Home > MONDAY MORNING SPL (Page 10)

சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!

கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிறு சிறுவாபுரியில் அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டுக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த வள்ளி மணவாளப் பெருமான் திருக்கல்யாண மகோற்சவத்தில் பங்கேற்று தொண்டு செய்ய  நாம் நமது குழுவினர் சிலருடன் சென்றது நினைவிருக்கலாம். திருமண வரம் வேண்டி காத்திருந்த பலர் இந்த திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்று சுப்ரமணிய சுவாமியின் அருளுக்கு பாத்திரமாகியுள்ளனர். திருகல்யாணம் தொடர்பான விரிவான பதிவு மற்றும் புகைப்படங்கள் விரைவில் நம் தளத்தில் வெளியாகும். இதனிடையே, கோவிலில் நமக்கு கிடைத்த

Read More

நான் புதைக்கப்படவில்லை… விதைக்கப்பட்டேன்!

ஒரு முக்கியமான விஷயத்திற்காக சிறுவாபுரியும் பேரம்பாக்கமும் (நரசிங்கபுரம்) செல்ல வேண்டியிருந்தது. பேரம்பாக்கம் என்றால் பைக்கே போதும். கூட ஒருவர் வந்தால் போதும் நமக்கு... ஜாலியாக பேசிக்கொண்டே போய்விடுவோம். ஆனால் சிறுவாபுரி, பேரம்பாக்கம் என இரண்டு வெவ்வேறு பக்கங்களில் இருக்கும் ஆலயங்களுக்கு செல்லவேண்டியிருந்ததால் கார் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. கார் வைத்திருக்கும் நண்பர்கள் யாரையாவது கேட்டுப்பார்க்கலாம் என்று கருதி ஒரு சிலரிடம் பேசினோம். வார இறுதி என்றால் வர

Read More

நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா…

இது 2010 டிசம்பரில் நடந்த சம்பவம். 2012 மார்ச்சில் எழுதப்பட்டது. இப்போதைக்கு பதிவை கவனமாக படிக்கவும். கருத்துக்களை உள் வாங்கிக்கொள்ளவும். கட்டுரையாளர் எத்தகைய சூழ்நிலையில் இருந்தார் என்று மட்டும் புரிந்துகொண்டால் போதும். "இனி நான் வாழவே வழியில்லை" என்ற நிலையில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும்  அவசியம் இதை படிக்கவேண்டும். யார், யாருக்கு, எங்கே எழுதினார்கள் என்கிற விபரங்களை எல்லாம் பின்னர் சொல்கிறோம்.  ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை....! 2010... December... சில

Read More

நேதாஜி ஆங்கிலேயர்களுக்கு கொடுத்த முதல் அடி!

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - இந்திய விடுதலை வரலாற்றில் மறக்க முடியாத ஒரு ஆளுமை. 'ஜெய் ஹிந்த்' என்ற ஒரு சொல் மூலம் கோடிக்கணக்கான இளைஞர்களின் மத்தியில் தேசபக்தியை கொழுந்துவிட்டெரியச் செய்தவர். இன்று நேதாஜியின் நினைவு நாள். அவர் மறைந்ததாக சொல்லப்படும் நாள். அவர் மரணம் குறித்து ஆணித்தரமான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் விமான விபத்தில் அவர் இறந்ததாக கூறப்படும் நாள் இன்று தான். அவருடைய உடலுக்கு

Read More

பாரதி சொன்ன ‘அகரம் இகரம்’ !

பாரதியின் வீட்டில் வறுமை தாண்டவமாடிக்கொண்டிருந்தது. அவரோ அந்த நிலையிலும் '"எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா..!" என்று  பாடிக்கொண்டிருந்தார். "வீட்டில் குண்டுமணி அரிசி கூட இல்லை. இந்த மனிதர் இப்படி பாடிக்கொண்டு கவிதை எழுதிக்கொண்டிருக்கிறாரே..." என்று மிகவும் ஆதங்கப்பட்டார் அவர் மனைவி செல்லம்மா. செல்லம்மா மாதர்குல திலகம் அல்லவா? இதை எப்படி அவரிடம் போய் சொல்வது என்று தவித்துக்கொண்டிருந்தாள். மனைவியின் தவிப்பை உணர்ந்த பாரதி, "என்ன செல்லம்மா.... எதையோ சொல்ல விரும்புகிறாய் போல... ஆனால்

Read More

ஒரே ஷாட் – பந்தயத்தில் வென்ற சுவாமி விவேகானந்தர் – Must Read!

