Home > 2016 > February (Page 2)

பக்தனுக்காக சாட்சி சொன்ன சொக்கநாதர் – RIGHTMANTRA PRAYER CLUB

மதுரையை ஆண்ட சுந்தரபாத சேகரன் என்கிற மன்னனின் ஆட்சியில் தனபதி என்கிற வணிகன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு சுசீலை என்கிற கற்பிற் சிறந்த இல்லாள் இருந்தாள். தனபதி-சுசீலை தம்பதியினருக்கு எல்லாம் இருந்தும் ஒரு பெரிய குறை. நீண்டநாட்களாக அவர்களுக்கு புத்திர பாக்கியம் இல்லை. "கண்ணே...!" என்று கொஞ்சி மகிழ ஒரு குழந்தை இல்லாததால் மிகவும் மனம் வருந்திய தம்பதிகள் மதுரையில் எழுந்தருளிருக்கும் சொக்கநாதப் பெருமானிடம் அடிக்கடி சென்று இது குறித்து முறையிட்டு

Read More

ஒரு நடிகைக்கு தந்தை எழுதிய கடிதம்! MUST READ

நண்பர் ஸ்ரீராம் அவர்கள் சமீபத்தில் நமக்கு வாட்ஸ்ஆப்பில் ஒரு தகவலை அனுப்பியிருந்தார். ஃபிலிம்பேர் விருது விழாவில் பிரபல நடிகை தீபிகா படுகோனே, தன் தந்தை பிரகாஷ் படுகோனே தனக்கு எழுதியதாக கூறி மேடையில் படித்த கடிதம் அது. செய்தி உண்மையா என்று முதலில் உறுதி செய்துகொள்வோம் என்று ஆராய்ந்தோம். தீபிகா பிலிம்பேர் விழாவில் அக்கடிதத்தை படித்தது உண்மை என்று தெரிந்தது. ஆங்கிலத்தில் இருந்த அந்த ஃபார்வேர்டை பின்னர் பொறுமையாக படித்தோம். ஒரே வார்த்தையில்

Read More

“இந்த காளைகள் இத்தனை அழகாக வசீகரத்துடன் இருக்கின்றனவே என்ன காரணம்?”

இந்த பதிவு நம் வாசகர்களுக்கு எதிர்பாராத ஒரு ஜாக்பாட் என்றே சொல்லலாம். காரணம், இன்று காலை நாம் அளிக்க நினைத்த பதிவு இதுவல்ல. வேறு ஒன்று. ஆனால், இறைவனின் திருவுள்ளம் இதுவென்று இருக்கும்போது... அது தானே நடக்கும். இன்று காலை வழக்கம் போல அலுவகலம் வரும்போது சுமார் 9.30 am அளவில், ஆர்யகௌடா சாலையில் அயோத்தியா மண்டபம் அருகில் இந்த மாட்டு வண்டியை பார்த்தோம். வித்தியாசமான தோற்றத்துடன் காணப்பட்ட இந்த மாடுகளை பார்த்தவுடனேயே நம்மையுமறியாமல் கைகள்

Read More

திருமகளின் அருள்மழையும் பின்னே ஒளிந்திருந்த காரணமும்!

நமது 'காலடியை நோக்கி ஒரு பயணம்' தொடரை மீண்டும் தொடர விருக்கிறோம். அடுத்து நாம் சந்திக்கப்போவது பால சங்கரரின் வேண்டுகோளுக்கிணங்க அன்னை மகாலட்சுமி தங்க நெல்லி மழை பொழிந்த இடம். அதாவது 'ஸ்வர்ணத்து மனை'. (இந்த இடத்திற்கு சென்ற ஆண்டு அக்ஷய திரிதியை அன்று நாம் சென்று வந்தது நினைவிருக்கலாம்!) ஆனால், சரித்திரத்தில் திருமகள் ஸ்வர்ண மழை பொழிந்த வேறு இரண்டு சம்பவங்களும் உண்டு. அவற்றை பார்த்துவிட்டு அதன் பிறகு

Read More

பக்தனுக்காக எதையும் செய்வாள் பராசக்தி!

இன்று மகத்துவம் மிக்க தை அமாவாசை மட்டும் அல்ல.... பக்தனின் வாக்கை மெய்ப்பிக்கும் பொருட்டு முழு அமாவாசையான இன்று முழு நிலவை தனது தாடங்கத்தை (காதணி) வீசி அன்னை உமையவள் தோற்றுவித்த நாள்! நாம் அனைவரும் அவசியம் அறிந்துகொள்ளவேண்டிய ஒரு நாள்!! தூய பக்தர்களுக்காக நம் அன்னை எதையும் செய்வாள்... என்பதை உலகிற்கு உணர்த்திய நாள் இன்று. பக்தி வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய இந்த நிகழ்வு நடைபெற்றது எப்போதோ அல்ல... 18

Read More

உங்கள் வெற்றிக்கும் தோல்விக்கும் யார் பொறுப்பு?

நம் தள வாசகர்களுள் ஒருவர் திரு.நாகராஜன் ஏகாம்பரம். சென்ற செப்டம்பர் மாதம் சிறுவாபுரியில் நடைபெற்ற வள்ளி மணவாளப் பெருமான் திருக்கல்யாண உற்சவத்தில் உறவினருக்காக பிரார்த்தனை செய்ய வந்திருந்த அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நம்மை அலுவலகத்தில் சந்திக்கவேண்டும் என்று நம்மிடம் நேரம் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் FAMILY மற்றும் WORK PLACE COMMITMENTS காரணமாக வார நாட்களில் அவரால் வரமுடியவில்லை. ஜனவரி 31 ஞாயிறு காலை நாம் மேற்கு மாம்பலத்தில்

Read More

பித்ருக்கள் வழிபாடும் தை அமாவாசையின் சிறப்பும் – A COMPLETE GUIDE

பித்ருக்களுக்கு ஆற்றவேண்டிய கடமை மற்றும் செய்யவேண்டிய கர்மாக்கள் மற்றும் மகாளய அமாவாசை, ஆடி அமாவசை உள்ளிட்ட முன்னோர்கள் வழிபாட்டுக்குரிய நாட்கள் பற்றி நம் தளத்தில் ஏற்கனவே பல பதிவுகள் வெளியாகியிருக்கின்றன. நாளை தை அமாவாசை - அதுவும் திங்கட்கிழமை வரும் சோமவார தை அமாவாசை. இது மிகவும் அபூர்வம். இன்றைய நாளில் மறக்காமல் பித்ரு காரியங்களை அனைவரும் செய்யவேண்டும். முன்னோர்கள் இறந்த தேதி தெரியாமல் இருப்பவர்கள் இதுபோன்ற நாட்களை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மேற்கு மாம்பலம்

Read More

கர்மாவும் ஒன்றுக்கு பத்தும் – கர்மா Vs கடவுள் (3)

கர்மா என்றால் என்ன? அதை நாம் வெல்ல முடியாதா? அனுபவித்தே தீரவேண்டுமா? அப்படியெனில் கடவுள் எதற்கு? கோவில்கள் எதற்கு? வழிபாடு எதற்கு? பரிகாரங்கள் எதற்கு? என்ற கேள்விகள் எழுகிறதல்லவா...! அதற்கு விடை கூறவே இந்த தொடரை துவக்கினோம். இரண்டு அத்தியாயங்கள் முடிந்த சூழ்நிலையில், தற்போது மூன்றாம் அத்தியாயத்தை தருகிறோம். பல வாசகர்கள் மூன்றாவது அத்தியாயம் எப்போது வரும் என்று கேட்டபடி இருந்தனர். முதலில் கர்மாவை பற்றி சரியாக புரிந்துகொள்வோம். சுவற்றில் அடித்த பந்து திரும்ப வரும்.

Read More

ஆடுகளமும் ஆட்டக்காரர்களும் – ஆளுமை முன்னேற்றத் தொடர் – (5)

நம் தளத்தில் வெளியாகும் பதிவுகள் சில தொடராக வந்து கொண்டிருக்கிறது. பதிவுகளை ஒரு வகைப்படுத்தி ஒரு குடையின் கீழே கொண்டு வரவே தொடராக தருகிறோம். மற்றபடி தனித் தனியாக அவற்றை படித்தாலும் சரி, முன்னும்பின்னும் படித்தலும் சரி அது புரியும் வண்ணமே எழுதி வருகிறோம். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு குறித்த மெஸ்ஸேஜை கன்வே செய்யும். That's all. நமது ஆளுமை முன்னேற்றத் தொடரில் இது ஐந்தாம் அத்தியாயம். நாளுக்கொரு சவால், நொடிக்கொரு பிரச்னை...

Read More

தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா! – தனி ஒருவன் (2)

'தனிமனிதனால் என்ன செய்துவிடமுடியும்?' என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு, தனிமனிதன் சாதித்து காட்டியுள்ள உண்மை நிகழ்வுகளை படம்பிடித்துக் காட்டுவதே இந்த தொடரின் நோக்கம். ஒரு நல்ல விஷயத்தை செயல்படுத்த விரும்பினால், "நான் ஒருத்தன் நினைத்து என்னவாகப்போகிறது?" என்று நினைக்காமல் அதை செயல்படுத்த உறுதியுடன் களமிறங்க வேண்டும். மனதின் சக்தி அளவற்றது. நல்ல நோக்கத்திற்காக அதை திருப்பும்போது அதற்கு யானைபலம் வந்துவிடும். நினைப்பதை எப்படியோ சாதித்துவிடும். சாதனையாளர்கள் வாழ்வில் நிகழ்வது இது தான். சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம்

Read More

உருவு கண்டு எள்ளுபவரா நீங்கள்?

நமது முகநூலில் நேற்றைக்கு இதை பகிர்ந்திருந்தோம். தளத்திலும் வெளியிடும்படியும், பலர் படித்து தவறுகளை திருத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்றும் நண்பர்கள் கூறியதையடுத்து இங்கு பதிவு செய்கிறோம். உடல் பருமனான ஒருவர் சற்று ஒல்லியான பெண்ணுடன் மணக்கோலத்தில் உட்கார்ந்திருப்பதை 'அண்டாவை ஏன் டம்ளர் மேலே கவுக்குறீங்க?" என்று கேலி செய்து முகநூலில் ஒரு படம் அதிகம் பகிரக் கண்டேன். சற்று மெச்சூர்டானவர்கள் கூட அதை ஒரு வேகத்தில் பகிர்ந்து எள்ளியது அதிர்ச்சியளித்தது. 'உருவு கண்டு

Read More

நந்தனாருக்காக விலகிய நந்தி – திருப்புன்கூர் ஒரு நேரடி தரிசனம்!

'உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்' தனது அடியவர்கள் வாழ்வில் பல்வேறு காலகட்டங்களில் புரிந்த புரிந்துவரும் அற்புதங்கள் எண்ணிலடங்கா. குறிப்பாக சைவ சமயக் குரவர்கள் நால்வரிடமும் இதர நாயன்மார்களிடமும் அவன் நிகழ்த்திய பல்வேறு லீலைகளை திருவிளையாடல்களை படிக்கும்போது "எத்தனை எத்தனை பாக்கியசாலிகள் இவர்கள்" என்று மெய்சிலிர்க்கும். உள்ளம் பூரிக்கும். காதலாகி கண்ணீர் கசிந்திருகும். இந்த அற்புதங்கள் எல்லாம் கற்பனைகள் அல்ல. உண்மையில் நடந்தவை. அவற்றில் பலவற்றுக்கு ஆதாரங்கள் நமது அரும்பெரும் பொக்கிஷங்களான திருக்கோவில்களில்

Read More

உயர உயர பறக்க வேண்டுமா?

பிப்ரவரி 01, 2016, திங்கட்கிழமை. உலகம் முழுதும் இன்றைய நாளில் ஒரு நாளைக்கு சுமார் 80,000 பயணிகள் விமானங்கள் சுமார் 4000 சர்வதேச விமான நிலையங்களிலிருந்து இயக்கப்படுகின்றன. இதை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் இந்த நேரம் சுமார் 20 லட்சம் பேர் விமானங்களில் பறந்துகொண்டிருக்கின்றனர். ******************************* 1800 களின் துவக்கம். அமெரிக்காவில் ஒரு ஏரியின் கரையோரம் உள்ள பெஞ்சில் தன் தாயுடன் ஒரு சிறுவன் அமர்ந்திருக்கிறான். கூட்டம் கூட்டமாக பறவைகள் பறந்து செல்வதை ஆர்வமுடன் பார்க்கிறான். "பறவைகள் மட்டும்

Read More