Home > நீதிக்கதைகள் (Page 10)

பாரதி விழாவும் எறும்புகளும் – MONDAY MORNING SPL 23

பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரின் மடத்தில் எறும்புகள் தொல்லை இருந்தது. ஏதாவது ஒரு உணவுப் பொருளை வைத்துவிட்டால் போதும் எறும்புகள் அவற்றை மொய்த்துவிடும். மடத்தில் ஒரு முறை ஒரு விழாவிற்காக லட்டுக்கள் செய்யப்பட்டன. ஒரு பெரிய தட்டு நிறைய அடுக்கி வைக்கப்பட்ட லட்டுக்களை இரவு நேரத்தில் எறும்புகளிடம் இருந்து எப்படி காப்பாற்றுவது என்று சீடர்களுக்கு கவலை ஏற்பட்டது. அதுபற்றி பகவானிடமே கேட்டார்கள். அதற்கு மெலிதாக சிரித்தவாறே பதில் அளித்த பகவான், சீடர்களிடம் லட்டு நிறைந்த

Read More

அமைதி என்றால் என்ன? Monday Morning Spl 22

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள். மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக்கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்திருந்தார்கள். ஒருவர்

Read More

இந்த உலகம் யாருக்கு சொந்தம் ? Monday Morning Spl 21

அவர் ஒரு சமூக  சேவகர். ஒரு நாள் பணி முடித்து நள்ளிரவு வீட்டுக்கு சென்று கொண்டிருக்கிறார். ஒரு சுரங்கபாதையை கடக்கும்போதும், திடீரென அவரை வழி மறித்த திருடன் ஒருவன், கூரிய கத்தியை காட்டி, "உன் பர்ஸை என்னிடம் கொடு. முரண்டு பிடித்தால் உன் குரல் வளையை அறுத்துவிட்டு அதை நான் பறிக்க நேரிடும்" என்று மிரட்டுகிறான். திருடனை பார்க்கிறார் இவர். அவனுக்கு அதிகபட்சம் 18 அல்லது 19 வயது இருக்கும். டீன்

Read More

அதிசய எலியும் ஒரு புத்திசாலி பெண்ணும் ! Monday Morning Spl 20

ஒரு பெண் தோட்டத்தில் உள்ள புல்வெளியில் குழந்தைகளுடன் பந்து விளையாடிக்கொண்டிருந்தாள். கணவன் வெளியே சென்றிருந்தான். விளையாடும்போது குழந்தைகள் அடித்த பந்து புல்வெளிக்குள் சென்று மறைந்துவிட, அதை தேடிக்கொண்டு இவள் சென்றாள். அங்கே ஒரு பொறியில் ஒரு வெள்ளை எலி சிக்கியிருப்பதை பார்க்கிறாள். இவளை பார்த்தவுடன், அந்த வெள்ளை எலி பேசியது. "என்னை இந்த பொறியில்  இருந்து விடுவித்தால் உனக்கு மூன்று வரம் தருவேன்" என்றது. இவளுக்கு எலி பேசுவது ஆச்சரியம். தன்னை விடுவித்தால் வரம்

Read More

பெருந்தன்மை என்னும் பந்து! – Monday Morning Spl 19

அது ஒரு புகழ்பெற்ற பாடசாலை. தூர தேசங்களில் இருந்தெல்லாம் மாணவர்கள் அங்கு வந்து தங்கி கல்வி கற்றுக்கொண்டு செல்வார்கள். மிக மிக அரிய நூல்களின் ஓலைச் சுவடிகளின் களஞ்சியமாகவும் அந்த பாடசாலை விளங்கியது. அதை ஒரு சந்நியாசி   நிர்வகித்து வந்தார். அந்த பாடசாலைக்கு சந்நியாசியின் நண்பர்களில் ஒருவரான அந்த ஊரைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் வந்திருந்தார். அவர் பழமையான நூல்களையும் ஓலைச்சுவடிகளையும் சேகரிக்கும் வழக்கம் உள்ளவர். பாடசாலையில் பழங்கால, அரிய தகவல்களும் ஆரூடங்களும்

Read More

வானத்தில் இருப்பதும் பூமியில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே -Monday Morning Spl 17

சராசரி நடுத்தர குடும்பத்து இளைஞன் அவன். பிசினஸில் ஏற்பட்ட நஷ்டத்தாலும் வேறு பல காரணங்களினாலும் தாங்க முடியாத கடன் சுமையில் இருந்தான். கடன் கொடுத்தவர்கள் 'இப்போதே திருப்பிக் கொடு' என்று கழுத்தை நெறித்தனர். பொருட்களை சப்ளை செய்தவர்கள் பணம் கேட்டு தினமும் அலுவலகத்திற்கு வந்து காச் மூச் என்று கத்திவிட்டு சென்றனர். திக்கற்றோருக்கு தெய்வம் தானே துணை? தான் வழக்கமாக செல்லும் கோவிலுக்கு ஒரு நாள் சென்று, மனமுருகி பிரார்த்தித்துவிட்டு சற்று

Read More

வீட்டையும் கொஞ்சம் கவனிங்க பாஸ்…. Monday Morning Spl 16

ஒரு புது மணத் தம்பதி தங்களின் புதிய வீட்டுக்கு குடிபோகிறார்கள். ஒரு நாள் பணி முடித்துவிட்டு வீட்டுக்கு வரும் கணவனிடம் மனைவி சொல்கிறாள், "டியர், மேலே இருக்குற பாத்ரூம்ல பைப்ல தண்ணி ஒழுகிகிட்டே இருக்கு. அதை கொஞ்ச சரி பண்ணித் தரமுடியுமா?" "இதையெல்லாம் எதுக்கு என்கிட்டே சொல்றே? என்ன என்னை பார்த்த பிளம்பர் மாதிரி இருக்கா? நாளைக்கு என்னோட ஆபீஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்கு. அதுக்கு பிரசன்டேஷன் ரெடி பண்ணனும். ஆளை

Read More

எஜமானராக இருப்பதும் அடிமையாக இருப்பதும் நம் கை(வா)யில் ! Monday Morning Spl 15

ஒரு பெரியவருக்கு அவரது பக்கத்து வீட்டில் இருந்த ஒரு இளைஞன் மேல் ஏதோ ஒரு அதிருப்தி. அது நாளடைவில் வெறுப்பாக மாறியது. வருவோர் போவோரிடமெல்லாம் அந்த இளைஞனை பற்றி குறை கூறி வந்தார். அந்த இளைஞன் என்னவோ தான் உண்டு தன் வேலையுண்டு என்று தான் இருந்து வந்தான். ஆனாலும் பெரியவருக்கு அவன் மீது துவேஷம். இப்போதெல்லாம் வம்புக்கு இழுப்பவர்களைவிட தானுண்டு தன் வேலையுண்டு என்று அமைதியாக போய் கொண்டிருப்பவர்கள் மீதும்

Read More

உங்கள் உழைப்பு அதன் அருமை அறியாது உதாசீனப்படுத்தப்படுகிறதா? Monday Morning Spl 12

அவர் ஒரு மிகச் சிறந்த ஓவியர். கண்கள் காணும் இயற்கை காட்சிகளை அப்படியே தத்ரூபமாக படம் வரைவதில் வல்லவர். ஒரு நாள் இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பிரதேசம் ஒன்றில் தனது தத்ரூபமான படைப்பை அவர் தன் மாணவர்கள் முன்னிலையில் வரைய ஆரம்பித்தார். அவர் வரைவதை ஆர்வமுடனும் வியப்புடனும் மாணவர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். தங்கள் ஆசிரியரின் திறமையை எண்ணி வியந்தனர். வரைந்து முடித்த பின்னர், "நாம வரைஞ்சவுடனே கொஞ்சம் தூரத்துல நின்னு நாம வரைஞ்சதை பார்க்கணும்.

Read More

ஒரு கப் காஃபியும் நம் வாழ்க்கையும் – Monday Morning Spl 11

ஒரு பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த மாணவர்கள் கேம்பஸ் தேர்விலும் வெற்றி பெற்று மிகப் பெரிய நிறுவனங்களில் பணியில் சேர்கின்றனர். தங்களுக்கு நல்ல முறையில் கல்வி போதித்து ஓய்வு பெற்ற தங்கள் பேராசிரியர் ஒருவரின் பிறந்த நாளன்று அவருக்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவிப்பதற்காக அவர் வீட்டுக்கு சென்றனர். மாணவர்களும் பேராசிரியரும் ஒருவருக்கொருவர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். மெல்ல அவர்கள் பேச்சு பணியிடத்திலும் வாழ்க்கையிலும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை குறித்து திரும்பியது. மாணவர்கள் வாழ்க்கை

Read More

ஓநாய் சண்டையில நீங்க எந்த ஓநாய் பக்கம்? Monday Morning Spl 10

தனது பேரக்குழந்தையுடன் அந்த பெரியவர் வாக்கிங் வந்துகொண்டிருந்தார். குழந்தை ஜாலியாக அக்கம் பக்கம், சாலையில் போவோர் வருவோர் ஆகியோரை வேடிக்கை பார்த்தபடி நடந்து வந்து கொண்டிருந்தான். "எனக்குள் ஒரு மிகப் பெரிய போராட்டம் நடந்துகிட்டுருக்கு செல்லம்" "என்ன தாத்தா அது?" "இரண்டு ஓநாய்களுக்கிடையேயான கடும் சண்டை அது." "என்னது ஓநாயா?" "ஆமாம்... ஒரு ஓநாய் அசிங்கமாகவும் கொடூரமாகவும் இருக்கிறது. அதனிடம் காமம், கோபம், பொறாமை, சுயபச்சாதாபம், ஏமாற்றம், தாழ்வுமனப்பான்மை, தற்பெருமை, ஆணவம், சுயநலம் போன்ற அருவருக்கத்தக்க குணங்கள்

Read More

பிரச்னைகளிலிருந்து தப்பிக்க ஒரு வழி சொல்லுங்க குருவே…Monday Morning Spl 9

தன்னை நாடிவருபவர்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் வல்லவர் அந்த ஞானி. அவரை பற்றி கேள்விப்பட்டு அவரை தேடி ஒரு இளைஞன் வந்தான். "குருவே வாழ்க்கையே நரகமாக இருக்கிறது. பிரச்னைகள், துன்பங்கள், தோல்விகள் இது தவிர என் வாழ்க்கையில் எதுவும் இல்லை. நீங்கள் தான் நான் இவற்றிலிருந்து மீள ஒரு வழி சொல்லவேண்டும்!" ஞானி உடனே அந்த இளைஞனிடம் ஒரு கிளாஸில் நீரை கொண்டு வரச் சொன்னார். இளைஞனும் கொண்டும் வந்தான். அவன் கைகளில் ஒரு கைப்பிடி

Read More

என்ன குழியில விழுந்துட்டீங்களா? எப்படி தப்பிக்கிறதுன்னு தெரியலியா?? MONDAY MORNING SPL

ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில் விழுந்துவிடுகிறது. உள்ளே விழுந்த கழுதை அலறிக்கொண்டே இருந்தது. அதை எப்படி கிணற்றிலிருந்து வெளியேற்றி காப்பாற்றுவது என்று அவன் விடிய விடிய யோசித்தும் ஒரு யோசனையும் புலப்படவில்லை. காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்த கழுதையின் விலையை விட அதிகம் செலவு பிடிக்ககூடியதாக இருந்தது. அந்த கிணறு எப்படியும் மூடப்படவேண்டிய ஒன்று. தவிர

Read More

அந்த ‘சில வார்த்தைகளுக்கு’ உள்ள வலிமை ! MONDAY MORNING SPL

அந்த தம்பதிகளுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து ஒரு அழகான குழந்தை பிறந்தது. கண்ணின் மணியை போல அந்த குழந்தையை அவர்கள் போற்றி வளர்த்து வந்தார்கள். இருவரும் குழந்தை மீது தங்கள் உயிரையே வைத்திருந்தார்கள். ஒரு நாள் கணவன் அலுவலகம் செல்லும்போது, கீழே ஒரு மருந்து பாட்டில் திறந்தபடி இருப்பதை பார்க்கிறான். அலுவலகம் செல்லும் அவசரத்தில் இவன் இருந்தபடியால்..."அந்த மருந்து பாட்டிலை எடுத்து கொஞ்சம் ஜாக்கிரதையான இடத்துல வெச்சிடும்மா செல்லம்...." என்று கூறி

Read More