Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, December 7, 2024
Please specify the group
Home > Featured > நான் புதைக்கப்படவில்லை… விதைக்கப்பட்டேன்!

நான் புதைக்கப்படவில்லை… விதைக்கப்பட்டேன்!

print
ரு முக்கியமான விஷயத்திற்காக சிறுவாபுரியும் பேரம்பாக்கமும் (நரசிங்கபுரம்) செல்ல வேண்டியிருந்தது. பேரம்பாக்கம் என்றால் பைக்கே போதும். கூட ஒருவர் வந்தால் போதும் நமக்கு… ஜாலியாக பேசிக்கொண்டே போய்விடுவோம். ஆனால் சிறுவாபுரி, பேரம்பாக்கம் என இரண்டு வெவ்வேறு பக்கங்களில் இருக்கும் ஆலயங்களுக்கு செல்லவேண்டியிருந்ததால் கார் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. கார் வைத்திருக்கும் நண்பர்கள் யாரையாவது கேட்டுப்பார்க்கலாம் என்று கருதி ஒரு சிலரிடம் பேசினோம். வார இறுதி என்றால் வர தயாராக இருப்பதாக சொன்னார்கள். ஆனால் நமக்கோ இன்று நிச்சயம் இரண்டு ஆலயங்களையும் தரிசிக்கவேண்டும்.

Narasingapuram Narasimmar 1

நண்பர் வெங்கட் (முகலிவாக்கம்) நினைவுக்கு வந்தார். அவரை தொடர்புகொண்டு, “நாளை (புதன்) மாமனையும் மருமகனையும் ஒரு முக்கியமான விஷயத்திற்காக பார்க்க போக வேண்டியிருக்கிறது. கார் எடுத்து வர முடியுமா?” என்று கேட்டோம்.

“உங்களுடன் வர நான் காத்திருக்கேன் சுந்தர். ஏற்கனவே இரண்டு கோவில்களுக்கும் போயிருக்கேன். இருந்தாலும் திரும்ப எனக்கு பேரம்பாக்கம் சிறுவாபுரி இரண்டு கோயிலையும் தரிசிக்க ஆசையாயிருக்கு. முடிந்தால் என் ஃபேமிலியையும் கூட்டிகிட்டு வர்றேன்” என்றார்.

அதே போல காலை 6.30 மணிக்கெல்லாம் நேரே நம் வீட்டுக்கே தனது குடும்பத்தினரை ஏற்றிக்கொண்டு காரை கொண்டு வந்துவிட்டார். அனைவரும் நேரே சிறுவாபுரி பயணம்.

சில நாட்களுக்கு முன்னர் தானே திருக்கல்யாண உற்சவத்துக்கு சிறுவாபுரி சென்றோம். இன்று மறுபடியும் ஏன் ?

விஷயம் இருக்கிறது பின்னர் சொல்கிறோம். (அது அடுத்த பதிவு!)

சிறுவாபுரி பயணம் முடிந்ததும் அங்கிருந்து நேரே பேரம்பாக்கம் பயணம். சுமார் 65 கி.மீ.

************************************************************************

நேற்றைக்கு பேரம்பாக்கம் நரசிம்மரை ஒருவர் தரிசிக்க சென்ற கதையை படித்திருப்பீர்கள். அந்த நபர் வேறு யாருமல்ல நாம் தான். நம்முடன் வந்த அந்த நண்பர் சிட்டி. 2012 ஆம் ஆண்டு ‘கோடியில் ஒருவன்’ என்கிற புனைப்பெயரில் லிவிங்எக்ஸ்ட்ரா தளத்தில் நாம் எழுதியது அது. நாம் தான் ‘கோடியில் ஒருவன்’ என்பது வெகு சிலருக்கு மட்டுமே தெரியும். (Check: நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா…)

ஒரு மிகப் பெரிய சாதனையை செய்யும் சூழல் வரும்போது நம்மை அடையாளப்படுத்திக்கொள்ளலாம் என்று கருதினோம்.

அப்படி என்றால் இப்போது ஏதாவது சாதனை செய்துவிட்டோமா?

முழு பதிவை படித்துவிட்டு நீங்களே சொல்லுங்களேன்…!

கடந்த ஐந்து வருடங்களில் இதுவரை நரசிங்கபுரத்திற்கு 25 – 30 முறை சென்றிருப்போம்.

Narasingapuram Narasimmar 2

2010 ஆம் ஆண்டு டிசம்பர் – எப்படிப்பட்டதொரு சூழலில் நாம் கோவிலுக்கு சென்றோம் என்று சென்ற பதிவில் பார்த்தீர்கள். அதற்கு பிறகு இதுவரை 25 முறைக்கும் மேல் நரசிங்கபுரம் சென்று நரசிம்மரை தரிசித்துவிட்டு வந்திருக்கிறோம். நாம் ஏற்கனவே இது தொடர்பான பதிவுகளில் கூறியது போல, ஒவ்வொரு முறை செல்லும்போதும் வாழ்வில் ஒரு சில படிகள் மேலே செல்வதை உணர்ந்திருக்கிறோம். இது பொய்யில்லை. உண்மையிலும் உண்மை.

உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறோம்.

உங்களுக்கே தெரியும்… இதற்கு முன்பு நாம் நரசிங்கபுரம் சென்றது தளத்தின் அலுவலக துவக்க விழா அழைப்பிதழை வைக்க. அது நடந்தது ஜனவரி 28, 2015 அன்று.

அதற்கு அடுத்து இன்று செப்டம்பர் 9, 2015 அதாவது இந்த ஆண்டின் இரண்டாம் முறை தரிசனம்.

(நரசிம்ம ஜெயந்தி அன்று உட்பட ஆண்டுக்கு குறைந்த பட்சம் ஐந்து அல்லது ஆறு முறை நரசிங்கபுரத்திற்கு சென்று வருவது நம் வழக்கம். இந்த ஆண்டு முடிவதற்குள் மேலும் மூன்று முறை சென்று வந்துவிடுவோம்!)

இன்று நாம் சென்றது எதற்காக….?

மேலே படியுங்கள்….

கோவிலுக்கு வெளியே நாங்கள் சென்ற நண்பரின் காரை பார்க் செய்துவிட்டு பூ, பழம், துளசி உள்ளிட்டவற்றை வாங்கிக்கொண்டு ராஜகோபுரத்தை வணங்கிவிட்டு, கருடாழ்வாரை சேவித்துவிட்டு சன்னதி சென்றோம்.

இங்கு பட்டராக இருப்பவர் திரு.சம்பத் பட்டாச்சாரியார்.

Narasingapuram Narasimmar 3

பட்டருக்கு வணக்கத்தை தெரிவித்துவிட்டு, “சுவாமி… நமஸ்காரம். சில வருஷங்களுக்கு முன்னே நான் எந்தவொரு சூழ்நிலையில் இங்கே வந்தேன்… அப்போ இங்கே என்ன நடந்ததுன்னு உங்களுக்கு தெரியும். அன்னைக்கு எனக்குன்னு எந்தவொரு அடையாளமும் இல்லை. நிராயுதபாணியாய் அடைக்கலம் தேடி இங்கே ஓடி வந்தேன். இதோ இன்னைக்கு ஒரு ஆன்மீக / சுயமுன்னேற்ற எழுத்தாளரா இங்கே நிற்கிறேன். ரெண்டு புக் எழுதியிருக்கேன். அதோட வெளியீட்டு விழாவிற்காண அழைப்பிதழை நரசிம்மரிடம் வைத்து ஆசி பெற வந்திருக்கிறேன்….” என்று கூறி நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை காண்பித்தோம்.

சம்பத் பட்டர் மிகவும் ரிசர்வ்டு டைப். அவரிடம் வார்த்தையை வாங்குவது சாதாரண விஷயம் அல்ல. நாம் அரைமணிநேரம் பேசினால் அவர் அரை வார்த்தை பேசுவார். ஆனால் இன்று நாம் இந்த விஷயத்தை சொன்னதும் அவருக்கு அத்தனை சந்தோஷம்.

அர்ச்சனை பொருட்களுடன் அழைப்பிதழையும், மாதிரி நூல்களையும் (ப்ரூஃபிங் பார்க்க நாம் தயார் செயத் DUMMY BOOKS) வாங்கி உள்ளே கொண்டு போய் சுவாமி பாதத்தில் வைத்துவிட்டு அர்ச்சனை செய்துவிட்டு சிறிது துளசி மற்றும் புஷ்பங்களோடு நம்மிடம் தந்தார்.

பிறகு அதை பிரித்து அவரிடம் அதை காண்பித்தோம். அழைப்பிதழையும் நூல்களையும் பார்த்தவர், மிகவும் சிலாகித்து சொன்னார்.

Rightmantra Invite 1

To ZOOM and READ check the following link :
http://rightmantra.com/wp-content/uploads/2015/09/Rightmantra-Invite-11.jpg

Rightmantra Invite 2

http://rightmantra.com/wp-content/uploads/2015/09/Rightmantra-Invite-21.jpg

“அன்றைக்கு நான் இருந்த நிலைக்கும்… இன்றைக்கு நான் இருக்கும் நிலைக்கும் வித்தியாசம் உங்களுக்கு தெரியும். எல்லாப் புகழும் நரசிம்மருக்கே! நான் ஒவ்வொருமுறையும் இங்கு வரும்போதும் வாழ்வில் ஒரு சில படிகள் மேலே சென்றிருப்பதை உணர்ந்திருக்கிறேன். உங்களுக்கும் அது தெரியும்” என்றோம்.

“ரொம்ப சந்தோஷம்… ரொம்ப சந்தோஷம்…. நல்லாயிருக்கு நல்லாயிருக்கு!” என்றார்.

“தாயாரையும் தரிசிக்கவேண்டும்” என்றோம்.

“அங்கே வர்றேன்… வெயிட் பண்ணுங்க” என்றார்.

இங்கு நரசிம்மருக்கு நன்றி கூறிவிட்டு, விடைபெற்றுக்கொண்டு வெளியே வந்தோம்.

அடுத்த சில நிமிடங்களில் மரகதவல்லி தாயார் தரிசனம். தாயாரின் பாதத்திலும் அழைப்பிதழை வைத்துவிட்டு ஆசி பெற்றோம்.

வெளியே வந்தோம்…

Narasingapuram Narasimmar 7

Narasingapuram Narasimmar 8பிரகாரத்தை ஆறு சுற்று சுற்றி வரத் துவங்கினோம்.

மனம் பழைய நினைவுகளில் மூழ்கியது.

நம்மை புதைப்பதாக நினைத்து விதைத்துவிட்டார்கள். அது தான் உண்மை. சம்பந்தப்பட்டவர்களுக்கு கோடி நன்றிகள்!!

"

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு அன்றும், நரசிம்ம ஜெயந்தி, மற்றும் இதர விஷேட நாட்களில் இந்த கோவிலுக்கு வந்தது, எந்த கோவிலுக்கு அகதியாய் வந்தோமோ அதே கோவிலுக்கு ரைட்மந்த்ரா ஆசிரியராக வந்தது, பின்னர் குழுவினருடன் வந்து உழவாரப்பணி (இரண்டு முறை) செய்தது, தளத்தின் மூலம் ஆலயத்திற்கு ஃபேன், தீப மேடை உள்ளிட்டவற்றை வாங்கித் தரும் வாய்ப்பை இறைவன் நமக்கு வழங்கியது, ஒவ்வொரு முறை தரிசனத்திற்கு வரும்போதும் ஏற்றத்தை உணர்ந்தது… இப்படி மனம் பசுமையான நினைவுகளில் மூழ்கியது.

Narasingapuram Narasimmar 6

உண்மையில் பேரம்பாக்கம் நரசிம்மர் நமது வாழ்வில் குறுக்கிட்ட பின்னர் தான் வாழ்வில் ஒரு பிடிப்பே நமக்கு கிடைத்தது. தைரியமும் தன்னம்பிக்கையும் வந்தது.

இதோ இன்று நமது நூல் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழையும் வைத்தாயிற்று.

“என்னப்பா… இனிமே தானே இருக்கு? இப்போவே சாதனை சாதனைன்னு சொல்றே…?” என்று ஒரு சிலருக்கு தோன்றலாம்.

ஒரு ஊரில் ஒரு அரசு ஊழியர் இருந்தாராம். பணம் புழங்கும் பல துறைகளில் பணியாற்றிய போதும் தான் செய்ய வேண்டிய பணிகளுக்கு அவர் யாரிடமும் எந்த சூழ்நிலையிலும் கையூட்டு பெற்றதேயில்லையாம். இதற்காக அவர் சந்தித்த சங்கடங்கள், சவால்கள், துன்பங்கள் ஏராளம்.

“இப்படி நேர்மையா வாழ்ந்து என்ன சாதிச்சே நீ இதுவரைக்கும்?” என்றார்களாம் சக ஊழியர்கள்.

“உங்க எல்லாருக்கும் நடுவே இப்படி நான் நேர்மையாய் வாழ்வதே ஒரு சாதனை தானே!” என்றாராம் அவர் பதிலுக்கு!

அதுபோல இப்படி இரண்டு நூல்களை வெளியிடுவதே நம்மைப் பொறுத்தவரை சாதனை தான். சாதாரண சாதனை அல்ல. மிகப் பெரும் சாதனை!

ஏனெனில், கையிலும் லாக்கரில்லும் பணத்தை வைத்துக்கொண்டு இதை நாம் செய்யவில்லை. நம்மிடம் இருந்த ஒரே மூலதனம் நம்பிக்கை. கூடவே கொஞ்சம் இறையருள்!

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

மேலும் பொறாமைக்கும், புறக்கணிப்புக்கும் நடுவே – பல்வேறு இடையூறுகளை, துன்பங்களை தாண்டி நமது கனவிற்கு செயல்வடிவம் கொடுத்திருக்கிறோம். இதன் சுமை நமக்கு தான் தெரியும்.

“உறங்கும்போது வருவதல்ல கனவு. உன்னை எது உறங்கவிடுவதில்லையோ அது தான் கனவு!” என்று கலாம் அவர்கள் கூறியது போல பல நாட்கள் பசி தூக்காம் பாராமல் உழைத்த உழைப்பின் பலன் இன்று இரண்டு நூல்களாக வெளி வந்திருக்கிறது.

இதை எப்படி செயல்படுத்தினோம்… எப்படி இது சாத்தியமாயிற்று என்றெல்லாம் பின்னர் சொல்கிறோம்.

Narasingapuram Narasimmar 5
நண்பர் வெங்கட்!

நம் வாசகர்கள் அவசியம் நூல் வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்து நமக்கு ஆதரவளித்து மேலும் மேலும் பல நல்ல தரமான நூல்களை நாம் வெளியிட நமக்கு உறுதுணையாக இருக்கவேண்டும்.

இந்த நூல் வெளியாவதற்கு பலவிதங்களில் உதவிகள் நல்கிய நம் நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் ஆதரவும், ஒத்துழைப்பும் நம் மீது கொண்ட நம்பிக்கையும் நம்மை நெகிழச் செய்தது. வாழ்க வளமுடன் நலம் பல பெற்று!

Narasingapuram Narasimmar 4
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் என் நன்றிகள் ஐயனே!

ஒன்றே ஒன்றை மட்டும் மீண்டும் சொல்கிறோம்…

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்!

நாம் எழுதிய பக்தி கதைகள் நூலுக்கு தலைப்பும் இது தான்!

