Home > சிவராத்திரி (Page 4)

வீசியெறிந்த ஓலைச்சுவடியும் கீழே கொட்டிய அரிசியும் – சிவபுண்ணியக் கதைகள் (12)

சிவபுண்ணியக் கதைகள் யாவும் பார்ப்பதற்கு ஒன்று போல இருந்தாலும் ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டவை. மிகப் பெரிய நீதிகளை உணர்த்துபவை. ஒரு ஜீவன் வாழும் காலத்தே எவ்வளவு பாபங்கள் செய்திருந்தாலும் அறிந்தோ அறியாமலோ ஒரு சிவபுண்ணியச் செயலை செய்யும்போது அது நற்கதியை பெற்றுவிடுகிறது. அப்படியெனில், வாழ்நாள் முழுதும் பலன் கருதாது சிவபுண்ணியத்தை செய்துவருபவர்கள் பெறக்கூடிய நன்மையை பட்டியலிட முடியுமா? வீசியெறிந்த ஓலைச்சுவடியும் கீழே கொட்டிய அரிசியும்! ஞானிகளுள் சிறந்தவராகிய ரிஷப முனிவர் ஒரு முறை

Read More

முதலை விழுங்கியச் சிறுவனை சுந்தரர் பதிகம் பாடி மீட்ட அவினாசி தாமரைக்குளம் – நேரடி ரிப்போர்ட்!

இன்று ஆடி சுவாதி. சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை. ஆண்டின் துவக்கத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பற்றிய பதிவை எழுதிக்கொண்டிருந்தபோது சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவினாசியில் முதலையுண்ட பாலகனை பதிகம் பாடி மீட்ட அந்தத் திருக்குளம் இன்னும் இருப்பதாகவும், அந்தக் குளக்கரையில் சுந்தரருக்கு என்று ஒரு கோவில் இருப்பதாகவும் கேள்விப்பட்டோம். பதிகங்கள் பாடி மூவர் நிகழ்த்திய அற்புதங்கள் யாவும் உண்மையினும் உண்மை என்பதை நிச்சயம் இந்த உலகிற்கு ஆதாரபூர்வமாக எடுத்துக் கூறவேண்டும் என்பது நமது லட்சியங்களுள்

Read More

சிவபூஜைக்கு வெற்றிலை வாங்க உதவியவன் கதை – சிவபுண்ணியக் கதைகள் (11)

"நம் பாவங்களைத் தான் வாங்கிக் கொள்பவன் ஈஸ்வரன். அவன் தலையில் சந்திரன் இருக்கிறான். சந்திரனை விடப் பாவம் செய்தவர் யார்? அவனையே தலையில் சுமக்கும் சிவன், நம்மையெல்லாம் ஏன் காப்பாற்ற மாட்டான்? சிவனை பூஜிப்பது மிக சுலபம். இன்னும் சொல்லப்போனால் செலவில்லாதது. நீரினால் அபிஷேகம் செய்து வில்வத்தால் பூஜித்தால் போதும். மேலும் அவர், தான் விஷத்தை உண்டு, நமக்கு அமிர்தம் அளிப்பவர். முன் ஜன்ம நல்வினைத் தொடர்பு இல்லாவிட்டால் சிவ

Read More

‘சாகுற நேரத்தில சங்கரா’ – பழமொழியின் பொருள் என்ன? சிவபுண்ணியக் கதைகள் (10)

நாம் எல்லாம் ஒரு வகையில் பாக்கியசாலிகள். ஈஸ்வரனை நினைத்த நேரத்தில் சென்று தரிசிக்கிறோமே அது எத்தனை பெரிய பேறு தெரியுமா? 276 பாடல் பெற்ற தலங்கள், அது தவிர 267 வைப்புத் தலங்கள், இதுவும் தவிர தனிச் சிறப்பு மிக்க அந்தந்த பதிகளில் உள்ள தலங்கள் என நாம் உய்ய எத்தனை எத்தனை வழிகள். இந்த கண்களின் பயன் சிவனை தரிசிப்பதும், செவியின் பயன் அவன் பெருமைகளை கேட்பதும், நாவின் பயன் அவன்

Read More

இடையன் செய்த சிவபுண்ணியமும் கிருஷ்ணாவதாரமும் – சிவபுண்ணியக் கதைகள் (9)

சிவபுண்ணியக் கதைகள் ஒவ்வொன்றும் விசித்திரமானவை. பிரமிக்கவைப்பவை. பார்ப்பதற்கு ஒன்று போல தோன்றினாலும், தனித்தனிக்குணம் கொண்டவை. ஒவ்வொரு கதையும் உணர்த்தும் பாடம் பொன்னேட்டில் பொறிக்க வேண்டியவை. கடுகளவு சிவபுண்ணியம் கூட மலையளவு பாபத்தை தூள் தூளாக்கி நன்னெறிக்கு நம்மை இட்டுச்சென்றுவிடும். எனவே சிவபுண்ணியம் செய்ய கிடைக்கும் எந்தவொரு செயலையும் விடக்கூடாது. அதே போன்று மறந்து போய் கூட சிவாபராதத்தை செய்துவிடக்கூடாது. செய்பவர்களுக்கும் துணை போகக்கூடாது. சிவாபராதம், ருதிராட்சம் பற்றியேல்லாம அடுத்தடுத்த அத்தியாயங்களில்

Read More

உழவாரப்பணி என்னும் உன்னத தொண்டு – சிவபுண்ணியக் கதைகள் (8)

நமது முன்னோர்கள் மற்றும் அரசர்கள் அரும்பாடுபட்டு உயரிய எண்ணத்துடன், பரந்த நோக்குடன் கட்டிய பல ஆலயங்கள் இன்று சிதிலமடைந்து, செடி, கொடிகள், புதர்கள் மண்டிக்கிடக்கின்றன. அரசு கட்டுப்பாட்டில் உள்ள பல கோவில்கள் போதிய வருமானம் இன்றி, பணியாளர்கள் இன்றி தவிக்கின்றன. அவ்வளவு ஏன் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையை சுற்றி மூர்த்தத்தின் மீது எண்ணெயே படாத சிவாலயங்கள் நூற்றுக்கணக்கில் உண்டு. 2012 ஆம் ஆண்டு துவக்கத்தில் (ரைட்மந்த்ரா துவக்குவதற்கு முன்னர்) நாம் திருமணஞ்சேரி சென்றிருந்தபோது,

Read More

ருத்ராக்ஷம் தந்த புது வாழ்வு – சிவபுண்ணியக் கதைகள் (7)

சிவசின்னங்களில் தனியிடம் பெற்று விளங்குவது ருத்ராக்ஷம். ருத்ராக்ஷத்தின் பெருமையை அறிந்தோ அறியாமலோ பலர் அதை அணிந்திருப்பதை பார்த்துவருகிறோம். எப்படி இருந்தாலும் அதற்கு பலன் நிச்சயம் உண்டு. (அதே சமயம் அதை அணிந்திருப்பவர்கள் அதன் மகத்துவத்தை உணர்ந்துகொண்டு ஒழுக்கத்துடன் வாழ்ந்து, மது, மாமிசம் உள்ளிட்டவற்றை தீண்டாமல் இருக்கவேண்டும்!) இப்போதைக்கு ருத்ராக்ஷத்தின் பெருமையை விளக்கும் சிவபுண்ணியக் கதை ஒன்றை பார்ப்போம். பத்மகரம் என்னும் நகரில் ஒழுக்கம் நிரம்பிய அந்தணர் ஒருவர் வசித்து வந்தார். புத்தி

Read More

சாபம் என்றால் என்ன, தோஷம் என்றால் என்ன?

சமீபத்தில் முகநூலில் சாபங்கள் பற்றிய பதிவு ஒன்றை படிக்க நேர்ந்தது. அந்த பதிவில் கூடுதல் விஷயங்கள் சேர்த்து சாபத்திற்கும் தோஷத்திற்கும் வித்தியாசம் என்ன, சாபநிவர்த்திக்கு என்ன செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட விஷயங்களை விரிவாக விளக்கியிருக்கிறோம். பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். சாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? 1) பெண் சாபம் 2) பிரேத சாபம் 3) பிரம்ம சாபம் 4) சர்ப்ப சாபம் 5)

Read More

கயிலை அலங்கரிக்கப்பட்டது யாரை வரவேற்க தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (6)

சிவாலயத் திருப்பணி செய்வதால் கிட்டும் சிவபுண்ணியம் பற்றிய கதை இது. வாமதேவர் என்கிற முனிவர் கூறியது. "குலண்டம் என்கிற நாட்டில் கபித்தபுரம் என்கிற பட்டணம் இருக்கிறது. அங்கு கண்டன் என்கிற பெயருடைய ஒரு அதர்மி இருந்தான். அவனுக்கு தொழிலே திருட்டு தான். அக்கம் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கும் பட்டணங்களுக்கும் சென்று பொருட்களை திருடி வந்து வேற்றூர்களில் அவற்றை விற்று வாழ்ந்து வந்தான். இவ்விதம் ஒரு நாள் பொருட்களை திருடிக்கொண்டு மூட்டைக்கட்டி தூக்கி வரும்போது, மாலை

Read More

திருடிய நெய்யும் சிவபுண்ணியமும் – சிவபுண்ணியக் கதைகள் (5)

சிவபுண்ணியம் பற்றி கண்வ மகரிஷி கூறிய கதையை தற்போது பார்ப்போம். மாளவ தேசத்தில் உள்ள கல்யாணபுரம் என்ற நகரில் கார்கவன், வைணவன் என்கிற இரண்டு வணிகர்கள் வசித்து வந்தார்கள். வணிகர்களுக்கு உரிய எந்த தர்மத்தையும் பின்பற்றாமல் அடுத்தவர்களை வஞ்சித்து ஏமாற்றி பொருளீட்டி, அந்த பொருளை கொண்டு அனேக குற்றங்களை செய்து மலையென பாவங்களை குவித்து வந்தார்கள். இவர்கள் பகலில் வியாபாரிகள் போல திரிவார்கள். சக வியாபாரிகளிடம் மெல்ல பேச்சு கொடுத்து அவர்கள் சொத்து மற்றும்

Read More

வாழைப்பழ திருடனுக்கு கிடைத்த பேறு – சிவபுண்ணியக் கதைகள் (4)

சிவபுண்ணியம் தொடரில் இந்த அத்தியாயத்தில் நாம் பார்க்கப்போகும் சம்பவம் விராட தேசத்தில் நடைபெற்றது. விராட தேசம் பற்றிய குறிப்புக்கள் மகாபாரதத்தில் நிறைய இடங்களில் காணப்படுகிறது. (அநேகமாக இன்றைய ஜார்கண்ட் மாநிலமாக இருக்கலாம்). இப்போது நம் நாட்டில் உள்ள மாநிலங்கள் போல, அந்தக் காலத்தில் (பல ஆயிரம் வருடங்கள் முன்பு) மொத்த 56 தேசங்கள் இருந்தன. இப்போதுள்ள 35 மாநிலங்களும் இந்த 56 தேசத்தில் அடங்கிவிடும். விராட தேசத்தில் சீமந்தபுரம் என்னும் நகரம்

Read More

பிரம்படி வாத்தியாரும் படிப்பு ஏறாத பிச்சு ஐயரும்!

யார் பணக்காரன்? யார் ஏழை? - பதிவு மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு நல்ல கருத்து அனைவருக்கும் சென்று சேர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி. அந்த பதிவின் தொடர்ச்சியாக நாம் அளிக்கவிருக்கும் பதிவுக்காக அனைவரும் காத்திருக்கிறீர்கள் என்று தெரியும். அது சற்று ஹெவியான பதிவு. எனவே அதற்கு முன்பாக ஒரு மென்மையான பதிவை தர விரும்பி இந்தப் பதிவை அளிக்கிறோம். இதைப் படியுங்கள். ரசியுங்கள். அடுத்து நாம் சொன்ன அந்தப்

Read More

பசுவின் பால் கொடுத்த சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (3)

சிவபுண்ணியக் கதைகளை நீங்கள் படிக்கும்போது அவை சற்று விசித்திரமாக உங்களுக்கு தோன்றலாம். மிக மிகக் கொடிய பாபங்கள் கூட, சிவபுண்ணியம் என்னும் நெருப்பு படும்போது பொசுங்கி காணாமல் போய்விடுகின்றன. மாபாபிகள் என்று தூஷிக்கப்படும் துராத்மாக்கள் கூட, அவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த சிறு சிவபுண்ணியத்தின் மகிமையால் அனைவராலும் வணங்கப்படும் நிலைக்கு உயர்வது இக்கதைகளில் சகஜம். இப்போதெல்லாம் ஹேண்ட்வாஷ் பிரபலமாகிவிட்டது. சாப்பிடுவதற்கு முன் அவற்றை கொண்டு கையை அலம்பிக்கொண்டால், நோய்நொடிகள் அண்டாது என்று

Read More

தந்தையை காத்த, தனயனின் சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (2)

சிவபுண்ணியக் கதைகள் தொடர் நம் தளத்தில் மாபெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. தற்போது நமது பொறுப்பு அதிகரித்துவிட்டது போன்றதொரு உணர்வு. சாதாரணமாக நாம் ஒவ்வொரு பதிவையும் ஒரு தவம் போலக் கருதி தான் தயார் செய்வோம். அப்படியிருக்கையில் 'சிவபுண்ணியம்' பற்றிய தொடர் என்றால் நாம் எடுக்கும் சிரத்தையை கேட்கவேண்டுமா? அவனருளாலே அவன் தாள் வணங்கி! இந்த கதை சற்று வித்தியாசமானது. சிவபுண்ணியம் அதை செய்பவருக்குத் தான் சென்று சேரும் என்றில்லை. அவர்களை சார்ந்தவர்களுக்கும்

Read More