மயிலையில் ஒவ்வொரு பங்குனி மாதமும் நடைபெறும் அறுபத்து மூவர் விழா மிகவும் புகழ் பெற்றது. கடந்த சில ஆண்டுகளாக நாம் இந்த வைபவத்தை நமது தளத்தில் கவர் செய்து வெளியிட்டு வருவது நீங்கள் அறிந்ததே. (மயிலையை அதிரவைத்த அறுபத்து மூவர் திருவிழா – ஒரு புகைப்பட தொகுப்பு!)
நாற்பதுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் கொண்ட பதிவு இது. பொறுமையாக பார்க்கவும். ‘திருக்குறள்’ தந்த திருவள்ளுவரும் வாசுகி அம்பாளுடன் நாயனமார்களில் ஒருவராக ஊர்வலத்தில் வருவதை புகைப்படத் தொகுப்பில் காணத் தவறாதீர்கள்.
அயல்நாட்டில் வசிப்பவர்கள் எவரேனும் அடுத்த ஆண்டு சென்னை வரவேண்டும் என்று விரும்பினால் அறுபத்து மூவர் விழாவை கண்டுகளிப்பது போல வாருங்கள். மனித வாழ்க்கையில் ஒருமுறையேனும் பார்த்த பரவசப்படவேண்டிய ஒரு திருவிழா இது. அத்தனை அழகு. பிரம்மாண்டம்.
கிராமத்து திருவிழா போல எங்கெங்கு பார்த்தாலும் கடைகள், தின்பண்டங்கள், குழந்தைகள் விளயாட்டு சாமான்கள், மோர்பந்தல், நீர்பந்தல், அன்னதானம் இப்படி மயிலையே குலுங்கும்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவை கண்டுரசிக்க மட்டும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரளுவார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
இது போன்ற விழாக்களுக்கு உங்கள் பிள்ளைகளை அவசியம் அழைத்துச் செல்லவேண்டும். (குழந்தைகளை, விலை உயர்ந்த நகைகளை தவிர்க்கவும். கட்டுகடங்காத கூட்டத்தில் கொஞ்சம் ரிஸ்க்.) மற்றபடி, உங்கள் மனைவி மக்களோடு அவசியம் காண வேண்டிய ஒரு திருவிழா இது.
பள்ளிக்கல்வி போதிக்காத நமது பாரம்பரிய பெருமையை சைவ சமயத்தின் அருமையை உண்மையை வளரும் தலைமுறையினருக்கு நினைவு கூரவும், வீட்டுக்குள்ளேயே சதாசர்வ காலமும் அடைந்து கிடக்கும் மக்களை வெளிக்கொணரவுமே இத்தகைய விழாக்கள் நடத்தப்படுகின்றன.
இது போன்ற விழாக்களில் மோர்பந்தல் அமைப்பது, அன்னதானம் செய்வது, விழாகுழுவினருக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவுவது, அவர்களுக்கு அன்னம் பாலிப்பது போன்றவை புண்ணியத்திலும் பெரும் புண்ணியம்.
இந்தாண்டு மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா கடந்த 25ம் தேதி, கிராம தேவதை பூஜை கோலவிழியம்மன் சிறப்பு வழிபாடுடன் தொடங்கியது. தொடர்ந்து 26ம் தேதி கொடியேற்றமும், 27ம் தேதி சூரிய வட்டம், சந்திரவட்டமும், 28ம் தேதி அதிகார நந்தி காட்சியளித்தலும், 29ம் தேதி புருஷாமிருகம், சிங்கம், புலி வாகனமும், 30ம் தேதி சவுடல் விமானமும், 31ம் தேதி பல்லக்கு விழா மற்றும் ஒவ்வொரு நாளும் ஐந்திருமேனிகள் திருவீதி உலா நடந்தது.
பங்குனி திருவிழாவின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் 63 நாயன்மார்கள் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இதற்காக பகல் 2½ மணிக்கு 63 நாயன்மார்கள் சிலைகள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஏற்றப்பட்டு கோவிலில் இருந்து கோபுர வாசலில் உள்ள 16 கால் மண்டபத்தில் தீபாராதனை நடந்தது.
அறுபத்து மூவர் திருவீதியுலா மேள தாளம் முழங்க, மங்கல இசை ஒலிக்க, வேத மந்திரங்கள் ஓத ஆரவாரத்தோடு புறப்பட்டது. முன்னதாக விநாயகர் செல்ல, கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான் அடுத்து வர தொடர்ந்து இதர தெய்வங்கள் வலம் வந்தன. சமயக்குரவர்கள் பல்லக்கும், அதையடுத்து ஒரு பல்லக்கில் 4 நாயன்மார்கள் என்ற கணக்கில் நாயன்மார்களும் அணிவகுத்து மாட வீதிகளில் வந்தனர்.
நாயன்மார்கள் பல்லக்குக்கு முன்பாக மயிலாப்பூர் காவல் தெய்வம் கோலவிழி அம்மன், விநாயகர், கபாலீசுவரர், கற்பகாம்பாள், வள்ளி தெய்வானை சமேத முருகபெருமான், சண்டிகேசுவரர் மற்றும் முண்டககண்ணியம்மன், அங்காளபரமேஸ்வரி, வீரபத்திரர் சுவாமிகள் தனி தனி பல்லக்கில் எழுந்தருளினர். பல்லக்குகள் கிழக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, ஆர்.கே.மடம் சாலை, வடக்கு மாடவீதி வழியாக கோவிலை மீண்டும் வந்து அடைந்தது. மாடவீதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடிநின்று சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளுவரும் ஒரு நாயன்மாரே!
இந்த விழாவில் அறுபத்து மூவருடன் திருவள்ளுவரும் தம்பதி சமேதராக எழுந்தருளி உலா வருவது சிறப்புத் தகவல். காணக் கிடைக்காத காட்சி.
உலகப் பொதுமறை என்றழைக்கப்படும் வாழ்வியல் வேதமாம் திருக்குறளை இயற்றி நம் வள்ளுவருக்கு இதைவிட ஒரு சிறப்பு கிடைக்குமா?
திருவள்ளுவரும் ஒரு நாயன்மாரே என்பது இதன் மூலம் புலப்படுமே….!
அறுபத்து மூவர் வீதி உலா நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது பெண்கள் பலர் கோவிலை சுற்றி உள்ள மாடவீதிகளில் மண்பானையில் சர்க்கரைப் பொங்கல்வைத்து, சாமிக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கினர்.
இவ்வாறு செய்வதன் மூலம் தீராத நோய்களும் குணமடையும் என்பது நம்பிக்கையாகும். அத்துடன் வாழ்வில் மேன்மை உண்டாகும் என்பதற்காக தெருக்களில் பக்தர்கள் பந்தல்கள் அமைத்தும், வீட்டு முற்றங்களிலும் அமர்ந்து தாகம் தீர்க்க நீர்மோர், குளிர்பானங்கள் மற்றும் அன்னதானமும் வழங்கினர்.
முன்னதாக காலை 8½ மணிக்கு திருஞானசம்பந்தர் சுவாமிகள் எழுந்தருளல் நிகழ்ச்சியும், பகல் 12 மணிக்கு அங்கம் பூம்பாவையாக்கி அருளுதல் நிகழ்ச்சியும் நடந்தது.
நிகழ்ச்சியில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர். அறுபத்து மூவர் விழாவை முன்னிட்டு மயிலாப்பூர் களைகட்டியிருந்தது. மாட வீதிகள், அறுபத்து மூவர் பல்லக்குகள், இறைவனின் பல்லக்குகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவை முன்னிட்டு தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தார், தொழிற்சங்கத்தினர், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மக்கள் கூடும் இடங்களில் சிறப்பு பந்தல்களை அமைத்து அன்னதானம், நீர் மோர், பானகம், இனிப்புகள், ரோஸ் மில்க், சாக்லேட் போன்ற பொருட்களை வழங்கினர். மேலும், அறுபத்து மூவர் விழாவையொட்டி, மயிலாப்பூரில் நேற்று மதியத்துக்கு மேல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.
திருவிழாவில் கலந்து கொள்ள வந்த பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. சாம்பார் சாதம், தயிர் சாதம், புளி சாதம், லெமன் சாதம், சர்க்கரை பொங்கல், கீரை சாதம், கருவேப்பிலை சாதம், கொத்தமல்லி சாதம், புதினா சாதம், தேங்காய் சாதம், பால் சாதம், ஜவ்வரிசி பாயாசம், பருப்பு பாயாசம், சுண்டல் மற்றும் பல்வேறு பயிறு வகைகள், தர்பூசணி, மோர், ரஸ்னா, இளநீர், கிர்ணிப்பழ ஜூஸ், பாதாம் ஜூஸ், கிரேப் ஜூஸ், ஆரஞ்ச் ஜூஸ், லெமன் ஜூஸ், சர்பத், பலாப்பழம், வெள்ளரிக்காய், கேப்பை கூழ், வாட்டர் பாக்கெட், லட்டு, ஜாங்கிரி, சம்சா, வடை, தோசை உள்ளிட்ட 88 வகையான பொருட்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
கபாலீஸ்வரர் கோவில் நிர்வாகத் தரப்பிலும் போலீசாரும் இனைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர். அப்படியிருந்தும் ஆங்காங்கே செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. இருப்பினும் அசம்பாவிதம் எதுவும் இன்றி விழா இனிதே நிறைவுற்றது.
(செய்தி + புள்ளிவிபர உதவி : தினத்தந்தி, தினமலர், தினகரன்)
=====================================================================
* இதுவரை ஒருமுறையேனும் மயிலையில் அறுபத்து மூவர் விழாவை நேரில் பார்த்து ரசித்த வாசகர்கள் எவரேனும் உண்டா? இருந்தால் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.
=====================================================================
Help us in our mission!
Rightmantra.com is a website that focusing on Spirituality, Self-development and True values. Give us your hand. Help us to serve you better.
Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us. Also ask your near and dear ones to join in our mission. Little Drops of Water Make the Mighty Ocean.
நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?
=====================================================================
Also check last year 63 Moovar festival
மயிலையை அதிரவைத்த அறுபத்து மூவர் திருவிழா – ஒரு புகைப்பட தொகுப்பு!
மகா அனுஷத்தன்று ஒரு மகானுபவம் !
மனதில் ஏற்பட்ட திடீர் குழப்பம் – கற்பகாம்பாளுடன் தோன்றி விடை சொன்ன கபாலீஸ்வரர்!
சுடரொளி பரந்தன சூழ்திசை எல்லாம் – மாசிமக தீர்த்தவாரி 2015 @ சென்னை மெரீனா!
குன்றத்தூர் சேக்கிழார் விழா – ஒரு நேரடி வர்ணனை!
தண்டியடிகளுக்கு தியாகராஜர் காட்சி கொடுத்த இடம் – ஒரு நேரடி ரிப்போர்ட்!
பதிகங்கள் புரியாத அதிசயம் உண்டா?
நாள் கிழமை விஷேடங்களின் போது ஏன் அவசியம் ஆலயத்திற்கு செல்லவேண்டும்?
கேட்காமலே அள்ளிக் கொடுப்பவனிடம் கேட்க என்ன இருக்கிறது?
=====================================================================
[END]
போட்டோ coverage மிக அருமை. நாங்கள் நேரில்சென்று விழாவை பார்த்த உணர்வு ஏற்படுகிறது. நேரில் சென்று இருந்தால் கூட இப்படி ரசித்து இருக்க முடியாது, நம் வாசகர்களுக்காக மெனக்கட்டு போட்டோ எடுத்து பதிவாக அளித்ததற்கு மிக்க மகிழ்ச்சி. கோவில் கோபுரம் ஜொலிப்பது அற்புதமாக உள்ளது . இந்த பதிவின் மூலம் எங்களை விழா நடந்த இடத்திற்கு அழைத்து சென்று விட்டீர்கள் .. வாழ்க உங்கள் சேவை
“செய்யும் தொழிலே தெய்வம் … அதன் திறமை தான் நமது செல்வம்” என்று சொல்லத் தோன்றுகிறது.
நன்றிகள் பல
உமா வெங்கட்
வணக்கம் சுந்தர். எதை பாராட்டுவது . அழகான அலங்காரங்களைய அல்லது உங்கள் புகைபடதிறமையா. வாழ்த்துகள். என்ன பாராட்டினாலும் இந்த உழைப்புக்கு தகாது. இந்த கூட்டத்தில் எப்படி படம் எடுதிர்களோ . மீண்டும் ஒரு முறை நன்றி.
சுந்தர் அண்ணா ..
இரு நாள்களுக்கு முன் இந்த விழாவை பற்றி கேள்விபட்டேன்.யான் செய்த பாக்கியம் நம் தலத்தில் இந்த பதிவு.
வண்ணபடங்கள் அனைத்தும் அருமை. நேரில் கண்டு கழித்த மகிழ்ச்சி.
சுருங்க கூறின் காண கண் கோடி வேண்டும்.தங்களின் பதிவின் மூலம் தான் காண முடிகிறது.
தென்னாடுடைய சிவனே போற்றி.
மிக்க நன்றி அண்ணா..
டியர் சுந்தர்ஜி
கயிலையே மயிலை,இந்த நாளில் உண்மை என தோன்றும்
அறுபத்து மூவர் விழாவை ஈரோட்டிலிருந்தே தரிசனம் செய்ய வைத்துவிட்டீர்கள். மிக்க நன்றி!. இவ்விழாவில் வாசுகி அம்மையாரும் வள்ளுவப்பெருந்தகையும் திருவீதி வலம் வந்துள்ளனர் என்பது நான் அறியாத புதிய செய்தி. ஒவ்வொரு பதிவிலும் பல தகவல்களை அறியத் தருகின்றீர்கள். நன்றி என்ற ஒரு வார்த்தை மட்டுமே என்னால் தர முடிகின்றது. மீண்டும் நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
சென்னையில் இப்படி ஒரு விழாவா. பிரமிப்பாக உள்ளது.நாளிதழ்களில் படிக்கும்போது இவ்வளவு விமரிசையாக இருக்கும் என்று சிறிதளவும் எதிர்பார்க்கவில்லை. தங்கள் பதிவும் படங்களும் ஏற்படுத்திய தாக்கம் விவரிக்க இயலவில்லை.
இவ்விழாவினை live ஆக கண்ணெதிரில் நிறுத்தி விட்டீர்கள். நேரில் பார்த்திருந்தால் கூட பலவற்றை தவற விட்டிருப்போம்.
முதல் படமே சூப்பர். ஏனய படங்களும் ஒன்றை ஒன்று மிஞ்சும் வண்ணம் உள்ளன. ஜொலிக்கும் கோயில் திருக்குளம் மனதை ஈர்க்கிறது.
வெறும் ஆன்மிக கட்டுரையாக இல்லாமல், படிப்போருக்கு பரவசம் ஏற்படுத்தும் உயிரோட்டம் மிக்க பதிவாக, இப்பதிவு அமைந்தது ஆசிரியரின் திறமைக்கு மற்றுமோர் மைல்கல்
எல்லாம் சரிங்க சார், ஒவ்வொரு முறை விழா நடந்து முடிந்ததும் சாலையோரம் குப்பை மலைகளாக கிடக்கும். மக்களுக்கு அடிப்படை நெறிகள் கூட யாரும் போதிப்பதர்கில்லையே என வேதனையாக இருக்கிறது. பூனைக்கு யார் மணி கட்டுவது? ஒரு கட்டுக் கோப்பான சமுதாயம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். மேல தாங்கள் பதிந்துள்ள போடோக்கள் விழா நடக்கும் சமையத்தில் எடுத்தது, அதற்குப் பிறகு உள்ள நிலையை யாருக்கு தெரியும் அந்த கபாலீசுவரருக்கும், கற்பகாம்பாளுக்கே வெளிச்சம். எத்தனைதான் அரசு இயந்திரங்களை நம்பி இருப்பது? பாவம் அவர்களும் என்ன செய்ய முடியும். கேட்பதற்கு சற்று வருத்தமாக இருந்தாலும், நம் மக்கள் (மன்னிக்கவும்) இலவசங்களைப் பெற்றுக்கொண்டு பொறுப்பில்லாமல் இருக்கிறார்கள் (மிகவும் வருத்ததிற்குரியது). எல்லா தொண்டு செய்பவர்களும் பக்தர்களுக்கு உணவு வகைகளை வழங்குவது நன்றாக இருக்கிறது. இதில் சிவ (ல) தொண்டு செய்பவர்கள் இதனை நெறிப் படுத்தினால் நன்றாக இருக்கும். ஓம் நம சிவாய!!
தேவை தனி மனிதன் ஒழுக்கம் மற்றும்
திடக்கழிவுகளை dispose செய்வது சமந்தமான அரசின் தெளிவான சட்டங்களுமே.
இவைகள் ஏற்படாத வரையில், யாராலும் இத்தகைய பிரச்சனைகளை தீர்க்கமுடியாது
அறுபத்து மூவர் உலாவை தரிசித்து மகிழ வேண்டும் என்ற எங்களது நீண்ட நாள் அவா தற்போது நிறைவேறி விட்டதாக உணர்கிறோம்…………
வாழ்க வளமுடன்
63 நாயன்மார்கள் விழா புகைப்படம் அருமை , 64 வது நாயன்மாரக வாரியார் சுவாமிகளை சொன்னாலும் அதற்கான அங்கீகாரம் இன்னும் முறையாக கிடைக்கவில்லை , உரியர்வர்கள் கவனிக்க வேண்டும். எங்களுக்கு நல்ல புகைப்பட வேட்டை,
சுந்தர் சாருக்கு 88 வகையான பட்சன வேட்டை , சொல்லி இருந்தால் வந்திறுகலாம்.
நன்றி
சுந்தர்ஜி
மதுரை சித்திரை திருவிழா போல் உள்ளது. ஆனால் 63 நாயன்மார்களின் அணிவகுப்பு மிகவும் காண கண் கோடி வேண்டும்.
புகைபடங்கள் மூலம் நங்கள் பார்த்து ரசித்தோம்.வள்ளுவ பொரும்தகை சமேத வாசுகி நாங்கள் இதுவரை பார்த்ததில்லை. மேலும் உங்களின் தனி பாணி தெரிகிறது.
நன்றி.
தங்களின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.
தாங்கள் நீடுடி வாழ கபாலி திருவடி வேண்டுவோம்.
நன்றிபல.
கே. சிவசுப்ரமணியன்