ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை….!
2010… December…
சில மாத இடைவெளி தான். என் வாழ்க்கையில் என்னென்னவோ நடந்துமுடிந்துவிட்டது. சாதனைகளுக்கும் குறைவில்லை. சோதனைகளுக்கும் குறைவில்லை. (ஒருவேளை சோதனையும் சாதனையும் ஒண்ணா தான் வருமோ?)
சில மாதங்களுக்கு முன்பு சனிப் பெயர்ச்சிப் பலனில் கூறியபடி எனது ராசிக்கு இனி நல்ல காலம் என்று நம்பிக்கையில் உள்ளேன்.
இருப்பினும், சனிப் பெயர்ச்சி முடிந்தபின்பும், அண்மையில் ஒரு சபையில் ஒரு பெரிய அவமானத்தை சந்திக்க நேர்ந்தது. (வேற யாரவது என் இடத்துல இருந்திருந்தால், அன்னைக்கே தூக்கு மாட்டிகிட்டு செத்திருப்பான்.).
என்னுடன் இருந்த நண்பர்களும் எனக்கு நிகழ்ந்த அவமரியாதையை எண்ணி கண் கலங்கி, “விடுங்கண்ணா… இத்தோட எல்லாம் முடிஞ்சிடிச்சுன்னு நினைச்சுக்கோங்க. எதையும் கண்டுக்காதீங்க. நாம பாட்டுக்கு நம்ம லட்சியத்தை நோக்கி போவோம். சாதிச்சி காட்டுவோம். அவங்க நிச்சயம் இதுக்கு வருத்தப்படுவாங்க” என்று என் கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறி, என் மனதை தேற்றினார்கள்.
ஆங்கிலத்தில் ஒரு பொன்மொழி உண்டு…. “COUNT YOUR BLESSINGS; NOT TROUBLES” என்று. அதன்படி, எனக்கு என் விதி தந்த இந்த அவமானங்களுக்கு இடையே இறைவன் என் வாழ்வில் சமீபத்தில் நிகழ்த்திய ஒரு அற்புதத்தை பற்றி உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
நம்பிக்கை துரோகத்தை தாங்கும் சக்தி உலகில் எந்த மனிதனுக்கும் கிடையாது.
நம்பிக்கை துரோகத்தை தாங்கும் சக்தி உலகில் எந்த மனிதனுக்கும் கிடையாது. நண்பர்கள் செய்த துரோகத்தால் அவமானத்தால் நிலைகுலைந்த நான், அழுதபடியே ஒரு முழு நாளை கழித்தேன். யாரிடம் போய் சொல்வது? எங்கே போய் சொல்வது? ஏழை சொல் அம்பலம் ஏறுமா?
‘நாளை என்பதில்லை நரசிம்மனிடம்’ என்பதால் உடனடி நியாயம் கேட்டு பேரம்பாக்கம் (நரசிங்கபுரம்) நரசிம்மரிடம் ஓடினேன்.
சன்னிதானத்தில் அனைவருக்கும் முன்பாக கிட்டத்தட்ட ஒரு பைத்தியம் போல அழுதேன். (ஆலயத்தில் அழக்கூடாது. அன்பினால் கண்களில் நீர் துளிகள் எட்டிப் பார்க்கலாமே தவிர, அழுது அரற்றக்கூடாது!) உடன் வந்த நண்பர் ஆறுதல் கூறி அழைத்து வந்தார்.
இது நடந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. வாழ்க்கையே சூன்யமாகிவிட்டதை போல அன்று உணர்ந்தேன். இருப்பினும் ஏதோ ஒரு நம்பிக்கையில் கொஞ்ச கொஞ்சமாக நான் சார்ந்த துறையில், சாதனைகளை (என் அளவில் அது பெரிய சாதனை தான்!) படைக்க துவங்கினேன். பெரிய மனிதர்களின் நட்பு கிடைத்தது. மாதங்கள் உருண்டோடின.
இந்த மாதத்தின் இறுதியில் மிகப் பெரிய சாதனைகளை அடுத்தடுத்து செய்யும் வாய்ப்பை எனக்கு இறைவன் வழங்கினான். சாதனைகளை படைக்கும்போது, கூடவே அவமானமும் சோதனைகளும் வந்தன. ஆகவே அந்த சாதனைகளின் சந்தோஷத்தை என்னால் முழுமையாக அனுபவிக்க முடியாது போனது.
இந்த வருடம் (2011) டிசம்பர் 25, அன்று சென்ற ஆண்டு (2010) கோவிலுக்கு என்னுடன் வந்த நண்பர் ஃபோன் செய்தார். “அண்ணா ஞாபகமிருக்கா? போன வருஷம் இதே நாள் நரசிம்மர் கோவிலுக்கு போனோம். இன்னைக்கு பார்த்தீங்களா? நம்ம நிலைமை எந்தளவு உயர்ந்திருக்கு..!!” என்றார். அப்போது தான் எனக்கு சென்ற ஆண்டு நாம் நரசிம்மர் கோவிலுக்கு இதே நாள் சென்றது நினைவுக்கு வந்தது.
இதை என் வேறு சில நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டேன். அதில் ஒருவர், “அவசியம் நீங்க இன்னைக்கு அந்த கோவிலுக்கு போய் நரசிம்மரை பார்த்து நன்றி சொல்லிவிட்டு வரணும். போன வருஷம் பிரச்னையை கம்பேர் பண்ணும்போது இந்த வருஷம் நீங்க எங்கேயோ போயிட்டீங்க” என்றனர்.
எனக்கு ஏற்பட்ட பிரச்னைகள் பற்றியே சிந்தித்து வந்தபடியால் எனக்கு கூட அது பற்றி தோன்றவில்லை. நண்பர் கூறியபடி இன்றைக்கு நாம் நிச்சயம் நரசிம்மரை பார்த்துவிட்டு வந்துவிடுவோம் என்று தோன்றவே உடனே ஏற்பாடுகளில் இறங்கினேன்.
இது நடக்கும்போது மணி மாலை 5.00 PM.
உடனே, நண்பர்களிடம் பேசி, வருவதற்கு யார் தயாராக இருக்கிறார்கள் என்று கேட்டு, ஒருவர் தயங்கி பின்னர் ஒப்புக்கொண்டார். (இந்த காலத்துல கோவிலுக்கு கூப்பிட்டா வர தயாரா இருக்குறவங்க நண்பர்களா கிடைக்கிறதே பெரிய விஷயம். அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி தான்!)
நண்பரை வரச் சொல்லி நானும், சுத்தமாக தயாராகி, புறப்படும்போது மணி 6.10 ஆகிவிட்டது. எங்கள் பகுதியிலிருந்து எப்படியும் கோவில் இருக்கும் தூரம் 45 கி.மீ. இருக்கும். நான் ஏற்கனவே ஒரு முறை போயிருக்கிறேன். சரி எப்படியும் வண்டியை வேகமாக ஓட்டி ஒரு மணிநேரத்துக்குள் போய்விடலாம் என்று (தப்பு) கணக்கிட்டு, டூ-வீலரை வேகமாக ஓட்டினேன்.
சென்னை-பெங்களூர் சாலையில் QUEENSLAND தாண்டும்போதே மணி 7 ஆகிவிட்டது. 7.30 மணிக்குள் கோவிலுக்கு போய்விடவேண்டும். நேரமாகிவிட்டபடியால், அந்த நம்பிக்கை குறைந்துகொண்டே வந்தது. (இன்றைக்கு எப்படியும் தரிசித்துவிடவேண்டும் என்று உறுதியாக இருந்தேன்). இருப்பினும், எப்படியும் அரைமணி நேரத்தில் போய்விடலாம் என்றெண்ணி, பேரம்பாக்கம் செல்லும் சாலையில் வண்டியை திருப்பினேன்.
சாலை சில இடங்களில் மிக மிக மோசமாக இருந்தது. நன்கு இருட்டியும் விட்டது. எதிரே வந்த ஒரு சில வாகனங்களின் ஹெட்லைட் கண்களை கூசச் செய்தது. வண்டியை ஓட்ட அது இன்னமும் சிரமத்தை தந்தது. இன்னும் 28 கி.மீ. போகவேண்டும். மணி அப்போது 7.10 pm.
"
நம்பிக்கை கொஞ்சகொஞ்சமாக குறைந்துகொண்டே வந்தது. இருப்பினும், இப்படி இரண்டு பாவப்பட்ட ஜீவன்கள் தன்னை தரிசிக்க வருவது நரசிம்மருக்கு தெரியாமல் இருக்குமா? எனவே நரசிம்மர் எப்படியும் கைவிடமாட்டார் என்று மனதில் ஓரத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது.
வழியில் எங்கும் நிறுத்தாமல், கரடு முரடான அந்த சாலையில் இருட்டில் வண்டியை விரட்டி ஒரு வழியாக சுமார் 45 நிமிடங்களுக்கு பிறகு பேரம்பாக்கத்தில் நுழைந்தோம். டூ-வீலரில் செல்வதாக இருந்தால் பேரம்பாக்கம் ஊருக்கு வெளியே மெயின்ரோட்டில் இருந்து பிரியும் ‘கூவம்’ என்ற ஒரு சிறிய கிராமத்துக்குள் நுழைந்து, கோவிலுக்கு சீக்கிரம் சென்றுவிடலாம். (கோவிலுக்கு போகணும்னா கூவத்தை தாண்டி தான் ஆகணுமோ? இது எதையோ உணர்த்துவது போலில்லை?)அப்படித் தான் அனைவரும் போவார்கள். பஸ்ஸில் போகிறவர்கள் தான் பேரம்பாக்கம் ஊர் வழியாக செல்லவேண்டும்.
அடித்து பிடித்து நாங்கள் கூவம் என்ற கிராமத்தை தாண்டி அட்சம் வயல்வெளிகளுக்குள் நுழைந்து கோவிலுக்கு செல்லும்போது அந்த ஊரே அடங்கிப் போயிருந்தது.
மணி 7.55 …. அங்கே போனால் சன்னதி மூடியிருந்தது. விரக்தியின் உச்சிக்கே சென்றோம்.
“என்னப்பா இப்படி கவுத்திட்டியே… உன்னை நம்பி தானே வந்தோம். அட்லீஸ்ட் நடை சாத்தும் சமயத்தில் வந்தாலாவது உன்னை ஜஸ்ட் ஒரு சில நொடிகளாவது பார்த்திருப்போமே. எங்களுக்காக உன் கதவை திறந்து வைக்ககூடாடா?” என்றெல்லாம் மனதில் ஓடியது.
(இதற்கு முன்பு நான் ஒரு முறை சென்ற போது எடுத்த புகைப்படங்களை இணைத்திருக்கிறேன்! பகலிலேயே இந்த ஊர் எப்படி இருக்கு பாருங்க.)
ஒரே ஒரு மனிதர் தூரத்தில் தட்டுபட்டார்…. அவரை நோக்கி ஓடினோம். சென்னையில் இருந்து வந்த விஷயத்தை சொன்னோம். “அடடா… கோவில் ஏழு மணிக்கெல்லாம் சாத்திட்டாங்களேப்பா… இது மார்கழி மாசம் இல்லையா… காலைல சீக்கிரம் திறப்பாங்க. அதுனால, சாயந்திரம் ஏழு மணிக்கெல்லாம் மூடிடுவாங்க.” என்றார்.
“நாங்க போன வருஷம் வந்தப்போ, கோவில் 7.45 வரைக்கும் திறந்திருச்சு. கொஞ்சம் முன்னே பின்னா ஆனாகூட எப்படியும் தரிசனம் பண்ணிடலாமேன்னு வந்தோம் சார்” என்றேன்.
அவர், “நேற்றைக்கு கூட சாயந்திரம் 8.30 வரைக்கும் திறந்திருந்துச்சு. யாரோ பெரிய ஆளுங்க கார்ல வந்துக்கிட்டுருக்கோம். வெயிட் பண்ணுங்கன்னு சொன்னாங்க. அவங்க வர லேட்டாயிடுச்சு. அர்ச்சகர்களும் வேற வழியில்லாம் வெயிட் பண்ணாங்க. மற்றபடி கோவில் சாத்தும் நேரம் மாலை 7.30 pm” என்றார்.
அந்த அர்ச்சகர்களின் வீடு இங்கே எங்காவது பக்கத்துல இருக்கா? அவங்களை போய் கூட்டிகிட்டு வந்தா கோவிலை திறந்துவிட்டமாடாங்க?” ஒரு நப்பாசையில் கேட்டோம்.
“அவங்க இந்நேரம் அவங்க ஊருக்கு போயிருப்பாங்க. வாய்ப்பேயில்லை” என்றார் அந்த பெரியவர்.
ஒரு பக்கம் நான் சென்டிமென்ட்டாக மிகவும் ஃபீல் செய்தேன். கஷ்டப்பட்டு பிரயாணம் செய்து கோவிலுக்கு போகும்போது கோவில் சாத்தியிருந்தா அது எப்படி இருக்கும்னு அதை அனுபவிச்சவங்களுக்கு தான் தெரியும். தவிர ஆண்டவன்னு ஒருத்தன் இருந்தா, ஒன்னு எங்களை வர்ற வழியிலேயே தடுத்திருக்கணும். இவ்ளோ தூரம் நாங்க வரவெச்சு தரிசனம் கொடுக்காம திருப்பி அனுப்புவானா? ஒரு வேலை கடவுள் இருக்கிறது இதெல்லாம் பொய்யோ” அப்படியெல்லாம் மனசுக்கு தோணிச்சு. கடவுள் நம்பிக்கை கிட்டத்தட்ட எனக்கு போயே போச்சுன்னு சொல்லலாம்.
"
என் நண்பரை நினைச்சு வருத்தப்பட்டேன். நானாவது பரவாயில்லே. நான் கூப்பிட்ட ஒரே காரணத்துக்காக என்னோட வந்த அவர் முகத்தை கூட என்னால் பார்க்கமுடியலே. “சரி.. நாளைக்கு வேணா மறுபடியும் வரலாம் பாஸ்” அப்படின்னு சொன்னேன். “இல்லேயில்லே… நியூ இயர் அன்னைக்கு வரலாமே”ன்னு சொன்னார். சரின்னு திரும்ப சென்னைக்கு கிளம்பினோம். மனசு முழுக்க ஒரே பாரம்.
அது ரொம்ப சின்ன ஊருங்க. ஆள் அரவமே இல்லே. மார்கழி மாச குளிர் வேற. கோவிலுக்கு அடுத்து ரெண்டு மூன்று தெரு தள்ளி, ஊர் எல்லைக்கு வெளியே வரும்போது, ஒரே ஒரு சின்ன கோவில் மட்டும் கண்ணுல எங்களோட இடது பக்கம் தட்டுபட்டது. வரும்போது அந்த வழியாத்தான் வந்தோம். வந்த அவசரத்துல அந்த கோவிலை கவனிக்கலை. அந்த கோவிலை வெளியே இருந்து பார்த்தா ஒரு சின்ன பிள்ளையார் கோவில் போல இருந்துச்சு. ஊர் அம்மனோட கோவிலா கூட இருக்கலாம்னு நினைச்சு, வண்டியை அங்கே நிறுத்தினோம். கோவிலுக்குள்ள ஒரு ஆறேழு பிராம்மண இளைஞர்கள் உட்கார்ந்திருந்தாங்க.
மூலவருக்கு முன்பாக ஸ்க்ரீன் போட்டிருந்தார்கள்.அதாவது கோவிலை அன்னைக்கு மூடிவிட்டு இவங்க கிளம்புவதற்கு ஆயத்தமாக இருந்தார்கள்.
அவங்ககிட்டே நாங்கள் சென்னையில் இருந்து வந்த விஷயத்தை சொல்லி, நரசிம்மரை தரிசிக்க முடியாத எங்க சோகத்தை சொல்லி, இந்த கோவிலையாவது தரிசிக்கலாமேன்னு வந்தோம்னு சொன்னேன்.
உடனே அதுல ஒருத்தரு, (அவர் தான் அர்ச்சகர்) எழுந்திருச்சு போய், ஸ்க்ரீனை விலக்கினார். அங்கே பார்த்தால்… சாட்சாத் நம்ம நரசிம்மர். அதுவும் யோக நரசிம்மர். என்ன ஒரு அற்புதமான காட்சி தெரியுமா அது. காண கோடி கண்கள் வேண்டும். நாளெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல. அத்துணை அழகு. அதே சமயம் உக்கிரம்.
எனக்கு ஒரு கணம் சிலிர்த்துவிட்டது. கண்களில் கண்ணீர் மட்டும் தான் வரவில்லை. மற்றபடி நெகிழ்ச்சிய்ல் அழுதுகொண்டிருந்தேன். என்னுடன் வந்த நண்பரும் சிரித்தபடி என்னை பார்த்தார். “பார்த்தீயா… என்னென்னோவோ சொன்னே… நம்ம நரசிம்மர் நம்மளை கைவிடலை” அப்படின்னு அவர் பார்வை சொல்லிச்சு.
நான் ஒரு கணம் அர்ச்சகர் கிட்டே புல்லரிச்சி போய் நாங்க கிளம்பி வந்த கதையை சொல்லிக்கிட்டு இருந்தேன்.
மந்திரம் சொல்லி தீபாராதனை காமிச்சார். கண்குளிர தரிசித்தேன். “இது போதும் இறைவா… அங்கு மூடிய உன் கதவை இங்கு எங்களுக்காக திறந்தாய் பார்த்தாயா… இந்த ஒன்று போதும். உன் அருள் பார்வை என் மீது இருக்கிறது. இனி எந்த துன்பமும் என்னை ஒன்றும் செய்யாது. மலையை கூட நான் இனி புரட்டுவேன்” என்று அவனிடம் கண்கலங்கியபடி பிரார்த்தனை செய்தேன்.
"ஒரு நிமிஷம் இருங்கன்னு சொல்லி எங்களை ஓரமா கீழே உட்கார வெச்சவர், திடீர்னு, சன்னதியின் உள்ளே இருந்த ஒரு பாத்திரத்தில் இருந்து, ஆளுக்கு ஒரு பிடி கேசரி எடுத்து கொடுத்தார். பசியில் வாடியிருந்த எங்களுக்கு கேசரியே கிடைத்தது. அதுவும் என் நரசிம்மனிடம் இருந்து. அப்புறம் ஒரு சின்ன சீதாப் பழத்தை எடுத்து ஆளுக்கு கொஞ்சம் பிட்டு கொடுத்தார். ஒரு கணம் நடப்பது கனவா அல்லது நனவா என்றெண்ணியபடி கேசரியும் சீதாப் பழமும் சாப்பிட்டோம். (ஒரு வேலை அங்கே கோவில் திறந்திருந்த கூட எங்களுக்கு இது போல சாப்பிட இனிப்பும் பழமும் கிடைத்திருக்காது!)
கைகளை கழுவதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொடுத்தார்கள்.
அப்புறம் உட்கார்ந்த படி இந்த கோவில் பற்றி விசாரித்தோம். ஆக்சுவலா இது ஒரு வைணவ பஜனை மேடம் & கோவில். இங்கு இருந்து பஜனை செய்தபடி சோளிங்கரில் உள்ள நரசிம்மரை தரிசிக்க பாதயாத்திரையாக செல்வார்களாம். இவர்களும் அது போல காலை செல்லவிருக்கிறார்களாம். மேலும், அந்த கோவில், உற்சவங்களின்போது சாத்தியிருக்கும்போது, இங்கு பூஜைகள் நடைபெறுமாம். இந்த கோவில் அதற்கு நேரடி தொடர்புடையது அல்ல. இருப்பினும், இங்கு பூஜை புனஸ்காரங்கள், பஜனை, தியானம் முதலியவை செய்யப்படுகிறது.
அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு புறப்பட்டோம்.
இரவு நேரமாகிவிட்டபடியால், கோவிலை வெளியே இருந்து கூட புகைப்படமெடுக்க முடியவில்லை. புத்தாண்டுக்கு செல்லும்போது, புகைப்படங்களை எடுத்து வருகிறேன். இங்கு உங்களுக்கு தருகிறேன்.
வெளியே வந்து, பைக்கை ஸ்டார்ட் செய்து, சிறிது தூரம் வந்தவுடன், “மூலவருக்கு பக்கத்துல இருந்த அந்த குட்டி விக்ரகத்தை பத்தி என்ன நினைக்குறீங்க? அலங்காரம் நல்ல இருந்துச்சு இல்லே?” அப்படின்னார். எனக்கு தூக்கிவாரிப்போட்டது. “அதுவும் நரசிம்மர் தான். உலோகத்தால் செஞ்சிருந்தாங்க. ஆபரணங்கள் எல்லாம போட்டு அலங்காரம் பண்ணியிருந்தாங்க” என்றார் நண்பர்.
“என்னப்பா சொல்றே நீ? நான் பரவசத்துல எதையும் சரியா கவனிக்கலை. அங்கே ஏதோ ஒரு விக்ரகத்தை பார்த்த மாதிரி தெரிஞ்சுது. நரசிம்மரை பார்த்த உற்சாகத்துல நான் அதை கவனிக்கலை” என்றேன்.
இப்படியே பேசிக்கொண்டே வந்தோம்.
என்னைப் பொறுத்தவரை இந்த சம்பவத்தை என் வாழ்க்கையில் நடந்த மிகப் பெரிய அற்புதமாக கருதுகிறேன். ஒருவேளை நரசிம்மரை தரிசிக்காமல் நான் சென்றிருந்தால், அது என்னை மிகவும் பாதித்திருக்கும். மன ரீதியாக.
நரசிம்மர் இந்தளவு என் மீது கருணை மழை பொழிய, நான் அருகதை உள்ளவனா என்பதில் எனக்கே சந்தேகம் உண்டு. ஆகையால், நான் இந்த அற்புதத்தை அவன் நிகழ்த்த காரணமாக நான் நம்புவது என்னுடன் வந்த அந்த நண்பரைத் தான். மிகச் சிறந்த பக்திமானாகிய அவர், நல்ல பண்பாளர். நல்ல சிந்தனையுடையவர். மிக சிறிய வயதுக்காரர். ஆனால் பக்குவமானவர். அவரைப் போன்ற ஒருவர் தன்னை தரிசிக்க வெகு தூரத்திலிருந்து வந்து இப்படி மன வருத்தத்தோடு செல்லலாகாது என்று பகவான் கருதியாதாலேய “போனாப் போகுது போங்கடா” என்ற எண்ணத்தில் இந்த அதிசயத்தை அவன் நிகழ்த்தினான் என்றே நான் கருதுகிறேன்.
எப்படியோ நெல்லுக்கிறைத்த நீர் இந்த வாய்க்காலுக்கும் ஓடி வந்து விட்டது. அந்த வகையில் சந்தோஷமே.
இந்த அற்புதத்தை பற்றி வரும்போது வழிநெடுக இருவரும் பேசிக்கொண்டே வந்தோம். இதுக்கு அப்புறமும் எனக்கு சோதனைகள் வராமலில்லை. வந்துகொண்டு தானிருக்கிறது. ஆனால் மனதில் ஒரு நம்பிக்கை இருக்கிறது.
“எஸ்… ஆண்டவன் இருக்கான். நல்லவங்க வாழ்வாங்க…. என்ன கொஞ்சம் நேரம் ஆகும் அவ்ளோதான்”
சரி… 2012 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு கடிதத்தை இப்போது ஏன் வெளியிடவேண்டும்?
இரண்டொரு நாள் பொறுங்கள் !
நல்லவர்க்கெல்லாம்…
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா
ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
மனிதனம்மா மயங்குகிறேன்
தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே!
………………………………………………………………………..
கோவில் நடை திறப்பு நேரம்
காலை : 7.30 AM TO 12.00 AM | மாலை: 4.30 PM TO 08.00 PM (*விஷேட நாட்களில் மாறுபடும்)
முகவரி :
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி சேவா சபா ட்ரஸ்ட்,
நரசிங்கபுரம் அஞ்சல், பேரம்பாக்கம் வழி,
திருவள்ளூர் மாவட்டம், அஞ்சல் எண் 631402.
கைபேசி எண் :9442585638.
சென்னை பூவிருந்தவல்லியிலிருந்து நரசிங்கபுரத்திற்கு நேரடி பேருந்து வசதி (591 C) உள்ளது. தவிர திருவள்ளூர், ஸ்ரீ பெரும்புதூர் ஆகிய ஊர்களில் இருந்தும் பேருந்து மூலம் வரலாம்.
…………………………………………………………………………
உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
You can also Cheques / DD drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.
Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215
==============================================================
Also check :
வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்!
‘நாளை’ என்பதில்லை நரசிம்மனிடத்தில்!
வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா? MONDAY MORNING SPL 78
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்!
பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!
108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் தவறவிடக் கூடாத ஒரு தலம்!
நரசிம்மரும் நாயன்மாரும் நமக்கு வழங்கியுள்ள மிகப் பெரிய பொறுப்பு!
அண்ட சராசரங்களை கிடுகிடுக்க வைத்த நரசிம்மர் ஒரு வேடனிடம் கட்டுண்ட கதை!
==============================================================
[END]
தங்கள் டைரியின் பக்கத்தை படிக்க படிக்க ஒரு திக் திக்….. கண்கள் குளமாகி விட்டது. ஆண்டவன் ஒரு கதவை மூடினாலும் …. உங்களுக்கான மறு கதவை திறந்து தரிசனம் தந்து விட்டான். …. அதாவது 2012 முன் ஒரு பாதையில் சென்ற உங்கள் கதவு…. 2012 க்கு பின் ஆன்மிக பயணத்தில் உங்களை பயணிக்க செய்து விட்டது. இதனால் பலன் அடைந்தோர் பலர். அவர்கள் உதடுகள் பலனை சொல்லா விட்டாலும் உள்ளம் சொல்லும்…….
பல சோதனைகளைத் தாண்டினால் தானே வெற்றி கனியை எட்ட முடியும். வெகு சீக்கிரத்தில் அதை அடைந்தால் அந்த வெற்றி நம் மனதில் நிற்காது ..
இந்த 3 வருடத்தில் நெற்றி வேர்வை நிலத்தில் விழ தாங்கள் பாட கஷ்டம் இப்பொழுது பனித்துளியாய் உருகி விட்டது,
தங்கள் உடன் வந்த நண்பர் யார் என யூகிக்க முடிகிறது….
நாங்களும் 2 முறை புத்தாண்டு அன்று தங்கள் குழுவுடன் நரசிம்மர் கோவிலில் ஆலய தரிசனம் செய்ததில் எங்களுக்கும் ஏற்ற மிகு வாழ்கையை அந்த இறைவன் கொடுத்து இருக்கிறார். வருடா வருடம் எங்கள் ஆலய தரிசனம் புது வருடத்தில் தொடர இறைவன் வாய்ப்பு அளிக்க வேண்டும்
தாங்கள் எடுக்கும் ஒவ்வொரு பாதையிலும் வெற்றி பெற என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
வாழ்க… வளமுடன்
நன்றி
உமா வெங்கட்
வணக்கம் சார்
இறைவன் மேல் வைக்கும் நம்பிக்கை என்றும் வீண் போனது இல்லை
நாளை என்பது நரசிமன் இடத்தில் இல்லை சார்
நன்றி
தங்களின் பதிவுகளை தொடர்ந்து படித்துகொண்டு வரும் நான்
(இலவசமாக படிப்பது மன உறுத்தலாக உள்ளது விரைவில் அந்த உறுத்தலை நீக்கி கொள்வேன்) பல அறிய முடியாத, அரிய தகவல்களை தொடர்ந்து தரும் உங்களுக்கு மிக நன்றி
என் எழுத்துக்கள் தங்களை எந்த சூழ்நிலையிலாவது சங்கடபடுத்தியிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன். இருப்பவர்கள் தங்களால் இயன்றதை அளித்து உதவினால் இயலாதோருக்கு இதை இப்போது போல என்றும் கொண்டு செல்லமுடியும். மற்றபடி என் நோக்கம் வேறு எதுவுமில்லை. நன்றி!
நாலை என்பது நரசிம்மன் இடத்தில இல்லை.
நரசிம்மன் கண் கண்ட தெய்வம்.
அவர்தம் மனம் உறுகி வேண்டினால் கண்டிப்க நிறைவேறும்.
நன்றியுடன்
நாராயணன்.
அருமையோ அருமை . வழக்கம் போல உள்ளத்தை தொட்ட பதிவு வாழ்க !
வளர்க!!
வெல்க !!!
சில விஷயங்கள் காலத்தால் அழியாது…அதில் இதுவும் ஒன்று
நாளை எது நடக்கும் என்று நமக்கு தெரியாது.
நடந்தவையும்
நடப்பவையும்
நடக்கபோவதும்
நண்மைக்கே ,,,
மனிதர்களை நம்பாமல்
நம்மை படைத்த கடவுளை மற்றும் நம்பவேண்டும்
ஹரி.சிவாஜி
மிக சிறந்த பதிவு.
ஒருமுறை தாங்கள் சிங்கிரிகோயில், பூவரசன்குப்பம் மற்றும் பரிக்கல் கோயில் நரசிம்மரை தரிசனம் செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்.
மூன்று கோயில்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்யலாம்.
சுந்தர் அவர்களுக்கு,
இது மகத்தான சாதனை. பல பல தடைகளுக்கும், அவமானங்களுக்கும் இடையே செய்த சாதனை.
இந்த நான்கு ஆண்டுகளில் பல மாற்றங்கள்: உள்ளத்திலும், உடலிலும், உறுதியிலும். அனைத்தும் ஏற்றங்கள்.
இந்த புதிய, மற்றும் ஒரு முயற்சிக்கு எனது பாராட்டுகளும், வாழ்த்துக்களும்.
இந்த புதிய முயற்சியும் வெற்றி அடைய என்னுயிர் தெய்வமான ராகவேந்த்ரரையும், உங்களின் மஹா பெரியவவையும் பிரார்த்தித்து கொள்கிறேன்.
வெற்றி நிச்சயம்….
**
**சிட்டி**.
Thoughts becomes things
வாழ்க வளமுடன்
சொல்ல சொல்ல இனிக்குதடா !
இறைவா
ஒரு கதவு மூடினால் , மறு கதுவு கண்டிப்பாக திறக்கும் , என்ன புது
கதவு என்பதால் கொஞ்சம் தாமதமாகும்
நன்றி