==============================================================

Also check :

நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா…

ஒரு கனவின் பயணம்!

வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்!

‘நாளை’ என்பதில்லை நரசிம்மனிடத்தில்!

வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா? MONDAY MORNING SPL 78

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்!

பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!

108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் தவறவிடக் கூடாத ஒரு தலம்!

நரசிம்மரும் நாயன்மாரும் நமக்கு வழங்கியுள்ள மிகப் பெரிய பொறுப்பு!

அண்ட சராசரங்களை கிடுகிடுக்க வைத்த நரசிம்மர் ஒரு வேடனிடம் கட்டுண்ட கதை!

==============================================================

[END]

 

27 thoughts on “நான் புதைக்கப்படவில்லை… விதைக்கப்பட்டேன்!

  1. வணக்கம்………வாழ்த்துக்கள் சார்……. உண்மையிலேயே உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனை தங்கள் நன்மைக்கே ஏற்பட்டுள்ளது………”நான் புதைக்கப்படவில்லை……… விதைக்கப்பட்டேன்” என்ற வரிகள் தங்கள் தன்னம்பிக்கை வரிகள்…………

    ஒரு பீனிக்ஸ் பறவையாய் சாம்பலிலிருந்து உயிர்த்தெழுந்து உள்ளீர்கள்………. நிச்சயம் உச்சம் தொடுவீர்கள்……….. தங்களுக்கு நம் வாசகர்களின் நன்றியும், வாழ்த்துக்களும், அன்பும், ஆதரவும் என்றும் இருக்கும்………. தாங்கள் இன்னும் மென்மேலும் வாழ்வில் உயர்ந்து பலப்பல சாதனைகளைப் புரியவும், வெற்றிகளைக் காணவும், விருதுகளைப் பெறவும் எங்களின் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்……….

    பேரம்பாக்கம் நரசிம்மரை தரிசிக்க மனம் விழைகிறது……….

  2. அற்புதம். வாழ்த்துகள். ஆண்டவன் எப்போதும் உங்கள் பக்கம். நாளை என்பது நரசிம்மனுக்கில்லை ! மேலும் உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம் !

  3. வாவ் ….. பதிவின் தலைப்பே அப்துல் கலாம் quote போல் உள்ளது. நான் தங்களுடன் பேரம்பாக்கம் கோவிலுக்கு வந்தது நண்பர் சிட்டி ஆகத் தான் இருக்கும் என நினைத்தேன். என் யுகம் சரியாக உள்ளது.

    தாங்கள் 2 நூல்களை வெளியிடப் போகிறீர்கள் என்பதை படிக்கும் பொழுது மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது.

    பார் போற்றும் தளத்தில் நானும் ஒரு மெம்பெர் என்பதை நினைக்கும் பொழுது கண்களின் ஓரத்தில் ஆனந்தக் கண்ணீர் எட்டிப் பார்க்கிறது.

    ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.

    விழாவை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்.

    பேரம்பாக்கம் உழவாரப் பணி பதிவை எதிர்பார்க்கிறோம்.

    வாழ்க.. வளமுடன்

    நன்றி

    உமா வெங்கட்

  4. வணக்கம்
    எப்பேர்பட்ட அரிய வாய்ப்பு. பதிவில் நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை.
    சாதனை பற்றி சொன்ன கதை உண்மை
    தத்தி தவழ்ந்து முட்டி போட்டு நின்ற குழந்தை இன்று வேகமாக புது அவதாரம் எடுத்துள்ளதற்க்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
    மேலும் மேலும் சிகரம் தொட வாழ்த்துக்கள்.

  5. Dear Sundar,

    This is definitely an achievement to be proud of and of course, first of many more that you would achieve in the future. An apt title for the article as well. Wishing the event all success.

    Regards

    Prabu

  6. நூல் வெளியீட்டு விழாவின் நிகழ்ச்சி நிரல் மிகவும் நன்றாக உள்ளது. திரு சிவக்குமார் அவர்களின் உரையை நான் 2013 ஆண்டு விழாவில் கேட்டு மெய் சிலிர்த்தேன். அவரை மீண்டும் விழாவில் பார்க்கப் போவதில் மட்டற்ற மகிழ்ச்சி

    இரண்டாவதாக, திரு ஹுசைன் அவர்களைப் பற்றி தாங்கள் எழுதிய பதிவை படித்து அவரை எப்படியாவது சந்திக்க வேண்டும் என நினைத்தேன். அவரை நேரில் சந்தித்து அவரின் பேச்சை கேட்பதில் மிகவும் ஆவலாக உள்ளது

    திரு விசாகை ராஜேந்திரன் அவர்களின் பின்னூட்டத்தில் நம் தளத்தில் படித்து இருக்கிறேன். அவரின் ஒவ்வொரு பின்னூட்டமும் மிகவும் நன்றாக இருக்கும்.

    விழா நாயகனுக்கு வாழ்த்துக்கள் . விழா வெகு சிறப்பாக நடைபெற எல்லாம் வல்ல ஈசன் அருள் புரிவான். இந்த விழா எடுப்பதன் மூலம் தங்கள் பெற்றோருக்கும் பெருமை சேர்த்து விட்டீர்கள். அவர்களுக்கும் இந்த விழா ஒரு மறக்க முடியாத விழாவாக இருக்கும்.

    வாழ்க ….. வளமுடன்

    நன்றி
    உமா வெங்கட்

  7. சுந்தர் சார்,

    மிகவும் சந்தோச பட வேண்டிய விஷயம். இது சாதாரண விஷயம் அல்ல. உண்மையின் வெற்றி. அருமை. பாராட்டுக்கள் பல. உங்கள் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்.

    நன்றி.

  8. You have put very apt title ji.

    I’m indeed grateful to you for that wonderful trip to temple.

    You think and make those thoughts reality. I’m proud of having been associated with for few years.

    And I thank venkat sir also for helping the author making his wish to see the temples in same day comes true.

    And I deeply wish you great success in your new endeavour and wish those two books go grand success.

    God bless those who help themselves.
    **

    **chitti**.
    Thoughts becomes things.

  9. சுந்தர் அவர்களுக்கு,

    தங்களுக்கு மிக சிறந்த, பொருத்தமான தலைப்பு தான்.

    தங்களுடன் வந்த கோவில் பயணம் மிகவும் பயனுள்ளதாகவும், பாக்கியமாகவும் இருந்தது. எனது மனமார்ந்த நன்றிகள் பல.

    உங்களின் இந்த சிறுவாபுரி மறு பயணம் நல்ல செய்தி இன்னும் ஒன்று பாக்கி உள்ளது போல் தெரிகிறதே!!!

    உங்களுக்கு உதவி புரிந்த வெங்கட் அவர்களுக்கும் நன்றி.

    உங்களின் நூல்களின் வெளியீட்டு விழாவும், நூல்களும் சாதனை படைக்க வாழ்த்துக்கள். மகத்தான மனிதர்கள் தலைமை ஏற்கின்றனர்.

    ராகவேந்த்ரரும் மகா பெரியவாவும் அந்த திருவருளை பெற்றுத்தர பிரார்த்திக்கிறேன்.

    சாதனைகள் தொடரட்டும். வெற்றி நிச்சயம்.
    **

    **சிட்டி**.
    Thoughts becomes things.

    1. சிட்டி சார்,
      சிறுவாபுரி மறு பயண ரகசியம் தலைவர் உங்களுக்கு மட்டும் தனியாக சொல்வார். காத்திருக்கவும்.
      நன்றி

  10. ஒரு மனிதனின் நோக்கம் பலருக்கும் நன்மை தரக்கூடியதாக இருந்தால் நிச்சயம் விடா முயற்சியாலும் இறைவன் அருளாலும் அந்த நோக்கம் நிறைவேறும். சுந்தரின் கனவு மற்றும் லட்சியம் பொதுநலம் சார்ந்து இருந்ததால் இறைவன் அருளால் அவருக்கு பல நல்ல நண்பர்கள் கிடைக்கபெற்று, இப்போது சரியான பாதையில் அடியெடுத்து வைத்து மேலும் நற்காரியங்கள் செய்யும் பாக்கியத்தையும் பெற்றிருக்கிறார். இந்தப்பாதையில் நாமும் அவருடன் இணைந்து நம்மால் இயன்றதை செய்ய எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் புரியட்டும்.

    ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான் ஆனா கைவிடமாட்டான்! சுந்தரின் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்கள் மாற்றங்கள் திருப்புமுனைகள் இதற்கு சாட்சி.

    ரைட்மந்த்ரா மென்மேலும் வளர, சுந்தரின் சேவை தொடர வாழ்த்துகள்!

  11. Dear Sundar Ji,

    Many Congratulations. May the lord Narasimha blesses you abundantly. When and where we can buy your books.

    Thanks,
    Rajaraman A

  12. சுந்தர்,
    நான் உங்களது பதிவுகளை கடந்த 7 – 8 மாதங்களாக தவறாமல் படித்து வருகிறேன். நீங்கள் மட்டும் தனியாக படிப்படியாக உயர வில்லை. உங்களது வாசகர்கள் அனைவரையும் -அவர்களது மனதை மற்றும் எண்ணங்களை – படிப்படியாக உயர்த்திக் கொண்டு வந்து கொண்டிருக்கிறீர்கள்.
    இதை நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களோ இல்லையோ, நிச்சயம் உங்கள் வாசகர்கள் உணர்ந்து இருப்பார்கள்.
    சக வாசகர்களே! மனம் தொட்டு சொல்லுங்கள் — உங்கள் மனதில், எண்ணங்களில் ஏற்பட்டு கொண்டிருக்கும் மாற்றங்களை.
    சுந்தர் நீங்கள் மேன்மேலும் உயர வாழ்த்துகள்!

    1. ஆஸ்கார் விருதைவிட மிகப் பெரியது உங்கள் வார்த்தைகள்! மிக்க நன்றி!!

      இதை ஒரு புகழுரையாக எடுத்துக்கொள்ளாமல் ஒரு உத்வேகமாக எடுத்துக்கொள்ளவே விரும்புகிறேன்.

      மேலும் நான் அடிக்கடி பதிவுகளில் கூறிவருவது தான். என் ஒருவனின் வெற்றி என் தனிப்பட்ட வெற்றியாக மட்டும் இருக்காது. குறைந்த பட்சம் நம் வாசர்கர்கள் என் நண்பர்கள் 1000 பேரையாவது வெற்றி பெறச் செய்ய வேண்டும் அவர்களை வாழ்க்கையில் சாதிக்க செய்யவேண்டும் என்று உறுதி பூண்டிருக்கிறேன். நிச்சயம் அதை சாதித்துக் காட்டுவேன். இறைவன் துணையிருப்பான்.

  13. Sunder sir. I was expecting a great news after reading your yesterday post. Very happy to see today’s post. Indeed it is a great achievement. Please keep it up. Our prayers are always with you to achieve more and more.
    R.Chandran

  14. சுந்தர்ஜி

    உங்களது நூல் வெளியீட்டு விழா பத்திரிக்கையை படித்ததும் மனம் மகிழ்ச்சியில் , கண்கள் நெகிழ்ச்சியில் கண்ணீரை கொண்டு எழுத்துக்களை மறைகின்றது.
    என்னை பொறுத்த வரை இமயத்தை தொட்ட வளர்ச்சியாக நினைக்கின்றேன். கடந்த வருடங்களில் எத்துனை உள்ளங்களின் மனதை நல்ல ஒரு விஷயங்களில் பங்கேற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது என்பதை வாசகர்களாகிய நாங்கள் என்றென்றும் மறக்க மாட்டோம்.கடந்த நான்கு நாட்கள் முன்பு திரு சுவாமிநாதன் அவர்களின் பெரியவா மகிமை குமரன் குன்றத்தில் நடந்தது. அதற்க்கு நான் சண்டே அன்று சென்று இருந்தேன். நிகழ்ச்சி முடிந்த பிறகு அவர் நீங்கள் ரைட் மந்த்ரா உறுப்பினர் தானே என்று வினவினார். எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. பூவோடு சேர்ந்து நாறும் மணக்கும் என்ற வார்த்தையை நான் அடிக்கடி சொல்வதுண்டு. அதுதான் உண்மை. உங்களது வெற்றி
    தனி ஒருவனின் வெற்றியாக இல்லாமல் 1000 என்ன அதற்க்கு மேலும் பல ஆயிரம் பேரை சாதனையாளர்களாக மாற்ற இந்த தளத்தால் முடியும் .
    மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.

    நன்றி

  15. ரைட் மந்த்ராவின் சமூக மற்றும் ஆன்மிக தொண்டுகள் மேன் மேலும் சிறந்திட வாழ்த்துக்கள் சுந்தர்ஜி .

  16. சுந்தர் ஐயா

    ஒரு ஆல் விதை மரமாகிறது. இதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். பலரை காத்த நரசிம்மர் உங்களையும் உங்கள் பெற்றோர் நண்பர்கள் வாசகர்கள் மற்றும் எல்லோரையும் காப்பார். சிறுவாபுரி முருகன் உங்களுக்கு பெருவாரி கொடுப்பார். எந்நாளெல்லாம் நல்நாளாக நலம்புரிய தாங்கள் வழிபடும் கடவுள்கள் துணை நிற்கும்.

    உங்கள் நூல்கள் இரண்டும் அமோக விற்பனையாக இறைவனை வேண்டுகிறேன். நீங்கள் ஒரு தலைசிறந்த சிந்தனையாளராக, எழுத்தாளராக, ஆன்மீக அறிஞராக உலகம் பாராட்டும்படி வருவீர்கள். இறை அருள் உங்கள் பக்கம் உண்டு.

    விழா வெற்றியடைய இறைவனை வேண்டுகிறேன். வாழ்க வளமுடன் பலமுடன் சிறப்புடன்.

    கந்தையா, லண்டன்

  17. வாழ்த்துக்கள் சுந்தர் சார் ,இது தங்களின் அயராத உழைப்பினால் கிடைத்த வெற்றி மென்மேலும் பல வெற்றிகளை பெறவேண்டும் என வாழ்த்துகிறேன். நன்றி .

  18. Swami Vivekananda has said, “Truth, purity, and unselfishness — wherever these are present, there is no power below or above the sun to crush the possessor thereof.” Your noble efforts reflect this, dear friend. We pray to the Divine for all success for your new publications and for all your future services. Hearty congratulations and greetings.

  19. அன்புள்ள சுந்தர் ,

    வாழ்த்துக்கள். நீங்கள் மிக உயர்ந்த நிலையை அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இப்போது மதுரையில் புத்தக கண்காட்சி நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த வருடம் கண்காட்சியில் ரைட் மந்த்ரா ஸ்டாலில் உங்கள் புத்தகங்கள் அமோகமாக விற்பனையாகும் காட்சியை இப்போதே என்னால் பார்க்க முடிகிறது. நிச்சயம் சந்திப்போம். இதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

  20. தொடையை தட்டி ரஜினி சார் மாதிரி சொல்லுங்க…ஒரு நாள் நம்ம சிரிப்பு எல்லா இடத்திலும் சத்தமாக ஒலிக்கும் குள்ள நரிகள் எல்லாம் நாலா புறமும் ஓடும் , உங்க எழுத்தோட தோரணையில் தெரிகிறது நீங்கள் எவ்வளவு கஷ்ட பட்டு இந்த நிலையை அடைந்துள்ளீர்கள் என்று . இறைவன் இருக்கார் அண்ணா நம்ம பக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *