Home > ஆன்மிகம் (Page 37)

மகாபாரதம் தொடர் – எங்கள் பூர்வ ஜென்ம புண்ணியம்! சிலிர்க்கும் சுரேஷ் கிருஷ்ணா & தேவா!!

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த 'மகாபாரதம்' தொடரின் ஒளிபரப்பு சன் டி.வி.யில் சென்ற ஞாயிறு தொடங்கிவிட்டது. எத்தனையோ ஆப்ஷன்களுக்கிடையே முக்கியமான ப்ரைம் டைம் என்று கருதப்படும் ஞாயிறு காலை 10.00 மணியை சன் தொலைகாட்சி 'மகாபாரதம்' தொடருக்கு ஒதுக்கியமைக்காகவே சன் டி.வி.யை எத்தனை முறை பாராட்டினாலும் தகும். போகப் போக தொடர் களைகட்டும் என எதிர்பார்க்கலாம். தொடருக்கு மக்கள் மத்தியில் மிக பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தொடரின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இந்த உன்னத முயற்சியில் வெற்றி

Read More

சென்னையில் இன்று இந்து ஆன்மிக சேவை கண்காட்சி – எல்.கே.அத்வானி தொடங்கி வைக்கிறார்!

சென்னை மீனம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்து ஆன்மிகம் மற்றும் சேவை கண்காட்சியை பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை தொடங்கிவைக்கிறார். இந்து ஆன்மிக சேவை கண்காட்சி 5-வது இந்து ஆன்மிகம் மற்றும் சேவை கண்காட்சி சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 24-ந்தேதி வரை நடைபெற உள்ளது. தொடக்க விழா இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணிக்கு அதே கல்லூரியின் கலை அரங்கில் நடக்கிறது. பாடகி சுதா ரகுநாதனின்

Read More

நவீன தொழில்நுட்பத்தில், அதிக பொருட்செலவில் தமிழில் ‘மகாபாரதம்’ – Don’t Miss!

ஒரு சமயம் தேவ ரிஷிகள்  சேர்ந்து நான்கு வேதங்களையும் ஒன்றாகச் சேர்த்து தராசின் ஒரு தட்டில் வைத்தார்கள். பாரத வரலாற்றை மறு தட்டில் வைத்தார்கள். பாரதம் மகத்தானதாகவும்  பாரத்தை உடையதாகவும் இருந்தது. அதனால் மகாபாரதம் எனப் பெயர் பெற்றது! இது தான் மகாபாரதம் பெயர் தோன்றிய வரலாறு. உலகின் மிகப் பெரிய இதிகாசமாக கருதப்படும் மகாபாரதத்தில் இல்லாதே நீதிகளே இல்லை எனலாம். மகாபாரதம் ஒரு லட்சம் சுலோகங்களால் ஆன பெரிய நூலாகும். இதை அப்படியே

Read More

காதலில் வெற்றி பெற & பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர – பரிகாரங்கள்

என்ன தான் உறுதியாக இருந்தாலும் உண்மையாக காதலித்தாலும் சில காதல்கள் வெற்றியடையாமல் போய்விடுகின்றன. அந்தஸ்து, ஜாதி, மொழி, கௌரவம் என்ன பலப் பல காரணங்களால் சம்பந்தப்பட்ட ஜோடிகள் சேரமுடியாமல் பிரிந்து விடுகின்றனர். அதில் சிலர் தவறான முடிவும் எடுத்து பெறுவதற்கரிய இந்த மானிட பிறவியை முடித்துக் கொள்கின்றனர். இருந்து சாதிப்பதற்கு வழிகள் இருக்க எதற்கு தவறான முடிவு? காதலை நிறைவேற்றுவதில் நவக்கிரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும் சுக்கிரனின் பங்கு இதில் மகத்தானது.

Read More

தடைகளை தகர்த்து விரும்பியவரை கரம் பிடிக்க!

இன்று காதலர் தினம். மிகத் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ள கொண்டாட்டங்களில் இதுவும் ஒன்று. (அதை விடுங்க. அது பெரிய சப்ஜெக்ட். அந்த ஆராய்ச்சிக்கு நாம போக வேண்டாம்.) ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் வாழ்வில் ஒவ்வொரு படி முன்னேறியிருப்பேன் என்ற வைராக்கியங்கள் வழக்கொழிந்து இன்றைக்கு காதலர் தினத்தன்று ஜோடியின்றி சும்மாயிருப்பதே அவமானம் - உடனடி தேவை : "ஆணாயிருந்தால் ஒரு கேர்ள் ப்ரெண்ட்; பெண்ணாக இருந்தால் ஒரு பாய் ப்ரெண்ட்" என்கிற

Read More

வினோதினியுடன் பேசிய அந்த தருணங்கள்…

வினோதினி.... சில மாதங்களுக்கு முன்பு காரைக்காலில் ஆசிட் வீச்சுக்கு இலக்காகி சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமயம் பத்திரிக்கைகளில் செய்தி வெளியானது. அப்போது கூட ஒரு சராசரி குடிமகன் போலவே சற்று வருத்தப்பட்டு அந்த செய்தியை பார்த்துவிட்டு அடுத்த பக்கம் புரட்டி படிக்க சென்றுவிட்டேன். ஆனால் சில மாதங்கள் கழித்து இரு கண்களும் பறிபோன நிலையில் சிகிச்சை செலவுக்கு கூட பணமின்றி அந்த குடும்பம் திண்டாடுவதாக செய்தி படித்தபோது தான் மனதை பிசைந்தது.

Read More

ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த செல்வி.வினோதினி காலமானார்

காரைக்காலை சேர்ந்த பெண் என்ஜினீயர் வினோதினி (வயது 23). சுரேஷ் என்ற வாலிபர் ஆசிட் வீசியதில் முகம், கை, தோள் முழுவதும் பாதித்தது. 2 கண்களிலும் பார்வை இழந்த அவர் கடந்த 3 மாதமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார். வினோதினி மீது ஆசிட் வீசிய சுரேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பார்வை இழந்த வினோதினிக்கு சிகிச்சை அளிக்க பலர் உதவி செய்ய முன்வந்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று

Read More

இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி 2012 – ஒரு பார்வை!

இந்து மதத்தின் பாரம்பரியத்தை தெரிந்துகொள்ளும் வகையிலும் பல்வேறு இந்து ஆன்மீக அமைப்புகளின் பணிகள் மற்று பொது நல சேவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் சென்னையில் ஒவ்வொரு ஆண்டு இந்து ஆன்மீக கண்காட்சி நடைபெற்று வருகிறது. சென்ற ஆண்டு இந்த கண்காட்சி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 200க்கும் மேற்ப்பட்ட அமைப்புக்கள் பங்கேற்று ஸ்டால்கள் அமைத்திருந்தன. இந்த ஆண்டு மேற்படி ‘இந்து ஆன்மிகம் மற்றும் சேவை கண்காட்சி’  பிப்ரவரி 19 முதல் இருந்து

Read More

குருராஜர் இருக்க கவலை எதற்கு? நெகிழ்ச்சியூட்டும் நிஜ அனுபவங்கள்!

சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவம் இது. அந்த தம்பதிகள் இருவரும் புதிதாக மணமானவர்கள். கணவன் அடுத்த நாள் சபரிமலைக்கு புறப்படவிருக்கிறார். இந்த நேரம் பார்த்து அவரது புது மனைவிக்கு கைகள் இரண்டிலும் - தோள்பட்டையிலிருந்து கீழே விரல்கள் வரை - ஏதோ அலர்ஜி ஏற்பட்டு எரிச்சல் ஏற்பட ஆரம்பித்துவிடுகிறது. அதாவது காயத்தில் மிளகாய்த் தூளை தடவியது போன்ற ஒரு எரிச்சல். காரணம் என்ன ஏது என்று தெரியவில்லை. உடனே மருத்துவமனைக்கு

Read More

நம் தலைவிதியை மாற்ற முடியுமா? பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள்? – கர்மா Vs கடவுள் (2)

"எல்லாமே விதிப்படி தான் நடக்குது... நம்ம ஜாதகத்துல கட்டம் என்ன சொல்லுதோ அதுப்படி தான் எல்லாம் அமையுதுங்குறப்போ என்ன கோவிலுக்கு போய் என்ன சார் பலன்? என்ன பரிகாரம் செஞ்சி என்ன மாறிடப்போது? என் தலையெழுத்து எப்படியோ அப்படியே நடக்கட்டும் சார்" - இது போன்ற புலம்பல்களை நாம் நம்மை சுற்றிலும் அதிகம் கேட்பதுண்டு. ஏன் நாமே கூட சில சமயம் விரக்தியில் அப்படி புலம்புவதுண்டு. என்றாலும் அதில் உள்ள

Read More

ஊழ்வினையை அனுபவித்தே தீரவேண்டுமா? அது அத்தனை சக்திமிக்கதா? கர்மா Vs கடவுள் (1)

நம்மை சுற்றி எத்தனையோ அநீதிகள் ஒவ்வொரு நாளும் நடந்துகொண்டிருக்கின்றன. நல்லவர்கள் துன்பப்படுகிறார்கள். தீயவர்கள் சுகப்படுகிறார்கள். அதர்மம் அரசாள்கிறது. ஒரு பாவமும் அறியாதவர்களுக்கு ஏன் இந்த கதி என்று நம் மனம் குமுறும் அளவுக்கு நாளிதழ்களை புரட்டினால் விபத்து, கொலை, கற்பழிப்பு போன்ற செய்திகளே பிரதானமாக கண்ணில் படுகிறது. எதைப் பற்றியும் கவலைப்படாது, 'எனக்கு நடக்காதவரைக்கும் எதைப் பற்றியும் எனக்கு கவலை இல்லை' என்று குதிரைக்கு கடிவாளம் போட்டபடி செல்பவர்களை விடுங்கள்.... ஆனால்

Read More

ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றுவதால் ஏற்படும் பலன் – அனுமத் ஜெயந்தி ஸ்பெஷல் 1

மறைந்த காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீமத் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஒரு ஆன்மீகக் கருவூலம் என்பது அனைவரும் அறிந்ததே. பக்தர்களுக்கு ஏற்படும் எவராலும் தீர்க்க முடியாத மிகப் பெரிய சந்தேகங்களையும் அனாயசமாக தீர்த்துவைப்பவர். முக்காலமும் உணர்ந்த மகான். அவர் நிகழ்த்திய எண்ணற்ற அற்புதங்களை பற்றி படித்திருக்கிறேன். சிறுவயதில் தந்தையுடன் ஒரு முறை காஞ்சி மடம் சென்று அவரை தரிசித்திருக்கிறேன். ரொம்ப சிறிய வயது என்பதால் சரியாக நிகழ்வுகள் நினைவில் இல்லை. அதன் பிறகு சென்னையில் சென்ற

Read More

குருவருளின்றி திருவருள் ஏது ?

இன்று பரமஹம்ச யோகானந்தரின் பிறந்தநாள். 1893 ஜனவரி 5ல், கோரக்பூரில் யோகானந்தர் பிறந்தார். மதம், இனம், கலாசாரம் ஆகியவற்றைக் கடந்து தனது அருளுரை மூலம் உலகத்துக்கு ஞான ஒளியேற்ற வந்தவர் என அவரது சீடர்களால் அழைக்கப்படுகிறார். அமெரிக்காவிலும் தனது அருளுரையை பரப்பினார்.  யுக்தேஸ்வர் கிரி இவரது குரு ஆவார்.  1952ம் ஆண்டு மார்ச் 7ல் மறைந்தார். 'ஒரு யோகியின் சுயசரிதை' என்ற மாபெரும் பொக்கிஷத்தை இந்த உலகிற்கு தந்துவிட்டு சென்றிருக்கிறார். ஆன்மீகத்தில் ஏற்றம் பெற

Read More

பித்ரு தோஷம் நீக்கும் ஒரு அற்புதத் தலம் + ஆதரவற்ற பெண்களும் பெற்றோர்களுக்கு சிரார்த்தம் செய்யலாம்!

தோஷத்தில் மிகக் கொடிய தோஷம் பித்ரு தோஷம். பித்ரு தோஷம் இருந்தால் அந்த வீட்டில் சுபகாரிய மற்றும் திருமணத் தடை, செய் தொழிலில் நஷ்டம்,அடிக்கடி ஏற்படும் விபத்து, நிம்மதியின்மை ஆகியவை காணப்படும். தாய் தந்தையர் மற்றும் அவர்களை பெற்றவர்களின் ஈமச் சடங்குகள் மற்றும் சிரார்த்தம், தெவசம்  உள்ளிட்டவைகள் நடைபெறும்போது தவறாமல் அதில் கலந்துகொள்ளவேண்டும். இதெல்லாம் ஏன் எதற்கு என்று ஏகடியம் பேசுதல் கூடாது. நமது முன்னோர்களுக்கும் பித்ருக்களுக்கும் உரிய சடங்குகளை தவறாமல் செய்து

Read More