இது ஒரு புறம் இருக்கட்டும்.
சில மதங்களில் புலால் உண்பதை எதிர்க்கவில்லை. மாட்டிறைச்சி உண்பது கூட பாவமாக அறியப்படவில்லை.
இதுவும் ஒரு புறம் இருக்கட்டும்.
எந்த மதத்தையும் சாராதவர்களுக்கோ “எங்கள் உணவை உண்பது எங்கள் தனி மனித உரிமை. இதில் குறுக்கிட யாருக்கும் உரிமை இல்லை!” என்பது வாதம்.
இதுவும் ஒரு புறம் இருக்கட்டும்.
ஆனால் நம் இந்து மதத்திலோ குறிப்பாக சைவம் மற்றும் வைணவத்தில் புலால் உண்பது பெரும்பாவம்.
ஆளுக்கொரு நீதி… ஊருக்கொரு நியாயமா? எது சரி?? இதற்கு பதில் சொல்வது எளிதான விஷயம் அல்ல. இருப்பினும் நம்மால் இயன்ற அளவு விடை பகிர முயன்றிருக்கிறோம்.
‘ஆளுக்கொரு நீதி… ஊருக்கொரு நியாயம்’ என்பதற்காக நால்வர் வகுத்த பாதையிலிருந்து நாம் வழுவ முடியுமா? சிவனை முழுமுதற்க் கடவுளாக ஏற்றுள்ள சைவம் கூறும் நெறியிலிருந்து மாறமுடியுமா? அதற்கு நமக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?
அப்போது ஆளுக்கொரு நீதி… ஊருக்கொரு நியாயம் என்பது மட்டும் சரியா?
மாட்டை அறுப்பதை விடுங்கள்… ஒருவர், குழந்தையை மேலே தூக்கிப் பிடித்து அறுக்கிறார். இது சரியா? தவறா??
“தவறு! தவறு!!”
“பெற்ற தந்தையின் கால்களை ஒருவர் கோபத்தில் இரண்டு துண்டாக வெட்டுகிறார். இது சரியா? தவறா??”
“ஐயோ… பெரிய தவறு! மகாபாவம்!!”
இன்னொருத்தர் சூதாடி பணம் சேர்க்கிறார். சூதில் தோற்பவர்கள் பணம் தர மறுத்தால் இடுப்பிலுள்ள கத்தியை எடுத்து பணம் கேட்டு மிரட்டுகிறார்.
இது சரியா? தவறா??
“சூதாடுவதே தவறு. இதில் பணம் வேறு பறிப்பதா? ச்சே… சே… இது ரொம்ப தப்புப்பா…!”
இன்னொருத்தர் கதை இன்னும் அதிர்ச்சி தரக்கூடியது. மாமிசம் உண்பதே பாவம். ஆனால், அந்த மாமிசத்தை அதுவும் தான் புசித்து மீதமுள்ள எச்சில் மாமிசத்தை ஒருவர் இறைவனுக்கே படைக்கிறார். அதுவும் சைவத்தின் முழுமுதற்க் கடவுள் சிவபெருமானுக்கே படைக்கிறார்.
இது சரியா தவறா??
“ஐயோ… மிகப் பெரும் தவறு!”
அப்படியா….???
ஆனால் மேலே குறிப்பிட்ட நான்கு பேர்களும் அறுபத்து மூன்று நாயான்மார்களில் சிலர் !
முதலாமவர் சிறுத்தொண்ட நாயனார், இரண்டாமவர் சண்டேஸ்வர நாயனார், மூன்றாமவர் மூர்க்க நாயனார்.. நாலாமவர் கண்ணப்ப நாயனார்.
அப்போது எது சரி எது தவறு என்று தீர்மானிப்பது யார்?
நாயன்மார்கள் செய்தார்களே என்பதற்காக நாம் அதை செய்ய முடியுமா? அவர்கள் சமகாலத்தவர்கள் கூட அதை செய்யமுடியாது. அப்படியிருக்கும் போது இவர்கள் மட்டும் நாயன்மார்களாக உயர்த்தப்பட்டது ஏன்? அவர்களை உயர்த்தியது எது?? யார்???? அவர்கள் உள்ளே இருக்கும் ‘சிவம்’ தான். (திருமந்திரத்தில் இதற்கு விரிவான பதில் இருக்கிறது!)
மேற்கூறியவர்கள் செய்த சேவையினாலே அவர்கள் நல்வினை தீவினை தீர்மானிக்கப்படவில்லை. இவர்கள் என்ன எண்ணிச் செய்தார்கள் என்பதைக் கொண்டே அவர்கள் வினையானது அதாவது செயலானது நல்ல செயலா அல்லது தீய செயலா என்று தீர்மானிக்கப்படுகிறது. அவர்கள் என்ன எண்ணினார்கள் என்பது யாருக்கு தெரியும்? அது புறத்தே இருக்கும் உலகிற்கு தெரியுமா? அவர்கள் உள்ளே இருக்கும் சிவத்திற்கு தானே தெரியும் அது என்ன எண்ணிச் செய்தது என்று.
எனவே நல்வினை, தீவினையை தீர்மானிப்பது சிவபெருமான் ஒருவனே தவிர வேறு யாரும் அல்ல!
ஆன்மிகம் புறத்தே துவங்குவதில்லை. அது அகத்தே துவங்குகிறத என்பது இதன் மூலம் புலனாகிறது அல்லவா.
என்ன புண்ணியம் செய்தனை—நெஞ்சமே! இருங்கடல் வையத்து,
முன்னம் நீ புரி நல்வினைப் பயன்இடை, முழுமணித்தரளங்கள்
மன்னு காவிரி சூழ் திரு வலஞ்சுழிவாணனை, வாய் ஆரப்
பன்னி, ஆதரித்து ஏத்தியும் பாடியும், வழிபடும்அதனாலே!
பொருள் : “நெஞ்சமே! நீ புண்ணியம் செய்துள்ளாய். இவ்வுலகில் முன்பிறவிகளில் செய்த நல்வினைகளின் பயனால் மணிகளும், முத்துகளும் கலந்து நிறைந்த காவிரி சூழ்ந்து விளங்கும் “திருவலஞ்சுழியி வீற்றிருக்கும் ஈசனை, வாயாரப் போற்றித் துதித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் பெருமை உனக்கு வாய்த்தது. இத்தகைய செயல் புண்ணிய வசத்தால் அன்றி அமையாது.”
என்பது சம்பந்தர் வாக்கு.
(‘எது சரி எது தவறு என்பதை தீர்மானிப்பது யார்?’ என்று செந்தமிழரசு திரு.கி.சிவக்குமார் அவர்கள் ஒரு சொற்பொழிவில் விளக்கிய உதாரணத்தில் இந்த பதிவுக்கான கரு கிடைத்தது. அதை சற்று கூடுதல் விஷயங்கள் சேர்த்து தந்திருக்கிறோம்.)
Join our Voluntary Subscription Scheme
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Support Rightmantra by becoming Voluntary Subscriber.
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
You can also Cheques / DD drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.
Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215
‘புலால் மறுத்தல்’ குறித்து வள்ளுவர் கூறுவது என்ன?
கடவுளை மறுப்பவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்பவர்கள் கூட திருக்குறளை மறுப்பதை பார்க்க முடியாது. காரணம், அதில் உள்ள வாழ்வியல் நீதிகள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனித குலத்திற்கு இன்றியமையாத அறங்களை வகுத்து கொடுத்த வள்ளுவர் மறக்காமல் ‘புலால் உண்ணாமை’ என்னும் அதிகாரத்தையே வைத்துவிட்டு சென்றிருக்கிறார். எந்தவொரு மொழியையோ மதத்தையோ குறிப்பிடாது தனது நூலை வள்ளுவர் படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாதங்களில் சுப்ரீம் கோர்ட் திருக்குறள் தானே?
சைவம் குறித்து வள்ளுவர் கூறுவது என்ன என்று பார்ப்போம்.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
(அதிகாரம் : கொல்லாமை | குறள் : 322)
இந்த குறளுக்கு பொருள் என்ன என்று யாரைக் கேட்டாலும் எளிதில் சொல்வார்கள். அதாவது : “இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும்.” என்பது தான் அவர்கள் சொல்வது.
ஆனால் இது உண்மையான பொருள் இல்லை. விளக்கமும் இல்லை. ஏனெனில், இது வைக்கப்பட்டுள்ள அதிகாரத்தை கவனியுங்கள் – ‘கொல்லாமை’. ‘விருந்தோம்பல்’ அல்ல.
இந்த குறளின் உண்மையான பொருள் என்னவென்றால் : “மனிதன் தான் உண்ணக்கூடியது எது என்று ஆராய்ந்து உண்டால், அதன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படும். அதுவே தலைசிறந்த அறமாக அனைவராலும் போற்றப்படுகிறது.” என்பதேயாகும்.
பகிர்ந்து என்றால் – இருப்பதை பிரித்து வழங்குவது என்று பொருள். பகுப்பது என்றால் ஆய்வு செய்வது என்று பொருள். இங்கே கொடுப்பது என்ற ஒன்று இல்லை. ஆய்வு செய்வது. அவ்வளவே. மனிதன் தான் உண்ணக்கூடிய உணவை ஆராய்ந்து உண்ணவேண்டும். அப்படி ஆராய்ந்தால் அவன் உண்ணக்கூடியது தாவர உணவே என்று விளங்கும். வாயில் போட்டவுடன் அதாவது உமிழ் நீர் பட்டவுடன் ஜீரனமாகத் துவங்கும் உணவையே மனிதன் உண்ணவேண்டும். தாவர உணவுகளே வாயிலிருந்தே ஜீரணத்தை தொடங்குகின்றன. அசைவ உணவு வகைகள், இரைப்பைக்கு சென்றவுடன் தான் ஜீரணிக்கத் துவங்குகின்றன.
புலால் உண்ணாமை குறித்து அந்த அதிகாரத்தில் கூறிய கருத்து போதாது என்று கருதியதாலோ என்னவோ இன்னும் வைக்கவேண்டும் என்று விரும்பியே கொல்லாமையிலும் அது பற்றி கூறியிருக்கிறார். வள்ளுவரின் நோக்கம் தமது புலமையை நிரூபிப்பது அல்ல. தான் சொல்ல வரும் கருத்தை திறம்பட கூறுவது. எனவே எதுகைக்காக பகுத்து என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
‘பொதுமறைச் செம்மல்’ என பெயர் பெற்ற திரு.எம்.ஏ. ஹூசேன் அவர்களை அவர் இல்லத்தில் நம் தளத்தின் பேட்டிக்காக சந்தித்தபோது அவர் கூறியது இது.
(திரு.ஹூசேன் அடிப்படையில் ஒரு சித்த மருத்துவர். இஸ்லாமியர். இருப்பினும், வள்ளலார் மீது அன்பு கொண்டு சைவத்துக்கு மாறியவர். வள்ளலாரின் சன்மார்க்கத்தையே பின்பற்றி வருகிறார். மேலும் திருக்குறள், தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட திருமுறைகள், வேதங்கள் அனைத்தையும் கசடற கற்றவர். சமஸ்கிருதம் அறிந்தவர். பல சைவ சமய விழாக்களில் பங்கேற்று சிறப்பாக பேசி கைதட்டல்களை அள்ளும் வன்மை பெற்றவர். நமது நூல் வெளியீட்டு விழாவிலும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.)
எல்லாம் சரி… அசைவ உணவு சாப்பிடுவது சரியா தவறா? அதைச் சொல்லலியே… என்று தானே கேட்கிறீர்கள்.
விடையை விடையை கூறுவதற்கு முன்பு விடையை ஏற்றுக்கொள்ள வைக்க உங்களை பக்குவப்படுத்தவே இந்த பதிவு.
இராமாயணத்தில் கூட இதற்கு விடை இருக்கிறது…!
==============================================================
Also check :
வள்ளலாரின் கடுக்கணை திருடிய திருடன் – கண்டதும் கேட்டதும் (4)
தண்ணீரில் விளக்கெரிந்த அதிசயம்!
வாரியார் நினைத்தார்; வள்ளலார் நடத்தி வைத்தார்!
வள்ளலாரின் சத்திய பூமியில் சில மணித்துளிகள் – வடலூர் தைப்பூசம் SPL
பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE
ஆதரவற்றவர்களின் ஆலமரம் – இதோ வடலூரில் ஒரு வாழும் வள்ளலார்!
வடலூரின் வாழும் வள்ளலாரின் கருணை இல்லம்! ஒரு ரவுண்ட்-அப்!!
புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !
மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!
இறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்வது எது ?
==============================================================
டாக்டர்.எம்.ஏ.ஹூசேன் – சிவநெறியும், சைவநெறியும் இவர் இரு கண்கள்!
சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!
சிவனின் செல்லப்பிள்ளைகள் போதித்த பாடம்!
நண்பர் வீட்டு திருமண விருந்து vs தெய்வச் சேக்கிழார் குருபூஜை விருந்து!
சிவபெருமான் கண்ணாடியில் ரசித்த தனதுருவம்… பிறகு நடந்தது என்ன?
==============================================================
[END]
அருமையான வாதத்தை பக்குவமாக கையாண்டு பதியவைத்து இருக்கிறீர்கள்.
நாயன்மார்கள் சிவன் மீது கொண்ட அதீத காதலால், செயல்கள் செய்தார்கள். சிவனே அவர்கள் மனதிற்குள் ஐகியமானதால் அவர்கள் சிவனால் தடுத்தாட்கொள்ளப்பட்டு மீண்டும் பிறவா நிலையை அடைந்தார்கள்
புலால் உண்ணாமை குறித்து வள்ளுவர் கூறியது மிகவும் நன்றாக உள்ளது.
நான் பள்ளி , கல்லூரி படிக்கும் காலங்களில் எனது அசைவ உணவு உண்ணும் தோழியர் சிலர், ஏன் நீங்கள் உண்ணும் தாவர உணவுகளில் கூட உயிர் இருக்கிறதே, அதை மட்டும் சாப்பிடுகிறீர்களே என்று கேட்பார்கள். நான் அப்பொழுது ஏதோ சொல்லி சமாளித்து விடுவேன். இதனை விளக்கவும்
திருமூலர் புலால் மறுத்தலை பற்றி கூறிய பாடல் :
//பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன்றன் தூதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி முறித்து வைப்பாரே //
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்
வாழ்க ………. வளமுடன் !!!
நன்றி
உமா வெங்கட்
சரியான தருணத்தில் வந்திருக்கும் இந்த பதிவு அனைத்து தரப்பினருக்கும் ஒரு நல்ல விளக்கம்.
//அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே //
— திருமூலர்
நாயன்மார்கள் படம் அருமை
வாழ்க …. வளமுடன்
நன்றி
உமா வெங்கட்
சுந்தர்ஜி,
தளம் தொடங்கிய காலத்திலேயே உங்களிடம் இது பற்றி கேட்டு விளக்கம் பெற்றோம் . “அவிசொரிந்தாயிரம் ” எனும் குறள் மூலம் எமக்கு கொல்லாமை பற்றி விளக்கினீர்கள்! மேலும் தெரிந்து தெளிந்தால் மற்றவர்க்கும் விளக்கலாம்! தொடர்ச்சியினை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நன்றி !
இதைத்தானே சார் தேடினோம் , ஆனால் விடை அடுத்த பதிவில் என்றதும் கொஞ்சம் ஷாக் தான் . இருந்தாலும் கொஞ்சம் வெயிட் பண்ணிதான் ஆகணும்.
ரொம்ப முக்கியமான விஷயம்
நன்றி சார் தெளிவு படுத்துவதக்கு.
தங்களின்
சோ. ரவிச்சந்திரன்
கர்நாடகா
My Humble greetings to one and all,
Dear Nathan Sir,
Based on your comment on Swami Vivekanada(S V) eating Fish, i thought it would be appropriate to provide my insights here.
1) Jnani’s and eveoled souls such as S V can be like us but we cannot be like them.But can be achieved.
How ? – You keep God’s name in your lips and be aware of HIM all the time.
But, is it possible when you take Non veg food ? No and No and No.
2) The ultimate aim/desire of human life should only be to merge in God.That is the soul purpose of our life.In order to achieve this, the one path you can take is “Meditation” But when you sit for Meditation,will you be able to concentrate on God if you take meat related food ? My answer is a BIG No.
But when S V sits for meditation, even if there is a fire strom, he wont be disturbed.
why ? – b’cos he is not attached to food, body and mind
3)The type and quality of food you intake determines 3 qualities.
a) Sathvic(pure) b) Rajastic(emotional) 3) Tamasic(destructive)
only being a Sathvic person, you can achieve the ultimate goal of life i.e merging with God.
4)In order to be Sathvic, you need to partake the food that are fresh, seasonal and naturally sourced. Vegetarian food is the best bet in this category.
Love and Light to All,
Sai Ram.
Excellent observation and conclusion. Many thanks. I think if i translate in Tamil many would benefit. thanks again.
சாய் ராம் சார் ….நான் உங்கள் பதிலை படித்துவிட்டேன். முழு பதிவை படிக்க ஆவலுடன் உள்ளேன். படித்த பின்பு ஏதேனும் கருத்து இருந்தால் தெரிவிப்பேன். நன்றி ….
எனக்கு புரியாத புதிர் ஆக இருப்பது இந்த ” Blue Cross”…
திரைபடத்தில் குதிரை ஓட்டுவது போல் காட்சி வந்தாலே கொதித்து எழுகிறார்கள். …
ஆனால் ஆடு , மாடு, கோழி எல்லாம் தினமும் கோடி கணக்கான கிலோகளில் கொல்லபடுகின்றன … இவை எல்லாம் ப்ளூ கிராஸ் உயிர் களாக பார்ப்பது இல்லையா ?
அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்… இருக்கும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஏதோ செய்கிறார்கள். மற்றபடி ப்ளூகிராசின் பணி உண்மையில் அபாரமான ஒன்று.
நிச்சயமாக!!. அதில் மாற்று கருத்து இல்லை .
எனினும் , இந்த விஷயத்தில் அவர்கள் நிலைப்பாடு என்ன என்பதை அவர்கள் வெளியிட்டால் , அது ஒரு நடுநிலையான பார்வையாக அமையும், என்பதே அடியேனின் ஆவா
பிராணிகள் வதை சட்டத்தின் படி அவர்கள் செயல்படுகிறார்கள். அதை மீறி அவர்கள் ஒன்றும் செய்ய முடியாது. மற்றபடி, ப்ளூகிராஸ் இணையத்திலும் முகநூல் பக்கத்திலும் உங்கள் கேள்விக்கான விடை கிடைக்கலாம்.
எப்போதும் போல மிக அருமையான பதிவு. இப்பொழுது மிக அவசியமான ஒன்றும் கூட. உலகப் பொதுமறையை வைத்து விளக்கியது மிக அருமை. எந்த விதமான நம்பிக்கை உடையவர்க்கும் பொதுவானது திருக்குறள். சிறுத்தொண்ட நாயனார் மற்றும் கண்ணப்ப நாயனார் பற்றி தெரியம். சண்டேஸ்வர நாயனாரர் பற்றி தெரியாது. இப்போது தான் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.
அருளல்ல தீயாதெணிற் கொல்லாமை கோறல்
பொருள்ளல்ல தவ்வூன் தினல் -குறள்-254.
கொல்லான் புலாலை மறுத்தானை கைகூப்பி
எல்லா உயிரும் தொழும் – குறள்-260.
மேற் கூறிய இரண்டு குறள்கள் மட்டுமே போதும் புலால் மறுப்பிற்கு
உலக பொது மறை என்று வாயால் வடை சுட்டால் மட்டும் போதாது !!!
வாழ்கை முறையும் வேண்டும் !!!
அன்புடன்
வாசுதேவன் நெ வீ