Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, September 12, 2024
Please specify the group
Home > Featured > கோர்ட், கேஸ் மற்றும் கடன் பிரச்னைகளில் தவிப்பவர்கள் கவனத்திற்கு…

கோர்ட், கேஸ் மற்றும் கடன் பிரச்னைகளில் தவிப்பவர்கள் கவனத்திற்கு…

print
ம் தளத்தின் பிரார்த்தனை கிளப் பதிவுகளை பொருத்தவரை யாரை தலைமை ஏற்கச் செய்யவேண்டும், என்னென்ன பதிவுகளை அளிக்க வேண்டும் என்று நாம் முன்கூட்டியே தீர்மானிப்பதில்லை. நம்பினால் நம்புங்கள். அது தானாக நடக்கும் ஒன்று. எங்கோ யாரோ ஒரு ஜீவனின் அபயக்குரலுக்கும் தேடுதலுக்கும் பிரார்த்தனைக்கும் நம் பதிவுகள் பதிலாக அமைவதுண்டு. இது பல முறை நடந்திருக்கிறது. மகா பெரியவா தொடர்பான பதிவுகளில் கூட இப்படித் தான்.

சமீபத்திய திருவாரூர் பயணத்தில் நாம் கவர் செய்த ஆலயங்களில் முக்கியமான ஒன்று ‘திருச்சேறை’. இங்கு எழுந்தருளியிருப்பவர் ஸ்ரீ ருண விமோசன லிங்கேஸ்வரர். கடன் நிவர்த்தி பரிகாரத் தலம் இது.

தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலங்களில் இது காவிரி தென்கரை 95 வது தலம். திருநாவுரக்கரசரும், திருஞானசம்பந்தரும் பாடியிருக்கிறார்கள்.

Thirucherai 1
திருச்சேறை ஸ்ரீ ரிண விமோசன ஈஸ்வரர் கோவில் நுழைவாயில்

நோயும் கடனும் இல்லாத ஒரு வாழ்க்கையே ஒரு மனிதனுக்கு இன்று இன்றியமையாத தேவை.

இரு சக்கர வாகனம் வாங்கவேண்டும் என்றால் கூட இந்தக் காலத்தில் வங்கிக் கடனில் தான் அனைவரும் வாங்குகின்றனர். ரூ.60,000/- பெறுமானமுள்ள வாகனத்திற்கு இரண்டு ஆண்டுகளில் இவர்கள் செலுத்தும் தொகை எவ்வளவு தெரியுமா? ரூ.85,000/-க்கும் மேல். வீட்டுக்கடன் என்றால் கேட்கவே வேண்டாம்.

ஆக, நாம் அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ விரும்பாமலோ கடன் பட்ட வாழ்க்கை தான் வாழ்கிறோம்.

நாம் கூட சிலருக்கு கடன்பட்ட வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம். அது நமது கடந்த கால பொறுப்பற்ற செயல்பாடுகளின் விளைவு. ஒவ்வொன்றாக தீர்க்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இறைவனுக்கு நன்றி.

திருவாரூர் பயணத்தை முடித்துவிட்டு வியாழன் காலை வழக்கம்போல அலுவலகத்துக்கு வந்தோம்.

நமது அலுவலகத்துக்கு கூரியர் ஒன்று வந்தது. பார்த்திபன் என்னும் வாசகர் கோவையிலிருந்து அனுப்பியிருந்தார். தான் கடன் பிரச்னையில் சிக்கி தவிப்பதாகவும் தமக்காக பிரார்த்தனை செய்யும்படியும் கேட்டு பிரார்த்தனை கிளப்புக்கு கோரிக்கை அனுப்பியிருந்தார்.

நாம் திருச்சேறை சென்று நமது வாசகர்களின் ருண விமோசனத்திற்காக குருக்களிடம் அனைத்தையும் பேசி ஏற்பாடு செய்துவிட்டு வந்த நிலையில், இந்த கடிதம் வந்தது.

விரைவில் கடன் பிரச்னையில் சிக்கி தவிப்போருக்காக விசேஷ பிரார்த்தனை நடக்கவிருக்கிறது. அதில் கோரிக்கை சமர்பிக்க விரும்புகிறவர்கள் நமக்கு editor@rightmantra.com என்கிற முகவரிக்கு விரிவான மின்னஞ்சல் தங்கள் அலைபேசி எண்ணுடன் அனுப்பவும்.

சராசரி கடன்கள் உள்ளோர் அவசியமில்லை. அது அனைவருக்கும் உள்ளது தான். கடன் பிரச்சனை முற்றி தூக்கத்தையும் நிம்மதியையும் கெடுத்து, கழுத்தை நெரிப்பதாக உணர்கிறவர்களும் நிலைமை தங்கள் கைமீறிப் போய்விட்டதாக கருதுகிறவர்களும் கோரிக்கை அனுப்பவும்.

'திருச்சேறை' திருக்கோவில் அர்ச்சகர் திரு.சுந்தரமூர்த்தி குருக்களுடன்...
‘திருச்சேறை’ திருக்கோவில் அர்ச்சகர் திரு.சுந்தரமூர்த்தி குருக்களுடன்…

இதற்கிடையே அடுத்த பிரார்த்தனை கிளப் பதிவு – அதாவது 12/02/2016 வெள்ளி அன்று அளிக்கப்படவிருக்கும் பதிவு – வழக்குகளில் சிக்கி தவிப்பவருக்காக அளிக்கப்படவுள்ளது.

காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோவில் தலைமை அர்ச்சகர் திரு.நாகராஜ குருக்கள் தலைமை ஏற்கவுள்ளார்.

இதுவரை சுமார் ஆறேழு வாசகர்கள் வழக்குகளில் நியாயம் கிடைக்கவேண்டி பிரார்த்தனை கோரிக்கை அனுப்பியிருக்கின்றனர். மற்றவர்களும் விரைந்து அனுப்பவேண்டும்.

நாம் வாசகர்களின் பிரார்த்தனை விபரத்தை பெயர்ப் பட்டியலை எடுத்துக்கொண்டு விரைவில் காஞ்சி சென்று வழக்கறுருத்தீஸ்வரருக்கு அர்ச்சனை செய்யவிருக்கிறோம். ஸ்ரீ நாகராஜ குருக்களிடம் அது சமயம் அது ஒப்படைக்கப்பட்டு அவரை 14/02/2016 அன்று நடைபெறவிருக்கும் பிரார்த்தனையில் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்ளவிருக்கிறோம்.

வழக்குகளில் சிக்கி தவிப்பவர்கள், தங்களுக்கு நியாயமும் நிவாரணமும் வேண்டுபவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவறவிடவேண்டாம்.

மற்றவர்கள், ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகளை சமர்பித்து வெளியானவர்கள், வெளியாகாதவர்கள் யாவரும் இந்த பிரார்த்தனையில் பங்கேற்று மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்து வாருங்கள். உங்கள் கர்மா தானாக குறையும். கூட்டுப் பிரார்த்தனையின் சக்தி அளவிட முடியாதது.

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே !
– திருஞானசம்பந்தர்

* இன்றைய பிரார்த்தனை கிளப் பதிவு இன்று மாலைக்குள் அளிக்கப்பட்டுவிடும். இதில் வேறு ஒருவர் தலைமை ஏற்கவிருக்கிறார்.

** ஏற்கனவே ஏதேனும் கோரிக்கை அனுப்பி அது இன்னும் வெளியாகவில்லை என்றால் அதே மின்னஞ்சலை மறுபடியும் நமக்கு அனுப்பவும். தவறாக நினைக்கவேண்டாம். மின்னஞ்சலில் வரும் பிரார்த்தனைகளை ஆர்கனைஸ் செய்து குறித்த பதிவில் வெளியிடுவது சற்று சவாலான விஷயம்.

========================================================

இதுவரை நம் பயணத்தில் துணை நின்ற அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி!

வரும் பிப்ரவரி 1 ஆம் தேதியோடு தளத்திற்கு என்று அலுவலகம் துவக்கி ஓராண்டு நிறைவடைய இருக்கிறது. இந்த தளம் துவக்கி மூன்றரை ஆண்டுகள் ஆகியிருந்தாலும் தளத்திற்கென்று இதன் பணிகளை கவனிக்க மகத்தான இலட்சியங்களோடு நமது பணியை துறந்து பிரத்யேகமாக ஒரு அலுவலகத்தை சென்ற ஆண்டு பிப்ரவரி 1 துவக்கினோம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு மேல் சமாளிக்க முடியாது என்கிற அளவிற்கு தற்போது நிலைமை போய்விட்ட நிலையில் அடுத்து என்ன செய்வது என்று தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்.

