Monday, December 17, 2018
நமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.
Home > Featured > கழுதைக்கு மரியாதை – இது குருவின் லீலை!

கழுதைக்கு மரியாதை – இது குருவின் லீலை!

print
சென்ற காணும் பொங்கல் அன்று குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவில் தேவார பாடசாலை மாணவர்களுடன் சுற்றுலா சென்றது நினைவிருக்கலாம். பேருந்திற்குள் மாணவர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று ஒரே லூட்டி தான். வாழ்வின் மிக இனிமையான தருணங்கள் அவை.

நமது வாசகர் ஒருவர் பேருந்து கட்டணத்தை ஏற்றுக்கொண்டிருந்தார். சுற்றுலா ஏற்பாட்டையும், ஒருங்கிணைப்பையும் இதர செலவுகளையும் அவர்களே பார்த்துக்கொண்டனர்.

திருவையாவூர், சாத்தனூர் சென்று பின்னர் திரும்ப வரும் வழியில் மாணவர்களுடன் திருவண்ணாமலை தரிசனம். பாடசாலை ஆசிரியர் திரு.சங்கர் மற்றும் புருஷோத்தமன் இருவரும் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தபடியால், அண்ணாமலையாரை அருகே இருந்து தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் தேவாரம் படிக்கும் மாணவர்களுடன்.

Thiruvnnamalai

Thiruvnnamalai_2ஊனிலும் உயிரிலும் கலந்தது திருவண்ணாமலை என்றால் மிகையாகாது. நம் ரைட்மந்த்ரா தளம் பிறப்பதற்கு காரணமாக இருந்தவர்களுள் ஒருவர் அண்ணாமலை அருணாச்சலேஸ்வரர். அவர் மீது இட்ட சத்தியம் ஒன்று இன்னும் பாக்கியிருக்கிறது. ஆனால் அதை நிறைவேற்றுவது நம் கையில் இல்லை அவன் கையில் தான் இருக்கிறது.

திருவண்ணாமலை குறித்து மிகப் பிரம்மாண்டமான தொடர் ஒன்று துவக்க மிகவும் ஆசை. சில பல காரணங்களால் தாமதமாகிக்கொண்டிருக்கிறது. நம்மை பொருத்தவரை மேம்போக்காக எழுதுவதைவிட நேரில் சென்று ஆய்வு செய்து எழுதுவதையே பெரிதும் விரும்புகிறோம்.

திருவாரூரில் பிறக்க முக்தி, சிதம்பரத்தில் இருக்க முக்தி, காசியில் இறக்க முக்தி, திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்று சொல்வார்கள். அந்தளவு மகத்துவம் மிக்கது திருவண்ணாமலை.

Arunachaleswarar

திருவண்ணாமலையின் மகத்துவங்களுள் சில…

* திருவண்ணாமலையில் ஒரு நாள் உபவாசம் இருப்பது பிற தலங்களில் நூறு நாள் உபவாசத்திற்கு சமம்.
* நீராடி, திருநீறணிந்து அருணாச்சலத்தை பக்தியுடன் பிரதட்சிணம் செய்பவன் சகல லோக நாயகனாகி மேலான பதவியை அடைகிறான்.
* கார்த்திகை மாதம் பௌர்ணமியில் ஒரு சிறு தீபம் அண்ணாமலையார் கோவிலில் ஏற்றினால் கொடிய பாவங்களிலிருந்து விடுபட்டு சிவலோகப் ப்ராப்தம் கிடைக்கும்.
* காசி ஷேத்ரத்தில் கோடி பேருக்கு அன்னதானம் அளிக்கும் பலன் திருவண்ணாமலையில் அந்தணன் ஒருவனுக்கு அன்னம் அளிப்பதற்கு சமமாகாது.
* மாலையில் தீபம் பார்த்து வலம் வருபவர்களுக்கு ஒவ்வொரு அடிக்கும் ஒரு யாகம் செய்த பலன் உண்டாகும்.

திருவண்ணாமலையில் பல ரிஷிகளும் ஞானிகளும் அருருவமாகவும் வேறு பல உருவங்களிலும் வலம் வருவார்கள் என்று கூறப்படுகிறது.

seshadri swamigal (2)இது குறித்து சேஷாத்ரி ஸ்வாமிகள் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் கூறப்படுகிறது.

கழுதைக்கு மரியாதை – இது குருவின் லீலை! 

காஞ்சியிலிருந்து திருவண்ணாமலை வந்த பிறகு சேஷாத்ரி சுவாமிகள் அங்கு உஞ்சவிருத்தி செய்து வாழ்ந்து வந்தார். அந்த காலகட்டங்களில் அவர் ஓரிடத்தில் நிலையாக இருந்ததில்லை. கண்ட கண்ட இடங்களில் உண்பார். சிலரை வணங்குவார். சிலரை திட்டி விரட்டுவார். இரவில் தூங்கமாட்டார்.

அவரது உறவினர் சூரியநாராயண சாஸ்திரி என்பவர் திருவண்ணாமலை சந்நிதி வீதியில் வசித்து வந்தார். சுவாமிகளை புரிந்துகொள்ளாமல் சுவாமிகள் இப்படி இருக்கிறாரே என்று அவர் வருந்துவதுண்டு.

ஒருநாள் சுவாமிகள் திருவண்ணாமலையில் தேர் நிலை அருகில் உள்ள கீணாத்தூர் தோப்பு மண்டபத்துக்கு சற்று தொலைவில் சுற்றித் திரிந்துகொண்டிருந்தார்.

திடீரென அங்கு நின்றிருந்த ஏழு கழுதைகளை அவர் தொட்டுத் தொட்டு, பயபக்தியோடு வணங்கி கொண்டிருந்தார்.

சாஸ்த்திரி இதைக்கண்டு நகைத்தபடி ”என்னப்பா ஆயிற்று உனக்கு? இந்தக் கழுதைகளை இப்படி கும்பிடுகிறாயே!” எனக் கேட்டார்.

holy donkey

உடனே சுவாமிகள்… ”அடே! இவர்களா கழுதைகள்? இவர்கள் சப்தரிஷிகள் அல்லவா? இவர்தான் வசிஷ்டர், இவர் அகத்தியர், இவர் விஸ்வாமித்திரர், இவர் கௌதமர்…” என்று எழுவருக்கும் பெயர் சொல்லி விளக்கினார். பின்னர் அக்கழுதைகளை வலம் வந்தார்.

அண்ணாமலையை இப்படி ஞானிகளும் மகரிஷிகளும் அடிக்கடி வெவ்வேறு உருவங்களில் சுற்றி வருவதுண்டு. ஊனக்கண்ணால் நாம் அதை உணரமுடியாது. ஆனால், சேஷாத்ரி ஸ்வாமிகள் போன்ற ஞானிகளால் தான் மற்ற ஞானிகளை அடையாளம் காண முடியும். அவர்கள் எந்த உருவில் வந்தாலும்.

இன்று சேஷாத்ரி ஸ்வாமிகள் ஜெயந்தி.

குருவருள் அனைவருக்கும் கிட்டட்டும்!

========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.
Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=======================================================

Earlier articles on Seshadri Swamigal…

அது சாதாரண கை அல்ல தங்கக்கை!

குரு அடித்தாலும் அணைத்தாலும் அது கருணை தானே? – ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் லீலை!!

“எதற்கும் கவலைப்படாதே. உன்னுடைய மேலதிகாரியால் உனக்கு எந்த விதத் தொந்தரவும் ஏற்படாது!”

யாரை குருவாக ஏற்றுக்கொள்வது? உண்மையான குருவை எப்படி அடையாளம் காண்பது?

========================================================

Similar articles…

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் – மழலைகள் போதிக்கும் ஒரு பாடம்!

பள்ளி மாணவர்களுக்கு இலவச திருமுறை வகுப்பு – சங்கர் அவர்களின் அயராத சிவத்தொண்டு!

ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடிய திருஞானசம்பந்தர் குரு பூஜை!

‘தீயவை மாள, பிணிகள் அகல, எதிர்கால சந்ததியினர் சிறக்க, தளம் சார்பாக ஒரு தடுப்பூசி!’

எங்கே செல்லும் இந்த பாதை?

இன்பம் எங்கே, மகிழ்ச்சி எங்கே என்று தேடுகிறீர்களா ?

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம், வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக!

========================================================

[END]

5 thoughts on “கழுதைக்கு மரியாதை – இது குருவின் லீலை!

 1. திருவண்ணமலை நினைக்க நினைக்க முக்தி தான். தாங்கள் இன்னும் எவ்வளவு எழுதினாலும் திருவண்ணாமலை பெருமை கூறி முடியாது. நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். தாங்கள் comment இல் paste option வைப்பதினால் என்ன தவறு? வாசகர்களுக்கு சற்று சவுகாரியமாக இருக்குமே. ஏனென்றால் mobile இல் தமிழ் typing சரியாக வரவில்லை.

  1. தளத்தை COPY PROTECT செய்திருப்பதால் கமெண்ட் செக்ஷனில் கூட அது பாதிப்பை ஏற்படுத்துகிறது. மன்னிக்கவும். வேறு வழிகள் இருக்கிறதா என்று பார்க்கிறேன்.

   நன்றி!

 2. ஶ்ரீ சேஷா ஹரே! சேஷநாதா ஹரே!
  காருண்ய வாசனே, கைத்தொழுவோம்!
  வையகம் வாழ்த்தும், வைர நெஞ்ச்மே,
  கைத்தொழுவோம்!
  கொடுத்து கை சிவந்து கொடையாளியே!
  கைத்தொழுவோம்!
  கவலையை கலைத்திடும் கான நாதனே!
  கைத்தொழுவோம்!
  பெருமை சேர்த்திடும் பேரொளியே!
  கைத்தொழுவோம்!
  ஶ்ரீ சேஷா!…
  ஶ்ரீ சேஷா ஹரே! சேஷநாதா ஹரே!

 3. குருவின் லீலையை படித்து மெய் சிலிர்த்தேன். தேவாரம் படிக்கும் மாணவர்களுடன் தாங்கள் ஈசனை தரிசித்தது தாங்கள் செய்த புண்ணியம். தாங்கள் சிவனடியார்களுடன் அல்லவா சென்று உள்ளீர்கள். பதிவு அருமை தங்கள் நடையில் இந்த பதிவை படித்து எங்களுக்கு முக்தி கிடைத்தது போல் உள்ளது
  வாழ்க வளமுடன்
  நன்றி
  உமா வெங்கட்

 4. சார்,
  அருகில் இருந்தபோது அடியேன் திருவண்ணாமலை
  சென்றதில்லை . இப்போது தொலைவில் இருந்து தங்களால் இந்த தரிசனம் கிட்டியது. மிகவும் அருமை .தங்களின் தொடரை நாடும் அன்பன்///

  சோ. ரவிச்சந்திரன்
  கர்நாடகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *