Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, November 8, 2024
Please specify the group
Home > Featured > நந்தம்பாக்கம் கோதண்டராமர் கோவில் பரமபத வாசல் திறப்பு – ஒரு நேரடி கவரேஜ்!

நந்தம்பாக்கம் கோதண்டராமர் கோவில் பரமபத வாசல் திறப்பு – ஒரு நேரடி கவரேஜ்!

print
பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் திருக்கோவில், மற்றும் பிருந்தாரண்ய க்ஷேத்ரம் என்று வழங்கப்படும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் உள்ளிட்ட பல வைணவ திருத்தலங்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதி்காலை 4.30 மணியளவில் பரமபதவாசல் என்றழைக்கப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

DSC06698 copy

DSC06699சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும், நாம் நந்தம்பாக்கத்தில் எழுந்தருளியிருக்கும் கோதண்டராமர் திருக்கோவிலில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பில் பங்குகொண்டு சொர்க்கவாசல் புகும் பாக்கியம் பெற்றோம்.

DSC06663

பரமபாதவாசல் திறப்பை அருகே இருந்து தரிசிக்க காத்திருக்கும் பக்தர்கள்
பரமபாதவாசல் திறப்பை அருகே இருந்து தரிசிக்க காத்திருக்கும் பக்தர்கள்

நந்தம்பாக்கம் கோவில் அடிப்படையில் ராமர் கோவில் என்றாலும், இங்கு பிரதான தெய்வமாக அருள்பாலிப்பது ஸ்ரீனிவாசப் பெருமாளே.

இங்கு மார்கழி பிறந்தது முதல் பகல்பத்து ராப்பத்து விழா நடைபெற்று வந்தது. இந்நிலையி்ல் இந்த விழாவி்ன முத்தாய்ப்பாக பரமபதவாசல் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

DSC06668

மார்கழியில் காலை 5.30 க்கு நடைபெறும் விஸ்வரூப தரிசன சேவை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை 4.30 மணிக்கே நடைபெற்றது.

DSC06667

முன்னதாக கோ-பூஜை நடைபெற்றது. ஆலயத்தில் பரமாரிக்கப்பட்டு வரும் கோ-மாதா எனும் லக்ஷ்மி தாயார் பெருமாளுக்கு முன்னே நிறுத்தப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க அர்ச்சனை செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. லக்ஷ்மி தாயார் பார்த்திருக்க சுவாமி சன்னதி திறக்கப்பட்டது. சன்னதி திறக்கப்பட்டதும் திருமலையை ஒட்டிய அலங்காரத்துடன் காணப்பட்ட ஸ்ரீனிவாசப் பெருமாளை கண்டதும் பக்தர்கள் “கோவிந்தா… கோவிந்தா” என்று குரல் எழுப்பினார்கள். எம்பெருமான் எழுந்தருளி தன்னை காண வந்திருந்த பக்தர்களை பார்வையிட்டார். (இறைவன் நம்மை பார்ப்பது தானே விஸ்வரூப தரிசனம்!)

DSC06669

DSC06672பின்னர் 5.15 மணியளவில், நாதஸ்வர மேள தாளங்கள் முழங்க மூலஸ்தானத்தி்ல இருந்து புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி திருக்கண்ணாடி மண்டபம் எழுந்தருளி  அங்கு பூஜைகள் நடைபெற்றது.  பின்னர் பக்தர்கள் பல்லக்கை சுமக்க சுவாமி பிரகாரத்தை வலம் வந்து, பரமபத வாசலின் முன்னே அமர்த்தப்பட்டார். தொடர்ந்து சுவாமிக்கும் பரமபத வாசலுக்கும் விசேஷ பூஜைகள் நடைபெற்றது.

DSC06674

DSC06676முன்னதாக சுவாமியை நம்மாழ்வாரின் சன்னதி முன்னர் எழுந்தருளச் செய்து, அங்கு சேவை சாதிக்கப்பட்டது.

DSC06680

பூஜை நிறைவடைந்து ஆரத்தி காண்பிக்கப்பட்டபோது, பக்தர்கள் உணர்ச்சிப் பெருக்கில் ‘கோவிந்தா, கோவிந்தா’ என்ற ஜென்மம் கடைத்தேற்றும் நாமத்தை விண்ணதிர முழக்கமிட்டனர்.

DSC06683

 அரங்கன் பரமபத வாசல் கடக்கும் அரிய காட்சி !

அரங்கன் பரமபத வாசல் கடக்கும் அரிய காட்சி !

இதை தொடர்ந்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் சொர்க்க வாசல் கோதண்டராமர் கோவிலின் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது பக்தர்களின் கோவிந்த நாம கோஷத்துடன் புஷ்பா பல்லகில் பரமபத வாசலை கடந்தார்.

DSC06689

நம்முடன் நண்பர் மாரீஸ் கண்ணனும், வாசகர் ஹரீஷ் மற்றும் அவரது தாயார் உமா அவர்களும் வந்திருந்தனர்.

DSC06700

DSC06705

சொர்க்கவாசலில் அரங்கன் புகும்போது, உங்கள் அனைவருக்காகவும் நாம் வெளியே நின்று அந்த காட்சியை புகைப்படமெடுத்தபடியால் சென்ற ஆண்டு நாம் ஆற்றிய ‘தோளுக்கினியான் சேவை’ எனப்படும் அரங்கனை சுமந்துகொண்டு அவனுடன் சொர்க்கவாசல் புகும் வாய்ப்பை இழந்தோம்! (புகைப்படம் எடுத்த பின்னர் எஞ்சியிருந்த பிற பக்தர்களுடன் சொர்க்கவாசல் கடந்தோம்!)

[END]

4 thoughts on “நந்தம்பாக்கம் கோதண்டராமர் கோவில் பரமபத வாசல் திறப்பு – ஒரு நேரடி கவரேஜ்!

  1. \\\\பக்தர்கள் உணர்ச்சிப் பெருக்கில் ‘கோவிந்தா, கோவிந்தா’ என்ற ஜென்மம் கடைத்தேற்றும் நாமத்தை விண்ணதிர முழக்கமிட்டனர்.\\\

    ‘கோவிந்தா, கோவிந்தா’ ‘கோவிந்தா, கோவிந்தா’ …

    சொர்க்கவாசல் திறப்பு விழா நேரில் கண்ட திருப்தி கிடைத்தது .

    நன்றி ஜி .

    -மனோகர்

  2. அன்பு சகோதரா
    நம் மண்ணை விட்டு விலகி இருக்கும் எங்களைப் போன்ற துர்பாக்கியசாலிகள் பலருக்கும் உங்களது இந்த பதிவு மிகுந்த மகிழ்ச்சியை திருப்தியையும் அளிக்கிறது….உங்கள் தொண்டுள்ளமும் உங்கள் செயல்களின் நேர்த்தியும் சிலிர்க்க வைக்கிறது…மிக்க நன்றி சகோதரா….உங்கள் செயற்கரிய சேவின் தொடரட்டும்…வாழ்க வளமுடன்… _/|\_

  3. டியர் சுந்தர்ஜி

    நேற்றைய ஆலய தரிசனம் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இது வரை சொர்க்க வாசல் திறப்பதை வைகுண்ட ஏகாதசி அன்று கோவிலில் சென்று பார்த்ததில்லை. எனக்கும் ஹரிஷ் க்கும் புது அனுபவம். உங்கள் நேரடி coverage அருமை. உங்களால் இன்று பெருமாள் கோயில் தர்சன் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.

    நன்றி
    உமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *