுப்பு… எழுப்புடா பழனியாண்டி!
“முருகா! முட்டாளே, மவனே, உன்னைச் சும்மா விடமாட்டேன்!!”
சின்னப்பா தேவரை முருகன் தடுத்தாட்கொண்ட முதல் சம்பவம் எது தெரியுமா?
“முருகன் அடிமையா நான் வாழ்ந்தது சத்தியம்னா இப்போ மழை பெய்யும்டா!”
மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க… ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க…
‘கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்’ என்று வாழ்ந்த ஒரு உத்தமர்!
=============================================================
[END]
உயிரோட்டமுள்ள, தத்ரூபமான மனதை மயக்கும் அறுபுதமான பதிவு. படங்கள் ஒவ்வொன்றும் மிகவும் நேர்த்தியாகவும் , அழகாகவும் உள்ளது. முருகன் கல்யாண கோலத்தில் ஜொலிக்கிறார். முருகனின் சிலை வர்ணனை ……….. கவிதை.
“அண்டர்பதி குடியேற” திருப்புகழ் பாடலைப் பற்றிய விளக்கம் படித்ததில் மிக்க மகிழ்ச்சி. முதல் பதிவில் அந்த பாடலை நான் பின்னூட்டத்தில் இட்டிருந்தேன் தினமும் மறக்காமல் நான் சொல்லும் பாடல் அது.
திருமணம் கைகூடதவர்களுக்கும், வீடு மனை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கும் இந்த பதிவு ஒரு வரப் பிரசாதம்.
வாழ்க … வளமுடன்
நன்றி
உமா வெங்கட்
சுந்தர் சார்
நன்றிகள் பல. சிறுவாபுரி வள்ளி மணாளனை
நேரில் பார்த்ததுபோல் உள்ளது. Photos எல்லாம் மிக அருமை. வாழ்த்துக்கள்
உடனே சிறுவாபுரிக்கு செல்லவேண்டும் என்கிற ஆவலை இந்த பதிவு ஏற்படுத்துகிறது. நானும் என் கணவரும் ஒன்றாக அமர்ந்து இந்த பதவி பார்த்து ரசித்து படித்தோம். படித்தோம் என்பதைவிட முருகனின் திருக்கல்யாணத்தை நேரடியாக பார்த்தோம்.
எனக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் இந்த பதிவு குறித்த தகவலை அனுப்பியிருக்கிறேன். அவர்கள் மகன் மற்றும் மகனை கலந்துகொள்ள சொல்லியிருக்கிறேன்.
அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டுக் குழுவினரின் இந்த சேவை பாராட்டுக்குரியது.
இது ஆறாவது வருடம் என்பதை அறியும்போது வியப்பாக இருக்கிறது. அதுவும் எந்த வித கட்டணமும் வசூலிக்காமல் முழுக்க முழுக்க இலவசமாக நடத்துகிறார்கள் எனும்போது இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது.
என்னக்கு தெரிந்து இலவசமாக நடத்தப்படும் ஒரே திருக்கல்யாண உற்சவம் இதுவாகத் தான் இருக்கும். அதுவும் இத்துணை சிறப்பாக.
புகைப்படங்கள் அனைத்திலும் ஒரு ரிச்னெஸ் தெரிகிறது. ஒரு ஒழுங்கு காணப்படுகிறது. முருகனே இதில் கலந்துகொண்டு வள்ளியின் கரம் பற்றுகிறான் என்பதே உண்மை. இல்லையெனில் இத்தனை விஷயங்களும் சாத்தியமேயில்லை.
ஏனெனில் நான் பல திருக்கல்யாண உற்சவங்களில் கலந்துகொண்டிருக்கிறேன். பத்திரிக்கைகளிலும் பார்த்திருக்கிறேன். இது எல்லாவற்றில்லும் சிறந்த ஒன்று.
இந்த கல்யாண உற்சவத்தில் பங்கேற்று திருமணம் கைகூடியவர்களை பேட்டி எடுத்து அதை தனிப் பதிவாக போடவும். அதும் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். மேலும் பலருக்கு நம்பிக்கை அளிக்கும்.
இந்த அற்புதமான திருக்கல்யாண கைங்கரியத்தை நடத்திவரும் அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டுக் குழுவினருக்கும், இதை இப்படி ஒரு அற்புத பதிவாக வடித்த சுந்தர்ஜிக்கும் எனது பாராட்டுக்கள்.
தொடரட்டும் உங்கள் தொண்டு…!
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்
வணக்கம்
சிறுவாபுரி முருகன் பதிவு உங்கள் கை வண்ணத்தில் ஜொலிக்கிறது.
நம் தளத்தில் முருகன் பதிவு பல வந்தாலும் சிறுவாபுரி முருகன் பதிவு தனி மெருகுடன் மின்னுகிறது.
கோவில் சிறியதாக இருந்தாலும் அதன் கீர்த்தி பெரிது என்பது அங்கு வரும் கூட்டத்தை பார்த்தாலே தெரிகிறது.
உங்கள் எழுத்தில் படிக்கும் போது எப்போதும் போல உடனே அந்த திருதலதிற்க்கு செல்லவேண்டும் போல உள்ளது.
இந்த உற்சவத்தை நடத்தி வரும் அண்ணாமலையார் வழிபாட்டு குழுவினருக்கு எங்கள் வணக்கத்தை செலுத்துகிறோம்.
தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் அவர்கள் நடத்துவது அவர்களின் ஆர்வத்தையும் முருகன் மேல் உள்ள பக்தியையும் எடுத்து காட்டுகிறது.
ஊர் கூடி தேர் இழுப்பது போல எல்லோரும் சேர்ந்து இந்த பணியை செய்தாலும் இலவசமாக ஒரு பெரிய கல்யாண உற்சவத்தை நடத்துவது என்பது அழகன் அருள்.
அவர்கள் மேலும் பல வருடங்கள் இது பல நிகழ்சிகள் கண்டு நாங்கள் மனம் மகிழ வேண்டும்.
போட்டோக்கள் அனைத்தும் அருமையாக உள்ளது.
திருமணதிற்கு காத்து இருக்கும் பல யுவன்களுக்கும், யுவதிகளுக்கும் இந்த உற்சவம் ஒரு வரபிரசாதம். இதில் எல்லோரும் கலந்து கொண்டு அழகன் அருள் பெற வேண்டுகிறோம்.
நினைத்ததை நிறைவேற்ற அவன் இருக்கும் போது நமக்கு என்ன கவலை. சிறுவாபுரி முருகன் நம் சிந்தை மகிழ அருள் செய்வார்.
நன்றி
என்றும் அன்புடன்.
தாங்கள் தளத்தில் பதிவு செய்த அண்ணாமலையார் அறப் பணி மன்ற குழுவின் தளத்தை பார்த்தேன். அதிலிருந்து 3ம் ஆண்டு , நான்காம் ஆண்டு , ஐந்தாம் ஆண்டு ”ஆண்டு மலரை” பதிவிறக்கம் செய்து படித்துப் பார்த்தேன். ஐந்தாம் ஆண்டு மலர் மிகவும் அருமையாக ரிச் லுக் ஆக உள்ளது.
அண்ணாமலையார் ஆன்மிக குழு உறுப்பினர்களுக்கு எனது வாழ்த்துக்களும் …. வணக்கங்களும்.
வாழ்க … வளமுடன்
நன்றி
உமா வெங்கட்
வணக்கம் சுந்தர்.அருமையான நேர்த்தியான ,அழகான படங்களுடன் கூடிய பதிவு .மற்ற பதிவுகள்கு எல்லாம் மணிமகுடம் வைத்ததுபோல் உள்ளது. அதிலும் முருகன்-வள்ளியின் சிலை தத்ருபமாக உள்ளது.சிலை வடித்தவர் முருகன் அன்பு .அருளில் திளைத்து இதை வடித்து இருக்கவேண்டும் .அதனால்தான் இவளவு அழகு .கலந்துகொளும் எல்லோருக்கும் இனிய இல்லறம் அமைய பிராத்திக்கிறேன்.நன்றி.
6ஆம் தேதி நடந்த ஸ்ரீ வள்ளி மணவாள பெருமான் திருகல்யானத்தில் அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு மூலம் கலந்து கொண்டேன்.
திருகல்யாண காட்சிகள் எல்லாம் கண்ணுக்குள்ளேயே நிற்கின்றன. முருகப்பெருமானை துதித்து பாடிய பாடல்கள் அனைத்தும் அற்புதம்.
எல்லாவற்றுக்கும் மேல் அண்ணாமலையார் குழுவினரின் சேவையை பாராட்டியே ஆக வேண்டும். அவர்கள் உதவி இல்லாமல் இத்தனை அற்புதமாக திருகல்யானத்தை கண்டு களித்திருக்க முடியாது.
இத்தகைய வாய்ப்பை எனக்கு அளித்ததற்கு முருகனுக்கும் அண்ணாமலையார் குழுவினருக்கும் நன்றிகள் பல தெரிவித்து கொள்கிறேன்.
அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் திருகல்யானத்தின் பொது இக்குழுவினருடன் சேர்ந்து நானும் என்னால் ஆனா உதவியை ஆற்ற ஆவலாக உள்ளேன்.
ஸ்ரீ வள்ளி மணவாள பெருமானே போற்றி!
அண்ணாமலையார் ஆன்மீக மன்றத்தின் ஆறாம் ஆண்டு புத்தக மலரை பதிவிறக்கம் செய்து பார்த்தேன். மிகவும் அருமையாகவும், நேர்த்தியாகவும், கண்ணைகவரும் பல வண்ணப் படங்களுடன் பலவித போற்றிப் பாதுகாக்கப் பட வேண்டிய மலராக வெளி வந்துள்ளது . இந்த விழாவை மிகவும் மறக்க முடியாத விழாவாக ஆக்கிய அண்ணாமலையார் நற்பணி மன்றத்திற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். அங்கு வைபவத்தில் கலந்து கொண்ட ஒவ்வொரு நிகழ்வும் மறக்க முடியாத ஒன்று
இதற்கு முத்தாய்ப்பாக நம் தள ஆசிரியர் திரு சுந்தர் அவர்களின் பதிவும் இந்த இந்த ஆண்டு மலரில் வெளியாகி உள்ளது. மிகவும் பரவசமாக உள்ளது.
அடுத்த வருட விழாவை ஆவலுடன் இப்பொழுது இருந்தே நினைக்க தோன்றி விட்டேன்.
வாழ்க .. வளமுடன்
நன்றி
உமா வெங்கட்