Home > சிவராத்திரி (Page 8)

அன்னமிட்ட அண்ணல்!

இதுவரை எத்தனையோ முறை என் பிறந்த நாள் சென்றிருக்கிறது. ஆனால் இந்த ஆண்டு தான் அது அர்த்தமுள்ள வகையில் சென்றது என்று கருதுகிறேன். முன்னதாக கூறியபடி, நான் என்னை உணர்ந்த பிறகு, என் கடமையும் பாதையும் எதுவென்று தெளிந்த பிறகு வரும் பிறந்தநாள் என்பதால் இது ஒருவகையில் முதல் பிறந்தநாள். பிறந்தநாளின் முக்கியத்துவம் குறித்து சமீபத்தில் நான் அளித்த பதிவுகளில் கூறப்பட்டிருந்தது எனக்கு முன்பே தெரியுமென்றாலும் ஒரு பதிவாக அதை அளித்து

Read More

உங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியுமா?

ஒருவரின் பிறந்தநாள் என்பது சாதாரண நாள் அல்ல. அது ஒரு மகத்தான நாள். இந்த உலகிற்கும் உங்களுக்கும் தொடர்பு ஏற்பட்ட நாள். தங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவத்தை பலர் உணரவேயில்லை. "நான் பிறந்த நாள் கொண்டாடுறதில்லை சார்... வயசு கூடிகிட்டு போறதை கொண்டாடனுமா? வேற வேலை இல்லை. பிறந்த நாளை கொண்டாடுற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை..." இப்படிப்பட்ட வாதங்களை அடுக்குகின்றனர் ஒரு சாரார். மற்றொரு சாரார்... மேற்கத்திய பாணியில்

Read More

இறையருளை பெற இதோ மலரினும் மெல்லிய ஒரு ஷார்ட் கட்!

கோவிலிலும் சரி, வீட்டிலும் சரி... இறைவழிபாட்டில், பூஜையில் பிற பொருட்களை விட பூக்கள் தான்  முக்கிய பங்கு வகிக்கின்றன. இறைவனுக்கு மிகவும் பிடித்தது தன்னை மலர்களால் அர்ச்சனை செய்வது. உணவு விஷயத்தில் நம் ஒவ்வொருவருக்கும் எப்படி ஒரு டேஸ்ட் உண்டோ அதே போல, பல்வேறு தெய்வங்களுக்கும் அவரவர்க்கு மிகவும் பிடித்த பூக்கள் என்று உண்டு. அந்தந்த தெய்வங்களுக்கு ப்ரீதியான பூக்களை கொண்டு அர்ச்சனை செய்தால், நிச்சயம் இறையருளை விரைந்து பெறலாம்.

Read More

விநாயகருக்கு அர்ச்சித்த அருகம்புல்லுக்கு ஈடு இணை இந்த உலகில் உண்டா? விநாயகர் சதுர்த்தி SPL

இந்த விநாயகர் சதுர்த்தியோடு நம் தளம் துவங்கி ஒரு வருடம் ஆகிறது. மக்களின் ரசனைகளும் ஆர்வங்களும் தரமற்ற விஷயங்களில் விரயமாகிக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டங்களில், வாழ்வில் வெற்றி பெறுவதற்கும் சாதிப்பதற்கும் குறுக்கு வழிகளை தேடி அனைவரும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலையில் ஆன்மீகத்திற்கும் சுயமுன்னேற்றத்திற்கும் என பிரத்யேகமாக ஒரு தளத்தை துவக்கி, அதில் தினசரி பதிவை அளித்து அதை நடத்துவது என்பது சாதாரண காரியமல்ல. திருவருள் துணையிருந்தால் மட்டுமே அது சாத்தியம். உங்கள் பலரின்

Read More

கல்லால அடிச்சாத் தான் கவனிக்கணுமா? – Rightmantra Prayer Club

கட்டுமானப் பணிகள் நடந்து வந்த இடம் அது. ஏழாவது மாடியிலிருந்த சூப்பர்வைசருக்கு கீழே தரைத் தளத்தில் நின்றுகொண்டிருந்த தொழிலாளியிடம் ஒரு முக்கிய விஷயத்தை சொல்லவேண்டும். கட்டுமானப் பணிகளின் இரைச்சலில் அதிகாரி மேலேயிருந்து கூப்பிடுவது தொழிலாளியின் காதில் விழவில்லை. அதிகாரிக்கோ அவனிடம் அவசரமாக ஒரு தகவல் சொல்லவேண்டும். என்ன செய்வது என்று யோசிக்கிறார்.... சட்டென்று தனது பர்ஸிலிருந்து இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து அதை சுருட்டி கீழே போடுகிறார். தன் முன்னே

Read More

எங்கே ‘தேடல்’ உள்ளதோ அங்கே தோல்வியில்லை!

நம் தளம் சார்பாக கடந்த மார்ச் மாதம் (சிவராத்திரி) முதல் உழவாரப்பணி தொடங்கி இதுவரை நான்கு கோவில்களில் செய்துவிட்டோம். நண்பர்களும் திரளாக பங்கேற்று இறைபணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் 'பரவாயில்லையே... கோவிலை தேர்வு செய்து உழவாரப்பணி செய்வது சுலபமாக இருக்கிறதே' என்று ஒரு எண்ணம் ஏற்பட்டது. ஆனால் அது எத்தனை தவறு என்று பிறகு தான் புரிந்தது. காரணம், இம்முறை பணி செய்ய கோவில் கிடைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. நாம் உழவாரப்பணி

Read More

“சிவனாக இருப்பது அத்தனை சுலபமல்ல!” – சிவபெருமான் ருசிகர பேட்டி!

பேரம்பாக்கம் நரசிங்கபுரம் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயத்தில் சென்ற மாதம் உழவாரப்பணி மேற்கொண்டது தொடர்பான பதிவை எழுதி வருகிறேன். சற்று விரிவாக ஆழ்ந்து, அனுபவித்து எழுதி வருவதால் நேரம் பிடிக்கிறது. நாளை அல்லது நாளை மறுநாள் அது போஸ்ட் செய்யப்படும். இதற்கிடையே ஆவலுடன் தினசரி வந்து செல்லும் நீங்கள் ஏமாற்றமடையக்கூடாது என்று கருதி இன்று இரண்டு பதிவுகளை அளிக்கிறேன். ஒன்று நான் மிகவும் ரசித்து படித்தது. மற்றது வேதனையுடன் படித்தது. ஒவ்வொன்றாக இன்று

Read More

பணம் காக்காவிட்டாலும் புண்ணியம் காக்கும் – ஆடி அமாவாசை ஸ்பெஷல்

பொதுவாகவே தான தர்மங்கள் செய்வது மிகவும் சிறந்தது. நம்மை காக்கும் கவசம் போன்றது. அதிலும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை போன்ற பித்ருக்களுக்குரிய தினங்கள், சந்திர சூரிய கிரகணம் ஏற்படும் புண்ணிய காலங்கள், தீபாவளி, பொங்கல், நவராத்திரி, விஜயதசமி, கார்த்திகை போன்ற பண்டிகை காலங்களில். சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்ற முக்கிய விரத நாட்களில் தான தருமங்கள் செய்வது பன்மடங்கு பலன் தரக்கூடியது. ஒருவரது விதியையே மாற்றக்கூடியது.

Read More

பாராட்டும் வரவேற்பும் பெற்ற நமது ஒத்தாண்டீஸ்வரர் கோவில் உழவாரப்பணி! பிரத்யேக பதிவு!!

நமது தளம் சார்பாக திருமழிசையில் எழுந்தருளியுள்ள குளிர்ந்த நாயகி உடனுறை ஒத்தாண்டீஸ்வரர் திருக்கோவிலில் உழவாரப்பணி நடைபெற்றது நினைவிருக்கலாம். பணி நடைபெற்ற 16 ஜூன் ஞாயிறு காலை 7 மணிக்கெல்லாம் நம் நண்பர்கள் கோவிலுக்கு வந்துவிட்டனர். ஏற்கனவே தர்மகர்த்தா திரு.ராமமூர்த்தி அவர்களிடம் பேசி உரிய அனுமதி நாம் பெற்றிருந்ததால் உள்ளே அர்ச்சகரிடம் என்னென்ன பணிகள் செய்யவேண்டியிருக்கிறது என்று கேட்டு குறிப்பெடுத்துக்கொண்டோம். பின்னர் அந்தந்த பணிகளுக்கு என வந்திருந்த நண்பர்கள் இரண்டு இரண்டு பேராக பிரித்து

Read More

அறியாமை இருளை அகற்றிய ஞான சூரியன் ஜகத் குரு ஆதிசங்கரர் ஜெயந்தி சிறப்பு பதிவு!

இன்று ஜகத் குரு ஆதிசங்கரரின் அவதாரத் திருநாள். சங்கர ஜெயந்தி. சங்கரரின் அவதாரம் மிக மிக அத்தியாவசியமான ஒரு காலகட்டத்தில் நம் நாட்டில் நிகழ்ந்தது. ஹிந்துக்கள் தங்களுக்குள்ளேயே பேதங்களை வளர்த்து, ஒருவருக்கொருவர் விரோதித்துக்கொண்டு, வேத நெறிகளிலிருந்து விலகி புதுப் புது தெய்வங்களை கண்டுபிடித்து அவற்றை கொண்டாடி வந்த காலகட்டம். எங்கும் அமைதியின்மையும் வன்முறையும், பஞ்சமும் தலைவிரித்தாடியது. யாகங்களின் பெயரில் பல இடங்களில் உயிர்ப்பலி கொடுக்கப்பட்டு வந்தது. மக்கள் அஞ்ஞானத்தில் உழன்றனர். ஆதிசங்கரர்

Read More

தீவினைகளை அகற்றி பாவங்களை துடைத்தெறிய ஓர் அரிய வாய்ப்பு!

இந்த உலகில் ஒவ்வொரு பூட்டும் படைக்கப்படும்போதே அதற்கு சாவியும் படைக்கப்பட்டுவிடுகிறது. அது போல பிரச்னை தோன்றும் போதெல்லாம் அதற்கு தீர்வும் தோன்றிவிடுகிறது. திமிரிலும், அகம்பாவத்திலும், அறியாமையினாலும் மனிதன் தனக்கு தானே ஏற்படுத்திக்கொள்ளும் பிரச்னைகளுக்கும் துன்பங்களுக்கும் வேண்டுமானால் தீர்வுகள் கடினமாக இருக்கலாம் அல்லது இல்லாமலே கூட போகலாம். ஆனால் இறைவன் தரும் சோதனைகளுக்கும் துன்பங்களுக்கும் நிச்சயம் தீர்வு உண்டு. காரணம் அவன் நோக்கம் நம்மை கஷ்டப்படுத்தி பார்ப்பது அன்று. நம்மை பக்குவப்படுத்துவதே. முன்னம் எத்தனை

Read More

மாங்காடு காமாட்சியம்மன் ஆலயத்தில் ஈழத் தமிழர்களுடன் நடைபெற்ற நம் முதல் பிரார்த்தனை

நமது 'ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்' சார்பாக நேற்று துவங்கிய கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழகம் மட்டுமல்லமால் உலகம் முழுவதும் உள்ள நம் தள வாசகர்கள் பலர் இதில் கலந்துகொண்டு அவரவர் இடங்களில் பிரார்த்தனை செய்தனர். நேற்று பிரதோஷ தினம் என்பதால் பிரார்த்தனை நேரத்தில் (5.30 pm - 5.45 pm) சிவாலயங்களில் பிரார்த்தனை செய்ததாக நம்மை தொடர்பு கொண்ட பலர் கூறினர். நமது பிரார்த்தனை, மாங்காடு காமாட்சியம்மன் ஆலயத்தில்

Read More

இவர்களின் சேவையை விட பெரியது இந்த உலகில் உண்டா? “இதோ எந்தன் தெய்வம்” – (3)

திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலை நாங்கள் சுத்தம் செய்யும்போது அந்த கோவிலை தினந்தோறும் கூட்டிப் பெருக்கும் ஒரு வயதான அம்மா சிறிதும் சலிப்படையாமல் குப்பை விழ விழ பெருக்கிக்கொண்டே இருந்ததை கவனித்தோம். அவர்கள் பாட்டுக்கு தனக்குள் ஏதோ பேசிக்கொண்டே இருந்தார்கள். "இப்படி குப்பைகளை போட்டுவிட்டு நமக்கு ஓயாமல் வேலை வைக்கிறார்களே..." என்று எல்லோரையும் திட்டிக்கொண்டு பெருக்குகிறார்கள் போல... என்று நினைத்துக் கொண்டேன். அப்புறம் தான் புரிந்தது அவர் புத்தி சுவாதீனம் இல்லாதவர்

Read More

திருவேற்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோவிலில் இனிதே நடைபெற்ற நமது உழவாரப்பணி – Quick Update

இறைவன் அருளால் நமது தளத்தின் சார்பாக - திருவேற்காடு பாலாம்பிகை உடனுறை அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவிலில் - இன்று துவங்கிய உழாவாரப்பணி வெகு சிறப்பாக நடைபெற்றதோடு மட்டுமல்லாமல் ஆலய நிர்வாகத்தினரால் மிகவும் பாராட்டப்பட்டது. இந்த அரிய வாய்ப்பை நமக்கும் நமது நண்பர்களுக்கும் நல்கிய ஈசனின் கருணையை என்னவென்று சொல்வது? இன்றைக்கு காலையில் நாம் இந்த பணிக்காக கோவிலுக்கு செல்லும்போது ஆங்காங்கே குப்பைகள் மற்றும் உணவருந்திய இலைகளுடன் குப்பை கூளங்களுடன் காட்சியளித்தது. (நேற்று சனிப்பிரதோஷம்

Read More