Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்…

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்…

print
TamilMurasu copyன்னம்பிக்கையில் சிறந்த சாதனையாளர்களையும் சரி, பக்தியிற் சிறந்த ஆன்றோர்களையும் சரி, சேவையில் சிறந்த சான்றோர்களையும் சரி  படித்து தெரிந்துகொண்டால் மட்டும் போதாது. அவர்களை நேரிலும் பார்க்கவேண்டும். ஓரிரு வார்த்தைகள் பேசவேண்டும். இல்லை அவர்கள் பேசுவதை கேட்கவாவது செய்யவேண்டும். அப்போது தான் சாதனையின் ஸ்பரிசத்தை நம் வாழ்க்கையிலும் நாம் உணரமுடியும்.

ஆகவே தான் ஔவையும் கூட,

நல்லாரைக் காண்பதும் நன்றே நலம் மிக்க
நல்லார் சொல் கேட்பதும் நன்றே – நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதும் நன்றே

என்று கூறியிருக்கிறார்.

அகத்திய பெருமான் கூட “நல்லோர் தரிசனம் பாப விமோசனம்!” என்று இதையொட்டியே கூறியிருக்கிறார்.

அப்படிப்பட்ட நல்லோர்கள் அனைவரையும், ஒரே அரங்கில் சந்திக்கக்கூடிய ஒரு அரிய வாய்ப்பை நம் தளம் உங்கள் அனைவருக்கும் வழங்குகிறது. அதை பயன்படுத்திக்கொண்டு பலன் பெறுங்கள்.

ஐயா திரு.பாலம் கலியானசுந்தர், நந்தகுமார் ஐ.ஆர்.எஸ்., முல்லைவனம் ஆகியோர் முன்னிலையில்  2012 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பாரதி விழா
ஐயா திரு.பாலம் கலியானசுந்தர், நந்தகுமார் ஐ.ஆர்.எஸ்., திரு.இளங்கோ (பார்வைத் திறன் சவால் கொண்டவர்), திரு.முல்லைவனம் ஆகியோர் முன்னிலையில் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பாரதி விழா

நமது தளத்தின் ஆண்டுவிழா & ரைட்மந்த்ரா விருதுகள் விழா சென்ற ஆண்டு, செப்டம்பரிலும், மகாகவி பாரதி பிறந்தநாள் விழா டிசம்பரிலும் நடைபெற்றது.

ஒரே விழாவாக நடத்தினால் அனைவருக்கும் சற்று சௌகரியமாக இருக்கும், ஏற்பாடு செய்வதற்கு நமக்கும் சற்று சுலபமாக இருக்கும் என்பதால் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை இவ்விழாக்கள் ஒரே நேரத்தில் முப்பெரும் விழாவாக நடத்தப்படுகிறது.

2013 செப்டம்பர் நடைபெற்ற முதல் ஆண்டு விழா & ரைட்மந்த்ரா விருதுகள் விழா
2013 செப்டம்பர் நடைபெற்ற முதல் ஆண்டு விழா & ரைட்மந்த்ரா விருதுகள் விழா

ரைட்மந்த்ரா தளம் நடத்தும் விழா என்றால் அதன் தரத்தைப் பற்றியும் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர்களின் தகுதியை பற்றியும் நாம் சொல்லவேண்டியதில்லை. இதுவரை நம் விழாக்களுக்கு வந்த அனைவருக்கும் தெரியும். (முந்தைய ஆண்டுகள் நடைபெற்ற நமது விழாக்களை பற்றி அறிந்துகொள்ள இறுதியில் அளிக்கப்பட்டுள்ள முகவரிகளை செக் செய்யவும்!)

சுயநலமே வாழ்க்கை என்று வாழ பழக்கிகொண்டுவிட்ட ஒரு சமூகத்தில் இப்படி தன்னலம் கருதா உத்தமர்களை ஒருங்கே பார்ப்பது அரிது.

இந்த ஆண்டு சுமார் ஒன்பது பேர், பல்வேறு மகான்கள் மற்றும் சான்றோர்கள் பெயரில் ரைட்மந்த்ரா விருதினை பெறவிருக்கிறார்கள். பல்வேறு ஆன்மீக மற்றும் சமுதாய பணிகளுக்கு இவ்விருதுகள் வழங்கப்படவிருக்கிறது.

2013 டிசம்பர் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு பாரதி விழாவில்  திரு.வி.கே.டி.பாலன், திரு.பாஸ்கர பாரதி, திருமதி.பாஸிடிவ் கௌசல்யா, தேவார முரசு திரு.கி.சிவக்குமார் ஆகியோர்
2013 டிசம்பர் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு பாரதி விழாவில் திரு.வி.கே.டி.பாலன், திரு.பாஸ்கர பாரதி, திருமதி.பாஸிடிவ் கௌசல்யா, தேவார முரசு திரு.கி.சிவக்குமார் ஆகியோர்

ஒப்பற்ற சான்றோர்கள் கலந்துகொண்டு பேசவிருக்கிறார்கள். நாடி நரம்புகளை முறுக்கேற்றும் மகாகவி பாரதியின் பாடல்கள் மேடையில் இசைக்கப்படவிருக்கின்றன.

நம் வாசகர்கள் அனைவரும் குடும்பத்தோடு வந்திருந்து விழாவை சிறப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

DSC_7487
விழாவிற்குரிய ஏற்பாடுகளை நாம் ஏற்கனவே துவக்கிவிட்ட சூழ்நிலையில், வாசகர்கள் தாராளமாக பொருளுதவி தந்து விழா சிறப்புற நடக்க உதவிடுமாறு இத்துடன் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் பொருளுதவியை கொண்டே விழாவை சிறப்பாக நடத்த இயலும்.

* வெளியூரிலிருந்து வருபவர்கள் மற்றும் இல்லத்தரசிகளின் சௌகரியத்தை மனதிற்கொண்டு, இந்த ஆண்டு விழா முடிவடைந்தவுடன் இரவு உணவு வழங்க செய்யப்படும். விழாவை நன்றாக ரசித்துவிட்டு வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு செல்லலாம்.

* மேலும் அனைவருக்கும் மாதாந்திர காலண்டர் + மகா பெரியவா படம் ஒன்று வழங்கப்படும். (தினசரி காலண்டரையும் வழங்க பரிசீலித்து வருகிறோம். கிடைக்கும் நிதி உதவியை பொறுத்து ஏற்பாடு செய்யப்படும்.)

* இது தவிர தகுதியுடையோர்க்கு கல்வி உதவி + வழக்கமான அம்சங்கள் இடம்பெறும்.

* நங்கநல்லூர் வேல்மாறல் மன்றத்தின் ‘வேல்மாறல்’ நூல் யந்திரத்துடன் விழா அரங்கில் கிடைக்கும்.

DSC_7489

எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை சுமார் 9 பேர் விருதை பெறுவதால் கூடுதல் ஏற்பாடுகளை செய்யவேண்டியுள்ளது. தவிர இரண்டு மாற்றுத் திறனாளிகள் விருதை பெற தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு வெளியூரிலிருந்து வருவதால் அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடுகளை செய்யவேண்டியது அவசியமாகிறது.

இறைவன் மீது பாரத்தை போட்டு உங்கள் மீது நம்பிக்கை வைத்து துணிந்து இறங்கிவிட்டோம். கைகொடுத்து விழா சிறக்க உதவிடுங்கள்.

DSC_6079

நாம் நடத்தும் இந்த விழாவானது சம்பந்தப்பட்ட சாதனையாளர்களுக்கும் சான்றோர்களுக்கும் மிகப் பெரியதொரு உத்வேகத்தை கொடுப்பதோடு அல்லாமல், விழாவை கண்டு களிக்கும் பார்வையாளர்களுக்கும் பயனுள்ளதாய் அமையும். தவிர விழாவுக்கு உதவிடும் அனைவருக்கும் புண்ணியமும் நல்கிடும் என்பது உறுதி. (* விழா நிகழ்ச்சிகள் YOUTUBE ல் பின்னர் வெளியிடப்படும்.)

நிகழ்ச்சி நிரல் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு வருகிறது. விழா அழைப்பிதழ் அடுத்த வாரம் வெளியிடப்படும்.

(விழாவுக்கு வர முடிவு செய்திருப்பவர்கள் நமக்கு மின்னஞ்சல் மூலமோ அல்லது எஸ்.எம்.எஸ். மூலமோ தகவல் தெரிவிக்கவும். உணவு ஏற்பாடுகளுக்கு சற்று உபயோகமாக இருக்கும்.)

கீழே நம் தளத்தின் வங்கிக் கணக்கு விபரங்களை அளித்திருக்கிறோம். இந்த அரிய பணிக்கு உங்களால் இயன்ற நிதியை அளித்து உதவும்படி வாசகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

================================================================

Our website’s Bank A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

================================================================

மேன்மேலும் நாம் வளர உங்கள் அனைவரின் நல்லாசிகளும் பிரார்த்தனையும் என்றும் வேண்டும்.

நாம் அனைவருமே சாதிக்கப் பிறந்தவர்கள். இந்த உலகில் நம்மால் முடிந்த ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வந்தவர்கள்.

மனதி லுறுதி வேண்டும்.
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;

கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்!

மிக்க நன்றி!

================================================================

விழா நாள் :  டிசம்பர் 14, 2014 ஞாயிற்றுக் கிழமை மாலை

நேரம் : 5.30 PM to 8.00 PM

இடம் : அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோவில், பி.டி.ராஜன் சாலை, (சிவன் பார்க் அருகே) கே.கே.நகர், சென்னை -78.

பஸ் ரூட் : 17D, 11G, 49A, 12G, 11H, 5E      பஸ் ஸ்டாப் : சிவன் பார்க்

விழா  நடைபெறும் சக்தி விநாயகர் கோவில்
விழா நடைபெறும் சக்தி விநாயகர் கோவில்

================================================================
இதுவரை நடைபெற்ற மூன்று விழாக்களின் அழைப்பிதழ்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் விபரம்:

2013 ஆம் ஆண்டு இரண்டாம் பாரதி விழா அழைப்பிதழ்

ரைட்மந்த்ரா விருதுகள் 2013 & ரைட்மந்த்ரா ஆண்டு விழா!

2012 ஆம் ஆண்டு முதல் பாரதி விழா அழைப்பிதழ் 

இது தொடர்பான பதிவுகளுக்கு :

http://rightmantra.com/?cat=129

================================================================

[END]

8 thoughts on “இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்…

  1. மிகவும் அசத்தலான பதிவு. ரைட் மந்த்ரா விழா என்றாலே நம் குடும்ப விழா. . போன வருடம் போல் இந்த வருடமும் விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள் நம் குடும்ப நண்பர்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்பை ஆவலுடன் எதிர்பார்கிறேன்

    விழா சிறக்க வாழ்த்துக்கள்

    நன்றி
    உமா

  2. வாழ்த்துக்கள்…………..தங்களின் சீரிய முயற்சியால் நடைபெறும் முப்பெரும் விழா இறையருளால் இனிதே நடைபெற வாழ்த்துக்கள்…………

  3. Hats off to Right Mantra Sundar ji

    நல்லாரைக் காண்பதும் நன்றே நலம் மிக்க
    நல்லார் சொல் கேட்பதும் நன்றே – நல்லார்
    குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
    இணங்கி இருப்பதும் நன்றே

    the above all in one place we are waiting for the day. Wishing you a great success

  4. வாழ்க வளமுடன்

    முப்பெரும் விழா வெற்றி அடைய வாழ்த்துகள்

    நன்றி

  5. விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள்!!

    ஓம் நம சிவாய

  6. Dear Sundar,
    Hatts off to you. Yourself and rightmantra going in a right path. I wish all you a sucess to RM Function. Congrats,

    Thanks & Regards,
    S.Narayanan.

  7. விழா குறித்த எதிர்பார்ப்பு ஏறிக்கொண்டே செல்கிறது. விழா சிறக்க வாழ்த்துக்கள். எங்களால் இயன்ற பங்கை நிச்சயம் அளிப்போம்.

    குடும்பத்தோடு வர முயற்சிக்கிறேன். அல்லது என் கணவரை மட்டுமாவது அனுப்புகிறேன்.

    சிறப்பு விருந்தினர்கள் மற்றும் விருது பெறுவோரை அறிந்துகொள்ளும் ஆர்வம் பன்மடங்கு கூடியுள்ளது.

    சீக்கிரம் அழைப்பிதழை வெளியிடவும்.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *