Home > 2014 > September (Page 2)

காசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும்? – குரு தரிசனம் (11)

காசி ஷேத்ரத்தில் ருத்ரைகாதசீ ஜப-ஹோமம் செய்து, ஒரு குடம் கங்கா ஜலம் கொணர்ந்து பெரியவாளுக்கு பெரியவாளுக்கு சமர்பித்தார், ஒரு  பக்தர். "ருத்ரைகாதசிக்கு எங்கேயிருந்து ஜலம் எடுத்தே?" என்று கேட்டார்கள் பெரியவா. "காசி கேதார்காட் கங்கையில இருந்துதான் ஜலம் எடுத்து வந்தார்கள் வைதீகர்கள்." "காசி பரமேஸ்வரனின் இடம். அங்கிருந்து கங்கை நீர் கங்கை மண் முதலானவைகளை எடுத்து வரக்கூடாது.  நீ கொண்டு வந்திருக்கும் தீர்த்தத்தை ஏதாவது ஒரு வில்வமரத்துக்கு அடியே சேர்த்துவிடு...." "கங்கை, சுத்த கங்கையாக இருக்குமிடத்திலிருந்து

Read More

நம் பாஞ்சாலி பெற்ற குழந்தை ‘தேவகி’!

அறங்களில் மிகச் சிறந்ததும் பெரியதும் கோ-சம்ரோக்ஷனமே ஆகும். அம்பிகை வளர்த்த அறங்களில் இதுவும் ஒன்று. பசு எங்கெல்லாம் நன்றாக பராமரிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் லஷ்மி கடாக்ஷம் இருக்கும். மேலும் பசுவின் மூச்சுக் காற்று இருக்கும் இடத்தை எவ்வித தோஷங்களும் அண்டாது. தினமும் எண்ணற்றோர் வந்து செல்லும் ஆலயத்திற்கு, தோஷங்கள் ஏற்படுவது இயற்கை. அப்படி ஏற்படும் தோஷங்களை அக்கோவிலில் உள்ள பசுவானது போக்கிவிடுகிறது. எப்பேர்பட்ட தோஷத்தையும் போக்கும் ஆற்றல் பசுவுக்கு மட்டுமே இருக்கிறது.

Read More

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் வாழ்வில் ஏழுமலையானும் மகா பெரியவாவும் நடத்திய நெகிழவைக்கும் நாடகம்!

தன்னையே அனுதினமும் துதித்து வந்த ஆனால் தன்னிடம் எதையுமே எதிர்பாராமல் வாழ்ந்து வந்த தன் உன்னத பக்தை இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் வாழ்வில் அந்த ஏழுமலையானும் காஞ்சி மகாபெரியவாவும் நிகழ்த்திய நெஞ்சை உருகவைக்கும் நாடகம் இது. "அன்புள்ள பிரசாத், ஆசிகள். உதாரணத் தம்பதிகளாக திகழ்ந்து வரும் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியும் சதாசிவமும் தற்போது தீவிரமான பொருளாதார  நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். அவர்களுக்கு உடனடியாக ஏதேனும் உதவி செய்யவேண்டும். ஏதாவது  திட்டம் வகுத்து அவர்கள் தங்கள்

Read More

மனிதா உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும் – MONDAY MORNING SPL 60

சிறு வயது முதலே அந்த சிறுவனுக்கு பியானோ வாசிப்பதில் ஆர்வம் உண்டு. அவனுக்கு தெரிந்த ஒரே பியானோ ஆசிரியர் அவன் அம்மா தான். ஒரு நாள் அம்மாவிடம் கேட்டான், "அம்மா நாமெல்லாம் ஏழைகளா?" "ஆமாம்...  ஏழைகள் தான்!!!" "ஒரு நாள் நிச்சயம்  நான் உலகப் புகழ்  பெறுவேன். அன்று என் பெயர் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்" என்றான். தன் அப்பா செல்லும் சர்ச்சில் ரெகுலராக பியானோ வாசித்து வந்தான். கிட்டத்தட்ட 11  வயதில், ஒரு கைதேர்ந்த

Read More

‘நல்ல காலம் நிச்சயம் வரும்!’ — ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

முதலில் ஒரு நல்ல செய்தி : விஷேட நாள் மற்றும் கிழமைகளில் நம் தளம் சார்பாக நாம் கோ-சம்ரோக்ஷனம் செய்து வரும் மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில், பாஞ்சாலி என்கிற பசு சமீபத்தில் பெண் கன்று ஒன்றை ஈன்றுள்ளது. இன்று மாலை அதையொட்டி நம் தளம் சார்பாக கோ-சம்ரோக்ஷனமும், கோ-சாலை பணியாளர்களுக்கு வஸ்திர தானமும் நடைபெறும். காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அர்ச்சனையும் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கலும் வழங்கப்படும்.

