Home > நீதிக்கதைகள் (Page 4)

ஒரே ஷாட் – பந்தயத்தில் வென்ற சுவாமி விவேகானந்தர் – Must Read!

அடுத்தடுத்து ஆன்மீக / ஆலய தரிசன பதிவுகள் பல வரவிருப்பதால சுயமுன்னேற்ற பதிவு ஒன்றை அளித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. சுவாமி விவேகானந்தர் தொடர்புடைய இந்த சம்பவத்தை பதிவளிக்கவேண்டும் என்று  நீண்ட நாட்களாகவே திட்டமிட்டு வந்தோம். இது சாதாரண பதிவு அல்ல. வாழ்க்கைக்கே வழிகாட்டும் பதிவு. பொருள் உணர்ந்து படியுங்கள்! வாழ்த்துக்கள்!! உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்.... விவேகானந்தர் சிகாகோ சென்றிருந்தபோது, சுவாமிஜியும் ஹாலிஸ்டர் என்ற சிறுவனும், ஒரு புல்வெளி வழியாக நடந்து

Read More

இன்று கிடைக்கும் தேன்துளி Vs நாளை கிடைக்கக்கூடிய வெகுமதி!

வாட்ஸ்ஆப் போன்ற சமூக பகிர்வு தொழில்நுட்பங்களை மற்றவர்கள் எப்படி பயன்படுத்துகிறார்களோ தெரியாது. ஆனால் நம்மைப் பொருத்தவரை நமது லட்சியத்திற்கு அது உறுதுணையாய் இருக்கும் வண்ணமும் நமது தளத்திற்கு பயனுள்ளதாய் இருக்கும் வகையிலும் தான் பயன்படுத்தி வருகிறோம். நம் நேரத்தை அதில் வீணடிப்பது கிடையாது. சமீபத்தில் நண்பர் ஒருவர் வாட்ஸ்ஆப்பில் நமக்கு அனுப்பியிருந்த கதை இது. அருமையான கதை. மிகப் பெரிய நீதி அடங்கிய இந்த கதையை மேலும் சற்று மெருகூட்டி, சுவை சேர்த்து

Read More

பாலைவனமாய் இருக்கும் வாழ்க்கை சோலைவனமாக வேண்டுமா?

அந்த ஊரில் தீபக் என்னும் ஒரு குறும்புக்கார சிறுவன் இருந்தான். சிறுவர்களுக்கே உரிய துறுதுறுப்பு அவனிடம் நிறையவே இருந்தது. எப்போது பார்த்தாலும் மரத்தில் ஏறி விளையாடுவதும் உயரமான கம்பங்களை பார்த்தால் அதில் ஏறுவதும், வீட்டு உத்திரத்தில் தலைகீழாக தொங்குவதும் என குறும்பு செய்வான். ஒரு முறை சுமார் 40 அடி உயரத்தில் இருந்த மரத்தின் கிளை ஒன்றில் தொங்கி விளையாடிக் கொண்டிருந்தான். அந்நேரம் பார்த்து மிக பலமாக காற்று வீசியது. மரமே

Read More

இறைநம்பிக்கை Vs தன்னம்பிக்கை!

தாயின் கருவிலிருக்கும்போது மருத்துவர்கள் அளித்த ஒரு தவறான மருந்து காரணமாக ஸ்டலோனுக்கு பிறக்கும் போதே உடலின் ஒரு பாகம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. பள்ளியில் படிக்கும் போது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கோணலான முகம் சக மாணவர்களின் கேலிப் பொருளாக இருந்தது. எனவே அவர் தன்னை கேலி, கிண்டல் செய்பவர்கள் தன்னைப் பார்த்தால் பயப்படவேண்டும் என்பதற்காகவே பாடி பில்டிங்கில் ஈடுபட்டார். நாட்பட நாட்பட அவருக்கு சினிமாவில் நடிக்கவேண்டும் என்கிற ஆசை அரும்பியது. 1974 ஆண்டு வாக்கில்

Read More

ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?

ஒரு பாஸ்வேர்ட் எப்படி வாழ்க்கையை மாற்றியது? ரீடர்ஸ் டைஜஸ்டில் வந்த ஒரு உண்மை சம்பவம். எப்போதும் போல அந்த திங்கட்கிழமை காலை எனக்கு அருமையாகவே இருந்தது. அந்த செய்தியை என் கணினித் திரையில் பார்க்கும் வரை. "உங்கள் பாஸ்வேர்ட் காலாவதியாகிவிட்டது" - இப்படி ஒரு சர்வர் மெசேஜ் என்னுடைய கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் மின்னியது. பாஸ்வேர்டை நாமே உருவாக்குவது என்பது ஒன்றும் பெரிய கஷ்டமான காரியம் அல்ல. ஆனால் எங்கள் நிறுவனத்தில் அது

Read More

விதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா?

இரண்டு குறு நில மன்னர்களுக்கிடையே ஒரு முறை போர் மூளும் சூழல் ஏற்பட்டது. அவர்கள் எதை செய்வதானாலும் அவர்கள் இருவருக்கும் பொதுவான ஒரு குருவிடம் சென்று ஆலோசனை கேட்டு அதன் பிறகே செய்வார்கள். அந்த குருவோ லேசுப்பட்டவர் அல்ல. மாபெரும் ஞானி பல ஆண்டுகள் தவம் செய்து பல சித்திகள் கைவரப்பெற்றவர். இறைவனிடமே நேரடியாக பேசும் ஆற்றல் பெற்றவர். தனது சக்திகளை கொண்டு நல்ல காரியங்கள் பல செய்து வந்தார்.

Read More

நாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் ?

இது வரை நாம் படித்த கதைகளில் ONE OF THE BEST என்று இதைச் சொல்லலாம். நீங்களும் படியுங்கள். கதை கூறும் கருத்துக்களை உங்கள் ஆழ்மனதில் விதையுங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் இந்த கதையை சொல்லுங்கள். (குழந்தைகளிடம் கதை சொல்லும் பழக்கம் எத்தனை பேருக்கு உண்டு?) அர்த்தமுள்ள சோதனைகள் ஆண்டவனின் போதனைகள்! சோதனைகளையும், வேதனைகளையும் எதிர்கொள்ளாமல் சாதனைகள் புரிந்தவர்கள் என்று சரித்திரத்தில் எவருமே இல்லை. புலிகள் வாழும் அதே காட்டில்தான் புள்ளிமான்களும் வாழ்கின்றன. பூனைகள்

Read More

குரு கேட்ட ‘எதற்கும் உபயோகப்படாத பொருள்’ !

ஒரு குருகுலத்தில் மிகவும் பணக்கார வீட்டு பிள்ளைகள் தங்கி படித்தார்கள். படிக்கும் காலத்தே பலவற்றை கற்றுக்கொண்டார்கள். படித்து முடித்து புறப்படும்போது, குருவிடம், "குருவே தங்களுக்கு தட்சணை தர பிரியப்படுகிறோம். என்ன வேண்டுமோ கேளுங்கள்... எங்களால் முடியாதது எதுவும் இல்லை" என்றனர். அவர்கள் குரு தட்சணை தர விரும்பியது தவறல்ல. ஆனால் அந்த எண்ணத்தை வெளிப்படுத்திய விதம் தான் தவறு என்பதை குரு புரிந்துகொண்டார். மேலும் அவர்களுக்கு இன்னும் பக்குவம் போதவில்லை

Read More

எது உண்மையான தர்மம்?

செல்வத்திற்கு பெயர் பெற்ற நாடு அது. நெற்களஞ்சியம் முதல் அரசின் கருவூலம் வரை அனைத்தும் நிரம்பி வழிந்தன. இருப்பினும் அரசனுக்கு நிம்மதி இல்லை. ஏதோ ஒன்று தம்மிடம் இருந்து தவறுவதாக தோன்றியது அவனுக்கு. இந்த உறுத்தலுடனேயே ஒரு நாள் மாறுவேடத்தில் நகர்வலம் கிளம்பினான். அப்படி செல்லும்போது ஏதோ வேலை செய்துவிட்டு கூலி பெற்றுக்கொண்டு ஆனந்தமாக வந்துகொண்டிருந்த ஒரு குடியானவனை பார்த்தான். "உன்னை பார்த்தால் மிகவும் திருப்தியுடன் வாழ்பவன் போல தெரிகிறது. உன் வருமானம்

Read More

ஒட்டகக் குட்டிக்கு வந்த சந்தேகம்!

ஒரு ஒட்டகமும் அதோட குட்டியோட படுத்திருந்தது. "அம்மா... நான் உன்கிட்டே சில கேள்விகள் கேட்கலாமா?" "தாராளமா கேளுடா கண்ணு... என்ன சந்தேகம் உனக்கு?" - இது அம்மா ஒட்டகம். "அம்மா அது வந்து நமக்கெல்லாம் ஏன்மா பெரிசா முதுகுக்கு மேல் செதில் இருக்கு??" "அதுவா... அதாவது நாம பாலைவனத்துல வாழற பிராணிகள். நமக்கு தண்ணீர் கிடைக்கிறது அபூர்வம். அதுனால் தண்ணி கிடைக்கும்போது, செதில்ல சேர்த்து வெச்சுக்குவோம். அதனால் தண்ணியே இல்லாட்டி கூட நம்மால பல நாட்கள்

Read More

தவளையை கொன்றது எது?

தவளை ஒன்றை பிடித்து ஒரு சிறிய அகலமான பாத்திரத்தில் போட்டு அந்த பாத்திரத்தை சூடேற்றுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீர் சூடேற சூடேற பாத்திரத்தில் உள்ள தண்ணீரின் வெப்பம் மெல்ல மெல்ல அதிகரிக்கும். வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க நீரின் வெப்பத்துக்கு ஏற்ப தவளை தனது உடலின் வெப்பத்தை மாற்றிக்கொள்ளும். நீரின் வெப்பம் ஏற ஏற தவளை தனது உடலின் வெப்பத்தை அட்ஜஸ்ட் செய்து கொண்டே போகும். நீர் மிகவும் சூடேறிவிட்ட நிலையில் தவளையால், மேற்கொண்டு

Read More

“கடவுள் எங்கே இருக்கிறார்?”

அந்த ஊரில் இரண்டு குறும்புக்கார அண்ணன் தம்பிகள் இருந்தார்கள். சிறுவர்களுக்கே உரிய சேட்டைகளும் குறும்புத்தனங்களும் அவர்களிடம் நிரம்ப இருந்தன. யாராவது வீட்டில் வைத்து பூட்டப்பட்டாலோ அல்லது வளர்க்கும் நாயின் முகத்தில் குடத்தை மாட்டிவிட்டாலோ அல்லது சைக்கிளில் காற்றை பிடுங்கிவிட்டிருந்தாலோ தபால் பெட்டியில் வெடிச் சத்தம் கேட்டாலோ சந்தேகமின்றி அது இவர்களாகத் தான் இருப்பார்கள். அந்தளவு குறும்புக்கு பெயர் போனவர்கள் இந்த சிறுவர்கள். ஊரார் அடிக்கடி இவர்கள் வீடு தேடி வந்து இவர்களின்

Read More

‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது?’

இன்றைக்கு பெரும்பாலானோரிடம் உள்ள பிரச்சனை, கேள்வி, "வாழ்க்கையை எப்படி எடுத்துக்கொள்வது? எப்படி வாழ்வது?" என்பது தான். ஏனென்றால், தீவிர இறை நம்பிக்கை கொண்டு தெய்வத்துக்கு பிடித்தமான ஒரு வாழ்க்கையை வாழ்பவர்கள் கூட பல நேரங்களில் சோதனைகளை சந்திக்கிறார்கள். வெறுத்துப் போய்விடுகிறார்கள். ஒரு விஷயத்தை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். நாம் யாரும் கடவுள் அல்ல. மனிதர்கள். இறைவன் ஒருவனுக்கு தான் நினைப்பது நடக்கும். 'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை' என்று கண்ணதாசன் கூறியதில் ஆழமான

Read More

நினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்!

நீங்கள் இப்போதுள்ள நிலைமைக்கு, அது நல்ல நிலைமையோ அல்லது மோசமான நிலைமையோ காரணம் யார் தெரியுமா? அது நீங்கள் தான்! நீங்கள் மறுத்தாலும் உங்கள் மனசாட்சி இதை மறுக்காது. சரி தானே? ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நீங்கள் நன்கு நினைவில் கொள்ளவேண்டும். எப்போது நீங்கள் உதவி கேட்டாலும் உங்களுக்கு மறுக்காமல், தயங்காமல் உதவக்கூடிய ஒரு நபர் யார் தெரியுமா? நீங்கள் தான்! நீங்கள் தான் உங்களுக்கு உதவமுடியும். கடவுளும்

Read More