நம் ரைட்மந்த்ரா அலுவலகத்தை பொறுத்தவரை கூரியர் ஆட்கள், தபால்காரர்கள் மற்றும் இதர சர்வீஸ் துறையில் இருப்பவர்கள் உள்ளே வர நேர்ந்தால் அவர்கள் தங்கள் காலணிகளை அணிந்துகொண்டே உள்ளே வரலாம். ஷூவையோ செருப்பையோ கழற்றிவிட்டு தான் உள்ளே வரவேண்டும் என்கிற அவசியம் அவர்களுக்கு இல்லை. காரணம் அவர்கள் இருக்கப்போவது ஒரு சில நொடிகள். கையெழுத்தை வாங்கிக்கொண்டு அவர்கள் கொண்டு வரும் பொருளை கொடுத்துவிட்டு செல்லப்போகிறார்கள். இதற்கு எதற்கு அவர்களை படுத்துவானேன்?
மேலும் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான இடங்களுக்கு டெலிவரிக்கு செல்லவேண்டிய நிர்பந்தம் உள்ளவர்களுக்கு ஒவ்வொரு இடத்திலும் காலணிகளை கழற்றிவிட்டுத் தான் உள்ளே செல்லவேண்டும் என்கிற நிர்பந்தம் ஏற்படும்போது அது மிகவும் அசௌகரியமாக இருக்கும். பணி மீதே சலிப்பு வந்துவிடும். ஷூ அணியும் வழக்கம் உடையவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். எனவே இவர்களை போன்ற சர்வீஸ் துறையினருக்கு நாம் எந்த நிர்பந்தமும் அளிப்பதில்லை.
அதே போல, இவர்களைப் போன்றவர்ககள் டெலிவரிக்கு வந்தால் “முதலில் தண்ணீர் குடியுங்கள்” என்று கேட்டுக்கொள்வோம். சிலர் அதற்காக காத்திருந்தது போல வேகவேகமாக தண்ணீர் குடித்துவிட்டு “ரொம்ப தேங்க்ஸ் சார்” என்பார்கள். தற்போது பிஸ்கெட்டும் வாங்கி வைத்திருக்கிறோம். பசியோடு வருகிறவர்கள் தேவைப்பட்டால் பிஸ்கெட்டை கூட அவர்கள் சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடிக்கலாம். இரண்டு மாதங்களாக இது நடைமுறையில் உள்ளது.
நமது அலுவலகம் அமைந்துள்ள பகுதியின் போஸ்ட்மேன் திரு.சிவசங்கரன் அவர்கள். அவரது நேர்மையையும் உழைப்பையும் மெச்சும் விதம் தீபாவளியை முன்னிட்டு நம் தளம் சார்பாக அவரை கௌரவித்து பரிசுகள் வழங்கியது நினைவிருக்கலாம். (நமக்காக உழைப்பவர்களை சிறிது நினைப்போம் – தீபாவளி கொண்டாட்டம்) திரு.சிவசங்கரன் அதன் பின்னர் வேறு ஒரு பகுதிக்கு மாற்றலாகி சென்றுவிட, அது முதல் நமது பகுதிக்கு லக்ஷ்மி என்பவர் தபால்களை டெலிவரி செய்து வந்தார். இவர் தான் எங்கள் பகுதியில் POST-WOMAN.
லக்ஷ்மி அவர்கள் வரும்போதெல்லாம் வரவேற்று தண்ணீர் குடிக்குமாறு கேட்டுக்கொள்வது வழக்கம்.
ஒரு முறை, அரைகுறையாக எழுதப்பட்ட ஒரு முகவரியை வைத்துக்கொண்டு குறிப்பிட்ட தபாலை டெலிவரி செய்ய திணறிக்கொண்டிருந்தார். வாங்கிப் பார்த்ததில் அது நாம் அலுவலகம் வைத்திருக்கும் பகுதி தான் என்று தெரிந்தது. ஆனால், எந்த இடம் என்று சரியாக தெரியவில்லை. நம் காம்ப்ளெக்ஸ் அலுவலகத்தில் கேட்டுபார்க்கலாம் என்றால் அந்நேரம் அலுவலகத்தில் யாரும் இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் அவர் திணறியபோது, “ஃபோன் நம்பர் இருக்காப் பாருங்க…” என்றோம்.