Read More

கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து குடுகுடுப்பைக்காரனுக்கு தந்த பாரதி – ஏன் தெரியுமா???

இந்தியா முழுவதும் சுதந்திரப் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த நேரத்தில் புதுச்சேரியில் பாரதியாரும் அவரது மாணவர் பாரதிதாசனும் தங்கி இருந்தனர். இருவரும் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் பாரதத் தாய்க்கு ஒரு சிலை செய்ய வேண்டும் என்ற அவரது விருப்பத்தை பாரதிதாசனிடம் கூறியிருக்கிறார் பாரதி. பாரதிதாசனும் ஒரு சிற்பியை வரவழைத்து பாரதத் தாய்க்கு சிலை அமைக்குமாறு கேட்டுக் கொண்டார். சிற்பி சிலை தயாரிக்கத் தொடங்கியபோதே அவருக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கிறது. சிலையை ஏழ்மையாக இருப்பது

Read More

மகா பெரியவா என்னும் கலங்கரை விளக்கம் – குரு தரிசனம் (10)

திக்கு தெரியாமல் அல்லாடிக் கொண்டிருந்த தன் வாழ்க்கை, மகா பெரியவாளின் தரிசனத்தால் எவ்விதம் முன்னேற்றமடைந்தது என்று ஒரு பெண் எழுத்தாளர் உருக்கமாக கூறியிருக்கிறார். நாத்திகத்தில் ஊறிய தந்தையின் மகளாகப் பிறந்த நான், இருபத்து மூன்று  வயது வரை எந்த ஆலயத்துக்கும் சென்றறியேன். பின்னர்,  வாழ்க்கையில் மிகப்  பெரிய இழப்பு ஏற்பட்ட பின்னர் கொண்ட கணவரையும் பெற்ற தாய் தந்தையரையும் பிரிந்து வாழும் சூழ்நிலை ஏற்பட்டது. வேற்றூரில் அனாதை விடுதி ஒன்றில் குழந்தையுடன் தஞ்சமடைந்தேன்.

Read More

பொருள் தெரியாமல் ஒரு ஸ்லோகத்தை உச்சரிப்பதால் பலன் உண்டா?

அந்த குருகுலத்தில் தினமும் வேதபாராயணமமும் கீதை பாராயணமும் நடக்கும். குருநாதர் சொல்லச் சொல்ல, சீடர்கள் வேத மந்திரங்களை உச்சரிக்கவேண்டும். குரு வேத மந்திரங்களின் அர்த்தத்தை அவர்களுக்கு போதிப்பது கிடையாது. முதலில் அவர்கள் மந்திரங்களை மனப்பாடம் செய்துகொள்ளட்டும் பிழையின்றி உச்சரிக்க கற்றுக்கொள்ளட்டும் பிறகு அர்த்தம் சொல்லிக்கொடுப்பதை பார்த்துக் கொள்ளலாம் என்பது அவர் எண்ணம். ஒரே ஒரு சீடனுக்கு மட்டும் ஒரு சந்தேகம் எழுந்தது. "குருவே என்னை தவறாக நினைக்கவேண்டாம்... பொருள் புரியாமல் அர்த்தம் தெரியாமல்

Read More

வசிஷ்டர் அருளிய தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்

வசிஷ்டர் பிரம்மாவின் புத்திரர்களுள் ஒருவர். இவர் ஒரு பிரம்மரிஷி. ஸப்தரிஷிகளுள் ஒருவர். தன் அம்சம் மூலமாக ஒரே நேரத்தில் பல இடங்களில் இருக்கும் ஆற்றல் பெற்றவர். சாமான்ய மக்களும் சிவனருள் பெற்று பொருளாதரத்தில் உயர அவர் இயற்றியது தான் இந்த அற்புதமான ]தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்' ஸ்லோகம். பெயருக்கு ஏற்றார்போல, தமது தரித்திரத்தை சுட்டுப் பொசுக்க கூடியது இந்த சுலோகம். சமஸ்கிருதத்தில் காணப்படும் இந்த ஸ்லோகத்தை நீங்கள் சுலபமாக உச்சரிக்க வேண்டும் என்பதால்

Read More

எங்கே செல்லும் இந்த பாதை?

தேவாரம் திருபுகழ் பாடும் வாரியார் சுவாமிகளின் வாரிசுகள், வள்ளி மற்றும் லோச்சனா ஆகியோரின் தந்தை நம் நண்பர் சீதாராமன் அவர்கள் சென்ற வாரம் ஒரு நாள் நம்மை தொடர்புகொண்டு, போரூர் காரம்பாக்கம் பஞ்சாயத்து அலுவலகம் அருகே பிள்ளையார் சிலை முன்பு இரவு 8.00 மணியளவில் வள்ளியும் லோச்சனாவும் தேவாரம், திருப்புகழ் பாடவிருப்பதாகவும் நம்மை முடிந்தால் வரும்படியும் கேட்டுக்கொண்டார்கள். எப்படியும் வீட்டுக்கு போரூர் வழியாகத் தான் செல்லவேண்டும் என்பதால் "முடிந்தால் நிச்சயம் வருகிறேன்

Read More

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

சென்ற வாரம் ஒரு நாள் திருப்பட்டூரை பற்றிய குறிப்பிட்ட ஒரு விபரத்தை இணையத்தில் தேடியபோது, கிடைத்த தங்கப் புதையல் இது. பதிவை படித்தவுடன் பிரமித்துப் போனோம். "ஹரி வேறு ஹரன் வேறு அல்ல. இருவரும் ஒன்றே. தெய்வங்களுக்கிடையே எந்த பேதமும் இல்லை. பேதம் மனிதர்களுக்கிடையே தான்!" என்பதை ஆணித்தரமாக பதிவு செய்கிற நிகழ்வு இது. மேலும் கோவிலுக்கு செல்லும்போதெல்லாம், ஏதோ விக்ரகத்தை வணங்குவதாக நினைக்காமல், சாட்சாத் அந்த

Read More

ஒரு பாலம் சொல்லும் பாடம்! MONDAY MORNING SPL 59

தாங்கள் எந்த செயலில் இறங்கினாலும் மனிதர்களோ கோள்களோ குறுக்கே புகுந்து கெடுத்துவிடுவதாக நம்புபவர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு இது. ஜான் ரோப்ளிங் என்பவர் ஜெர்மனியை பூர்வீகமாக கொண்ட ஒரு சிவில் என்ஜினீயர். 1830 ஆம் ஆண்டு வாக்கில் ஜெர்மனியில் நிலவிய உள்நாட்டு குழப்பத்தையொட்டி தனது தாயுடன் யூ.எஸ்.ஸில் குடி புகுந்தார் ரோப்ளிங். யூ.எஸ்.வந்த புதியில் விவசாய  வேலையைத் தான் அவரால் பார்க்க முடிந்தது. அதற்கு பிறகு ரயில் தண்டவாளங்களை பதிக்கும்

Read More

எதை மறந்தாலும் மஹாளயத்தை மறக்கவேண்டாம் – A COMPLETE GUIDE

ஆவணி மாதம் பௌர்ணமி தொடங்கி புரட்டாசி மாத அமாவசை வரை வரக்கூடிய 15 நாட்கள், மஹாளயம் எனப்படும் பித்ருக்களுக்குரிய காலமாகும். இந்த ஆண்டு மஹாளயம் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி துவங்கி 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நாட்களை பயன்படுத்திக்கொண்டு பித்ருக்களுக்குரிய தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றை தவறாமல் செய்யவேண்டும். மஹாளய அமாவாசை தினத்தன்று நம் பித்ருக்கள் அனைவரும் சூரிய சந்திர உலகத்துக்கு வருவதால் அனைத்து உறவினர்களுடைய சந்திப்பும் நிகழ்கிறது.

Read More

ஓராறு முகமும் ஈராறு கரமும் தீராத வினை தன்னைத் தீர்க்கும் – Rightmantra Prayer Club

ஒரு பக்திச் சொற்பொழிவு நடைபெற்றுகொண்டிருந்தது. முருகப் பெருமானின் பெருமைகளை சொற்பொழிவாளர்  கூறிக்கொண்டிருந்தார். சிறியவர்களும் பெரியவர்களுமாக பலர் அமர்ந்து சொற்பொழிவை கேட்டுக்கொண்டிருந்தனர். சொற்பொழிவாற்றியவர், அரங்கத்தில் இருந்தவர்களைப் பார்த்துக் கேட்டார், " முருகனுக்கு முகம் ஆறு, கரங்கள் பன்னிரெண்டு என்பதை அறிவீர்கள்! கால்கள் எத்தனை?" அனைவரும்... "அட... ஆமாம் இல்லே.... ஆறு முகம், 12 கரங்கள் என்றால் கால்கள் எத்தனை இருக்கும்..." என்று யோசிக்க ஆரம்பித்தனர். சட்டென்று எழுந்த, ஒரு சிறுவன் சொன்னான். "கால்கள் இரண்டுதான்!" "விடை சரி

Read More