Home > ரமணர் (Page 2)

”இதுக்கு பதிலா ஒங் குழந்தையைத் தந்துடறியா?”

உண்மையான ஞானிகள் மந்திர தந்திரங்களில் சித்து வேலைகளில் கவனம் செலுத்தமாட்டார்கள். ஏனென்றால் அது அவர்கள் அவதார நோக்கத்தை சிதைத்துவிடும். ஆனால் அவசியம் ஏற்பட்டால் அவர்கள் தங்கள் சக்தியை பிரயோகிக்க தயங்க மாட்டார்கள். பகவான் ரமணர் போன்ற மகான்கள் தங்கள் உபதேசங்கள் மக்கள் மனதில் ஏற்படுத்தும் மாற்றங்களில் தான் கவனம் செலுத்தினார்களே தவிர தங்களுக்கு இருந்த மந்திர தந்திர சக்திகளில் அல்ல. காவியுடுத்தியவர்கள் எல்லாம் குரு அல்ல. முற்றும் துறந்தேன் என்று கூறுபவர்கள் எல்லாம் துறவிகளும் அல்ல. துறவின்

Read More

பெயர் பொருத்தம் பார்த்து பெரியவா செய்து வைத்த கல்யாணம்!

சில முக்கியமான பெரிய பதிவுகளை தயாரித்து வருகிறோம். எனவே நேரம் பிடிக்கிறது. அதுவரை ஆவலோடு காத்திருக்கும் உங்களுக்காக பெரியவா மகிமையை பகிரலாமே என்று இதை தருகிறோம். மகா பெரியவா முக்காலமும் உணர்ந்த ஞானி மட்டுமல்ல... நமக்கு எது நல்லதோ அதை தர வல்லவர். இவர் ஏன் இதை சொல்கிறார் என்று யோசித்து பிற்பாடு அதில் ஒளிந்திருக்கும் சூட்சுமத்தை உணர்ந்து மெய்சிலிர்த்தவர்கள் பலருண்டு. அப்படி சிலிர்த்த செகந்தராபாத்தை சேர்ந்த ராமஸ்வாமி என்கிற பக்தர்

Read More

தீமைக்கு நம் எதிர்வினை எப்படி இருக்கவேண்டும்? மகா பெரியவா காட்டும் வழி!

மகா பெரியவாவை பொருத்தவரை அவரது உபதேசங்களில் மகிமைகளில் நீக்கமற நிறைந்து காணப்படும் ஒன்று என்ன தெரியுமா? POSITIVISM எனப்படும் நேர்மறை சிந்தனை தான். இதை அவரது பல மகத்துவங்க்ளில் நாம் பார்த்து வியந்திருக்கிறோம். எந்த ஒரு சூழலிலும் நிதானம் இழக்காமல் கோபப்படாமல், அவர் அணுகும் விதம் அவரை போன்ற ஒரு பரிபக்குவ ஞானிகளுக்கே சாத்தியம். இன்றைக்கு ஹிந்து மதம் அரசியல் ரீதியான தாக்குதல்களையோ விமர்சனங்களையோ எதிர்கொள்ள நேரிடும்போது, நம்மவர்கள் முகநூல், வாட்ஸ் ஆப்

Read More

காற்றை நிறுத்திய காத்தவராயன்!

மகா பெரியவாவை பற்றி அடுத்தப் பதிவை எப்போது அளிக்கப்போகிறீர்கள் என்று பல வாசகர்கள் கேட்டபடி இருக்கிறார்கள். நமது  ஆக்கத்தில் பிரத்யேகமாக உருவான பெரியவா பற்றிய சிறப்பு பதிவுகள் (Rightmantra Exclusive) விரைவில் வருகிறது. சற்று பொறுமையாக இருந்தால் மிகப் பெரிய விருந்தை ருசிக்கலாம். நமக்கு முன்பை விட பதிவுகள் எழுத, தயாரிக்க தற்போது நிறைய நேரம் பிடிக்கிறது. காரணம் நம் தளத்தின் பதிவுகளின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது. எனவே நமது பொறுப்பும்

Read More

ஒன்றுக்கும் உதவாதது அனைவரும் மெச்சும்படி உயர்ந்தது எப்படி?

பக்தியின் மூலம் முக்தியடைய விரும்பும் அனைத்து அன்பர்களுக்கும், இன்முகம் காட்டி நிறைவான அன்பு செலுத்தி, அவர்களை வழிநடத்திச் சென்றவர் ரமண மகரிஷி. பரம்பொருளின் சொரூபமாக விளங்கிய ரமணர், "நான் யார் என்ற கேள்வியை நமக்குள் கேட்க வேண்டும். இந்தக் கேள்வியே தேவையற்ற எண்ணங்களை எழவிடாமல், மனதை அடக்கும். அதுவே ஆத்ம தரிசனம்!" என்றார். சிஷ்யர்கள் சந்தேகங்களை கேட்கும்போது மெய்ஞாநியானவன், மிகப் பெரிய நூல்களையும் வேத உபநிடதங்களையும் தேடவேண்டியதில்லை. அவர்கள் உள்ள சூழலில்

Read More

“நான் யாருக்கும் நமஸ்காரம் பண்ணமாட்டேன். என்னை கட்டாயப்படுத்தக்கூடாது”

பல நதிகள் எப்படி இறுதியில் சமுத்திரத்தை அடைகிறதோ அதே போல இறைவனை அடைவதற்கு பல வழிகள் உண்டு. ஒவ்வொரு ஞானியரும் ஒவ்வொரு மார்க்கத்தை பின்பற்றி மக்களை நல்வழிப்படுத்தினார்கள். அவர்களுள் ரமணர் பின்பற்றியது 'ஆன்ம விசாரம்'. ஆன்மவிசாரம் அத்தனை எளிதல்ல. ஆனால் மிக மிக கடினமான கருத்துக்களைகூட மிக மிக அற்புதமாக பாமரர்களுக்கும் புரியும் வண்ணம் அன்றாட ஆஸ்ரம நடவடிக்கைகளை கொண்டே பகவான் ரமணர் புரியவைத்தார். அது தான் ரமணரின் சிறப்பு! கடும்கோடையில்

Read More

பெரியவா சொன்னா அந்த பெருமாளே சொன்ன மாதிரி – சிகையால் கிடைத்த மரியாதை!

இன்று மகா பெரியவா ஜயந்தி. நாட்டின் பல இடங்களில் வெகு விமரிசையாக அது தொடர்பான உற்சவங்கள் நடைபெற்றுவருகின்றன. சென்னையில் மட்டும் நான்கைந்து இடங்களில் விமரிசையாக பெரியவா ஜயந்தி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அவருக்கு ப்ரீதியான வேத பாராயணம், கோ- பூஜை, விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம், ஹோமங்கள், அன்னதானம் போன்றவற்றோடு பல அமைப்புக்கள் இதை விமரிசையாக கொண்டாடிவருகிறார்கள். நாம் ஏதாவது ஒரு நிகழ்வில் நேரடியாக பங்கேற்க வேண்டும் என்று நினைத்தோம்.

Read More

ஈசனருளால் இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை – Rightmantra Prayer Club

நாயன்மார்கள் ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தொண்டால், மேற்கொண்ட சிவபக்தியால் தனித்தன்மை பெற்று விளங்கினார்கள். "இது தான் பக்தி, இப்படித் தான் தொண்டு செய்யவேண்டும், இப்படித் தான் வாழவேண்டும்" என்று எடுத்துக்காட்டினார்கள். 'இறைவனுக்காக எதையும் துறக்கலாம். ஆனால், எதற்காகவும் இறைவனை துறந்துவிடக்கூடாது' என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். இன்று சித்திரை பரணி. சிறுத்தொண்ட நாயனாரது குருபூஜை. சிறுத்தொண்ட நாயனாரது சரிதம் மிக மிக தனித்தன்மை வாய்ந்தது. வாத்ஸல்யத்திலேயே மிகப்பெரிய வாத்ஸல்யமான புத்திர வாத்ஸல்யத்தை சிவனுக்காக

Read More

அன்னபூரணிக்கு முதல் நைவேத்தியம்!

குருவானவர் சொல்வதைவிட விட செய்வதையே அவரது சீடர்கள் பின்பற்றுவார்கள். எனவே மெய்ஞானிகள் தங்கள் 'வாழ்க்கையே ஒரு உபதேசம் தான்' என்பதில் கண்ணுங்கருத்துமாக் இருப்பார்கள். நாவைவிட செயலில் தான் அவர்கள் உபதேசம் பிரதானமாக இருக்கும். சொல்வதற்கும் செயலில் காட்டுவதற்கும் உள்ள வித்தியாசத்தை அவர்கள் அறிவார்கள். பகவான் ரமணரை பொறுத்தவரை அவர் எது செய்தாலும் அது உபதேசம் தான். ஒரு முறை மோன நிலையில் (தக்ஷிணாமூர்த்தி கோலத்தில்) பல மணிநேரங்கள் மெளனமாக இருந்து கூட

Read More

காக்கா குருவிக்கு ஏது ஓய் உக்கிராணம்?

சிலரது பெயரைக் கேட்டாலே மனசுக்கு இதமாக இருக்கும் ஏதோ பாரம் குறைந்தது போல இருக்கும். நம்பிக்கை பீறிடும். அப்படிப்பட்ட அருளாளர்களுள் ஒரு தான் பகவான் ரமண மகரிஷி. தமது சாந்நித்தியத்தாலும் சொல்லாலும் நோக்காலும், ஒவ்வோர் அசைவாலும் அடுத்தோர் துன்பத்தையகற்றி, அமைதியையும் மெய்யுணர்வையும் அருளிவந்த அண்ணல் ஸ்ரீ ரமணர். ரமணரை பற்றி நமது தளத்தில் பல பதிவுகள் வெளிவந்துள்ளன. இன்று குருவாரம் என்பதால் ரமணரின் திருவிளையாடல்கள் சிலவற்றை பார்ப்போம். திருவண்ணாமலைக்கு வந்தது முதல் பலகாலம்

Read More

எந்த கண்களில் பார்வை இருக்கிறது? எதில் இல்லை?

ரமண திருவிளையாடற் திரட்டில் மூழ்கியெடுத்த மேலும் சில முத்துக்கள் இவை. சிறு சம்பவம் தான். ஆனால் அதன் மூலம் ரமணர் உணர்த்தும் நீதியும், சொடுக்கும் சாட்டையும் இருக்கிறதே... சுரீர் ரகம்!! எது அவமானம்? ஒரு முறை பகவான் மதிய உணவு அருந்தும்போது, பாடசாலை மாணவன் மோர் பரிமாறினான். பகவானுக்கு மோர் பரிமாறும்போது, "இன்னும் கொஞ்சம் மோர் விடு!" என்றார். பகவான் வழக்கமாக இரண்டாவது முறையாக ஏதும் கேட்பதில்லை. ஆனால் வழக்கத்திற்கு மாறாக இரண்டாவது முறை மோர்

Read More

ஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா…

நண்பர் அனுப்பிய 'ரமண திருவிளையாடற் திரட்டு' படித்து வருகிறோம். மிகப் பெரிய நீதியை பகவான் ரமணர் மிக அனாயசமாக ஒரு சிறு செயல் மூலமோ அல்லது தனது மௌனம் மூலமோ உணர்த்திவிடுகிறார். இது ஒரு வித்தியாசமான அனுபவம். தொண்டு செய்பவர்களுக்கு, அது சமூகத் தொண்டோ சமயத் தொண்டோ ஒரு கட்டத்தில் அகந்தை ஏற்பட்டுவிடும். தான் மட்டும் தான் சேவை செய்வதாகவும் மற்றவர்கள் எல்லாம் ஒன்றுக்கும் பயனில்லாமல் இருப்பதாகவும் எண்ணம் ஏற்படும். அது

Read More

பிள்ளையார் பழமும் அதீத சிற்றம்பலமும் – இது ரமண திருவிளையாடல்!

பிள்ளையார் பழம்! குழுமணி நாராயண சாஸ்திரி தான் எழுதிய வால்மீகி இராமாயண உரையை பகவானிடம் சமர்பிக்க விரும்பினார். வெறுங்கையோடு போகக்கூடாது என்று ஒரு சீப்பு வாழைப்பழம் வாங்கினார். ஒரு விநாயகர் கோவிலை கடந்து தான் வரவேண்டியிருந்தது. கோவிலைக் கடக்கும்போது மானசீகமாக ஒரு பழத்தை விநாயகருக்கு அர்ப்பணம் செய்தார். ஆஸ்ரமம் வந்து சேர்ந்தவுடன் பகவானை வணங்கி, அந்த பழங்களை அவர் முன்னே வைத்தார். அங்கிருந்த சேவகர் அதை உள்ளே எடுத்து வைக்க முயன்ற போது, பகவான், "கொஞ்சம்

Read More

ரமண திருவிளையாடற் திரட்டில் கண்ட முத்துக்கள் மூன்று!

நண்பர் அனுப்பிய 'ரமண திருவிளையாடற் திரட்டு' படித்து வருகிறோம். நூலை படிக்கும்போது ஒரு விஷயம் தெளிவாக புரிகிறது. சித்து விளையாட்டுக்களில் ரமணர் மிகவும் கை தேர்ந்தவர் என்றாலும் அதை காண்பித்து ஒருபோதும் பக்தர்களை ஈர்க்கவோ தக்கவைத்துக்கொள்ளவோ அவர் முயற்சிக்கவில்லை. அதே சமயம் அவரால் இயலாதது எதுவும் இல்லை என்பதற்கும் சான்றுகள் உள்ளன. தன்னை சந்திக்கவரும் அனைவரின் ஆன்மாவையும் விழித்தெழ செய்து 'நாம் யார்?' 'எது உண்மையான பக்தி?' 'எது உண்மையான

Read More