Home > ஆன்மிகம் (Page 5)

குரு வார்த்தையே துன்பம் தீர்க்கும் அருமருந்து!

சில முக்கிய பதிவுகளை எழுதிக்கொண்டிருக்கிறோம். இன்னும் நிறைவு பெறவில்லை. எழுதும் பதிவுகளில் தகுந்த புகைப்படங்கள் அல்லது ஓவியம்  சேர்த்து அனைத்தும் நன்றாக வந்த பிறகே பதிவை அளிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். இதனிடையே காத்திருக்கும் உங்களுக்காக ரமணர் தொடர்புடைய அருள் விளையாட்டுக்களை தந்திருக்கிறோம். யாரோ சிலருடைய கேள்விகளுக்கோ அல்லது ஆன்மாவின் விசும்பலுக்கோ இவை பதிலாக அமையலாம். எனவே கவனமாக படிக்கவும்! முடிந்தால் திருவண்ணாமலை சென்று ரமணாஸ்ரமத்தை தரிசித்துவிட்டு வரவும்! மேலும் இந்தப் பதிவை இன்று பகிர்வதில் காரணமிருக்கிறது.

Read More

“பிரபு எந்தன் குறைகளை மனதிற்கொள்ளாதே…” – விவேகானந்தரை கலங்க வைத்த நடனமாது!

ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாற்றை படித்து வருவதாக நாம் கூறியது நினைவிருக்கலாம். கடவுளின் ஆசி, குருநாதரின் கட்டளை இந்த இரண்டை மட்டும் வைத்துக்கொண்டு உலகம் முழுதும் சுற்றிச் சுற்றி வந்து அவர் பார்த்த வைத்தியம் இருக்கிறதே, பிறர் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத ஒன்று. சுவாமிஜியின் வரலாற்றை படிக்க படிக்க அத்தனை திகைப்பு, பிரமிப்பு, சுவாரஸ்யம். இன்று நாம் சரசாரி வாழ்க்கையில் சந்தித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு சூழ்நிலைக்கும்

Read More

பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே…!

நமது ஆலய தரிசனங்களின் போது கோவில் உண்டியல்களில் பணம் போடுவதை விட கோவில் அர்ச்சகர்கள், மங்கள வாத்தியக் கலைஞர்கள், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணி செய்யக்கூடிய துப்புரவு பணியாளர்கள் மற்றும் கோவில் உற்சவங்களில் இன்னபிற பணிகளிலும் உறுதுணையாக இருக்கும் ஆலய ஊழியர்கள் - இவர்களுக்கு தான் உதவுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம் என்பதை வாசகர்கள் அறிவீர்கள். பொதுவாக கோவில்களில் பூஜை செய்ய ஆட்கள் கிடைப்பது குதிரைக்கொம்பாகிவிட்டது. ஒவ்வொரு கோவிலிலும் ஆறு கால பூஜை நைவேத்தியங்கள்

Read More

திருவிடைமருதூரில் உ.வே.சா அவர்கள் கொடுத்த வரம்! யாருக்கு, ஏன்?

சிவபுண்ணியம் பற்றி நம் தளத்தில் பல்வேறு கதைகளை படித்து வந்த வாசகர்கள், சிவாபராதம் பற்றி நேற்றைய பதிவில் அறிந்துகொண்டிருப்பீர்கள். சைவ மடத்தில் எச்சில் துப்பிய காரணத்தினால் துப்பியவர்களுக்கு நரகம் கிடைத்த கதையை பார்த்தீர்கள். நடைமுறையில் இதெல்லாம் சாத்தியம் தானா? இப்படியெல்லாம் வாழமுடியுமா என்று தோன்றும். முடியும். நிச்சயம் முடியும். தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்கள் திருவிடைமருதூருக்கு சென்றபோது அவருக்கு இத்தகைய அனுபவம் ஏற்பட்டது. அதை அவர் எப்படி கையாண்டார் என்று

Read More

கனவிலும் செய்யக்கூடாத சிவாபராதங்கள் சில! – சிவபுண்ணியக் கதைகள் (14)

சிவபுண்ணியம் என்பது போல சிவாபராதம் (சிவத்துரோகம்) என்கிற ஒன்று இருக்கிறது. அது பற்றி நீங்கள் அவசியம் அறிந்துகொள்ளவேண்டும். எந்த சூழ்நிலையிலும் எந்தக் காலத்திலும் அவற்றை செய்யாமல் உங்களை காத்துக்கொள்ளவேண்டும். கடுகளவு சிவபுண்ணியம் கூட எப்படி நம்மை நல்வழிக்கு இட்டுச்சென்று கையிலாயப் பதவியை தருகிறதோ அதே போன்று கடுகளவு சிவாபராதம் கூட நம்மை மீளா நரகில் தள்ளிவிட்டுவிடும். எனவே இது குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கீழகண்ட சிவாபராதம் பற்றிய கதை நந்திதேவர் சதானந்த முனிவருக்கு கூறியது. நமது தளத்தின்

Read More

கீதை பிறந்த இடம் – ஒரு சிறப்பு பார்வை!

இந்துக்கள் வாழ்க்கையில் காசியை போலவே குருஷேத்திரமும் ஒரு முக்கியமான இடம் என்றால் மிகையாகாது. இங்கு தான் பாரதப் போர் நடைபெற்றது. கீதையும் பிறந்தது. குருஷேத்திரப் புனித பூமி ஹரியானா மாநிலத்தில் சரஸ்வதி, திரிஷ்டாவதி நதிகளுக்கிடையே உள்ளது. இங்கு பாரதப்போரில் நினைவாகப் பல நினைவுச் சின்னங்கள் எழுப்பப்பட்டுள்ளன. கீதை பிறந்த இடமான ஜோதிஷர், பீஷ்மர் அம்புப் படுக்கையில் கிடந்தபோது அவர் தாகம் தணிக்க அர்ஜூனன் அம்பினால் உருவாக்கிய பீஷ்ம குண்டம், கிருஷ்ணர்

Read More

எப்படி வாழவேண்டும்? வாரியார் காட்டும் வழி!

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளை பற்றிய அறிமுகம் நம் வாசகர்களுக்கு தேவையில்லை. தான் உபதேசித்தபடி கடைசி வரை வாழ்ந்த மகான். நாத்திகம் புரையோடிக்கொண்டிருந்த தமிழகத்தில் பாமரர்க்கும் புரியும் விதம் தன் இனிய எளிய தமிழால் நமது இதிகாசங்கள், புராணங்கள் இவற்றை பற்றி எடுத்துரைத்து பக்தியும் ஆன்மீகமும் தழைக்கச் செய்தவர். மிகப் பெரிய ஆன்மீக தத்துவங்களை கூட இவரைப் போல மிக எளிதாக யாரும் நமக்கு புரியவைக்கமுடியாது. இன்று ஆவணி சுவாதி. வாரியார்

Read More

சிறுவாபுரி முருகன் திருக்கல்யாணம்!

சென்னை சைதையை சேர்ந்த 'அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழு'வினர் ஒவ்வொரு ஆண்டும் சிறுவாபுரியில் முருகன் திருக்கல்யாணம் நடத்துகின்றனர். இந்த ஆண்டு திருக்கல்யாணம் வரும் ஞாயிறு காலை 04/09/2016 நடைபெறவுள்ளது. முழுவிபரங்கள் இந்தப் பதிவில் அளிக்கப்பட்டுள்ளது. திருமணத் தடை ஏற்பட்டாலோ பல ஆண்டுகள் திருமணம் நடைபெறாமல் இருந்தாலோ மற்றும் ஜாதகத்தில் இராகு தோஷம், களத்திர தோஷம், காலசர்ப்ப தோஷம் ஆகிய தோஷங்கள் இருந்தாலும் இந்த சிறுவாபுரி முருகனை மனம் உருகி நாடி வந்தால்

Read More

தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்ட எமதர்மன்! ஏன்? எதற்கு? – சிவபுண்ணியக் கதைகள் (13)

சிவபுண்ணியத்தின் மற்றுமொரு பரிமாணத்தை விளக்கும் கதை இது. சிவபுண்ணியத்தின் மகத்துவத்தை அத்தனை எளிதில் யாரும் விளக்கிவிடமுடியாது. அது கற்பனைக்கு அப்பாற்பட்டது. இந்த தொடரில் இடம்பெறும் ஒவ்வொரு கதையும் ஒரு மிகப் பெரிய நீதியை உணர்த்தும். 'இப்படியெல்லாம் நடக்குமா? இவர்களுக்கெல்லாம் நற்கதியா?' என்று ஆராய்ந்துகொண்டிருக்காமல், கடலில் மூழ்கி தத்தளிப்பவன் எப்படி ஏதோ ஒன்று பிடித்துக்கொள்ள கிடைத்தால் கரையேற முயற்சிப்பானோ அதையே போல, பிறவிக்கடலில் தத்தளிப்பவர்கள் இந்த சிவபுண்ணியத் தொடரில் இடம்பெறும் ஏதாவது

Read More

சுந்தரர் அவதரித்த தலத்தில் ஒரு சுகானுபவம்!

வாசகர்களுக்கு வணக்கம். இரண்டு நாட்களாக நாம் சென்னையில் இல்லை. திடீர் பயணம். இன்று காலை தான் சென்னை திரும்பினோம். இந்த வார கூட்டுப் பிரார்த்தனைக்கு தலைமையேற்றிருக்கும் சோளீஸ்வரர் கோவில் அர்ச்சகர் திரு.ராஜா குருக்களை சந்தித்து பிரார்த்தனை விபரங்களை, அன்பர்களின் பெயர் ராசி நட்சத்திர விபரங்களை அளிக்க கடந்த சனிக்கிழமை காலை பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவில் சென்றிருந்தோம். அவரை சந்தித்து பட்டியலை அளித்து அப்போதே ஒரு அர்ச்சனை அனைவரின் பெயர்களுக்கும் செய்தோம். மறுநாளும் அதாவது ஞாயிறு மாலை

Read More

கண்ணன் பிறந்த போது பூமி எப்படி உணர்ந்தது தெரியுமா? – கிருஷ்ண ஜெயந்தி SPL 2

பூமியில் அசுரர்கள் பெருகியதாலும் அதர்மம் தலைதூக்கியதாலும் நல்லவர்கள் அழிந்து தர்மம் சாய்ந்ததாலும் பாரம் தாங்காது கதறிய பூமாதேவி, ஒரு பசுவின் வடிவத்தில் சென்று தேவர்கள் சபையில் அழுது முறையிட்டாள். "பிரம்மதேவரே பாபிகளின் பாரம் தாங்கமுடியவில்லை. என் மீது படிந்துள்ள இந்த பாரத்தை குறைக்க நீங்கள் தான் ஏதேனும் வழிசெய்யவேண்டும்!" என்றாள். "இதை நான் தீர்க்கமுடியாது பூமி மாதா. வாருங்கள் எல்லோரும் பாற்கடல் சென்று பரந்தாமனைப் பணிவோம். அவரே இதை தீர்க்கவல்லவர்" என்று கூறிய

Read More

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் சில உண்மைகள், சில விளக்கங்கள் – கிருஷ்ண ஜெயந்தி SPL 1

இன்று கண்ணனின் பிறந்த நாள், கோகுலாஷ்டமி. மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் மிக மிக முக்கியமான அவதாரம் கிருஷ்ணாவதாரம். மக்கள் சரியாக புரிந்துகொள்ளத் தவறிய அவதாரமும் அது தான். கிருஷ்ணரின் பாத்திரத்தை பற்றி எழுதுவது சாதாரண விஷயம் அல்ல. மிக மிக கடினமான ஒன்று. அவருடைய அவதாரத்தின் உண்மையான நோக்கத்திற்கும் நமது புரிதலுக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை போன்றது. கேட்டதை வைத்து படித்ததை வைத்து நாமாகவே கற்பனை செய்தவை தான் அதிகம். ஒரு

Read More

சிறப்பு ஈனும், செல்வமும் ஈனும்…

நமக்கு ஒருவர் எதுவும் திருப்பி செய்ய முடியாது என்கிற நிலையில் நாம் அவருக்கு செய்யும் உதவி தான் உண்மையான உதவி. சொல்லப்போனால் அதுதான் உண்மையான தருமமும் கூட. 'தர்மம்' என்றால் பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடுவது என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அதற்கு மேல் தர்மம் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் பலருக்கு தெரிவதில்லை. தர்மம் என்பதன் அர்த்தம் 'வாழும் முறை'. அது ஒரு நெறிமுறைகளின் தொகுப்பு. 'தானம்' என்பது அதில் ஒரு அங்கம். நம்மை சுற்றியுள்ள நம்மை

Read More

பட்டினத்தார் கோவில் – அன்றும், இன்றும்!

இன்றைக்கு துறவறம் என்றால் அவரவர் சௌகரியம் போல வாழ்கிறார்கள் உடுத்துகிறார்கள். தங்கள் இஷ்டத்துக்கு அர்த்தம் கற்பிக்கிறார்கள். ஆனால் 'துறவு' என்கிற சொல்லுக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர் பட்டினத்து அடிகள் என்று அழைக்கப்பட்ட பட்டினத்தார். சென்னையில் திருவொற்றியூரில் கடற்கரையில் பட்டினத்தாருக்கு கோவில் உள்ளது. இவரது பாடல்கள் பதினோராம் திருமுறையில் உள்ளன. சொற்சுவையும், பொருட்செறிவும் அமைந்துள்ள இவரது பாடல்கள் மிக மிக எளிமையானவை. பாமரர்க்கும் எளிதில் விளங்குபவை. நேற்று முன்தினம் ஆடி உத்திராடம் அவரது குருபூஜை.

Read More