நல்லவேளை அந்த தபாலில் தொலைபேசி எண் இருந்தது.
உடனே, “மேடம்… ஃபோன் பண்ணி எங்கேன்னு கேட்கலாமே…” என்றோம்.
அடுத்த நொடி தான புரிந்தது… அவர் தனிப்பட்ட உபயோகத்துக்கு வைத்திருக்கும் மொபைலில் இது போல கேட்பது என்றால் பாவம் அவர் எத்தனை முகவரிக்கு கேட்கமுடியும்?
உடனே தயங்காமல், “மேடம்… என் லேன்ட்லைன்ல இருந்து கேளுங்க… ஒன்னும் ப்ராப்ளம் இல்லை…” என்றோம்.
“ரொம்ப தேங்க்ஸ் சார்…” என்று கூறி நம் லேன்ட்லைனில் இருந்து சம்பந்தப்பட்ட எண்ணை தொடர்புகொண்டு முகவரியை ஊர்ஜிதம் செய்துகொண்டார்.
அது முதல், “இந்த பகுதியில் எந்த முகவரியாவது தெரியவில்லை என்றால் தாரளமாக நீங்கள் என் அலுவலகம் வந்து எங்கள் ஃபோனை உபயோகித்து விசாரித்துக்கொள்ளலாம். YOU ARE ALWAYS WELCOME SISTER ….” என்றோம்.
இவருக்கு மட்டுமல்ல, கூரியர் நபர்களுக்கு, இன்ன பிற டெலிவர் ஆட்களுக்கு இந்த சலுகை என்றும் நம் அலுவலகத்தில் உண்டு.
அது முதல் லக்ஷ்மி அவர்கள் ஓரிரண்டு முறை அரைகுறை விலாசங்களுக்கு தபாலை டெலிவரி செய்ய நம் அலுவலக தொலைபேசியை பயன்படுத்தியிருக்கிறார்.
எப்போது அவர் வந்தாலும் வரவேற்று உபசரிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.
கடந்த மாதம் ஒரு முறை ஒரு ரெஜிஸ்டர் தபாலை டெலிவரி செய்ய நண்பகல் 11.30 அளவில் நம் அலுவலகம் வந்தார். டெலிவரி செய்துவிட்டு கையெழுத்தும் சீலும் பெற்றுவிட்டு அவர் புறப்பட்டு போய்விட்டார்.
திரும்பவும் மதியம் சுமார் 2.00 மணியளவில் வந்தார்.
“என்ன மேடம் மறுபடியும்?” என்றோம் வியப்புடன்.
“சார்… ஒண்ணுமில்லை… ஒரு ரெஜிஸ்டர் லெட்டரை எங்கேயோ மிஸ் பண்ணிட்டேன். உங்கிட்டே காலைல கொடுத்தேன்ல அதுல வேற ஏதாவது கவர் கலந்து வந்திருக்கா பாருங்க…” என்றார்.
“இல்லையே மேடம்… ஒரே ஒரு கவர் தான் கொடுத்தீங்க…”
“இருங்க எதுக்கும் பார்க்குறேன்” என்று கூறி நமது மேஜை டிராயரை செக் செய்தோம். நமக்கு வந்த ஒரே ஒரு தபால் தான் இருந்தது.
அவருக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது.
“என்னாச்சு மேடம்…”
“ஒரு ரெஜிஸ்டர் லெட்டர் மிஸ்ஸாயிடிச்சு சார்… கீழே விழந்திருக்க வாய்ப்பில்லை… வேறோ ஏதோ லெட்டர் கூட மிக்ஸ் ஆயி போயிருக்கணும்… காலைல இருந்து நான் லெட்டர் டெலிவரி பண்ணப்போன இடத்துக்கு எல்லாம் மறுபடியும் போய் ஒவ்வொருத்தர் கிட்டேயும் கேட்டுகிட்டுருக்கேன். தேடிக்கிட்டுருக்கேன்… இதுவரைக்கும் கிடைக்கலே… எங்கே மிஸ்ஸாச்சுன்னு தெரியலே… இன்னும் சாப்பிடக்கூட நான் போகலே…” என்று வருத்தத்துடன் கூறினார்.
தபால் கிடைக்காத பட்சத்தில் இவர் எப்படி அதற்கு பதில் சொல்வார்… ரெஜிஸ்டர் தபால் வேறு… நிச்சயம் பதில் சொல்லியே ஆகவேண்டுமே… அதுவும் இவர் ப்ரோமொஷனை வேறு எதிர்பார்த்திருப்பதாக முன்பே நம்மிடம் கூறியிருந்தார். இறைவா… இதென்ன சோதனை இந்த பெண்மணிக்கு… பாவம்… என்று மனதுக்குள் அவர் நிலையை இருத்தி கவலைப்பட்டோம்.
“கவலைப்படாதீங்க மேடம் நிச்சயம் கிடைச்சிடும்…. நான் உங்களுக்காக பிரார்த்தனை பண்றேன்… கண்டிப்பா கிடைக்கும்…” – ஜஸ்ட் ஒரு நம்பிக்கை கொடுக்கவேண்டி சொன்னோம்.
“சார்…. அது ஒரு லாயருக்கு வந்த லெட்டர்… லெட்டர் மட்டும் கிடைக்கலேன்னா… என் வேலைக்கே ஆபத்து சார்….” என்றார்.
அவரை நம்பித்தான் அவரது குடும்பமும் இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள் என்று நமக்கு தெரியும்.
“கவலைப்படாதீங்க மேடம்… நிச்சயம் கிடைச்சிடும்… நான் ப்ரே பண்றேன்… கிடைச்சா எனக்கு மறக்காம தகவல் சொல்லுங்க…” என்றோம்.
அவர் சென்ற அடுத்த வினாடி, அலுவலகத்தில் மாட்டப்பட்டுள்ள பெரியாவின் படத்துக்கு முன் நின்று சில வினாடிகள் பிரார்த்தித்தோம்.
“ஸ்வாமி… அந்தம்மா பாவம்… அந்த லெட்டர் திரும்ப கிடைக்க நீங்க தான் அருள் புரியணும்… அவங்களுக்கு இதுனால எந்தப் பிரச்னையும் வந்துவிடக்கூடாது. எனக்காக கேட்கலே…. அந்தம்மவுக்காக கேட்கிறேன்” என்று கூறி மானசீகமாக ஒரு சில வினாடிகள் பிரார்த்தனை செய்துவிட்டு நமது வேலைகளை கவனிக்கலானோம்.
மறுநாள் எந்த தகவலும் வரவில்லை.
லெட்டர் கிடைக்கவில்லை போல… கிடைத்திருந்தால் நிச்சயம் நம்மிடம் சொல்வார் என்று நினைத்துக்கொண்டோம்.
அதன் பிறகு இது பற்றி மறந்தே விட்டோம். நமக்கு தான் கவலைப்பட ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் நமக்கே க்யூ கட்டி நிற்குதே…
இரண்டொரு நாள் கழித்து நமக்கு போன் செய்த லக்ஷ்மி அவர்கள், “சார்… லெட்டர் கிடைச்சிடுச்சு… ரொம்ப தேங்க்ஸ் சார்… உங்க ஆபீஸ் வரும்போது விபரம் சொல்றேன்” என்றார்.
அப்பாடா…THANK GOD.. நிம்மதி பெரு மூச்சு விட்டோம்.
அடுத்த நாள் மலர்ந்த முகத்துடன் வந்தார் திருமதி.லக்ஷ்மி.
“எப்படி மேடம்… எங்கே இருந்தது?”
“சார்… லெட்டர் டெலிவர் பண்ணப்போன ஒரு இடத்துல சாதாரண தபால் கூட இது எப்படியோ மிக்ஸ் ஆகி அவங்க கிட்டே போய்டுச்சு. அவங்க இதை எடுத்து வெச்சிருந்தாங்க. இன்னைக்கு அவங்க வீட்டுக்கு டெலிவரிக்கு போன இடத்துல ‘இந்த லெட்டர் எங்களுக்கு வந்துடுச்சு.. இது எங்களோடது இல்லே’ன்னு சொல்லி திருப்பிக் கொடுத்தாங்க சார்…”
“சார்… லெட்டர் திரும்ப கிடைக்கும்னு நம்பிக்கை முதல்ல போய்டுச்சு சார்… இருந்தாலும் நீங்க பிரார்த்தனை பண்றேன்னு சொன்னபோது தான் நம்பிக்கை வந்தது… ரொம்ப தேங்க்ஸ் சார்… லெட்டர் மட்டும் கிடைக்காம் போயிருந்தா என் நிலைமை என்னன்னு நினைச்சு கூட பார்க்க முடியலே… உங்க பிரேயர் தான் சார் காரணாம்” என்றார் நெகிழ்ந்து போய்.
“எல்லாப் புகழும் பெரியவருக்கே” என்று பெரியவாவின் படத்தை காண்பித்தோம்.
அப்போது அவரிடம் நமது தளத்தின் கூட்டுப் பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி கடந்த மூன்றாண்டுகளாக இம்மன்றம் செயல்பட்டு வருவதையும் பல்வேறு பிரார்த்தனைகளை இடம்பெற்றதையும் அதில் சில இறைவனால் அனுக்ரகிக்கப்பட்டதையும் கூறினோம். “உங்களைப் பொறுத்தவரை மகா பெரியவா அதுக்கு அவசியமே இல்லாம பண்ணிட்டார்….” என்றோம்.
அப்போது தான் அவர் வேறு ஒரு விஷயம் கூறினார்.
வருகிற ஏப்ரல் 24 ஆம் தேதி அவர் பதவி உயர்வுக்காக ஏதோ எக்ஸாம் எழுதவிருப்பதாகவும் அதில் தான் அவசியம் வெற்றிபெற்றாகவேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதாகவும் அதற்காகவும் பிரார்த்தனை செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
“உங்கள் பிரார்த்தனையை நீங்களே கைப்பட எழுதிக்கொடுங்கள்… அவசியம் வெளியிடுகிறேன்… நிச்சயம் நீங்கள் தேர்வில் வெற்றி பெற்று உத்தியோக உயர்வும் பெறுவீர்கள். அப்போது ஸ்வீட்டுடன் வந்து அந்த செய்தியை பகிர்ந்துகொள்ளுங்கள்” என்றோம்.
நம் தளம் சார்பாக லக்ஷ்மி அவர்களுக்கு மகாமக தீர்த்தமும் குங்கும விபூதி பிரசாதமும் கூடவே மகாமகம் தொடர்பான ஒரு புத்தகத்தையும் பரிசளித்தோம். பிரார்த்தனை பதிவில் அளிக்க வசதியாக ஒரே ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
“நீங்கள் நல்லபடியாக எக்ஸாம்க்கு ப்ரிப்பேர் செய்துகொள்ளுங்கள்… உங்கள் முயற்சி, உழைப்பு வீண்போகாது. நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொள்ளுங்கள்.. எங்கள் பிரார்த்தனை உங்களுக்கு பக்கபலமாக இருக்கும்” என்றோம்.
வரும் 24 ஆம் தேதி தேர்வு என்பதால், நாளை நடைபெறக்கூடிய பிரார்த்தனையில் இவருக்காக பிரார்த்திப்போம். லக்ஷ்மி போன்றவர்கள் ஏற்கனவே சர்வீஸ் துறையில் இருப்பதால் இவர் சமூகத்துக்கு தனியாக சேவை செய்யவேண்டிய அவசியமில்லை. இப்போது போல இவர் தான் செய்து வரும் கடமையை சின்சியராக செய்து வந்தாலே போதும்.
வழக்கமான பிரார்த்தனை கிளப் பதிவு அடுத்த வெள்ளி அளிக்கப்படும்.
லக்ஷ்மி அவர்களின் கோரிக்கை பின்வருமாறு….
வணக்கம் நண்பர்களே….
என் பெயர் எம்.அழகுலட்சுமி. என் கணவர் பெயர் முத்துக்குமார். எனக்கு இரண்டு குழந்தைகள். நான் போஸ்டல் டிபார்ட்மெண்ட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். என் குடும்ப முன்னேற்றத்திற்காக போஸ்டல் டிபார்ட்மென்ட் எக்ஸாம் 24. 04. 2016 அன்று எழுதப் போகின்றேன். அத்தேர்வில் வெற்றிபெற்று பதவி உயர்வு கிடைக்கவும், அப்பதவி உயர்வில் எந்தவித தடங்கலும் இல்லாமல் இருக்கவேண்டும் என்று என் கோரிக்கைகளை ஆண்டவனிடம் அர்ப்பணிக்கிறேன். நான் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கி உள்ளேன். அதிலிருந்து மீண்டு வரவேண்டும் என்று ஆண்டவனிடம் மிகப்பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். ஆதலால் என் கோரிக்கைகளை இக்கூட்டு பிரார்த்தனையில் வைத்து என் குடும்பம் சிறந்து விளங்கவும், மேலும் மேலும் நான் டிபார்ட்மெண்ட்டில் சின்சியர் வொர்க்கர் ஆக பணிபுரிய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
– எம்.அழகுலட்சுமி,
மேற்கு மாம்பலம்
இறுதியில் என்ன கூறியிருக்கிறார் பார்த்தீர்களா?
//மேலும் நான் டிபார்ட்மெண்ட்டில் சின்சியர் வொர்க்கர் ஆக பணிபுரிய வேண்டும்//
அது தான் அவரை நம் பிரார்த்தனை கிளப்புக்கு அழைத்து வந்துள்ளது.
‘எண்ணம்போல் வாழ்க்கை’ என்று சும்மாவா சொன்னார்கள்?
* பிரார்த்தனை கோரிக்கை அனுப்பிய மற்றவர்களுக்கும் நாம் நாளை தனிப்பட்ட முறையில் பிரார்த்தனை செய்வோம். எனவே அவர்கள் கவலைப்பட வேண்டாம். அனைவரும் பிரார்த்தனை செய்யும் விதமாக அக்கோரிக்கைகள் அடுத்த வாரம் வெளியிடப்படும். சிறப்பு விருந்தினரைக் கொண்டும் நடைபெறும். கவலைவேண்டாம்!
==========================================================
Also check :
பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா எம் தலைவா…
திருப்பதி முருகனுக்கு அரோகரா… தீபாவளி கொண்டாட்டம்
நமக்காக உழைப்பவர்களை சிறிது நினைப்போம் – தீபாவளி கொண்டாட்டம்
==========================================================
பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:
உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.
==========================================================
நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று பிரார்த்தனை நிறைவேறிய சம்பவங்களுக்கு…
முந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!
‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!
==========================================================
நமது ஒவ்வொரு பிரார்த்தனையையும் மகா பெரியவரே மானசீகமாக தலைமைஎற்றாலும் இந்த வாரம் சிறப்பு விருந்தினரை தயார் செய்து பதிவளிக்க நேரம் கிடைக்காத காரணத்தினால் பெரியவாவிடமே நேரடி பொறுப்பை விட்டுவிடுகிறோம்.
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் கற்பகத் தரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா அவர்கள்.
நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.
கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.
நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!
பிரார்த்தனை நாள் : ஏப்ரல் 17, 2016 ஞாயிறு | நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm
இடம் : அவரவர் இருப்பிடங்கள்
==========================================================
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர்ந்திட உங்கள் பங்களிப்பு அவசியம் தேவை….
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
==========================================================
பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை உச்சரித்த பலன் கிடைக்கும்.
அதே போன்று முடிக்கும்போது ‘சிவாய நம’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.
(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)
==========================================================
உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…
உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!
உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.
E : editor@rightmantra.com | M : 9840169215 | W:www.rightmantra.com
==========================================================
பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131
==========================================================
சென்ற பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : திருவல்லிக்கேணியை சேர்ந்த சிவனருட்செல்வன் தட்சிணாமூர்த்தி (19).
சென்ற பிரார்த்தனை எப்படி நடந்தது?
தட்சிணாமூர்த்தி திருவல்லிக்கேணியில் திருவேட்டீஸ்வரர் ஆலயத்திற்கு பிரார்த்தனை நடைபெற்ற இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளும் சென்று நமக்காக பதிகம் ஓதி பிரார்த்தனை செய்தார். அவருக்கு நம் மனமார்ந்த நன்றி!
==========================================================
[END]
சகோதரி லக்ஷ்மி அவர்களுக்கு
உங்களுடைய தொழில் பக்தி, விடா முயற்சி, அர்பணிப்பு இவை அனைத்தும் உங்கள் வாழ்க்கையில் மென் மேலும் வெற்றி பெற வழிவகுக்கும்
ஆர்பரிக்கும் கடலில் தத்தளிக்கும் படகு போல் உள்ள நமது வாழ்க்கை பயணத்தில் வழிகாட்டியாக இருந்து நம்மை கரைசேர்க்க வல்லது இறை பக்தி
எல்லாம் வல்ல பரம்பொருளை பரிபூரணமாக நம்பி சரணடைந்தோருக்கு என்றென்றும் வாழ்க்கையில் பயமில்லை
தக்க தருணத்தில் சகோதரி லக்ஷ்மி அவர்களுக்கு குருகடாக்க்ஷம் கிடைக்க துணை புரிந்த சுந்தர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
தகிக்கும் கோடையில் சோர்வாக வருவோர்க்கு மோரோ குளிந்த நீரோ வழங்குவது மிகப்பெரிய பரோபகாரம்
நமது சுந்தர் அவர்களை பின்பற்றி நாமும் நம்மால் ஆன சிறு உதவிகளை செய்திடுவோம்
நல்லதே நினைப்போம்
நல்லதே நடக்கும்
எல்லாம் அவன் செயல்
சகோதரி லக்ஷ்மி அவர்களுக்கு வணக்கம் .
உங்கள் தொழில் பக்தி ,நேர்மைக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் திரு சுந்தர்ஜி அவர்களால் கிடைத்திருப்பதே நீங்கள் செய்த பாக்கியம் .
ஆபத்பாந்தவன், அனாதரட்சகன், நடமாடும் தெய்வம் காஞ்சி மகா பெரியவா ஆசி உங்களை மிக பெரிய உச்சத்துக்கு கொண்டு செல்லும் . நீங்கள் தேர்வில் வெற்றியடைவீர்கள் .
“குருவருள் இல்லையேல் திருவருள் இல்லை ” குருவின் பாதார விந்தங்களை விடாது பற்றி கொள்ளுங்கள் .உங்கள் விருப்பங்கள் எல்லாம் இனிதாகும் .
உங்கள் வாழ்கையில் நல்ல திருப்பம் துவங்கி விட்டது . இனி வரும் ஒவ்வரு நாளும் நன்னாளே ! வாழ்த்துக்கள் !!!
ஆல் தி பெஸ்ட் சிஸ்டர்.do well.god bless you!