அடுத்தடுத்து ஆன்மீக / ஆலய தரிசன பதிவுகள் பல வரவிருப்பதால சுயமுன்னேற்ற பதிவு ஒன்றை அளித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. சுவாமி விவேகானந்தர் தொடர்புடைய இந்த சம்பவத்தை பதிவளிக்கவேண்டும் என்று  நீண்ட நாட்களாகவே திட்டமிட்டு வந்தோம். இது சாதாரண பதிவு அல்ல. வாழ்க்கைக்கே வழிகாட்டும் பதிவு. பொருள் உணர்ந்து படியுங்கள்! வாழ்த்துக்கள்!! உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்.... விவேகானந்தர் சிகாகோ சென்றிருந்தபோது, சுவாமிஜியும் ஹாலிஸ்டர் என்ற சிறுவனும், ஒரு புல்வெளி வழியாக நடந்து

Read More

‘உங்களை வெறுப்பவருடன் நீங்கள் ஏன் தங்கவேண்டும்?’ – விவேகானந்தர் கூறிய பதில்!

இன்று சுவாமி விவேகானந்தர் நினைவு நாள். இதே நாள் 1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி நம்மை விட்டு அந்த ஞானச்சூரியன் மறைந்தது. சுவாமிஜி இந்த உலகில் வாழ்ந்தது 39 ஆண்டுகள் தான். ஆனால் அந்த குறுகிய காலத்திலேயே வாழ்வாங்கு வாழ்ந்து தனக்குப் பின்னால் இன்னும் பல நூற்றாண்டுகள் பல தலைமுறையினருக்கு வேண்டிய சக்தியையும், உத்வேகத்தையும், தன்னம்பிக்கைகளையும் விட்டுச் சென்றிருக்கிறார். சுவாமி விவேகானந்தருக்கும் நமக்கு உள்ள பந்தத்தை நீங்கள்

Read More

‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது?’

இன்றைக்கு பெரும்பாலானோரிடம் உள்ள பிரச்சனை, கேள்வி, "வாழ்க்கையை எப்படி எடுத்துக்கொள்வது? எப்படி வாழ்வது?" என்பது தான். ஏனென்றால், தீவிர இறை நம்பிக்கை கொண்டு தெய்வத்துக்கு பிடித்தமான ஒரு வாழ்க்கையை வாழ்பவர்கள் கூட பல நேரங்களில் சோதனைகளை சந்திக்கிறார்கள். வெறுத்துப் போய்விடுகிறார்கள். ஒரு விஷயத்தை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். நாம் யாரும் கடவுள் அல்ல. மனிதர்கள். இறைவன் ஒருவனுக்கு தான் நினைப்பது நடக்கும். 'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை' என்று கண்ணதாசன் கூறியதில் ஆழமான

Read More

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா செல்லடா!

நம் தனிப்பட்ட வாழ்விலும் சரி... ரைட்மந்த்ரா வரலாற்றிலும் சரி இது  மிகப் பெரிய மைல்கல்! பார்வையற்றோர் இணைந்து நடத்தும் 'வள்ளுவன் பார்வை' என்கிற மின்னஞ்சல் குழுமத்தின் உறுப்பினர்கள் ஆண்டு சந்திப்பு, திருச்சி சமயபுரம் அருகே பழுவூர் என்னும் ஊரில் ஒரு பள்ளியில் நாளை தொடங்கி இரண்டு நாட்கள் நடக்கவிருக்கிறது. இந்த மின்னஞ்சல் குழுமத்தை சார்ந்த தமிழகத்திலிருந்து 200 க்கும் மேற்ப்பட்ட பல்வேறு பார்வையற்ற சாதனையாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் இதில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இவர்களில்

Read More

கீழே விழும்போதெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டிய ஒரு வீரனின் கதை!

ஒரு மிகக் சிறந்த போராளி மற்றும் வெற்றிவீரனின் உண்மைக் கதை இது. விடாமுயற்சியும், மனவுறுதியும், அற்பணிப்பு உணர்வும் இருந்தால் யார் வேண்டுமானலும் என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு தலை சிறந்த எடுத்துக்காட்டு இவர் வாழ்க்கை வரலாறு. விதியை வென்று சாதனை படைத்த வீரன்! கரோலி டகாக்ஸ். நீங்கள் இதுவரை இப்படி ஒரு பெயரை கேள்விப்பட்டிருப்பீர்களா என்பது சந்தேகமே. ஆனால், ஹங்கேரி நாட்டில் இவர் ஒரு தேசிய ஹீரோ. அந்நாட்டில் அனைவருக்கும் இவரைப் பற்றியும்

Read More

காலடி பயணமும் ஒரு அவசரத் தேவையும்!

வாசகர்களுக்கு வணக்கம்! நமது RIGHTMANTRA.COM அலுவலகத்தை பிப்ரவரி மாதம் துவக்கியபோது ஒரு அலுவலகம் அமைப்பதற்கு அத்தியாவசியமான சில அடிப்படை தேவைகளை பற்றி குறிப்பிட்டு வாசகர்களிடம் உதவிக்கரம் நீட்டுமாறு கோரிக்கை விடுத்திருந்தோம். அதில் ஒரு சிலவற்றை தவிர அனைத்தும் நம் வாசகர்களின் பேராதரவோடு பெருங்கருணையோடு நிறைவேறிவிட்டன. அவர்கள் உதவிக்கரம் நீட்டாவிட்டால் நமது கனவு கானல் நீராகவே போயிருக்கும். இப்படி உதவிகளை நல்கிய வாசகர்கள் சிலர் தங்கள் பெயர்களை வெளியிடவேண்டாம் என்றும் இது ஆத்மார்த்தமாக தாங்கள் செய்யும் உதவி

Read More

மனமிருந்தால் மார்க்கமுண்டு!

சீனாவில் நடந்த உண்மை சம்பவம் இது. நினைவு தெரிந்த நாள் முதல் சைக்கிள் ரிக்க்ஷா இழுத்து தனது குடும்பத்தை காத்து வந்த ஏழைத் தொழிலாளி அவர். அவருடைய வயது 74 ஐ எட்டும்போது, உடல் ஒத்துழைக்க மறுக்க "போதும் ரிக்க்ஷா இழுத்தது" என்று முடிவுக்கு வந்து தனது சொந்த ஊருக்கு வந்தார். அப்போது வயல்களில் சிறு குழந்தைகள் வேலை செய்துகொண்டிருப்பதை பார்த்தார். படிக்க வேண்டிய வயதில் இந்த குழந்தைகள் ஏன் வயலில் வேலை

Read More

ஒரு முக்கிய அறிவிப்பு + வேண்டுகோள்!

நம் தளத்திற்கான பதிவுகளை தனிமையாக, நிம்மதியாக நேரமின்மையை பற்றிய கவலையின்றி எழுதிடவேண்டும் என்பதற்காகவே ரைட்மந்த்ராவுக்கு என்று தனியே அலுவலகத்தை துவக்கியிருக்கிறோம். அலுவலகத்திற்கு காலை வந்து, சுவாமிக்கு விளக்கேற்றிவிட்டு பதிவை தயார் செய்து அளித்துவிட்டு அடுத்தடுத்து அளிக்க வேண்டிய பதிவுகளுக்கான CONTENT ஐ தயார் செய்வது பின்னர் மதியம் அளிக்க வேண்டிய பதிவை அளிப்பது, மாலை முக்கிய நிகழ்ச்சிகள் ஏதேனும் இருந்தால் கலந்துகொள்வது என்று இப்போதைய SCHEDULE ஓடிக்கொண்டிருக்கிறது. நம்முடைய ஒரே குறிக்கோள்,

Read More

ஒரு கனவின் பயணம்!

பிப்ரவரி 1, 2015. ஞாயிறு காலை சுமார் 10.15 மணி. 'இராமநாம மகிமை' நாடக புகழ் திருமதி.பாம்பே ஞானம் அவர்கள்  நமது நண்பர்கள் மற்றும் வாசகர்களின் பலத்த கைதட்டல்களுக்கிடையே நமது அலுவலகத்தின் பெயர்ப்பலகையை திறந்து வைத்து ரிப்பன் வெட்டுகிறார். நம்மை ஒரு முறை கிள்ளிப் பார்த்துக்கொண்டோம். இப்போது நினைத்தாலும் அனைத்தும் ஒரு கனவு போலவே இருக்கிறது. திறப்பு விழாவுக்கு வந்திருந்த நண்பர் ஒருவர் நம்மிடம் கேட்டார். "எப்படிஜி இப்படி ஒரு அருமையான இடத்தை

Read More