Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, September 14, 2024
Please specify the group
Home > Featured > வானத்தில் இருப்பதும் பூமியில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே -Monday Morning Spl 17

வானத்தில் இருப்பதும் பூமியில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே -Monday Morning Spl 17

print
ராசரி நடுத்தர குடும்பத்து இளைஞன் அவன். பிசினஸில் ஏற்பட்ட நஷ்டத்தாலும் வேறு பல காரணங்களினாலும் தாங்க முடியாத கடன் சுமையில் இருந்தான். கடன் கொடுத்தவர்கள் ‘இப்போதே திருப்பிக் கொடு’ என்று கழுத்தை நெறித்தனர். பொருட்களை சப்ளை செய்தவர்கள் பணம் கேட்டு தினமும் அலுவலகத்திற்கு வந்து காச் மூச் என்று கத்திவிட்டு சென்றனர்.

திக்கற்றோருக்கு தெய்வம் தானே துணை? தான் வழக்கமாக செல்லும் கோவிலுக்கு ஒரு நாள் சென்று, மனமுருகி பிரார்த்தித்துவிட்டு சற்று தனிமையில் இருப்போமே என்று வெளியே படிக்கட்டில் வந்து உட்கார்ந்திருந்தான்.

DSC04770

அப்போது அவன் முன்னே டிப்-டாப் தோற்றத்துடன் இருந்த ஒரு பெரியவர் வந்தார். “தம்பி உன்னை பார்த்தால் ஏதோ பிரச்னையில் இருப்பது தெரிகிறது.. என்ன ஆச்சு?”

ஏதோ தன் கஷ்டங்களை அந்த பெரியவரிடம் சொன்னால் சற்று ஆறுதலாக இருக்கும் என்று கருதி, தன் பிரச்னைகள் அனைத்தையும் அவரிடம் சொல்கிறான்.

“கவலைப்படாதே…உனக்கு நான் உதவுகிறேன்.” என்று கூறிய பெரியவரை நம்ப முடியாது பார்த்தான்.

இவனது பார்வையின் அர்த்ததத்தை புரிந்துகொண்ட பெரியவர், அந்த நகரிலேயே உள்ள மிகப் பெரிய கோடீஸ்வர தொழிலதபர் ஒருவரின் பெயரை சொல்லி… நான் தான் அது. கவலைப்படாதே உன் பிரச்னை தீர உனக்கு நான் உதவுகிறேன். என்று கூறி இவன் பதிலுக்கு காத்திருக்காமல், ரூ.25,00,000/- என செக்கில் எழுதி கையெழுத்துப் போட்டு தருகிறார்.

“ஒரே ஒரு கண்டிஷன்… இந்த செக்கை நீ இப்போதிருந்து சரியா 90 நாள் கழிச்சி தான் டெப்பாசிட் பண்ணனும். ஏன்னா… என்னோட ஒவ்வொரு காலாண்டு கணக்கு முடிவிலும் யாருக்காவது இப்படி செய்றது வழக்கம். அடுத்த காலாண்டு முடிவுல உனக்கு செய்றேன். சரியா ஒரு வருஷம் கழிச்சி இங்கே வா. அப்போ இந்த பணத்தை எனக்கு நீ திருப்பி கொடுத்தா போதும்!” என்கிறார்.

செக்கை வாங்கி பார்த்த இவனுக்கு ஒரே சந்தோஷம். ஆம்… நகரில் உள்ள மிகப் பெரிய தொழிலதிபர் இவர். இவரை பற்றி கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் பார்த்ததில்லை. “எனக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை சார்…!” என்று இவன் கூறி நிமிர்ந்து பார்ப்பதற்குள் பெரியவர் மாயமாய் மறைந்துவிடுகிறார்.

கையில் ஒரு மிகப் பெரியதொகை அதுவும் மிகப் பெரிய தொழிலதிபர் ஒருவர் கொடுத்த தொகை செக் வடிவில் இருக்கவே அவனுக்கு தன் கடன் பிரச்சனை குறித்த கவலை அனைத்தும் பறந்துபோகிறது. தன்னம்பிக்கை ஏற்படுகிறது. செக்கை பத்திரமாக பீரோவில் லாக்கரில் வைக்கிறான்.

தன்னம்பிக்கையுடன் இரவு பகல் பாராது உழைக்க ஆரம்பிக்கிறான். வியாபாரத்தில் ஏன் நஷ்டம் ஏற்பட்டது என்று ஆராய்கிறான். பிரச்னைகளை வேரிலிருந்தே களைகிறான். சரிந்திருந்த அவன் பிசினஸ் கொஞ்ச கொஞ்சமாக நிமிர்கிறது. சில மாதங்களிலேயே அவன் ஒரு மிகப் பெரிய பொசிஷனுக்கு வந்துவிடுகிறான். பெரியவர் கொடுத்த அந்த செக்கை பணமாக்க தேவையே இல்லாமல் போய்விட்டது.

ஒரு வருடம் கழிந்தது. பெரியவரிடம் கூறியபடி அதே கோவில் படிக்கட்டில் காத்திருக்கிறான். பெரியவரும் சொன்ன வார்த்தைகளின் படி வந்தார். “உங்களால் தான் சார்… இந்த நிலைமைக்கு இப்போ உயர்ந்திருக்கேன். கடவுளா பார்த்து தான் உங்களை அன்னைக்கு அனுப்பி வெச்சார்” என்று கூறி செக்கை அவரிடம் ஒப்படைக்க எத்தனித்தபோது, ஒரு நர்ஸ் மற்றும் அவருடன் சில மருத்துவமனை பணியாளர்கள் இவர்களை நோக்கி ஓடிவந்தனர். வந்தவர்கள் அந்த பெரியவரை அப்படியே பிடித்துக்கொண்டனர்.

“அப்பா… இந்த முறை இவரை பிடிச்சிட்டோம்….” என்று பெருமூச்சு விட்டனர்.

நர்ஸ் இந்த இளைஞனிடம் திரும்பி, “சார் இவர் உங்களுக்கு தொந்தரவு கொடுக்கலேன்னு நினைக்கிறேன். இவர் ஒரு மன நோயாளி. அடிக்கடி ஹாஸ்பிட்டல்ல இருந்து தப்பி வெளியே வந்து, உங்களை மாதிரி இருக்குற இளைஞர்களை பார்த்து, “நான் பெரிய கோடீஸ்வரன். உங்களுக்கு உதவுறேன் அப்படின்னு சொல்லி செல்லாத செக்கை கொடுத்துட்டு போய்டுவார்!!” என்று கூறியபடியே அந்த பெரியவரை அழைத்து சென்றனர்.

இந்த இளைஞனுக்கு அதிர்ச்சியின் உச்சத்திற்க்கே சென்றுவிட்டான். இத்தனை நாள் ரூ.25,00,000/- தன்னிடம் இருப்பதாக நினைத்துக்கொண்டு அந்த தெம்பில், அந்த நம்பிக்கையில் அல்லவா உழைத்துகொண்டிருந்தான்?

அந்த செக்கை இவன் பணமாக்காதபோது இவனை உயர்த்தியது தலைநிமிரச் செய்தது எது?

ஒரு கணம் சிந்தித்தபோது தான் அவனுக்கு ஒரு உண்மை புரிந்தது. அந்த செக் உண்மையோ அல்லது போலியோ அது வேறு விஷயம். ஆனால் அந்த செக்கில் உள்ள பணம் தன்னிடம் இருப்பதாக நினைத்துக்கொண்டதால் தனக்கு ஏற்பட தன்னம்பிக்கையும் அது தந்த தைரியமும் தெம்பும் தான் தனது இந்த உயர்வுக்கு மாற்றத்திற்கு காரணம் என்று புரிந்துகொண்டான். அந்த பெரியவருக்கு மானசீகமாக நன்றி சொன்னான். கோவில் மணி அப்போது ஒலிக்கும் சத்தம் கேட்டது.

தன்னம்பிக்கை நம்மிடம் இருக்கும் மதிப்பிட முடியாத பெருஞ்செல்வம். அதை ஒரு போதும் இழக்காதீர்கள்.

நண்பர்களே இதிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளும் நீதி என்ன? உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்…!

=============================================================

முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….

http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
=============================================================

[END]

14 thoughts on “வானத்தில் இருப்பதும் பூமியில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே -Monday Morning Spl 17

  1. காலை வணக்கம் சுந்தர் சார், நீதிதான் தங்கள் கதையிலே இருக்கிறதே தன்னம்பிக்கை ஒன்றுதான் உயர்வுக்கு வழி என்று ஆனால் நாம் எல்லோரும் எல்லாம் தெரிந்திருந்தும் சரியான நேரத்தில் அதை உபயோகபடுத்துவதில்லை சரியான நேரத்தில் அதை நினைவு நினைவு படுத்தியதற்கு நன்றி (நான் மட்டும் இல்லை பல லட்சம் பேர் இன்று காலை ஏதோ ஒரு பிரச்சினை உடன் தான் விழிதிருப்ப்பர்கள் அவர்கள் அனைவருக்கும் இது நலல் டானிக்)

  2. \\\\தனக்கு ஏற்பட தன்னம்பிக்கையும் அது தந்த தைரியமும் தெம்பும் தான் தனது இந்த உயர்வுக்கு மாற்றத்திற்கு காரணம் என்று புரிந்துகொண்டான்\\\.

    \\\தன்னம்பிக்கை நம்மிடம் இருக்கும் மதிப்பிட முடியாத பெருஞ்செல்வம். அதை ஒரு போதும் இழக்காதீர்கள். \\\

    monday recharge done
    -மனோகர்

  3. மிக அருமை சுந்தர் … பணம் முக்கியமில்லை, மனதைரியம் தான் முக்கியம் என்பது இதிலிருந்து தெரிகிறது.

  4. monday morning spl super .
    கதையும் கருத்தும் நன்றாக உள்ளது.
    சரியான சமயத்தில் தன்னம்பிக்கையுடன் நாம் எடுக்கும் முடிவுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
    எப்போதும் போல ஒரு நல்ல தீர்வுடன் மண்டே மார்னிங் விடிந்தது.

  5. Great article. again shows that it is u who help urself-!!
    If one doesn’t have self confidence, there is no use even if GOD comes in front of him!!!
    Sometimes life makes us lose our self confidence—those are the times that we learn the most!!
    Anyone can do well in life when his/her time is good—BUT LEGENDS are those who struggle and those who never give up even in testing times!!
    “GOD HELPS THOSE WHO HELP THEMSELVES”..

    Great start to the week!!Thanks to rightmantra!!
    Regards
    R.HariHaraSudan
    “HE WHO KNOWS THE SELF KNOWS ALL”

  6. உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
    நில்லாது நீங்கி விடும் …திருக்குறள்

  7. தன்னம்பிக்கை விடக்கூடாது என்பதை மிக அழகாக சொல்லியுள்ளீர்கள் …நகைச்சுவையாகவும் உள்ளது தன்னம்பிக்கை என்பது ஒவ்வொருவர் மனதிலும் உள்ளது வேறு எங்கும் இல்லை எங்கும் தேடி அலைய வேண்டாம் என்பது உங்கள் இந்த கதையில் அருமையாக தெரிகிறது ..
    இதேபோல் நான் படித்த ஒரு கதை… ஒரு தாய் தன் குழந்தையை தூக்கிக்கொண்டு ஒரு காட்டு வழியே செல்லும்போது வன விலங்குகள் மிகுந்த ஒரு காட்டில் தனியாக மாட்டிக்கொண்டார்கள் இருட்டி விட்டது அதனால் ஒரு மரத்தடியில் படுத்துறங்கி பின்பு விடிந்தபின் செல்வோம் என முடிவு செய்து அங்கு படுத்துக்கொண்டனர் ..இருவரும் நன்கு உறங்கியபின் நள்ளிரவில் குழ்ந்தை கண்விழித்து சுற்றும் முற்றும் பார்த்து அழ எத்தனிக்கும் வேளையில் தன தாய் தன் அருகில் இருப்பதை பார்த்து அழுகையை நிறுத்தி பின் கவலை இல்லாமல் உறங்கியதாம் … அந்த குழந்தைக்கு தெரியாது தன் தாயால் இந்த காட்டு விலங்குகளை சமாளிக்கமுடியாது என்று ..இதுதான் நம்பிக்கை ..
    கருத்துள்ள பதிவினை அளித்தமைக்கு நன்றிகள் …

  8. Dear Sundarji,
    It is a very nice story through this ,each and every one should definitely build their self confidence.

    Regards

    Harish

  9. வாழ்வில் நம்பிக்கை மட்டும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இந்த கதை உதாரணம். மனிதனின் பலமே அவனின் நம்பிக்கை மட்டும்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *