Home > மாமனிதர்கள் (Page 4)

வாரியார் ஸ்வாமிகள் முருகப் பெருமானிடம் அனுதினமும் வேண்டி நின்றது என்ன?

இன்று ஐப்பசி 1. ஆயில்யம் நட்சத்திரம். திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் குரு பூஜை. கிருபானந்த வாரியார் சென்ற நூற்றாண்டு கண்ட தலைசிறந்த முருக பக்தர். நாத்திகப் பிரசாரம் தமிழகத்தில் வேரூன்றி பரவிய இக்கட்டான காலகட்டங்களில், ஆத்திகத்தை பரவச் செய்தவர். தினமும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும்

Read More

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் என்று முழங்கிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!

'எனது முதலமைச்சர் நாற்காலியின் மூன்று கால்கள் எவற்றால் ஆனவை என்று எனக்குத் தெரியாது. ஆனால், நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களால் ஆனது!'' - 1982ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். வானொலிக்கு அளித்த பேட்டியின்போது கூறியது இது. அவரது ஆழ்மனதில் இருந்து வந்த வார்த்தைகள் இவை. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இறந்து இரண்டு தலைமுறைகள் கடந்துவிட்டன. ஆனால், இன்றளவும் காலத்தால் துருப்பிடிக்காத தெம்பும் உறுதியும் கொண்டதாக திகழ்கின்றன அவரது

Read More

சுப்பிரமணிய சிவா — வ.உ.சி. என்கிற துப்பாக்கியின் தோட்டா!

“கப்பலோட்டிய சிதம்பரனாரைப் புகழ்வோர், அவருக்கு வலக்கரமாக இருந்த சுப்பிரமணிய சிவாவை மறக்க முடியாது. சிதம்பரனார் துப்பாக்கி என்றால், அதனுள் தோட்டாவாக இருந்து செயல்பட்டவர் சிவா. வ. உ. தம்பரனாருடனும் மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப் பழகியவர் சுப்பிரமணிய சிவா. 'வீரமுரசு' எனப் புகழ்பெற்றவர் இவர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் 1884, அக்டோபர் 4-ம் நாள் பிறந்தார். இவர் தந்தையார் ராஜம் ஐயர், தாயார் நாகம்மாள் (நாகலட்சுமி). பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியம்.

Read More

ஒரு தலைவனின் தகுதி – மகாத்மா காந்தி உணர்த்திய உண்மை!

அக்டோபர் 2. இன்று தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்தநாள். இப்போதெல்லாம் 'காந்தியை எனக்கு பிடிக்காது' என்று கூறுவதும், அவரை வரைமுறையின்றி விமர்சிப்பதும் ஃபேஷனாகி வருகிறது. காந்தி விமர்சனத்திற்கு அப்பார்ப்பட்டவரல்ல. ஆனால் யார் விமர்சிக்கிறார்கள் என்பது தான் இங்கே கவனிக்கவேண்டிய ஒன்று. காந்தியின் சமகாலத்தில், அவருடன் வெள்ளையனை எதிர்த்து போராடியவர்களோ அல்லது இந்திய விடுதலைக்காக வேறு வழிமுறைகளை கையாண்டவர்களோ அல்லது நாட்டுக்காக தங்கள் சொத்து தங்கள் சுகத்தை தியாகம் செய்தவர்களோ விமர்சிக்கலாம்.

Read More

நன்றி மறவா நல்லவர் ‘நடிகர் திலகம்’, மகா பெரியவாவை சந்தித்த அந்த தருணம்…

சினிமாவில் நடிக்க வந்த கணேசனுக்கு ஏ.வி.எம் ஸ்டூடியோவில் மேக்கப் டெஸ்ட் எடுத்தார்கள். இந்த சமயத்தில் படத்தை முதலில் இயக்குவதாக இருந்த ஏ.எஸ். சாமிக்குப் பதிலாக கிருஷ்ணன் பஞ்சுவை படத்தின் இயக்குநராக நியமித்திருந்தார்கள். அதேபோல் திருவாரூர் தங்கராசுக்குப் பதிலாக 'பராசக்தி' படத்திற்கு மு.க வசனம் எழுதும்படி ஆகியது. கணேசனை மேக்கப் டெஸ்ட் முடிந்ததும் 'சக்சஸ்' என்ற ஆங்கில வார்த்தையைச் சொல்ல சொன்னார்கள். கணேசனும் 'சக்சஸ்' என்று சொன்னார். 'சக்சஸ்' என்று கூறியது 'சத்தத்'

Read More

“என்னை தூக்கிலிடவேண்டாம்… சுட்டுக்கொல்லுங்கள்!” என்று சொன்ன பகத்சிங். ஏன் ?

பகத்சிங். இந்திய விடுதலைப் போர் வரலாறு இவரைப் போல ஒரு மாபெரும் வீரரை கண்டதில்லை. 1931 ஆம் ஆண்டு, பகத்சிங் தூக்கிலிடப்பட்டபோது அவருக்கு வயது 23. தூக்கில் ஏறுவதற்கு முன்பு பகத்சிங் சொன்னது என்ன தெரியுமா? "மரணத்தை கண்டு  நான் பயப்படவில்லை. மனிதகுலத்துக்கும் என் நாட்டிற்கும் ஏதாவது செய்யவேண்டி சில குறிக்கோள்களை எனது இதயத்தில் பேணிவளர்த்தேன். அந்தக் குறிக்கோள்களில் ஆயிரத்தில் ஒரு பங்கைக்கூட என்னால் நிறைவேற்றாமல் நான் மரணிக்கிறேன் என்பது

Read More

கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து குடுகுடுப்பைக்காரனுக்கு தந்த பாரதி – ஏன் தெரியுமா???

இந்தியா முழுவதும் சுதந்திரப் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த நேரத்தில் புதுச்சேரியில் பாரதியாரும் அவரது மாணவர் பாரதிதாசனும் தங்கி இருந்தனர். இருவரும் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் பாரதத் தாய்க்கு ஒரு சிலை செய்ய வேண்டும் என்ற அவரது விருப்பத்தை பாரதிதாசனிடம் கூறியிருக்கிறார் பாரதி. பாரதிதாசனும் ஒரு சிற்பியை வரவழைத்து பாரதத் தாய்க்கு சிலை அமைக்குமாறு கேட்டுக் கொண்டார். சிற்பி சிலை தயாரிக்கத் தொடங்கியபோதே அவருக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கிறது. சிலையை ஏழ்மையாக இருப்பது

Read More

மகன் திருமணத்திற்கு நண்பரிடம் உதவி கேட்டுப் போன வ.உ.சி. — நடந்தது என்ன?

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. ஒரு முறை தனது மகனின் திருமணச் செலவுக்காக தனது நண்பர் தண்டபாணி பிள்ளை என்பவரை சந்தித்து பொருளுதவி  கேட்டார். "எவ்வளவு  தேவைப்படும்?"  என்று தண்டபாணி பிள்ளை கேட்க, வ.உ.சி. "பத்தாயிரம் ரூபாய் இருந்தால் நலம்" என்றார். ஆனால் அவரிடம் அந்த நேரம் அவ்வளவு பெரிய தொகை இல்லை. சுதந்திர போராட்ட வீரரும், தமிழ்நாடு பத்திரிக்கையின் ஆசிரியருமான வரதராஜுலு நாயுடு என்பவர் தண்டபாணி பிள்ளையிடம் ரூ.20,000/- கடன் பெற்றிருந்தார்.

Read More

இவை வெறும் முகங்களில்லை… தேசத்தின் முகவரிகள்!

கோவையில் இருக்கும் நம் நண்பர் விஜய் ஆனந்த், இரண்டு நாட்களுக்கு முன்னர் தினமலரில் வெளியான ஒரு செய்தி குறித்து நமக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். கோவையில் இயங்கி வரும் அனைத்துலக சகோதரத்துவ சங்கம் (Universal Brotherhood Association) என்னும் அமைப்பு தேச விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களின் புகைப்படங்கள், அவர்களுடைய தியாகம் ஆகியவற்றைத் திரட்டி, கோவையில் தேசப்பற்றுக்கான ஒரு கலைக்கூடத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கி, அதில் வெற்றியும் கண்டுள்ளது. இந்த தலைவர்களின் புகைப்பட

Read More

‘சுதந்திரம் எனது பிறப்புரிமை’ என்று முழங்கிய பால கங்காதர திலகர் பிறந்த நாள் இன்று!

ஒரு முறை ஜெயகாந்தன் சொன்னார், "திலகர், விவேகானந்தர், வ.உ.சி இவர்களெல்லாம் அடிமை நாட்டிலே வாழ்ந்த சுதந்திர புருஷர்கள்; நாமெல்லாம் சுதந்திர நாட்டில் வாழ்கிற அடிமைகள்!!" எத்தனை உண்மை...! எந்தெந்த கோவில் எங்கெங்கு இருக்கிறது, எந்தெந்த நாளில் என்னென்ன உற்சவங்கள் விசேஷங்கள் வருகிறது என்று தெரிந்துகொள்வதைவிட முக்கியமானது நாட்டின் விடுதலைக்காக பாடுப்பட்ட உத்தமர்களை பற்றி தெரிந்துகொள்வது. நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கவேண்டும் என்பதற்காக தங்கள் வாழ்வையும், வசந்தத்தையும் தியாகம் செய்த அந்த

Read More

காமராஜர் வாழ்வில் நடைபெற்ற நெகிழ வைக்கும் சில சம்பவங்கள் – காமராஜர் B’DAY SPL 2

கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாள் ஸ்பெஷல் இரண்டாம் பகுதி இது. அவசியம் அனைவரும் படிக்கவேண்டிய, படித்து பகிரவேண்டிய ஒன்று. பதிவின் இறுதியில் உங்களில் பலர் தெரிந்துகொள்ள விரும்பும் ஒரு முக்கிய தகவல் உள்ளது. பதவி ஆசையே இல்லாத ஒரே பாமரனை பதவியிலேற்றி வைத்த பெருமையைப் பாரதம் பெறக் காரணமானவர்தான் கர்மவீரர் காமராஜர். பதவி ஆசை இல்லாத அவரை பதவியில் அமர்த்தியதால் தான் பதவி மூலம் அவர் பலன் பெற முயலவே இல்லை. கிடைத்த பதவியை

Read More

காமராஜரும் ராமராஜ்ஜியமும்! கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் ஸ்பெஷல்!!

'அரசியலில் நேர்மை; பொதுவாழ்வில் தூய்மை' என்ற சொல்லுக்கு  உதாரணமாக விளங்கிய பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் இன்று. காமராஜர் தமிழகத்தை ஆண்ட 1954 - 1963 காலகட்டத்தை தமிழகத்தின் பொற்காலம் எனலாம். இன்றைக்கு தமிழகத்தின் முதுகெலும்பாக உள்ள பல தொழிற்சாலைகள் மற்றும் பாசன திட்டங்கள் காமராஜரின் காலத்தில் ஏற்படுத்தப்பட்டவையே. ஊழல்களும், அரசியலில் ஆடம்பரங்களும், அதிகார துஷ்பிரயோகங்களும், ஆணவமும் தலைவிரித்து ஆடும் இன்றைய காலகட்டத்தில், ‘காமராஜரைப் போல ஒரு அரசியல்வாதி மீண்டும் பிறந்து

Read More

விடாமுயற்சியால் விதியை வென்று, ஒரு சாமானியன் சரித்திரம் படைத்த கதை!

இன்று நாம் அண்ணாந்து பார்க்கும், உலகையே தங்கள் கட்டுக்குள் வைத்துக்கொண்டிருக்கும், பல முன்னணி தொழில் சாம்ராஜ்ஜியங்களின் துவக்கத்தை பார்த்தோமானால் விடாமுயற்சியும், அற்பணிப்பும், எதற்கும் கலங்காத மனமும் கொண்ட தனி மனிதன் ஒருவர் தான் நிச்சயம் பின்னணியில் இருப்பார். பூகம்பத்தாலும் போரினாலும் மண்ணோடு மண்ணாகிப் போன ஒரு மண்ணிலிருந்து ஒரு பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய ஒருவரது நம்பிக்கையூட்டும் வரலாற்றை தற்போது பார்ப்போம். 1906 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் நாள் ஜப்பானில்

Read More

“விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்!” – பாரதியின் மனைவி செல்லம்மாளின் வானொலி உரை!

இன்று பாரதியை உலகே கொண்டாடும் ஒரு சூழ்நிலையில், அன்று அவர் எப்படி வாழ்ந்தார் அவர் இல்லறம் எப்படி நடைபெற்றது என்பதை அறிந்துகொள்ள உதவும் ஒரு அருமையான தொகுப்பு இது. (1951-ஆம் ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் "என் கணவர்' என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை!) "என் கணவர்!" ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ்

Read More