Home > பிரார்த்தனை (Page 5)

சிவபெருமான் தந்த வரமும் சனீஸ்வரனின் மகத்துவமும் – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

ஒருவர் முன்ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தால், தனது தசையின் போது அவருக்கு அதிர்ஷ்டத்தை தருவதும், அதுவே பாபங்கள் செய்திருந்தால் பல்வேறு சோதனைகள் துன்பங்களை கொடுத்து அந்த ஜீவனை நல்வழிப்படுத்துவதுமே சனீஸ்வரனின் கடமையாகும். இது சனி பகவானுக்கு 'கிரக' அந்தஸ்தை கொடுத்தபோது சிவபெருமான் அவருக்கு இட்ட கட்டளை. இதில் அவரது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு இடமே இல்லை. அதே சமயம், தன்னை சரணடைந்தவர்களின் பாபங்களை சர்வேஸ்வரன் நோக்கியே திருப்பிவிட்டு, அவரிடம் மன்னிப்பை பெற்று தருவார்.

Read More

அடியவருக்கு ஒரு சோதனை என்றால் அது ஆண்டவனுக்கும் சோதனையன்றோ? Rightmantra Prayer Club

ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, தற்போதைய செங்கல்பட்டை அடுத்துள்ள பொன்விளைந்த களத்தூரில் நல்லார் ஒருவர் வாழ்ந்து வந்தார். பிறவியிலிருந்தே அவருக்கு பார்வை கிடையாது. அப்போதெல்லாம் பார்வையற்றோர் கல்வி பயில்வது மிக மிக கடினம். இருப்பினும் கல்வி கற்கவேண்டும் என்கிற தணியாத ஆவலில், தனது முதுகில் எழுத்துக்களை எழுதிக் காட்டச் சொல்லி கல்வி பயின்றாராம் இவர். (முதலில் ப்ரெய்லி முறையை கண்டுபிடித்தது இவர் தான் போல!) அந்தளவு கல்வி மீது தணியாத தாகம் கொண்டவர்

Read More

ஊமையை கவி பாடவைத்த மெய்கண்ட வேலாயுதசுவாமி – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

'திருநாகை காரோணம்' என்று தேவார மூவரால் பாடப்பெற்ற தலம் நாகப்பட்டினம், சப்தவிடங்க தலங்களில் ஒன்று. இங்கு இறைவன் பெயர் காயாரோகண சுவாமி. அம்பாள் நீலாயதாட்சி அம்பிகை. இந்நகரின் மையப் பகுதியில், நீலா தெற்கு வீதியில் தனிக்கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் முருகப்பெருமான் அருள்மிகு மெய்கண்ட மூர்த்தி. (மெய்கண்ட வேலாயுதசுவாமி கோவில்.). தமிழ் இலக்கிய வரலாற்றில் புகழ்பெற்று விளங்கிய அழகுமுத்து புலவர் உருவாகக் காரணமான இந்த சன்னதி பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. 'குமரகோயில்' என்று

Read More

தூங்கிக்கொண்டிருந்தவரிடம் திருவாழ்மார்பன் புரிந்த திருவிளையாடல் – Rightmantra Prayer Club

பக்தர்களுக்காக பகவான் எதையும் மாற்றுவான். நாம் அவன் மீது வைத்துள்ள அன்பு தான் என்றுமே பிரதானமே தவிர, சடங்குகளும் சம்பிரதாயங்களும் அல்ல. இதை பல முறை பல இடங்களில் இறைவன் பல திருவிளையாடல்கள் மூலம் நிரூபித்திருக்கிறான். பரமேஸ்வரன் இது தொடர்பாக நிகழ்த்திய திருவிளையாடல்களை நாம் அறிவோம். ஆனால் பரந்தாமன் நிகழ்த்திய திருவிளையாடல் ஒன்றை பார்ப்போம். கேரளத்தில் உள்ள கோவில் நடைமுறைகள் நமது பாரம்பரியத்திலிருந்து மிகவும் வேறுபட்டவை. அங்கு சுத்தத்திற்கு தான் முதலிடம்.

Read More

நான்கறிவுக்கு தெரிந்தது ஆறறிவுக்கு தெரியவில்லையே… – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

பாண்டவர்கள் துரியோதனனின் நிபந்தனைப்படி வனவாசம் இருந்த நேரம் அது. அகந்தை மனிதர்களுக்கு தலைதூக்குவது இயல்பு. அதுவும் கண்ணனைப் போல ஒருவனை நண்பனாக, வழிகாட்டியாக பெற்றவர்களுக்கு அகந்தை எழுவதில் வியப்பு இல்லையே. பாண்டவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கர்வம் இருந்தது. பீமனுக்கு தன்னைப் போல பலசாலி இந்த உலகில் எவரும் இல்லை என்கிற அகந்தை இருந்தது. திரௌபதிக்கோ கௌரவர் சபை நடுவே அவள் துகிலுரியப்பட்டபோது அவளது மானத்தை கிருஷ்ணன் சேலையை வளர வைத்து காத்ததிலிருந்து

Read More

முருகா என்றதும் உருகாதா மனம்… Rightmantra Prayer Club

முருகப் பெருமானையையே சிந்தித்து வாழ்ந்து வந்த தம்பதிகள் அவர்கள். செல்வத்திற்கோ சுற்றத்திற்கோ பஞ்சமில்லை. ஆனால் ஆயிரம் இருந்தும் என்ன? கொஞ்சி மகிழ குழந்தை ஒன்று இல்லையே என்கிற குறை அவர்களுக்கு. முருகனிடம் கதறித் துடித்தார்கள். அவர்கள் நிலை கண்டு இரங்கிய கந்தக் கடவுள், அந்த கண்ணீர் பிரார்த்தனைக்கு செவி சாய்த்தான். அழகிய ஒரு பெண் குழந்தைக்கு தாயானாள் அவள். முருகப் பெருமானின் அருளால் பிறந்த குழந்தையாதலால் 'முருகம்மை' என்று முருகனின் பெயரையே

Read More

உங்கள் பிரார்த்தனைகள் சுலபமாக நிறைவேற வேண்டுமா?

நமது பிரார்த்தனை கிளப் துவங்கப்பட்டு இரண்டாண்டுகள் ஆகப்போகிறது. 'ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்' என்னும் இந்த கூட்டுப் பிரார்த்தனை மன்றம் தற்போது பலரது வாழ்க்கையில் நம்பிக்கை ஒளியை ஏற்றி வருகிறது என்றால் மிகையல்ல. நமது பிரார்த்தனை கிளப்பில் கோரிக்கை சமர்பிக்கப்பட்டு அது நிறைவேறிய சம்பவங்களை ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம். தற்போது மேலும் மூன்று சம்பவங்கள் பற்றிய தகவல் நமக்கு வாசகர்களிடமிருந்து கிடைத்திருக்கிறது. வரும் பிரார்த்தனை பதிவில் அது பற்றிய விபரங்கள் இடம்பெறும். இந்த

Read More

பதிகங்கள் புரியாத அதிசயம் உண்டா? — Rightmantra Prayer Club

நமது சமயத்திற்கு கிடைத்த அரும் பெரும் பொக்கிஷங்களுள் ஒன்று சைவத் திருமுறைகள் எனப்படும் பன்னிரு திருமுறைகள். சிவபெருமானின் பெருமையை, சிறப்பை பாடும் இப்பதிகங்கள் பலவற்றுள் இன்றியமையாத மந்திர பிரயோகங்கள் மறைபொருளாக புதைந்து கிடக்கின்றன. இப்பதிகங்களை பக்தியுடன் ஓதி வந்தால் அனைத்து நலன்களையும் ஒருவர் பெறலாம். விதியையே மாற்றும் வல்லமை பெற்றவை இப்பதிகங்கள். அப்படி நான்கு சைவ சமயக் குரவர்களுள் ஒருவரான திருஞான சம்பந்தப் பெருமானால் விதியை மாற்றிக் காட்டச் செய்த ஒரு

Read More

நான் மறை அறங்கள் ஓங்க நல்தவம் வேள்வி மல்க – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் !

பகவானை நேரிடையாகக் காணத் துடிப்பவர்கள் வேத கோஷம் மூலம் காண முடியும். அது தான் நம் அனைவருக்கும் ஜீவநாடி. வேதமே அனைத்து தர்மத்திற்கும் அடிப்படை அனைத்து சாஸ்திரங்களிலும் கூறப்பட்டுள்ளது. தர்மமே அனைத்து உலகத்தையும் நிலைநிறுத்தக்  கூடியது என்றும் வேத சப்தத்தால் தான் இவ்வுலகத்தை இறைவன் படைத்தான் என்றும் இவ்வுலகின் ஸ்ருஷ்டிக்கும், ஸ்திதிக்கும், வளர்ச்சிக்கும் வேதங்களே முக்கிய காரணமாக உள்ளது என்றும் உபநிஷத்துக்கள் கூறுகின்றன. இறைவனது மூச்சுக் காற்றாகவே வேதங்கள் இருந்து வருகின்றன.

Read More

உயிர்கள் அனைத்திலும் உறைபவன் அவனன்றோ… Rightmantra Prayer Club

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்தில் திருச்சிராப்பள்ளி நகரத்தில் பாயும் காவிரியின் வடதிசையாய் விளங்குவது திருமங்கலம் என்னும் கிராமம். லால்குடி ரயில் நிலையத்திலிருந்து, பூவாலுர் வழியே வடமேற்க்கில், சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த திருத்தலம். இவ்வூரில் உலகநாயகி உடனமர் சாம வேதீஸ்வர பெருமானின் சிறப்பு மிகு ஆலயம் அமைந்துள்ளது. இறைவனை வேதத்தின் பெயரால் அழைப்பதே இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். பரசுராமர் சிவபெருமானை இங்குதான் வழிப்பட்டு பரசு என்ற ஆயுதத்தைப்

Read More

பக்தன் வாக்கை மெய்ப்பிக்க மயில் மீது தோன்றிய மயில்வாகனன் – Rightmantra Prayer Club

'திருந்திய வாழ்க்கை மருந்தினும் இனிது' என்பதற்கு உதாரணமாக விளங்குவது அருணகிரிநாதர் வாழ்க்கைஇந்த பிரார்த்தனை பதிவில் அருணகிரிநாதர் வாழ்வில் முருகன் செய்த திருவிளையாடல் ஒன்றை பார்ப்போம். உயர்குடியில் பிறந்திருந்தும் எந்த வித லட்சியமும் இன்றி பரத்தையர் வீட்டுக்கு செல்வதையே ஆனந்தமாக கருதி அருணகிரி வாழ்ந்து வந்தார். அவரிடம் செல்வம் வற்றி, உடலில் ரோகம் பீடித்த பின்னர், 'அற்ற குளத்து அறுநீர் பறவை'  போல அனைவரும் விலகிச் சென்றுவிட, ஊரார் வெறுத்து ஒதுக்க, திருவண்ணாமலை

Read More

வைதரணியில் சிக்கி தவிக்கும்போது துணையாய் வருவது எது ? Rightmantra Prayer Club

கால்நடை செல்வத்திற்கும் ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. பொருளாதாரம் சரிந்துள்ள நாடுகளை பாருங்கள்... நிச்சயம் கால்நடை செல்வங்கள் அந்நாடுகளில் வற்றியிருக்கும். நம் நாட்டின் பொருளாதார சரிவிற்கு கூட கால்நடை செல்வங்கள் குறைந்துகொண்டே வருவது ஒரு முக்கிய காரணம். (பொதுப் பிரார்த்தனையில் புகைப்படத்துடன் பட்டியல் தரப்பட்டுள்ளது). சாலையிலோ அல்லது வேறு எங்கோ பசுவைப் பார்த்தீர்கள் என்றால், அது பசு அல்ல, ரிசர்வ் வங்கியில் உள்ள ஒரு தங்கக் கட்டி என்று எண்ணிக்கொள்ளுங்கள். அது

Read More

‘தேடி வரும் தெய்வத் திருவருள்!’ — ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்!!

சில வாரங்களுக்கு முன்னர் நாம் சாதனையாளர் சந்திப்புக்கு புதுக்கோட்டை சென்றிருந்தபோது, திரும்ப வரும் வழியில் நாமும் நண்பர் சிட்டியும் மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் உள்ள கோவிந்தபுரத்தில் உள்ள இராமநாம போதேந்திராள் அதிஷ்டானத்திற்கு சென்றிருந்தோம். அங்குள்ள புத்தக கடையில் திரு.பி.சுவாமிநாதன் அவர்கள் எழுதிய சில நூல்களையும், திருமதி.ஷ்யாமா சுவாமிநாதன் என்பவர் எழுதிய 'காஞ்சி மகானின் கருணை அலைகள்' என்ற நூலையும் வாங்கி வந்தோம். இன்றைய பிரார்த்தனை பதிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது

Read More

32 இலட்சணங்களும் அமையப் பெற்ற ஒரே சிவலிங்கம் — Rightmantra Prayer Club

கடம்பவனம், ஆலவாய், நான்மாடக்கூடல், தூங்காநகர் என்ற பல சிறப்புப் பெயர்களைக் கொண்டது வெள்ளியம்பலமாகிய மதுரை மாநகரம். மதுரையின் மையத்தில் நின்றருளும் அன்னை மீனாட்சியின் அருமைநாயகன் அருள்மிகு சோமசுந்தரேசுவரர். உலகில் உள்ள சித்தர்களுக்கு எல்லாம் தலைவனான சோமசுந்தரேசுவரர் வீற்றிருப்பதால் மதுரையானது "சுந்தரானந்த சித்தர் பீடம்" என்றும் அழைக்கப்படுகிறது. அருள்மிகு சோமசுந்தரேசுவரர் எனப் போற்றப்படும் சுயம்புலிங்கத்திற்குச் "சுந்தரன்" என்ற பெயரை யார் வைத்தார்?  ஏன் வைத்தார்? பொதுவாகச் சிவலிங்கங்களை ஐந்து வகையாகப் பிரிக்கலாம். 1. ஈசன் தானே விரும்பிச்

Read More