Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > பல சிறப்புக்கள் பெற்ற தெய்வமணம் கமழும் பங்குனி உத்திரம் !

பல சிறப்புக்கள் பெற்ற தெய்வமணம் கமழும் பங்குனி உத்திரம் !

print
ன்று (ஏப்ரல் 3, 2015) பங்குனி உத்திரம்.  ல்லா நட்சத்திரங்களும் சிறப்பு மிக்கவைதான் என்றாலும், குறிப்பிட்ட தமிழ் மாதத்தில் வரும் சில நட்சத்திரங்கள் இன்னும் விசேஷமானவை. வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆவணி அவிட்டம், தைப்பூசம், மாசி மகம் இப்படி. இந்த வரிசையில் பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பானது.

அப்படி என்ன சிறப்பு இந்த நாளுக்கு உள்ளது?

சந்திரன் பவுர்ணமி நாளில் கூட சிறு களங்கத்துடன் தான் ஒளி தருவான். ஆனால், பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் இருப்பதால், உத்திர நட்சத்திரத்துடன் சேர்ந்து, ஏழாம் இடமாகிய கன்னியில் நின்று, முழு கலையையும் பெற்று பூமிக்கு ஒளி வழங்குவான். அந்த பூரண பவுர்ணமி நிலாவில் களங்கத்தைக் காண முடியாது. களங்கமில்லாத சந்திர ஒளி உடலுக்கும் மனதுக்கும் நிம்மதி தரும். பல நற்பலன்களை கொடுக்கும். எனவே, இந்த நாள் கூடுதல் பலன்களை தரக்கூடிய நாளாகக் கருதப்படுகிறது.

தெய்வமணம் கமழும் எண்ணற்ற திருநாட்களுள் பங்குனி உத்திரத்திரு நாளும் ஒன்று. இத்திருநாளை தெய்வீகத்திருமண நாளாகவே இந்து சமயம் போற்றி கொண்டாடுகிறது. பங்குனி மாதம் பவுர்ணமி திதியோடு உத்திரம் நட்சத்திரமும் சேர்ந்து வரும் திருநாளான பங்குனி உத்திரம் திருநாளில் தான் அநேகர தெய்வீக திருமணங்கள் நடந்தேறியுளளன. இந்நாளை கல்யாண விரதம் என்றும் அழைப்பர்.

பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் பவுர்ணமி வரும் நாளில் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. சந்திரன் உத்திர நட்சத்திரத்தில் இருப்பதால் இவ்விழாவிற்கு இப்பெயர் ஏற்பட்டது. இந்நாளை கல்யாண விரதம் என்றும் அழைப்பார்கள். இந்நாளில் குறிப்பிடத்தக்க சில நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.

Murugan-abishekamஇமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது; காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது; மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தது; ராமர் சீதையை மணந்தது; லட்சுமணன், சத்ருகன் ஆகியோருக்கும் திருமணம் நடந்தது; இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது; திருப்பரங்குன்றத்தில் முருகன் – தெய்வானை திருமணம் நடந்தது; ஆண்டாள் – ரங்கமன்னார் திருமணம் நடந்தது; அர்ச்சுனன் பிறந்தது ஆகிய அனைத்தும் நடந்தது பங்குனி உத்திர நன்னாளில்தான். சமஸ்கிருதத்தில் பங்குனி மாதத்திற்கு பல்குணன் என்று பெயரும் உண்டு.

இந்த பங்குனி உத்திரத்தில்தான் தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் பிறந்தார். சிவனின் தவத்தை கலைக்க நினைத்த மன்மதனை சிவன் எரித்தார். ரதியின் பிரார்த்தனைக்கு இணங்க மன்மதனை சிவன் உயிர்பித்த நாளும் இதுதான். மார்க்கண்டேயனுக்காக சிவன் காலனை தன் காலால் உதைத்த நாள். இத்தனை சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திர தினத்தில் நாமும் இறைவனை பிரார்த்தித்து இறைவனின் பரிபூரண அருளை பெறுவோம்.

சுருங்கக் கூறின்…. பங்குனி உத்திரத் திருநாளில்….

* முருகன் – தெய்வயானை திருமணம்
* ஸ்ரீராமர் – சீதை திருமணம்
* சுந்தரேஸ்வரர் – மீனாட்சி திருமணம்
* ஆண்டாள் – ரங்கமன்னார் திருமணம்
* ரதிக்காக மன்மதனை சிவபெருமான் எழுப்பித் தந்த நாள்
* அர்ஜூனன் அவதார நாள்
* சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் பிறந்தநாள்

ஆகியவை நடந்துள்ளன.

பங்குனி உத்திரம் நாளன்று என்ன செய்யவேண்டும்?

காலை சற்று சீக்கிரம் எழுந்து அத்யாவசிய பணிகள் முடிந்து குலதெய்வம் கோயிலுக்கு சென்ற வாருங்கள் நஞ்சென வந்த துன்பங்கள் பஞ்சென பறந்திடும். புண்ணியம் வேண்டுமா? கல்யாணவிரதம் எனும் பங்குனி உத்திரத்தன்று விரதமிருந்து வழிபடலாம். நாளை முருகன்கோயில், சிவன் கோயில்களுக்கு அனைவரும் சென்றுவரவேண்டும்.

பங்குனி உத்திர நாளில் சிவனை கல்யாணசுந்தர மூர்த்தியாக நினைத்து விரதம் இருக்க வேண்டும். இந்த விரதம் இருந்துதான் தேவர்களின் தலைவன் இந்திரன் இந்திராணியையும், மகாலட்சுமி மகாவிஷ்ணுவையும் மணந்தனர். பிரம்மா தன் நாவில் சரஸ்வதி இருக்கும் வாய்ப்பை பெற்றதும், சந்திரன் 27 கன்னிகளை மனைவியாக அடைந்ததும் இந்த விரதத்தை கடைபிடித்து தான். காளையர்களும் இந்த விரதத்தை கடைபிடித்து தங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணையை அடையலாம்.

நல்ல மணவாழ்க்கை வேண்டுவோர் இந்நாளில் சிவபார்வதியை வேண்டி விரதம் மேற்கொள்ளவேண்டும். ஓம் சிவாயநம, ஓம் பராசக்திநம என்ற நாமத்தை 108 முறை ஜெபிக்கவேண்டும். மதியம் ஒருவேளை உணவு உண்ணலாம். இயலாதவர்கள் காலை, இரவு பால் பழம் சாப்பிடலாம்.  இவ்விரதத்தினை முருகப்பெருமானை வேண்டியும் மேற்கொள்ளலாம். மாலை கோயிலுக்குச் சென்று தீபமேற்றி வழிபடவேண்டும்.

பங்குனி உத்திரத்தன்று விரதம் இருந்து வழிபடுவது நல்லது. இல்லாதோர், இயலாதோருக்கு அன்னதானம், வஸ்திர தானம் செய்வது மிகவும் விசேஷம் என்று கூறப்பட்டுள்ளது. ஜாதகத்தில் பல்வேறு தோஷங்கள் ஏற்பட்டு திருமண தடை ஏற்படுபவர்கள், குறிப்பாக செவ்வாய் தோஷம் காரணமாக தொடர்ந்து கல்யாண தடங்கலை சந்திப்பவர்கள் பங்குனி உத்திரத்தன்று முருகப் பெருமானை மனதார வணங்கி வழிபட்டால் எல்லா தடைகள், தடங்கல்கள், இடையூறுகளும் நீங்கி சுபயோக சுபவாழ்வு அமையும் என்பது ஐதீகம். முருகனை வழிபட்டு சகல நலன்களும் பெறுவோமாக. (ஆக்கத்தில் உதவி : தினமலர்.காம், மாலைமலர்.காம், தினகரன்.காம்)

=====================================================================

Help us in our mission!

Rightmantra.com is a website focussing on Spirituality, Self-development and True values. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us. Also ask your near and dear ones to join. Little Drops of Water Make the Mighty Ocean.

நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?

=====================================================================

வேறு சில முக்கிய பதிவுகளை தயாரித்து வருவதால் முந்தைய ஆண்டுகளில் அளித்த பதிவையே திரும்பவும் அளித்திருக்கிறோம்.  இயன்றவற்றை கடைப்பிடித்து இறையருள் பெறுங்கள்.

இன்று பிரார்த்தனை பதிவு மற்றும் இதர பதிவுகள் வழக்கம் போல இடம்பெறும். நன்றி!

பங்குனி உத்திரம் குறித்து தெரியாத வாசக அன்பர்கள் இது பற்றி கடைசி நேரத்தில் தெரிந்துகொண்டதால் எங்களால் எதுவும் செய்ய இயலவில்லை என்று வருந்தவேண்டாம். நேரமின்மையால் இது குறித்த பதிவை முன்கூட்டியே அளிக்க முடியவில்லை. அனைவரும் மன்னிக்கவேண்டும்.

மாசிமகம், பங்குனி உத்திரம் போன்ற முக்கிய நாட்கள் வரும் காலகட்டங்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த ஆண்டு, முன்கூட்டியே திட்டமிட்டு முழுமையான மனதிருப்தியுடன் விரும்பும் கோவிலுக்கு தகுந்த முன்னேற்பாடுடன் சென்று வரலாம் அல்லது விரும்பும் படி முழுமையான விரதம் இருக்கலாம்.

பங்குனி உத்திரத்தன்று விரதமிருக்க இயலாதவர்கள் காலையோ அல்லது மாலையோ சிவாலயங்கள் அல்லது முருகனின் ஆலயங்களுக்கு சென்று அர்ச்சனை செய்து விளக்கேற்றி வழிபடவும். இது போன்ற விசேட நாட்களில் அசைவ உணவு தவிர்க்க வேண்டியது மிக மிக அவசியம்.

கூடுமானவரை இது போன்ற விசேட நாட்களை பற்றிய பதிவுகளை இரண்டு அல்லது மூன்று நாட்கள் முன்னரே அளிக்க முயற்சிக்கிறோம்.

நன்றி!

======================================================================

Related articles….

இன்று முழுதும் முருகன் உங்கள் சிந்தையில் இருக்கட்டும் – ‘வைகாசி விசாகம்’ சிறப்பு பதிவு 1

உன்னை தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம்!

முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!

சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!

முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2

ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

கருவறையில் மட்டுமா இருக்கிறான் கந்தன் ? தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 2

ஏற்பது இங்கே இகழ்ச்சியல்ல!

நல்லதை நினைத்தால் போதும்… நடத்திக்கொள்ள ஆண்டவன் தயார்!

கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1

தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!

காங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்!

ஏழை திருமணத்துக்கு உதவிய வள்ளல் & வாரியாரின் வாழ்வும் வாக்கும் – தமிழ் புத்தாண்டு SPL & வீடியோ!

காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!

மணிகண்டனை தேடி வந்த முருகன்! ஒரு உண்மை சம்பவம்!!

=============================================================

[END]

17 thoughts on “பல சிறப்புக்கள் பெற்ற தெய்வமணம் கமழும் பங்குனி உத்திரம் !

  1. குலதெய்வ அழிபாடு மிக முக்கியமான ஒன்று.குலதெய்வம் தெரியாதவர்கள் உங்கள் முன்னோர்களிடம் கேட்டு தெரிந்துகொள்லுங்கள்.ஏனெனில் நாம் சிவாலயம் போன்ற கோவில்களில் பிரார்த்தனை செய்து வரம் வேண்டும் போது அவை நம் குலதெய்வம் மூலமாகத்தான் நிறைவேற்றப்படுமாம்.

    1. குலதெய்வம் தெரியாதவர்கள், திருச்செந்தூர் முருகனை குலதெய்வமாக கொள்ளலாம்,

  2. வாழ்க வளமுடன்

    வேலுண்டு வினை இல்லை

    மயிலுண்டு பயம் இல்லை

    குகனுண்டு குறைவில்லை மனமே

    மனமே கந்தனுண்டு கவலை இல்லை மனமே

    நன்றி
    மகள் வள்ளி சொல்ல எழுதியது

  3. வணக்கம்…… பங்குனி உத்திர சிறப்பு பதிவு மிக நன்று………..மேற்கூறிய அனைத்து சிறப்புகளுடன் சேர்த்து எங்கள் தாய் தந்தையின் திருமண நாளும் இன்று என்பதால் எங்களுக்கு கூடுதல் சிறப்பு……….

    அவசியம் ஆலயத்திற்குச் சென்று அரனருளையும், குகனருளையும் அள்ளி வருகிறோம்……

    1. மிகவும் இனிது. அவர்களுக்கு எங்கள் வணக்கங்கள். வாழ்த்த வயதில்லை. வணங்குகிறோம். நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் அவர்களும் அவர்கள் குடும்பத்தினரும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறோம்.

      நன்றி.

      1. தங்களின் தாய் தந்தையருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். இந்த இனிய நாளில் அவர்கள் நல்ல தேக ஆரோக்யத்துடனும், இறை அருளும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்

        மண்ணின் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
        எண்ணின் நல்ல கதிக்கி யாது மோர் குறைவிலைக்
        கண்ணின் நல்ல துறுங் கழுமல வளநகர்ப்
        பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே
        நன்றி
        உமவெங்கட்

    2. சகோதரி தாமரை அவர்களுக்கு…

      தங்கள் பெற்றோருக்கு என் வாழ்த்துக்களை தெரியப்படுத்துங்கள்.

      அவர்கள் ஆரோக்கியத்துக்கும் மனநிம்மதிக்கும் மகிழ்ச்சிக்கும் என் பிரார்த்தனைகள்.

      – பிரேமலதா மணிகண்டன்,
      மேட்டூர்

  4. சுந்தர்ஜி,
    ஒரு மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி
    சந்திரன்
    கட்சிரோல்லி (மகாராஷ்டிரா)

  5. எல்லோருக்கும் பயனுள்ள தகவல்கள். இந்த இனிய நன்னாளில் இறைவனை பூஜித்து இறை அருள் பெறுவோம். வாசகர்களாகிய நாங்கள் தங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம். நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது .தங்களின் நேரமின்மையால் பங்குனி உத்திர பதிவை முன்கூட்டியே அள்ளிக்கவில்லை என்ற கவலை வேண்டாம். இன்று தாங்கள் சென்று வந்த கோவிலின் தெய்வ தரிசனம் பற்றி விரிவாக எழுதவும்.

    பங்குனி உத்திரம் பற்றி திருமுறையிலும் நிறைய பதிகங்கள் உள்ளது. இன்று தான் மைலாபூர் கபாலீஸ்வரர் கோவிலில் பூம்பாவை உயிர் பெற்ற நாள் திருஞானசம்பந்தர் தனது பதிகத்தின் மூலம் .

    //மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலை
    கலிவிழாக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
    பலிவிழா பாடல் செய் பங்குனி உத்திர நாள்
    ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய் //

    இந்த இனிய நாளில் கோ சம்ரோக்ஷனம், அன்ன தானம் , பானகம் , நீர் மோர் , விசிறி முதலியன விநியோகிக்கலாம்.

    நன்றி
    உமா வெங்கட்

  6. சுந்தர் ஜி
    அருமயான தகவல் நன்றி .

    அடுத்த உலவரபணி எப்போது தெரிவிக்கவும்

  7. பங்குனி உத்திர திருநாள் குறித்த பதிவிற்கு நன்றி . காலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சிறு தேரோட்டம் இனிதே நடை பெற்றது . மாலையில் திருக்கல்யாணம் —- இந்த நாள் மற்றொரு விதத்திலும் விசேஷமான நாள் . 3-4-2015 – ஆம் 0 வில் தொடங்கி 5 வரை வரிசையாக – 0,1,2,3,4 மற்றும் 5 என எண்கள் வருஷம் (நான்கு இலக்கங்களில்- இது முக்கியம் ) ,மாதம் மற்றும் தேதிகளில் (ஒற்றை இலக்கம் )வருகிறது .இன்றைய நாள் போன்றொரு எண்வரிசை நாள் வர பல வருடங்கள் காத்திருக்க வேண்டும் . கண்டிப்பாக அடுத்த வருடங்களில் இல்லை .
    நன்றி சுந்தர்ஜி

  8. சுந்தர் அண்ணா..

    இன்றைய வெள்ளிக்கிழமை யுடன் பங்குனி உத்திரம் அமைந்தது மிகவும் சிறப்பு.

    தங்கள் பதிவு பார்த்தவுடன், என் மனம் கொண்டாட்ட நிலைக்கு சென்றது.

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.

    திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை விருத்தன் என
    உளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குஹன் வேலே.

    மிக்க நன்றி அண்ணா..

  9. வணக்கம் சுந்தர். முருகா சரணம் குகனே சரணம் வடிவேலா சரணம்.நன்றி.

  10. பங்குனி உத்திரத்தின் முக்கியத்துவத்தை இவ்வளவு சிறப்பாக கொடுக்க நமது ஆசிரியர் தவிர வேறு யாரால் முடியும்

    படங்கள்/பதிவின் நேர்த்தி, தங்கள் கடின உழைப்பினை பிரதிபலிக்கின்றன.

    நன்றி.

    இத்தனை சிறப்புமிக்க தினததை தங்களது திருமண நாளாக அமையபெற்ற நமது தள வாசக சகோதரியின் பெற்றோருக்கு எமது வணக்கங்கள்.அவர்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று இன்புற வாழ இறைவனை வேண்டுகிறேன்

  11. சுந்தர் அண்ணா..

    மிகவும் அருமை.

    சுவாமியே சரணம் ஐயப்பா..

  12. மிக நன்று தங்கள் பதிவு. மகா பயன் உள்ளது.

    நம் கண் கண்ட தெய்வம் நம் பெற்றோர்.

    அவர் தம் பாதம் பணிவோம்.

    சகோதரி பெற்றோர் திரு பாதம் பணிவோம்.

    அவர் தம் ஆசி பெறுவோம்.

    நன்றி.

    கே. சிவசுப்ரமணியன்

Leave a Reply to தமிழ்ச்செல்விஞானப்பிரகாசம் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *