Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, April 19, 2024
Please specify the group
Home > Featured > 95 வயது மூதாட்டியும் அவரது வைராக்கிய சிவபக்தியும்!

95 வயது மூதாட்டியும் அவரது வைராக்கிய சிவபக்தியும்!

print
மூன்று நாள் எட்டயபுரம், தூத்துக்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர் & திருப்பராய்த்துறை பயணம் இனிதே நிறைவடைந்து நேற்று நள்ளிரவு சென்னை திரும்பிவிட்டோம். பயணம் மிக மிக அற்புதமாக அமைந்தது. நமது அலைபேசி தான் மக்கர் செய்து தனது ஆயுளை முடித்துக்கொண்டுவிட்டது. பலரது தொடர்புகள் விடுபட்டுப்போயிருக்கின்றன. எனவே ஏற்கனவே நட்பில் இருந்த நண்பர்கள், நட்புக்கரம் நீட்ட விரும்பும் அன்பர்கள் யாவரும் E-MAIL, SMS, WHATSAPP இவற்றில் ஏதாவது ஒன்றின் மூலம் தங்கள் அலைபேசி எண்ணை நமக்கு அனுப்பவும். (வாட்ஸ்அப்பில் ஃபார்வேர்டுகள் அனுப்பவேண்டாம். அவற்றை பார்க்க அடியேனுக்கு நேரமில்லை!)

மற்றபடி ஈசனருளால் பயணம் மகத்தான வெற்றி. மனநிறைவு.

பயணத்தின் போது நமக்கு ஏற்பட்ட நெகிழ வைக்கும் இரண்டு நிகழ்வுகளை இங்கே பகிர்கிறோம்.

நிகழ்வு ஒன்று :

நேற்று முன்தினம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்த போது நண்பர் ஒருவர் அலைபேசியில் அழைத்தார். ஏதாவது முக்கியமாக பேசவேண்டுமா என்று கேட்டோம். “ஆமாம் ஜி… ரொம்ப முக்கியமான விஷயம்” என்றார். அவர் குரலே உடைந்துபோயிருந்தது. ஏதோ பிரச்னையில் இருக்கிறார் என்பது புரிந்தது. “மொபைலில் சார்ஜ் மிகவும் கம்மியாக இருக்கிறது. அறைக்கு வந்தவுடன் சார்ஜ் போட்டுவிட்டு நானே கூப்பிடுகிறேன்” என்றோம்.

அறைக்கு திரும்பி மொபைலை ஒரு அரைமணி நேரம் சார்ஜ் போட்டுவிட்டு அவரை கூப்பிட்டோம்.

“ஜி உங்க பதிவுகளை ரெகுலரா படிப்பேன். WONDERFUL JOB. எனக்கு நடந்ததை உங்ககிட்டே சொன்னா எனக்கு ஆறுதல் கிடைக்கும்னு தோணிச்சு… உங்களை டிராவல்ல இருக்கும்போது டிஸ்டர்ப் பண்றேன்னு தப்பா நினைக்காதீங்க”

“பரவாயில்லை சொல்லுங்க… என்கிட்டே பேசினா உங்களுக்கு ஆறுதல் கிடைக்கும்னா எனக்கு அதைவிட சந்தோஷம் வேற என்ன?”

betrayal-2

“கம்பெனியில என் கொலீக் ஒருத்தர் எனக்கு துரோகம் பண்ணிட்டாரு ஜி. என்னால தாங்க முடியலே. நான் அவர் கிட்டே சொன்ன சில ப்ராஜெக்ட் ஐடியாஸை தன்னோட ஐடியாஸ் மாதிரி மேனேஜ்மேண்ட் கிட்டே சொல்லி பரிசும் இன்சென்டிவ்வும் வாங்கிட்டாரு. தவிர மேனேஜ்மெண்ட் பற்றி நான் பர்சனலா OFF THE RECORD ஆ அடிச்ச சில கமெண்ட்ஸ்ஸை கூட போட்டுகொடுத்திருக்காரு. அவர் தான் எனக்கு இதை செஞ்சாருன்னு இன்னும் நம்ப முடியலே. என்கிட்ட அப்படி பேசுவாரு…” என்றார்.

இதற்கு மேல் அவர் கூறியதை பகிர விரும்பவில்லை.

நாம் அவரிடம் கூறியதின் சுருக்கத்தை இங்கே தருகிறோம்.

“வாழ்க்கை என்கிற பயணத்தில் துரோகம் என்கிற மைல்கல்லை கடந்து செல்லாதவர்கள் இருக்கவே முடியாது. அதுவும் நாம் மேலே செல்லச் செல்ல அது தவிர்க்கமுடியாத ஒன்று. துரோகம் சிலரை வீழ்த்திவிடும். சிலரை வீறுகொண்டு எழவைக்கும். சிலரை பக்குவப்படுத்தும். என்னை பொருத்தவரை நான் சந்தித்த துரோகங்கள் தான் நான் இன்று இருக்கும் இந்த ஓரளவு மதிப்பிற்குரிய நிலைக்கு காரணம். நடந்த நிகழ்வு குறித்து வருத்தப்படாமல் புழுங்கிக்கொண்டிருக்காமல் உரிய நேரத்தில் இறைவன் அடையாளம் காட்டினானே என்று சந்தோஷப்படுங்கள்.   துரோகத்திற்கு ஆட்படும்போதெல்லாம் எனக்கு கீழ்கண்ட திரைப்பட காட்சி தான் நினைவுக்கு வரும். மனம் தானாக ஆறுதல் அடையும்.”

ரஜினி – லக்ஷ்மி நடித்து 80களின் துவக்கத்தில் வெளியான படம் ‘பொல்லாதவன்’.

அந்தப் படத்தில் ஒரு காட்சி… ரஜினி தன் கொலைக்குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைய முடிவு செய்து தனது குழந்தையை வளர்க்கும் பொறுப்பையும் சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பையும் டீச்சராக வரும் லக்ஷ்மியின் பெயருக்கு மாற்றி உயில் எழுதிவிடுவார். அதற்கு அவர் வக்கீல் நண்பர் எதிர்ப்பு தெரிவிப்பார்.

“என்ன மனோகர் இது …எல்லா சொத்தையும் யாரோ முன்பின் தெரியாத ஒரு பொண்ணு பேர்ல எழுதிவெச்சிட்டு உன் குழந்தைக்கும் கார்டியனாக்கிட்டியே…”

“முன்னே பின்னே தெரிஞ்சவங்க மேலே எனக்கு நம்பிக்கையில்லை…!”

“சரி… இந்தப் பொண்ணை மட்டும் எப்படி நம்பறே???”

“அவளுக்கு பணத்தை விட என் குழந்தை மேல் பிரியம் ஜாஸ்தி. அதை ஒரு தடவை இல்லை… பல தடவை உணர்ந்திருக்கேன்…”

“பணம் கைக்கு வந்த பிறகு அவ தலைகீழா மாறலாம் இல்லையா?”

ரஜினி ஒரு பார்வை பார்த்துவிட்டு சொல்வார்… “சாகுற வரைக்கும் எனக்கு உண்மையா இருப்பாங்கன்னு யாராவது ஒருத்தரை கியாரண்டி தர முடியுமா உன்னால?”

யெஸ்…

இது தான் நிதர்சனம். இதை உணர்ந்தால் போதும். எப்பேற்பட்ட துரோகத்தையும் தாங்கிக்கொண்டு தாண்டி போய்விடலாம்…

“மிக்க நன்றி ஜி… உங்கள் வார்த்தைகள் எனக்கு ஆறுதலிக்கிறது…”  என்று கூறி நன்றி தெரிவித்தார். ¶¶

==========================================================

Don’t miss these articles…

“முதுகுல குத்திட்டாங்க சாமி…!” அழுத மெய்யன்பர். வாரியார் சொன்னது என்ன?

“பழிக்கு பழி வாங்கணும் சாமி…”

ஒரு துரோகத்தின் முன்னால்…

==========================================================

நிகழ்வு இரண்டு :

சென்னை – கரூர் சாலையில் உள்ள திருப்பராய்த்துறை அனைவரும் தரிசிக்கவேண்டிய அற்புதமான தலம். சென்ற மாதம் நமது திருச்சி பயணத்தின்போது திருப்பராய்த்துறை சென்றிருந்தோம். குருக்களும் அவர் ஆலய அலுவலக ஊழியர் ஒருவரும் அவசியம் நாம் அக்டோபர் 17 அன்று நடக்கக் கூடிய துலா ஸ்நானத்திற்கு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.

நமது ஸ்ரீவில்லிப்புத்தூர் பயணமும் இதே தேதிகளில் அமையவே ஸ்ரீவில்லிபுத்தூர் பயணத்தை முடித்துவிட்டு அப்படியே திருச்சி வந்து திருப்பராய்த்துறை துலா ஸ்நானத்திற்கு சென்றுவிடலாம் என்று திட்டமிட்டோம். அனைத்தும் நாம் திட்டமிட்டபடியே நடக்க ஈசன் திருவருள் புரிந்தான்.

img_9420

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து புறப்பட்டு நள்ளிரவு திருச்சி அறை எடுத்து தங்கி, பின்னர் அதிகாலை எழுந்து தயாராகி திருப்பராய்த்துறை சென்று சுவாமியை தரிசித்து அவருடனேயே காவிரிக்கு சென்றது மறக்க முடியாத அனுபவம்.

திருப்பராய்த்துறை பக்தர்களின் கூட்டத்தால் திமிறியது. சுவாமி அம்பாளுடன் திருவீதி உலா வந்த அந்தக் காட்சி இன்னும் மறக்க முடியவில்லை.

தங்களை தங்கள் அந்தஸ்தையும் அனைத்தையும் மறந்து சிவபக்தி ஒன்றையே பிரதானமாக கொண்டு ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் வாத்தியம் இசைத்துக்கொண்டும் தன்னிலை மறந்து அவர்கள் வந்த காட்சி… பார்க்க பார்க்க கண்ணீர் தாரை தாரையாக சொரிந்தது. ஆஹா.. எப்பேற்ப்பட்ட பாக்கியம்… இப்படியெல்லாம் கூட மகிழ்ச்சி என்கிற ஒன்று கிடைக்கும் என்று தெரியாமல் பல காலம் வாழ்ந்தேனே… நல்லவேளை என்னை தடுத்தாட்கொண்டாய் இறைவா இல்லையெனில் எத்தனை எத்தனை பாக்கியங்களை நான் இழந்திருப்பேன்… இதற்காகவே பல பிறவிகள் எடுத்து உன்னிடம் நன்றி சொல்லவேண்டும்.

பாக்கியம் என்று யார் எதைக் கருதுகிறார்களோ நமக்கு தெரியாது. ஆனால், நம்மைப் பொறுத்தவரை ஈசனையும் அவன் அடியார்களையும் இது போன்ற உற்சவங்களையும் காண்பது தான் பாக்கியம்.

இவர்கள் யார் எங்கிருந்து வருகிறார்கள் இதெல்லாம் அறியோம். ஆனால், அவர்களை பார்க்கும்போது, ஈசனுக்குத் தான் தன்னலம் கருதாத அடியார்கள் எத்தனை எத்தனை… இவர்களைப் போன்றவர்களை பார்ப்பதே புண்ணியம் தான்….

Exif_JPEG_420

பூம்பாவையை உயிர்ப்பித்த போது, பதிகம் பாடிய திருஞானசம்பந்தர் என்ன பாடினார் தெரியும் தானே ?

மண்ணினில் பிறந்தார் பெறும் பயன், மதி சூடும்
அண்ணலார் அடியார் தமை அமுது செய்வத்தல்
கண்ணிணாம் அவர் நல்விழாப் பொலிவு கண்டு ஆர்தல்,
உண்மையாம் எண்ணி உலகர் முன் வருக

ஆக, இந்த மண்ணில் பிறந்தார் பெறும் பயன் ஈசனடியார்களுக்கு அமுது செய்வித்தல். இந்த கண்கள் செய்யும் பயன் அவன் விழாக்களை காணுவதே.

Exif_JPEG_420

சுவாமி சாலையை கடக்கும்போது இரண்டு பக்கமும் போக்குவரத்து சற்று நிறுத்தப்பட்டு பின்னர் மெதுவாக அனுமதிக்கப்பட்டது. ஆனால் யாரும் அது குறித்து குறைப்பட்டுக்கொள்ளவில்லை. அங்கலாய்த்துக்கொள்ளவில்லை. அந்தப் பகுதியை கடந்த பேருந்து முதல் வேன், லாரி வரை அனைத்தின் ஓட்டுனர்களும் அதில் பயணம் செய்தவர்களும் தலைவரைப் பார்த்தவுடன் இன்ப அதிர்ச்சியால் ஒரு கணம் மூழ்கி தங்கள் கையெடுத்து ஒரு நிமிடம் ஒற்றிக்கொள்ள தவறவில்லை. பார்க்கவே கண்கொள்ளா காட்சி அது.

இதை எதற்கு சொல்கிறோம் என்றால், முதல் நிகழ்ச்சியில் வந்த நண்பருக்கும் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவர பதில் கூறியது போலருக்கும் என்பதால். துரோகத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிவபக்தியும் சிவதரிசனம் மட்டுமே ஆறுதல் தரமுடியும். வேறு எதுவும் அவர்களை தேற்ற முடியாது. இது ஒரு புது உலகம். உங்கள் கடந்த காலத்தை ஈசன் ஒரு போதும் பார்ப்பதில்லை.

thirupparaythurai-temple
ஒரு வாசகம் என்றாலும் திருவாசகம்!

நீங்கள் ஈசனை சரணடைந்த மறுகணம் முதல் இந்த புதிய உலகத்துக்குள் வந்துவிடுவீர்கள். இங்கு ஏழை, பணக்காரன், உயர்ந்தோர், தாழ்ந்தோர், உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி இந்த வேறுபாடெல்லாம் கிடையாது. ஈசன் முன்பு நின்றால் எல்லாரும் ஒருவரே. மன்னாதி மன்னனும் சரி, ஓடேந்தும் பிச்சைக்காரனும் சரி… அவனுக்கு முன் அனைவரும் சரிசமம் தான். சமத்துவமும் சமதர்மும் மெய்யாக காணப்படும் இடம் ஈசனின் திருவடி நிழல் தான்!

சுவாமி துலா ஸ்நானம் முடித்து மீண்டும் ஆலயத்திற்கு எழுந்தருளியபோது அவருடனே மீண்டும் ஆலயம் வந்து தாருகாவனேஸ்வரையும் அன்னை பசும்பொன் மயிலாம்பிகையும் தரிசிக்க உள்ளே சென்றோம். (அம்பாள் பேரைப் பார்த்தீர்களா? படிக்கும்போதே மனசுக்கு ஒரு இதம்!) அம்பாள் பிரகாரத்திற்கு செல்ல நாம் முற்படுகையில், ஒரு வயதான பாட்டி இருவர் கையை பிடித்துக்கொண்டிருக்க, படியிறங்கி வந்துகொண்டிருந்தார்.

thirupparaaythurai-7

நமக்கு பார்க்கும்போதே புரிந்துவிட்டது. அவருடன் இருந்தவர்களை பார்த்து, “பாட்டி துலா ஸ்நானத்திற்கு வந்தவர்களா? ஸ்நானம் செய்தாரா?” என்று ஆவலோடு கேட்டோம்.

“ஆமாம்” என்றனர்.

“பாட்டி… உங்கள் நல்லாசிகள் வேண்டும்!” உடனே அவரது கைகளை பிடித்து நம்மை ஆசீர்வதிக்கும்படி கேட்டுக்கொண்டோம். (கோவிலில் யார் காலிலும் விழக்கூடாது. இல்லையெனில் அவரது கால்களில் அங்கேயே விழுந்திருப்போம்.)

உடனே அங்கு பெரும் கூட்டம் சூழ்ந்து போவோர் வருவோர் எல்லாம் பாட்டி காலில் விழ ஆரம்பித்துவிட்டனர். அவர்களிடம், “கோவிலில் யார் காலிலும் விழக்கூடாது. பாட்டியிடம் நல்லாசிகளை வேண்டுங்கள் அது போதும்” என்று கூறி அவர்களை அனுப்பிவைக்க போதும் போதுமென்றாகிவிட்டது.

அவரை ஒரு வழியாக வெளியே அழைத்து வந்தபிறகு, தனியாக அக்குடும்பத்தினரிடம் சற்று பேசினோம்.

thirupparaaythurai-10பாட்டி பெயர் அலமேலு. வயது 95. உடன் துணைக்கு வந்திருப்பது மகனும் மருமகளுமாம்.

இந்த வயதிலும் துலா ஸ்நானம் செய்து, தாருகாவனேஸ்வரரை தரிசிக்க வந்திருக்கிறார் என்றால் அவரது வைராக்கிய பக்தியை என்னவென்று சொல்வது?

அறுபது வயதைக் கடந்தால் குத்துதே குடையுதே என்று பெரும்பாலானவர்களை நோய் வீட்டில் முடக்கிப் போட்டுவிடுகின்றது. அதன் பிறகு ஆசைப்பட்டாலும் துலா ஸ்நானம் விடுங்கள் குளியலறை ஸ்நானம் கூட சந்தேகம் தான்.

thirupparaaythurai-11

எனவே தான் இந்த உடலும் மனமும் நன்றாக இருக்கும்போதே ஈசனை வேண்டிய மட்டும் தரிசித்து புண்ணியம் சேர்த்துக்கொள்ளவேண்டும். (இதெல்லாம் இப்போ சிலருக்கு புரியவே புரியாது.)

இதைத் தான் வள்ளுவர் மிக அழகாக,

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்

என்று கூறுகிறார்.

thirupparaaythurai-111
இந்தக் குழந்தைக்கு தெரிந்தது கூட நமக்கு தெரியவில்லை என்றால் எப்படி? காவிரி படித்துறையில் கண்ட காட்சி.

வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உடலும் உள்ளமும் நன்றாக இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை செய்ய வேண்டும். சிவலாயங்களை தரிசிக்கவேண்டும். அப்புறம் பார்க்கலாம் என்றால் எப்புறமும் பார்க்க வாய்ப்பு கிடைக்காது. ¶¶

  • திருப்பராய்த்துறை தலத்தை பற்றிய ஆலய தரிசன பதிவை அளித்துவிட்டு அடுத்து உடனேயே துலா ஸ்நான அனுபவத்தையும் பதிவளிக்க திட்டமிட்டுள்ளோம். சற்று பொறுத்திருக்கவும். புகைப்படங்கள் அத்தனை அற்புதமாக வந்துள்ளது. முழு விருந்து காத்திருக்கிறது.

==========================================================

இந்த தளத்தை தொய்வின்றி நடத்திட வாசகர்களின் பங்களிப்பு அவசியம் தேவை!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

Kindly drop in mail to editor@rightmantra.com once you transfer your fund or message me at 9840169215

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

==========================================================

Also check :

பிள்ளைகளுக்கு நீங்கள் மறக்காமல் சேர்க்க வேண்டிய ‘சொத்து’ என்ன தெரியுமா?

108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் தவறவிடக் கூடாத ஒரு தலம்!

பிள்ளைகளுக்கு  என்ன சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்?

ஆலய தரிசனம் என்னும் அருமருந்து!

கோவில்களுக்கு செல்வதன் முழு பலனை அடைய….

கல்லால அடிச்சாத் தான் கவனிக்கணுமா?

மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!

‘மாணவர்கள் மனதில் மாணிக்கவாசகர்’ – திவாகரும் அவரது திருவாசகத் தொண்டும்!

நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் கரை புரள, சிவலோகத்தில் சில மணித்துளிகள்…!

களிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்!

==========================================================

[END]

One thought on “95 வயது மூதாட்டியும் அவரது வைராக்கிய சிவபக்தியும்!

  1. Sundar, thank you very much for this extraordinary article. One of the best articles in the recent past. Lot of good messages and lessons for life has been given you through this post. We are all blessed to have the darshan of Thiruparaithurai Sivaperumaan.

Leave a Reply to Baba Ram Cancel reply

Your email address will not be published. Required fields are marked *