கையில் திறமை இருக்கிறது. நெஞ்சில் துணிவு இருக்கிறது. விரல்கள் பத்தும் மூலதனம். இதுவே நம் தாரக மந்திரம். பிழைப்புக்கு ஏதேனும் செய்து வாழ்க்கையில் ஜெயிப்பது ஒன்றும் நமக்கு பெரிய விஷயமல்ல. மனதுக்கு பிடித்ததை செய்யவேண்டும். அது தான் நம் முன் உள்ள சவால். பார்க்கலாம் இறைவன் என்ன நினைக்கிறான் என்று.

அநேகமாக இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் இந்த தளம் நிறுத்தப்படலாம். நன்கு யோசித்து தான் இதை பதிவு செய்கிறோம். ஓராண்டு நாம் தாக்கு பிடித்ததே பெரிய அதிசயம் தான். வரும் பிப்ரவரி இறுதியில் நடைபெறும் சிவராத்திரி சிறப்பு உழவாரப்பணியே தளத்தின் கடைசி உழவாரப்பணியாக இருக்கும். (2013 ஆம் ஆண்டு இதே சிவராத்திரி தான் நமது முதல் உழவாரப்பணி நடைபெற்றது!) இனி தளத்தின் ஆலய தரிசனம், சாதனையாளர் சந்திப்பு ஆகியவை நடைபெறாது. ஏற்கனவே நடைபெற்ற ஆலய தரிசனம் மற்றும் சாதனையாளர் சந்திப்புக்கள் இந்த காலகட்டங்களில் அளிக்கப்பட்டுவிடும். (காஞ்சிபுரத்தில் மட்டும் ஏற்கனவே நாம் ஒப்புக்கொண்ட ஒரு சந்திப்பு பாக்கியிருக்கிறது.)

திங்கட்கிழமை விரிவாக பேசுகிறோம். இதுவரை நம் பயணத்தில் துணை நின்ற அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி!

– ரைட்மந்த்ரா சுந்தர், ரைட்மந்த்ரா.காம்

========================================================

காஞ்சி வழக்கறுத்தீஸ்வரர் தொடர்பான விரிவான ஆலய தரிசன பதிவுக்கு....

ஸ்ரீரங்கம் யானையும் வழக்கறுத்தீஸ்வரரும் – வழக்குகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு ஒரு அருமருந்து!

========================================================

சந்தான பாக்கியம், ருண விமோசனம், உத்தியோக ப்ராப்தி குறித்த கோரிக்கைகள் நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று நிறைவேறிய சம்பவங்களுக்கு…

Success stories of our Rightmantra Prayer Club : ‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

========================================================

Please check… 

வெற்றிகரமான பிரார்த்தனைக்கு ஒரு வழிகாட்டி!

உங்கள் பிரார்த்தனைகள் சுலபமாக நிறைவேற வேண்டுமா?

ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் – வாருங்கள் விதியை மாற்றுவோம்!

அபலையின் கண்ணீரை துடைத்த ஆபத்பாந்தவன்!

========================================================

[END]

14 thoughts on “கோர்ட், கேஸ் மற்றும் கடன் பிரச்னைகளில் தவிப்பவர்கள் கவனத்திற்கு…

  1. வணக்கம்
    வழக்குகளிலும் கடனிலும் சிக்கித் தவிப்பவர்களுக்காக கூட்டுப்பிரார்த்தனை ஏற்பாடு செய்திருப்பதற்கு நன்றி
    தாங்கள் குறிப்பிட்டிருக்கும் ஒரு செய்தி மிகுந்த கவலையளிக்கிறது
    நம் தளம் என் போன்ற நிறைய வாசகர்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது
    நிச்சயம் கடவுள் அருளால் நம் தளம் தொடர்ந்து சிறப்பாக நடைபெறும் என்று நம்புகிறோம் நடைபெற வேண்டும் என விரும்புகிறோம்
    அதற்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்

  2. சுந்தர்ஜி
    ஈசன் தங்களை ஒரு போதும் கைவிடமாட்டார். வேறு சொல்வதற்கு வார்த்தைகள்
    இல்லை.

  3. திருச்சேறை கோவில் கோபுர நுழைவு வாயில் படம் நன்றாக உள்ளது. கடனில் சிக்கித் தவிப்பவர்களுக்காக பிரார்த்தனை பண்ணப் போவது பற்றி மிக்க மகிழ்ச்சி. பிரார்த்தனை நாள் 14.1 2016 என்று உள்ளது . 14.2.2016 என்று மாற்றவும் .

    தளம் அலுவலகம் ஆரம்பித்து ஒரு வருடத்திற்குள் தாங்கள் எவ்வளவு பெரிய அறிய செயல்களை செய்து உள்ளீர்கள்.. ஏன் தளத்தை நிறுத்தப் போகிறீர்கள். உழவாரப் பணியில் நாங்கள் விடாமல் இறைவனுக்கு சேவை செய்து வந்தோம் தங்கள் தளம் மூலம். தயவு செய்து உங்கள் எண்ணத்தை மாற்றுங்கள். தங்கள் தளம் லட்சக் கணக்கில் வாசகர்கள் கொண்ட தளமாக நிச்சயம் வரும். நாங்கள் உங்கள் வெற்றிக்கு பின்னால் துணை நிற்போம்…. தேனீயைப் போல் சுறு சுறுப்பாக ஓடி கொண்டு நம் வாசகர்களுக்காக எவ்வளவோ பல நல்ல விசயங்களை தங்கள் எழுத்து நடையில் அழகாக கூறி இருக்கிறீர்கள். தங்கள் தளம் தொடர வேண்டும். கஷ்டப்பட்டு இந்த உன்னத நிலையை அடைந்த நீங்கள் பாதியில் விட்டு விடாதீர்கள். நீங்கள் வெற்றியின் விளிம்பில் உள்ளீர்கள். மேலும் பல அறிய பல சாதனைகளை செய்ய வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்
    நன்றி
    உமா வெங்கட்

  4. டியர் சுந்தர்,

    நீங்கள் எந்த ஒரு மன நிலையில் – இந்த முடிவை எடுத்து இருப்பீர்கள் என்பதும், இப்படி ஒரு அறிவிப்பு எடுக்கும் முன்பு , மனதுக்குள் எண்ண யுத்தம் எவ்வளவு நடந்து இருக்கும் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் கடந்த மூன்று வருடங்களாக செய்த சேவை – அவ்வளவு எளிதில் யாருக்கும் புரிந்துவிட போவதில்லை.

    வாசகர்கள் சந்தா என்பது ஓரளவுக்கு சாத்தியம் என்றாலும், இது ஒரு அவசர யுகம். இங்கு வருவதில் வாசகர்களில் பாதி – பொருளாதார ரீதியில் இன்னும் வளர வேண்டிய நிலையில் இருப்பவர்களே. மீதி உள்ளவர்கள் மனதளவில் வளர வேண்டிய நிலையில் இருப்பவர்கள் . ஆனால், வாசகர்கள் ஒத்துக்கொள்ள மறுத்தாலும் அதுதான் உண்மை… நீங்கள் ஒவ்வொரு பதிவிலும் “HELP FOR THE MISSION” என்று முழு தகவல் அளித்து இருந்த போதும், மரத்துப் போன நெஞ்சங்களுக்கு இன்னமும் கூட / இனியும் அது உறைக்கப்போவதில்லை. மாதத்திற்கு ஒரு நூறு ரூபாய் கூட மனமுவந்து தரவில்லை எனில் என்ன சொல்வது…!

    நீங்கள் நிறுத்தினாலும் அவர்களும் கலங்கிப் போய் நிற்க மாட்டார்கள். “சார், நிறுத்திட்டாரு – அதுக்கு என்ன செய்றது..? பொழைக்க தெரியாத மனுஷன், இப்போதாவது தோணிச்சே” ன்னு கூட நினைக்கலாம்….. ஒருவேளை , உங்கள் பிரபலம் கூட உள்ளுக்குள்ளே பொறாமை ஏற்படுத்தி இருக்குமோ..? இன்னும் எவ்வளவு நாள் , பார்க்கலாம் என்று நினைத்தவர்களுக்கு இது குதூகலமாக கூட இருக்கும். சரி… வாசக நண்பர்கள் தான் அப்படி என்றால், உங்கள் பதிவுகளை அச்சு பிசகாமல் பதிவிடும் வார இதழ் பத்திரிகை நண்பர்கள் தான் கலங்கி விடுவார்கள்…! அனேகமாக தளத்தை மூடி விட்டால் என்ன செய்வது என்று , இன்னும் ஓரிரு தினங்களுக்குள்ளேயே – உங்கள் ஒவ்வொரு பதிவும் காப்பி & பேஸ்ட் செய்யப்படும்…!

    சரி விடுங்கள்…. ! பொருளாதார ரீதியாக உங்களுக்கு ஒரு முன்னேற்றம் கிடைக்க , நல்ல ஒரு வேலையோ – சுய தொழிலோ உங்கள் மனதில் இருந்தால், உங்கள் முடிவுக்கு ஒரு வாசகனாக / நண்பனாக கட்டுப்படுகிறேன்..! இல்லை மறு பரிசீலனை செய்ய வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் – நாங்கள் என்ன செய்தால் சரியாக இருக்கும் என்று நீங்கள் நினைப்பதை தயங்காமல் வெளிப்படுத்தலாம்….!

    இந்த தளம் ஒரு பொக்கிஷம் – இன்னும் தொடர்ந்து நடந்தால் நன்றாக இருக்கும் , என்று நினைக்கும் ஆயிரக் கணக்கான உள்ளங்கள் என்று பொய் சொல்ல விரும்பவில்லை …. உண்மையாக நினைக்கும் பத்து / பதினைந்து உள்ளங்களில் நானும் ஒருவன்… என்ன செய்யலாம்… முயற்சி செய்து பார்ப்போமே… இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கிறது அல்லவா…? நான் இதை போனிலேயே சொல்ல முடியும் என்றாலும், கமெண்ட் மூலம் ஓரிரு பேராவது இணைவார்கள் என்று நம்புகிறேன் … பார்ப்போம்..!

    ரிஷி

    1. டியர் ரிஷி,
      தங்கள் கருத்துக்களை அவசியம் கவனத்தில் கொள்கிறேன்.
      தங்கள் அன்புக்கு நன்றி.

  5. டியர் சுந்தர்ஜி,

    இந்த முடிவு அதிர்ச்சியை அளிக்கிறது. எப்போதும், தாங்கள் ஒரு முக்கிய முடிவினை எடுக்கும் போது தங்களின் நண்பர்களையும், நலம் விரும்பிகளையும் ஆலோசித்தே முடிவினை எடுப்பீர்கள். என்னையும் கலந்து ஆலோசிப்பிர்கள். ஆனால், இம்முறை தாங்கள் திடீர் என்று அறிவிக்காமல் இந்த முடிவினை எடுத்தது அதிர்ச்சி அளிக்கிறது. தாங்கள் எவ்வளவு வேதனைக்கு உட்பட்டு இருந்தால் இந்த முடிவினை எடுத்து இருப்பீர்கள் என்று புரிகிறது. ஆனால், கலங்க வேண்டாம். கூடிய விரைவில் இறைவன் தாங்கள் இவ்வழியிலேயே தொடர்ந்து செயல்பட வழிகாட்டுவான்.

    வாசகர்களுக்கு,

    சுந்தர் அவர்களின் நலன் விரும்பி என்ற முறையில் சிலவற்றை கூற கடமைப்பட்டுள்ளேன்.

    சுந்தர் அவர்கள் எத்தனை கஷ்டப்பட்டு இந்த தளத்தினை ஆரம்பித்தார், எந்த சூழ்நிலையில் ஆரம்பித்தார், அவர் இலட்சியங்கள் என்ன என அனைத்தையும் நானறிவேன். அவர் வேலையில் இருக்கும் போதும் அந்த வேலை பளுவிற்கிடையிலும் எவ்வளவு சிறப்பாக நடத்தினார் என்றும், இப்போது எவ்வளவு சிரமத்திற்கு இடையிலும் இத்தளத்தை நடத்துகிறார் என்றும் அவரை நெடுங்காலமாக அருகில் இருந்து கவனிப்பதால் எனக்கு தெரியும். அவருடன் நெருங்கி பழகுபவர்களுக்கு இன்னும் நன்றாக தெரியும்.

    நாம் சுலபமாக படிக்கும் ஆலய தரிசனம், சாதனையாளர் சந்திப்பு, இன்னும் பல பதிவுகளின் பின்னணியில் உள்ள உழைப்பு பிரமிக்க வைக்கும் ஒன்று. ஒவ்வொன்றிலும் ஏற்படும் செலவுகள் அத்தியாவசியமான ஒன்று. தவிர்க்க முடியாததும் கூட. அவருடன் காலடி, நாகங்குடி, கோவிந்தபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு நான் சென்று வந்ததால் இதை சொல்கிறேன்.

    இத்தனை நாள் அவர் கஷ்டத்துடன் நடத்தி வந்தாலும் இதுகாறும் அவர் இப்படி ஒரு முடிவை சிந்தித்ததே இல்லை. யாரோ அவரை வருத்தப்படுத்தியிருக்கவேண்டும் என்று கருதுகிறேன்.

    ஒருவேளை இத்தளத்தினை நிறுத்திவிட்டு அவர் சொல்வது போல முழு மூச்சாக தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்று ஒரு வேலைக்கு செல்ல ஆரம்பித்தால், அவருக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை. ஆனால் நமக்கு தான். இந்த சமூகத்துக்கு தான். ஏனெனில் இன்றைக்கு இதையெல்லாம் அதுவும் இத்தனை நேர்த்தியுடன் செய்ய யாரும் இல்லை.

    @ சுந்தர்ஜி

    உங்கள் முடிவை மேலும் ஒரு ஆண்டுக்கு ஒத்திப்போடுங்கள். இதை மற்றவர்களை மனதில் வைத்து சொல்லவில்லை. நான் உங்களுக்கு செய்ய நினைக்கும் விஷயத்தை மனதில் வைத்து சொல்கிறேன்.

    என் வார்த்தையை நீங்கள் இதுவரை தட்டியதில்லை. ஆகையால் தான் என்ன ஆலோசிக்காமல் இந்த முடிவை வெளியிட்டீர்கள் என்று கருதுகிறேன்.

    *****************************************************************

    Extend your time till feb 2017. this is my request on behalf of our readers.

    *****************************************************************
    by,
    Chitti,
    Thoughts becomes things.

    1. சிட்டி,
      தங்களுடன் ஆலோசிக்காமல் இந்த பதிவை அளித்தமைக்கு முதற்கண் என்னை மன்னிக்கவேண்டும்.
      ஒரு இக்கட்டான சூழல். என் நிலைமையை புரிய வைக்க வேறு வழி தெரியவில்லை.
      உங்கள் கருத்தக்களை ஆலோசனைகளை கவனத்தில் கொள்கிறேன்.
      நன்றி

  6. பிரார்த்தனை பதிவு என்று நினைத்து ஆர்வமுடன் பதிவை படித்தால் இப்படி ஒரு பேரதிர்ச்சியை கொடுப்பீர்கள் என்று நினைக்கவில்லை.

    நிச்சயம் இதை நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு தான் எடுத்திருப்பீர்கள். உங்களுக்கு அறிவுரை கூறும் தகுதி எங்களுக்கு இல்லை. ஆனால், உங்கள் நலம்விரும்பிகள் இந்த தளத்தின் அபிமானிகள் என்கிற உரிமை, தகுதி நிச்ச்சயம் உண்டு. அதை யாரும் மறுக்கமுடியாது.

    வெண்ணை திரண்ட நேரம் தாழி உடைந்தது போல ஆகிவிடக்கூடாது. இதுவரை நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும் காலம் இது. இன்னும் சற்று பொறுத்திருக்க வேண்டுகிறோம். நல்லதே நடக்கும்.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  7. டியர் சுந்தர்ஜி,

    கொஞ்சம் பொறுமையாக இருங்கள். இதுவுஉம் Kadundhu போகும்.

  8. டியர் சுந்தர்,

    இந்த முடிவு மிகவும் வருத்தமளிக்கிறது. மறு பரிசீலனை செய்யவும்.என்ன நிர்பந்தத்தில் இந்த முடிவை எடுத்தீர்கள் என்று தெரியாது. ஆனால் இத்தனை நாட்கள் நீங்கள் உழைத்த உழைப்பு வீணாகி விடக்கூடாது. உங்களுக்கு உரிய அங்கீகாரம் கண்டிப்பாக கிடைக்கும். இறைவன் துணை நிர்ப்பான். நிச்சையம் நல்ல வாசகர்கள் / உள்ளங்கள் என்றும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்கள் பணி தொடரும் என்று நம்புகிறேன்.

  9. அன்புடையீர், தங்கள் தளத்தை தற்போது தான் காண நேர்ந்தது..உடன்தங்கள்முந்தைய பதிவுகளையும் படித்தேன் – அருமையான சேவையை பல வகைகளில் செய்துவரும் தாங்கள் பொருளாதார இடர்பாடுகளால் இந்த இணையதளத்தை வெகு விரைவில் மூடவேண்டிய சூழ்நிலையில் உள்ளதைக் குறிப்பிட்டுள்ளீர்கள். கவலையற்க ! ஷீரடி பாபாவின்கருணை தங்களுக்கு நல்வழியைக்காண்பித்து தங்கள் இணையதளத்தை மிகச்சிறப்பாகத்தொடர வழி வகுக்கும் !!

    இந்த இணயதளத்தைத் தொடர மாதாமாதம் எந்தெந்த வகையில் எவ்வளவு தொகை தேவைப்படும் என்ற (அலுவலக வாடகை,மின் கட்டணம்,இன்டர்நெட் தொடர்புச் செலவு,காகிதம் உள்ளடங்கிய ஸ்டேஷனரி மற்றும் நிர்வாகச் செலவுகள் என்று இனம் வாரியான பட்ஜெட் பட்டியலை வெளியிட்டால், ஆர்வமுள்ள நண்பர்கள் குறைந்த பட்சம் அந்தந்த இனங்களைத்ததெடுத்துக்கொண்டு தொகை அனுப்பி உதவுவார்கள். மட்டுமல்லாது, தங்கள் இணயதளத்தை தவறாமல் படிக்கும் அன்பர்கள் அவரவர்கள் பணிபுரியும் அலுவலக நிர்வாகம் -உடன் பணிபுரியும் நண்பர்கள் -தெரிந்த வணிக நிறுவனங்கள்்மூலம்நிதி உதவி கிடைக்க வழிசெய்ய வாய்ப்பு கிடைக்கும்..சுருக்கமாக, கோவில்களில் விமானத்துக்கு வர்ணம் பூச, தரைத்தளம் அமைக்க, பந்தல்போட என்று பட்டியலிட்டு பக்தர்கள்தங்கள்நிதி வசதிக்கேற்ப ஏதேனும் ஒரு திருப்பணிக்கு ஸ்பான்சர் செய்வது போல தங்கள் இணயதளத்தை தொடர்வதுக்கு துணை நிற்பார்கள். நன்றி.. சண்முகம்

    1. தங்கள் எண்ணத்திற்கு முதற்கண் எனது நன்றி!

      நீங்கள் பட்டியலிட்டுள்ளது போல தளத்தின் அலுவலக மற்றும் நிர்வாக செலவுகளுக்கு மட்டுமே குறைந்தது ஒவ்வொரு மாதமும் ரூ.25,000/- தேவை. (தளம் தொடர்பான வெளியூர் பயணங்கள் மற்றும் ஆலய தரிசனங்களின் போது ஏற்படும் செலவுகளை இதில் சேர்க்கவில்லை.)

  10. டியர் சுந்தர்ஜி,

    வணக்கம். இது ஒரு அதிர்ச்சியான செய்தி. சென்ற ஞாயிற்றுகிழமை நேரில் பேசியது இன்னும் நெஞ்சில் இருக்கிறது. உங்கள் சூழ்நிலை உங்களுக்குத்தான் தெரியும். இது வரை சிறிய தொகை மட்டுமே விருப்ப சந்தாவாக செலுத்தியிருக்கிறேன். இனிமேலும் தொடர்ந்து செய்வேன். ஆனால், அது மட்டுமே உங்கள் செலவுகளை, அதற்கான தேவைகளை பூர்த்தி செய்யுமா என்று தெரியவில்லை. எனவே உங்களை கம்பெல் செய்ய முடியவில்லை. இருப்பினும், ஒன்றே ஒன்று சொல்ல எண்ணுகிறேன். ஒரு சோதனை வருகிறது என்றால், உடனேயே ஒரு பெரிய நன்மையையும் சேர்ந்து வரும் என்பது என்னுடைய/ மற்ற சிலருடைய அனுபவமாகும்.

    எனவே, தயை கூர்ந்து தளத்தை தொடர முயற்சி செய்யவும். அடியேனும், தங்களது நலம் விரும்பிகளும் தொடர்ந்து உதவ முயற்சிக்கிறோம். நன்றி.

    அன்புடன்,
    நாகராஜன் ஏகாம்பரம்

  11. Dear SundarJi,

    Please continue your service with out any second thoughts.. rest all will go well.. god is always with you.

    Rgds,
    Ramesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *