Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, September 11, 2024
Please specify the group
Home > Featured > புத்தாண்டு பரிசாக வந்த வைதேகி!

புத்தாண்டு பரிசாக வந்த வைதேகி!

print
புத்தாண்டின் முதல் பதிவாக இதைவிட பொருத்தமான பதிவை அளிக்கமுடியாது. மேலும் இன்று ஸ்ரீராமநவமி!

Untitled-1

Untitled-12014 ஏப்ரல் மாதம் காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள மூத்த பசு ஒன்று பெண் கன்றை ஈன்றது. செய்தி நமக்கு கிடைத்தபோது நாம் வயலூரில் இருந்தோம். சென்னை திரும்பியதும் கோவிலுக்கு வந்து அம்மாவையும் மகளையும் பார்த்துவிட்டு குழதைக்கு ‘நந்தினி’ என்று பெயரிட்டுவிட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கிவிட்டு வந்தோம். அது தொடர்பாக பதிவும் அளித்தோம். (Check : நலன்களை அள்ளித்தர இதோ நமக்கு ஒரு நந்தினி!)

இதோ இந்த 2016 ஏப்ரலுக்குள் நந்தினி பெரிய மனுஷியாகி அவளுக்கு ஒரு குழந்தை பிறந்துவிட்டது. (கடந்த செவ்வாய்க்கிழமை மாலை). மறுநாள் புதன்கிழமை காலை கோவிலுக்கு சென்று கோ-சாலை பணியாளர்கள் ஆலய ஊழியர்கள் அனைவருக்கும் இனிப்புக்கள் கொடுத்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டோம்.

புத்தாண்டு பரிசாக நம் வினை தீர்க்க பிறந்த இவளுக்கு ‘வைதேகி’ என்று பெயர் சூட்டியிருக்கிறோம். மிருகசீரிஷம் நட்சத்திரம்.

(கீழே உள்ள 2016 ஆம் ஆண்டு படத்தில் உள்ள தாய்ப்பசு தான் முதல் படத்தில் நீங்கள் பார்க்கும் கன்றுக்குட்டி! பிறக்கும்போது இருக்கும் நிறம் பிற்பாடு இருக்காது. மாறிவிடும்.)

Untitled-1

வைதேகியின் வரவையடுத்து நம் தளம் சார்பாக விரைவில் சிறப்பு கோ-சம்ரட்சணம் நடைபெறவிருக்கிறது. சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அர்ச்சனையும் ஊழியர்களுக்கு வஸ்திரமும் இதர பரிசுகளும் வழங்கப்படும். பக்தர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் வழங்கப்படும்.

Untitled-3

DSC03664

DSC03690

DSC03682தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு
சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு
பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு

சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே
சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே

(முந்தைய நாள் பிறந்த குழந்தை எத்தனை அழகா போஸ் கொடுக்குறா பாருங்க…!)

ஸ்ரீ ராமநவமிக்கும் இந்த பதிவுக்கும் ஒரு பொருத்தம் உண்டு. யாராவது கண்டுபிடித்துச் சொல்லுங்களேன்.

=========================================================

Help us to run this website…

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

=========================================================

Also check :

சரஸ்வதி குட்டி படு சுட்டி!

வைதரணியில் சிக்கி தவிக்கும்போது துணையாய் வருவது எது ?

மழைநீரில் தவித்த பசுக்களும் அவற்றை அரவணைத்த ஒரு தாயுள்ளமும்!

கிரக லட்சணம், கோ சம்ரட்சணம்!

கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!

அறங்களில் உயர்ந்த கோ சம்ரோக்ஷனத்தின் அருமையும் பெருமையும்!

புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !

கோ பூஜையும் வேத சம்ரட்சணமும்!

மீனவர் வலையில் மாட்டிக்கொண்ட முனிவர்… எப்படி மீட்கப்பட்டார்?

கோமாதா சேவையும் ‘குரு’ ப்ரீதியும் – குரு பெயர்ச்சி உங்களுக்கு ஏற்றம் தர ஓர் எளிய வழி!

பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE

இளநீர் வியாபாரி செய்த தானம்!

மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!

=========================================================

[END]

4 thoughts on “புத்தாண்டு பரிசாக வந்த வைதேகி!

  1. ராமன் பிறந்த நாள் ராம நவமி !!.. ராமன் பிறந்த நாளன்று வைதேகி (சீதை க்கு மற்றொரு பெயர்) பற்றிய பதிவு அளித்துளீர்கள். சரி தானே !!! 🙂

  2. சுந்தர் ஜி அய்யா வணக்கம் . 2014 இல் கன்றுகுட்டியாக இருந்த நந்தினி பசுவாகி , அந்த பசு கன்றுக்குட்டியை ஈன்றிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது . எல்லாம் இறைவனின் கருணை என்று தான் நினைக்கிறேன் .
    சென்ற வருஷம் 29/03/2015 இல் ஸ்ரீ ராம நவமி . அதேபோல் இன்று APRIL இல் ஸ்ரீ ராம நவமி வந்திருப்பது ஒரு விசேசம் .. கோ வுகளை காப்பவன் கோவிந்தன் .அவன் திருநாளில் இந்த நிகழ்வு நடந்திருப்பது சிறப்பு என்று கருதுகிறேன் . என்னுடைய அறிவுக்கு எட்டியது இது .

    1. தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. நண்பர் முத்துக்குமாரும் ராஜனும் கூறியிருப்பதே சரி. அன்னை சீதாதேவியின் பெயர்களில் ஒன்று வைதேகி. இன்று ஸ்ரீராமநவமி என்பதால் இந்தப் பதிவு சிறப்பு பெறுகிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *