Home > UNSUNG HEROES

விழியில்லையானால் என்ன… இதோ இருக்கிறது வாழும் வழி! – UNSUNG HEROES 4

நம் கண்களை சற்று நன்றாக திறந்து நம்மை சுற்றி ஒரு முறை பார்த்தால் தெரியும்... நாம் எத்தனை பாக்கியசாலிகள் என்று! நம்மை சுற்றிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் நமது கடைக்கண் பார்வையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். நாம் செய்யும் ஒவ்வொரு சிறு சிறு உதவி கூட அவர்களை பொருத்தவரை மிகப் பெரிய ஆறுதல். ஒரு மிகப் பெரிய வித்தியாசத்தை அவர்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தும் என்றால் மிகையாகாது. இரண்டு வயதாக இருக்கும்

Read More

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி! – UNSUNG HEROES 3

நம் தளத்தில் நாம் அளித்து வரும் UNSUNG HEROES தொடரின் மூன்றாவது அத்தியாயம் இது. நம்மை சுற்றியுள்ள நிஜ ஹீரோக்களை அடையாளம் கண்டு அவர்களது சேவைகளை வெளிக்கொணர்ந்து அதன் மூலம் மற்றவர்களுக்கு உத்வேகம் அளிப்பதே இந்த தொடரின் நோக்கம். கிராமப்புற மறுமலர்ச்சி இன்றி ஒரு நாடு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கமுடியாது. என்றைக்கு நம் நாட்டில் கிராமங்கள் அனைத்தும் அடிப்படை வசதிகளில் தன்னிறைவு பெறுகிறதோ அன்றைக்கே நாம் 'முன்னேறிய நாடு' என்று

Read More

மாணவர்கள் மத்தியில் அறிவியில் ஆர்வத்தை தூண்டும் ஒரு அரும்பணி – UNSUNG HEROES 2

நமது UNSUNG HEROES தொடரின் இரண்டாவது அத்தியாயம் இது. இந்த அத்தியாயத்தின் ஹீரோ செய்து வரும் சேவையை பற்றி கேள்விப்பட்டால், இப்படியெல்லாம் கூட சேவை செய்ய முடியுமா???? எத்தனை பெரிய விஷயம்... எவ்வளவு முக்கியமான விஷயம்... என்கிற வியப்பு தான் மேலிடுகிறது. ஏதோ நாமே முன்னின்று செய்வதை போன்று சந்தோஷம் ஏற்படுகிறது. நாம் ஏற்கனவே ஒரு பிரார்த்தனை பதிவில் கூறியபடி, நம் நாட்டில் பல பள்ளிகளில் அறிவியல் ஆய்வுக்கூடங்களே இல்லை. ஆய்வுக்கூடங்கள்

Read More

“எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே…!” – UNSUNG HEROES 1

உங்களுக்கு தெரிந்த சில புண்ணிய காரியங்கள் சிலவற்றை பட்டியலிடுங்களேன் என்று யாரிடமாவது சொன்னால் பெரும்பாலானோர் உடனே சொல்வது ஏழைகளுக்கு அன்னதானம், ஊனமுற்றோருக்கு உதவுவது, பசுவிற்கு உணவளிப்பது, கோ சம்ரோக்ஷனம், ஏழை பெண்களின் திருமணத்திற்கு உதவுவது, இரத்த தானம், ஏழைகளின் கல்விக்கு உதவுவது, கோவில் திருப்பணிகளுக்கு உதவுவது, அனாதை பிணங்களை எரியூட்ட உதவுவது etc.etc.etc. சரி தானே? அதிக பட்சம் இதை தான் அனைவரும் தெரிந்து வைத்துள்ளனர். அவரவர் பக்குவம் மற்றும்

Read More

உழைத்து வாழ வேண்டும்; பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே!

கடந்த அக்டோபர் மாதம் நவராத்திரியை முன்னிட்டு வாரியாரின் வாரிசுகள் செல்வி.வள்ளி & லோச்சனா அவர்களின் இசை நிகழ்ச்சியை மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நாம் ஏற்பாடு செய்திருந்தது நினைவிருக்கலாம். அந்நிகழ்ச்சிக்கு பக்கவாத்தியமாக வயலின் இசைக்க வந்திருந்தவர் மணலியை சேர்ந்த திரு.குமார் என்பவர். அபாரமாக வயலின் வாசித்த திரு.குமார் (வயது 26) அவர்கள் பார்வையற்றவர் என்பதை அறிந்தபோது ஒரு பக்கம் நெகிழ்ச்சி மறுபக்கம் வியப்பு. அந்நிகழ்ச்சியின் முடிவில் அவருக்கு சன்மானம் அளித்து

Read More

இது கடிதமல்ல… கடவுளின் குரல்!

சென்ற டிசம்பர் மாதம் மத்தியில் நடைபெற்ற நமது ரைட்மந்த்ரா விருதுகள் மற்றும் பாரதி விழாவில் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் மூன்றாமாண்டு வரலாறு படித்து வரும் அழகு ரேகா என்கிற பார்வையற்ற மாணவியின் கல்வி + மேல்படிப்பு செலவுக்கு ரூ.15,000/- வழங்கியது நினைவிருக்கலாம். அழகு ரேகா எந்த அடிப்படையில் இந்த உதவித் தொகைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று உங்களுக்கு தெரியும். இருப்பினும் புதிய வாசகர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக மீண்டும் சொல்கிறோம். ஏழ்மை நிலையில் உள்ள

Read More

அன்பு மிகுந்த தெய்வமுண்டு துன்பம் அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!

நமது தளத்தின் சமீபத்திய விழாவில் நடைபெற்ற நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவங்களுள் ஒன்றை உங்களிடையே பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறோம். பாரதி தனது பாடல்கள் பலவற்றில் வலியுறுத்திய விஷயம் ஏழையின் கல்வி மற்றும் பசித்த வயிற்றுக்கு உணவு. அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், அன்ன யாவினும் புண்ணியம் கோடி, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல். ஏழையின் கல்விக்கு உதவுவதை விட மகத்துவமான விஷயம் வேறேதும் இருக்க முடியாது என்பது அவன் தீர்ப்பு. எனவே தான் ஒவ்வொரு ஆண்டும் பாரதி

Read More

‘கலைவாணி’ என்னும் கறுப்பு வைரம்!!

சமீபத்தில் நம் வாசக நண்பர் கண்ணன் என்பவர் நமக்கு ஆங்கிலத்தில் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். படிக்கும்போதே நம்மையுமறியாமல் கண்கள் கலங்கிவிட்டது. அவசியம் இதை உங்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று கருதி இங்கு மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறோம். இது இணையத்தில் ஏற்கனவே ஒரு சில தளங்களில் வெளியாகியுள்ளது. ஆனால் ஆங்கிலத்தில் தான் வெளியாகியுள்ளது. முதன் முறையாக தமிழில் வெளியாவது நம் தளத்தில் தான். இது போன்ற ஆத்மானுபவங்களை நம் தமிழ் மொழியில் படிப்பதைவிட இன்பம் வேறு இருக்கமுடியுமா என்ன?

Read More