Home > ரைட்மந்த்ரா நிகழ்ச்சிகள் (Page 3)

இது கடிதமல்ல… கடவுளின் குரல்!

சென்ற டிசம்பர் மாதம் மத்தியில் நடைபெற்ற நமது ரைட்மந்த்ரா விருதுகள் மற்றும் பாரதி விழாவில் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் மூன்றாமாண்டு வரலாறு படித்து வரும் அழகு ரேகா என்கிற பார்வையற்ற மாணவியின் கல்வி + மேல்படிப்பு செலவுக்கு ரூ.15,000/- வழங்கியது நினைவிருக்கலாம். அழகு ரேகா எந்த அடிப்படையில் இந்த உதவித் தொகைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று உங்களுக்கு தெரியும். இருப்பினும் புதிய வாசகர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக மீண்டும் சொல்கிறோம். ஏழ்மை நிலையில் உள்ள

Read More

கிளிகளின் தந்தைக்கு ஒரு சிறிய கௌரவம்!

சென்னை ராயப்பேட்டையில் தனது வீட்டு மாடியில் தினசரி ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு உணவளித்து வரும் கிளிகளின் தந்தை, பசுமைக் காவலர் திரு.காமிரா சேகர் அவர்களை பற்றிய அறிமுகம் நம் வாசகர்களுக்கு தேவையில்லை. நமது ரைட்மந்த்ரா விருதுகள் விழாவில் 'வள்ளலார் விருது' பெற்றவர் இவர். பறவைகள் நல ஆர்வலர். சிறந்த சமூக சேவகர். ரைட்மந்த்ராவுக்கென அலுவலகம் திறந்ததிலிருந்தே திரு.சேகர் அவர்களை அலுவலகத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்து வந்தோம். நம் அழைப்பை ஏற்று நேற்று மாலை

Read More

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பிய பெருந்தலைவர் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

பெருந்தலைவர் காமராஜரைப் பற்றி நாளெல்லாம் பேசிக்கொண்டே இருக்கலாம். அவரை போன்ற ஒரு தன்னலம் கருதாத தலைவரை இந்திய அரசியல் கண்டதில்லை. இனியும் காணப்போவதில்லை. பசிப்பிணி போக்கிய மருத்துவர் அவர். காமராஜர் அப்போது விருதுநகரில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிக்கு அருகே தான் காமராஜரின் வீடு. எனவே மதியம் சாப்பிட வீட்டுக்கு வருவது காமராஜரின் வழக்கம். வீட்டில் அம்மாவோ பாட்டியோ அவருக்கு உணவு பரிமாறுவார்கள். காமராஜரின் பாட்டிக்கு காமராஜர் என்றால் பாசம்

Read More

சனி கொடுத்தால் எவர் தடுப்பர்? இனிதே நடைபெற்ற நமது சிறப்பு வழிபாடு!

21/03/2015 சனிக்கிழமை காலை வடதிருநள்ளாறு ஷேத்ரத்தில் நம் தளம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட அபிஷேகமும் விசேஷ அர்ச்சனையும் இனிதே நடைபெற்றது. மேற்படி சிறப்பு வழிப்பாட்டுக்கு கிட்டத்தட்ட 18 வாசகர்கள் தங்கள் பெயர் மற்றும் தங்கள் குடும்பத்தினர் பெயர், ராசி, நட்சத்திர, கோத்திர விபரங்களை நமக்கு அனுப்பியிருந்தனர். (மொத்தம் சுமார் 70 பெயர்கள்). சனிக்கிழமை காலை 6.30 க்கு அபிஷேகம் என்பதால் காலை 5.00 மணிக்கெல்லாம் எழுந்து குளித்துவிட்டு புறப்பட்டுவிட்டோம். கோவிலுக்கு நாம்

Read More

நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் கரை புரள, சிவலோகத்தில் சில மணித்துளிகள்…!

'வான்கலந்த மாணிக்கவாசகர்' நாடகத்தை உருவாக்கி அதை வெற்றிகரமாக நடத்தி வரும் 'சிவலோகம்' திவாகர் அவர்களை அவரது வீட்டிலேயே சந்தித்து நமது தளம் சார்பாக கௌரவித்து பேட்டி கண்டது நினைவிருக்கலாம். (Please check : 'மாணவர்கள் மனதில் மாணிக்கவாசகர்' - திவாகரும் அவரது திருவாசகத் தொண்டும்!) அந்த பதிவை பார்த்துவிட்டு புதுவையை சேர்ந்த சம்பத்குமார் என்கிற வாசக அன்பர் ஒருவர், நமக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்தது என்னவென்றால்: "சிவலோகம் திவாகர்

Read More

ஒரு முக்கிய அறிவிப்பு + வேண்டுகோள்!

நம் தளத்திற்கான பதிவுகளை தனிமையாக, நிம்மதியாக நேரமின்மையை பற்றிய கவலையின்றி எழுதிடவேண்டும் என்பதற்காகவே ரைட்மந்த்ராவுக்கு என்று தனியே அலுவலகத்தை துவக்கியிருக்கிறோம். அலுவலகத்திற்கு காலை வந்து, சுவாமிக்கு விளக்கேற்றிவிட்டு பதிவை தயார் செய்து அளித்துவிட்டு அடுத்தடுத்து அளிக்க வேண்டிய பதிவுகளுக்கான CONTENT ஐ தயார் செய்வது பின்னர் மதியம் அளிக்க வேண்டிய பதிவை அளிப்பது, மாலை முக்கிய நிகழ்ச்சிகள் ஏதேனும் இருந்தால் கலந்துகொள்வது என்று இப்போதைய SCHEDULE ஓடிக்கொண்டிருக்கிறது. நம்முடைய ஒரே குறிக்கோள்,

Read More

ஒரு கனவின் பயணம்!

பிப்ரவரி 1, 2015. ஞாயிறு காலை சுமார் 10.15 மணி. 'இராமநாம மகிமை' நாடக புகழ் திருமதி.பாம்பே ஞானம் அவர்கள்  நமது நண்பர்கள் மற்றும் வாசகர்களின் பலத்த கைதட்டல்களுக்கிடையே நமது அலுவலகத்தின் பெயர்ப்பலகையை திறந்து வைத்து ரிப்பன் வெட்டுகிறார். நம்மை ஒரு முறை கிள்ளிப் பார்த்துக்கொண்டோம். இப்போது நினைத்தாலும் அனைத்தும் ஒரு கனவு போலவே இருக்கிறது. திறப்பு விழாவுக்கு வந்திருந்த நண்பர் ஒருவர் நம்மிடம் கேட்டார். "எப்படிஜி இப்படி ஒரு அருமையான இடத்தை

Read More

அன்பு மிகுந்த தெய்வமுண்டு துன்பம் அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!

நமது தளத்தின் சமீபத்திய விழாவில் நடைபெற்ற நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவங்களுள் ஒன்றை உங்களிடையே பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறோம். பாரதி தனது பாடல்கள் பலவற்றில் வலியுறுத்திய விஷயம் ஏழையின் கல்வி மற்றும் பசித்த வயிற்றுக்கு உணவு. அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், அன்ன யாவினும் புண்ணியம் கோடி, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல். ஏழையின் கல்விக்கு உதவுவதை விட மகத்துவமான விஷயம் வேறேதும் இருக்க முடியாது என்பது அவன் தீர்ப்பு. எனவே தான் ஒவ்வொரு ஆண்டும் பாரதி

Read More

ஏழையின் குடிசையில் சில சூரியன்கள்! – ரைட்மந்த்ரா முப்பெரும் விழா UPDATE 1

எல்லாம் வல்ல இறைவன் அருளாலும், நம்மை வழிநடத்தும் குருமார்கள் கருணையாலும், நண்பர்கள் மற்றும் வாசகர்கள் ஒத்துழைப்பு மற்றும் உதவியாலும் ரைட்மந்த்ரா விருதுகள் விழா, பாரதி விழா மற்றும் ஆண்டுவிழா இனிதே நடைபெற்றது. அனைத்து சாதனையாளர்களும் தவறாமல் வந்திருந்து விருதுகளை பெற்று நம்மை ஆசீர்வதித்தனர். வருண பகவான் வேறு அவ்வப்போது எட்டிப் பார்த்து நம்மை பயமுறுத்தினாலும் குன்றத்தூர் முருகனின் மீது பாரத்தை போட்டுவிட்டபடியால் எந்த வித இடையூறும் இன்றி விழா இனிதே

Read More

ரைட்மந்த்ரா முப்பெரும் விழா 2014 – நிகழ்ச்சி நிரல் & அழைப்பிதழ்!

நமக்கும் பேரம்பாக்கம் (நரசிங்கபுரம்) ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கும் இந்த தளத்திற்கும் உள்ள தொடர்பு உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். அவரின்றி நானில்லை; இந்த தளமும் இல்லை. நம் தளத்தின் 'முப்பெரும் விழா 2014' அழைப்பிதழ் இறுதிப் பிரதி தயாரானவுடன் இன்று 07/12/2014 ஞாயிறு காலை பேரம்பாக்கம் சென்று நரசிம்மரின் பாதத்தில் அழைப்பிதழை வைத்து பூஜித்து விட்டு இதோ தற்போது தளத்தில்  வெளியிடுகிறோம். இன்று காலை நாம் பேரம்பாக்கம் சென்றபோது புதுவையிலிருந்து நண்பர் சிட்டி,

Read More

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்…

தன்னம்பிக்கையில் சிறந்த சாதனையாளர்களையும் சரி, பக்தியிற் சிறந்த ஆன்றோர்களையும் சரி, சேவையில் சிறந்த சான்றோர்களையும் சரி  படித்து தெரிந்துகொண்டால் மட்டும் போதாது. அவர்களை நேரிலும் பார்க்கவேண்டும். ஓரிரு வார்த்தைகள் பேசவேண்டும். இல்லை அவர்கள் பேசுவதை கேட்கவாவது செய்யவேண்டும். அப்போது தான் சாதனையின் ஸ்பரிசத்தை நம் வாழ்க்கையிலும் நாம் உணரமுடியும். ஆகவே தான் ஔவையும் கூட, நல்லாரைக் காண்பதும் நன்றே நலம் மிக்க நல்லார் சொல் கேட்பதும் நன்றே - நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு இணங்கி

Read More

பாக்கு விற்பவன் கூட ஊக்குவித்தால் தேக்கு விற்பான் !

நமது தளத்தின் தீபாவளி கொண்டாட்டங்கள் பற்றி மூன்றாம் பதிவு இது. கிட்டத்தட்ட ஆறு பசுக்கள், இரண்டு கன்றுகள் மற்றும் இரண்டு காளைகள் அடங்கிய மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவில் கோ-சாலைக்கு பிரதி மாதம் மற்றும் நாள் கிழமை விஷேடங்களின் போது நம் தளம் சார்பாக நாம் ஒரு சில மூட்டைகள் தீவனம் அளித்து வருவது உங்களுக்கு தெரிந்திருக்கும். மற்ற இடங்களைப் போலல்லாமல் பசுக்களை இங்கு சிறந்த முறையில் பராமரித்து வருவதால்

Read More

இன்பம் எங்கே, மகிழ்ச்சி எங்கே என்று தேடுகிறீர்களா ?

நமது தளத்தின் தீபாவளி கொண்டாட்டங்களை பற்றிய இரண்டாம் பதிவு இது. மாங்காட்டை அடுத்த சக்தி நகரில் 'தபஸ் டிரஸ்ட்' என்ற அமைப்பு வேத பாடசாலை ஒன்றை நடத்தி வருகிறது. இங்கு உ.பி. மற்றும் பீகாரை சேர்ந்த சுமார் 40 சிறுவர்கள் தங்கி வேதம் படித்து வருகிறார்கள். அனைவரும் வறுமையில் வாடும் குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு உண்ண உணவும், தங்க இடமும் கொடுத்து, வேதம் கற்றுத் தரப்படுகிறது. முகலிவாக்கத்தை சேர்ந்த நண்பர் /

Read More

ஜகத்குரு தரிசனத்துடன் தொடங்கிய நம் தீபாவளி கொண்டாட்டங்கள் – Part 1

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு நமது தளம் சார்பாக எளிய கைங்கரியங்கள் செய்யப்பட்டு வருவது நீங்கள் அறிந்ததே. வேதம் படிப்பதே அரிதாகி வரும் ஒரு சூழ்நிலையில் வேதம் படிக்கும் சில மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வஸ்திரங்கள் உள்ளிட்டவற்றை தீபாவளி பரிசாக அளித்து சந்தோஷப்படுத்தவேண்டும் என்று முடிவு செய்தோம். கூடவே இன்னொரு ஆசையும் மனதில் அரும்பியது. நாம் கண்டு ரசித்த 'ஜகத்குரு ஆதிசங்கரர்' என்கிற படத்தை ஏதாவது ஒரு பாடசாலை மாணவர்களுக்கு

Read More