விழா நாட்களில் தினசரி காலை 8.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் திருமுறைத் தலங்களின் திருமுறை இசையும், திருமுறை சிறப்புச் சொற்பொழிவரங்கமும் மாகேஸ்வர பூஜைகளும், தேவாரப் பண்ணிசை பயிற்சி அரங்கமும் திருமுறை இசை அரங்கமும் இடம் பெற்றுள்ளன. இந்த விழாவில் தலைசிறந்த ஓதுவார் பெருமக்களும், இசை வல்லுனர்களும், கலைஞர்களும், சமயச் சொற்பொழிவாளர்களும் பங்கேற்று கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். திருமுறைக்கு அருந்தொண்டாற்றியவர்களுக்கு பட்டமளித்து பொற்கழியும் வழங்கப்படுகிறது. மார்ச் 20ம் தேதி தெய்வச் சேக்கிழார் திருநாளாகக் கொண்டாடப்பட்டு நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகின்றது. விழாவில் அயல் நாட்டிலிருந்தும் அன்பர்கள் கலந்து கொள்கின்றனர்.
மேலும் தகவல்கள் பெறவும், ஆண்டுதோறும் இந்த திருமுறை இசைவிழா சிறப்பாக நடைபெற உதவி செய்ய விரும்புவர்களும் அரனருள் ஸ்தாபகர் ஓதுவாமூர்த்தி சாமி.தண்டபாணியை தொலைபேசி: 9444156335 ஐ தொடர்பு கொள்ளலாம்.
12 நாட்களின் நிகழ்ச்சி விபரங்களும் இங்கே அளிக்கப்பட்டுள்ளது.
சான்றோர்கள் பெரியோர்கள் பங்கேற்பு !
இந்த 12 நாள் நிகழ்சிகளில் திரு.கி.சிவக்குமார், திரு.ஹரிகேசனல்லூர் வெங்கட்ராமன், திரு.இலங்கை ஜெயராஜ், டாக்டர்.எஸ். முத்துக்குமரன், திரு.தேவகோட்டை எஸ்.ராமநாதன், திரு.சொ.சொ.மீ.சுந்தரம், புலவர் பனசை அருணா, திருமதி.விமலா சுப்பிரமணியன், உள்ளிட்ட எண்ணற்ற பல சான்றோர்கள் பெரியோர்கள் பங்கேற்று சிறப்பிக்கவிருக்கிறார்கள். (விபரங்களை தனித் தனி பக்கங்களில் காணலாம்).
சென்னையில் மாதாந்திர பன்னிரு திருமுறை முற்றோதல்
இதுதவிர ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையன்று தருமை ஆதீனம், எண் 158, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை-600 017 என்கிற முகவரியில், காலை 9.30 முதல் மதியம் 1.30 வரை மாதாந்திர பன்னிரு திருமுறை முற்றோதல் பெருவிழா நடைபெறுகிறது. விழா நிறைவில் அன்னதானமும் உண்டு. விரும்பும் அன்பர்கள் பங்கேற்று, மனமுவந்து நிதியளித்து மகேஸ்வரனின் அருளை பெரவேண்டுகிறோம். (இது பற்றிய விபரம், இறுதியில் தரப்பட்டுள்ளது.)
இதை உங்கள் சுற்றம் மற்றும் நட்பு வட்டங்களிடம் பகிர்ந்துகொண்டு, அரனருள் பெறுங்கள்.
====================================================================
காங்கேயநல்லூர் பயணம்!
* எல்லாம் வல்ல முருகப் பெருமான் அருளால் வேலூர் அருகே உள்ள காங்கேயநல்லூரில் வாரியார் சுவாமிகளின் அதிஷ்டானத்தில் நடைபெறவிருக்கும் இலட்சத் தீப திருவிழாவுக்கு நாளை செல்லவிருக்கிறோம்.
* முருகப் பெருமான் அருளால் நாளை காலை புறப்பட்டு காங்கேயநல்லூர் சென்று சுவாமிகளின் அதிஷ்டானத்திலும் காங்கேயநல்லூர் முருகன் கோவிலிலும் விடிய விடிய நடைபெறும் பல்வேறு நிகழ்சிகள், சொற்பொழிவுகள், திருப்புகழ் இசை விருந்து, வள்ளி லோச்சனாவின் பாடல் நிகழ்ச்சி, மற்றும் சுவாமி புறப்பாடு, திருவீதி உலா, வான வேடிக்கை ஆகியவற்றை தரிசித்துவிட்டு வியாழன் மாலை தான் சென்னை திரும்புவோம். ஒன்றிரண்டு பதிவுகள் தயாராக உள்ளன. அவற்றை மடிக்கணினி கொண்டு சென்று இடையிடையே அளிக்கிறோம்.
* மேற்படி இலட்ச தீப வைபவத்தின் கவரேஜ் நம் தளத்தில் விரைவில் முழு புகைப்படங்களுடன் அளிக்கப்படும்.
====================================================================
பன்னிரு திருமுறை இசைவிழா – 12 தினங்களுக்குரிய நிகழ்ச்சி நிரல்
Main Page
Day 1 Morning
Day 1 Noon
Day 2
Day 3
Day 4
Day 5
Day 6
Day 7
Day 8
Day 9
Day 10
Day 11
Day 12
Function Info A
Function Info B
Function Info C
====================================================================
Also check related articles….
காங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்!
காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!
‘பாதத்தால் சுழலும் மாந்தர்கள் தொல்வினை’ – பன்னிரு திருமுறை இசைவிழாவில் ஒரு அரிய செய்தி!
நான்கு யுகங்களில் சிறந்தது எது? ஏன்? MUST READ!
இறைவனையே குருவாக பெற்ற மாணிக்கவாசகர் தன்னை நாயேன் என்று கூறிக்கொண்டது ஏன் ?
கடவுள் என்ற ஒருவர் இருந்தால் ஏன் இத்தனை துன்பங்கள்?
====================================================================
[END]
பன்னிரு திருமுறை விழாவை பற்றிய பதிவு அருமை. நாங்கள் நேரம் கிடைக்கும் பொழுது இந்த அறிய நிகழ்ச்சியில் பங்கு கொண்டு தேவார இன்னிசைத் தேன் பருகுவோம்.
மிகவும் அறிய எல்லோருக்கும் பயன் படக் கூடிய அழகிய பதிவு. 12 தினங்களுக்குரிய நிகழ்ச்சி நிரலும் அருமையோ அருமை
சென்னையில் இந்த மாதிரி அறிய பல சான்றோர்கள் சங்கமிக்கும் விழா வைக் காண கண் கோடி வேண்டும்
தங்கள் காங்கேய நல்லூர் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் குழந்தைகள் வள்ளி , லோச்சனாவிர்க்கும் எனது உளம் கனிந்த பாராட்டுக்கள்
நன்றி
உமா வெங்கட்
தங்களின் காங்கேய நல்லூர் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
பன்னிரு திருமுறை இசைவிழா விபரம் மிக சிறப்பாக கொடுத்து உள்ளீர்கள். சென்னை வாசியாக இல்லையே என்ற ஏக்கம் மனதை வாட்டுகிறது
வணக்கம் சுந்தர். கோவையில் இது போன்ற ஒரு நிகழ்ச்சி நடந்தால் தயவு செய்து தெரியப்படுத்தவும்.
மிக்க நன்றி.
வாழ்க வளமுடன்
சுந்தர் ஐயா இந்த பத்திரிகை எவ்வர்று கிடைத்தது என்று சொல்லவில்லை
நன்றி
எல்லாம் அந்த சீதாராமனுக்கே வெளிச்சம்.