நாம் ஏற்கனவே ஒரு பிரார்த்தனை பதிவில் கூறியபடி, நம் நாட்டில் பல பள்ளிகளில் அறிவியல் ஆய்வுக்கூடங்களே இல்லை. ஆய்வுக்கூடங்கள் இருக்கும் பள்ளிகளில் உபகரணங்கள் இல்லை. இரண்டும் இருக்கும் பள்ளிகளில் அவற்றை பராமரிக்க இட வசதி இல்லை. இவை அனைத்தும் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு அவை முறையாக சொல்லித் தரப்படுவதில்லை.
இந்நிலையில் பின்தங்கிய மற்றும் கிராமப்புற பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தி, அவர்களுக்கு அறிவியல் பாடம் குறித்த ஒரு நம்பிக்கையை அளித்து அவர்களுக்கு உள்ளே இருக்கும் திறமையை வெளிக்கொணர்ந்து, வட்ட, மாவட்ட, மாநில அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சிகளில் அவர்கள் தங்கள் கண்டுபிடிப்புக்களை காட்சிக்கு வைக்க அவர்களை ஊக்கப்படுத்தவேண்டி திரு.பசுபதி என்பவர் தனது PARIKSHAN TRUST சார்பாக நடத்தும் இலவச நடமாடும் (MOBILE SCIENCE LAB) அறிவியல் சோதனைக் கூடத்தில் KEY VOLUNTEER ஆக செயல்பட்டு வருகிறார் திரு.அறிவரசன்.
லெதர் டெக்னாலஜியில் பி.டெக் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஐ.டி. முடித்துவிட்டு பன்னாட்டு நிறுவனங்களில் இருந்து மிகப் பெரிய சம்பளத்துக்கு பணி அழைப்பு வந்த போதும் அவற்றையெல்லாம் உதறிவிட்டு, கிராமப்புற குழந்தைகளுக்கிடையே அறிவியில் ஆர்வத்தை ஏற்படுத்தும் இந்த உன்னத முயற்சிக்கு என்றே தன்னை அர்பணித்துள்ள அறிவரசனை எத்தனை பாராட்டினாலும் தகும்.
படித்த படிப்பை கொண்டு பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்க்க துடிக்கும் இன்றைய உலகில் இது எத்தனை பெரிய சேவை….!
இந்த நடமாடும் பரிசோதனைக் கூடத்தில் எளிமையான பலூன் பரிசோதனை முதல் மனித உடல் உறுப்புக்களின் தத்ரூப மாடல் வரை பல உள்ளன.
ஒவ்வொரு முறையும் இந்த நடமாடும் பரிசோதனைக் கூடம் ஏதாவது ஒரு பள்ளிக்கு சென்று திரும்பும்போது குறைந்த பட்சம் பத்து குட்டி விஞ்ஞானிகளையாவது உருவாக்கிவிட்டு தான் வெளியே வருகிறது.
எப்படி, எவ்வாறு இது சாத்தியப்பட்டது என்பதை பார்ப்போமா?
அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்துவதே இந்த இரதத்தின் பணி!
பள்ளி மாணவர்களுக்கான விடுமுறைகால அறிவியல் கேம்ப் ஒன்றிற்கு அறிவரசன் செல்ல நேர்ந்தபோது அங்கு ஒரு மாணவன் வெறும் ரூ.32/- செலவில், மேல்நிலை நீர்தொட்டியில் தண்ணீர் நிரம்பினால் தானாக அலாரம் எழுப்பக்கூடிய கருவி ஒன்றை வடிவமைத்து அதை DEMONSTRATE செய்து காண்பித்தான். அடுத்த வாரம் அறிவரசன் மீண்டும் செல்லும்போது கிட்டத்தட்ட 45 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் அந்த கருவியை தங்கள் வீடுகளில் பொருத்தியிருந்ததை கேள்விப்பட்டு மிகவும் சந்தோஷப்பட்டாராம்.
இது போன்ற சம்பவங்கள் அறிவரசனின் சிந்தனையில் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஏன்…நாமும் செலவு குறைவான அதே சமயம் அன்றாட வாழ்க்கைக்கு பயன்படக்கூடிய பல அறிவியில் கண்டுபிடிப்புக்களை தன்னுடைய விஞ்ஞான இரதத்தில் இடம்பெற செய்யக்கூடாது என்று கருதி அவற்றை இடம்பெற செய்தார். இன்று அவரின் விஞ்ஞான இரதத்தில் 550க்கும் மேற்பட்ட எளிய விஞ்ஞான பரிசோதனைகளை செய்ய முடியும்.
பள்ளி மாணவர்களிடையே குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள கிராமப்புற பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தி, அவர்களது விஞ்ஞான திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ‘பரிக்ஷன் அறக்கட்டளை’யை சேர்ந்த டாக்டர் திரு.பசுபதி என்பவரின் சிந்தனையில் உதித்தது தான் இந்த விஞ்ஞான இரதம்.
இந்த இரதத்தில் வினோத், தியாகராஜன், வெங்கடேஷ் ஆகிய மூன்று பொறியியல் பட்டதாரிகள் பின்தங்கிய மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு சென்று அங்கு மாணவர்களுக்கு புரியும் வண்ணம் அனைத்தையும் விளக்கி, அவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை தூண்டிவிடுவார்களாம். மாணவர்களை கவர POWERPOINT PRESENTATIONS மற்றும் வீடியோ காட்சிகளும் காட்டப்படுமாம்.
பரிக்ஷான் அறக்கட்டளையின் திட்ட இயக்குனர்களில் ஒருவரான திரு.அறிவரசன் இது வரை 600க்கும் மேற்ப்பட்ட பள்ளிகளுக்கு சென்றுள்ளார். 2 லட்சம் மாணவர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர்களக்கு அறிவியலின்பால் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளார்.
பரிசோதனைகளில் ஈடுபடும்போது பாதுகாப்பை வலியுறுத்தும் அறிவரசன் அதை உறுதி செய்து கொள்ளத் தவறுவதில்லை. மேலும் மாணவர்களுக்கிடையே நல்ல சிந்தனைகளையும் இந்த சந்தர்ப்பத்தில் அவர் தவறாமல் விதைக்கிறார். உதாரணத்திற்கு உரையாடல் குறித்த வீடியோ பயிற்சியின்போது வார்த்தைகளை இனிமையாக பேசுவது பற்றி கற்றுத் தருகிறார்.
உடலின் உள்ளுறுப்பக்களை பற்றி சொல்லிக்கொடுக்கும்போது புகை பிடிப்பதால் இந்த உறுப்புக்கள் எப்படி பாதிக்கப்படுகின்றன என்று சொல்லித் தருகிறார். அதே போல, மூளை மற்றும் அதன் செயல்பாடுகளை பற்றி விளக்கும்போது ஆக்கப்பூர்வமாக வித்தியாசமாக சிந்திப்பது பற்றி சொல்லித் தருகிறார்.
இந்த விஞ்ஞான இரதத்தில் உள்ள ஆய்வுக்கூடத்தில் மாணவர்கள் தங்கள் கைப்பட பரிசோதனைகளை செய்ய அனுமதிக்கப்படுவர். சந்தேகம் ஏற்பட்டால் அவற்றை உடனே கேட்டு தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
மேலும் அறிவியில் கண்காட்சி பள்ளியிலோ அல்லது மாவடத்தில் வேறு எங்கேனும் நடைபெற்றால் அதில் அவர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை, எளிய கண்டுபிடிப்புக்களை பார்வைக்கு வைக்க உற்சாகப்படுத்தப்படுகிறார்கள்.
அண்மையில் திரு.ஜெ.பி., விவேகானந்தர் கனவு கண்ட 100 இளைஞர்களை திரட்டி அவர்களுக்கு விருதளித்து கௌரவித்தபோது, திரு.அறிவரசனும் அதில் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்பு விபரங்கள் :
அறிவரசன்,
அலைபேசி எண் : +91-8754409917
மின்னஞ்சல் : eyes.is.ice@gmail.com
இணையம் : www.parikshancharitabletrust.org
==================================================
இவர்களை போன்ற, வெளியுலகினர் அதிகம் அறியாத ஹீரோக்களை பற்றி தெரிந்து கொள்வதன் மூலம் நமக்கு நாமே ஒரு உத்வேகத்தை அளித்துக்கொள்வோம். ஏனெனில் நாளைய உலகம் சிறப்பானதாக அமைவதில் நமது பங்கும் இருக்கிறது.
நீங்கள் இது போல, நிஜ ஹீரோக்களை பற்றி கேள்விப்பட்டாலோ அல்லது பார்த்தாலோ எங்களை தொடர்புகொள்ளுங்கள். உங்கள் அருகிலேயே அவர்கள் இருக்ககூடும். தொடர்புக்கு : inspirecharitbletrust@gmail.com
==================================================
UNSUNG HEROES முதல் அத்தியாயத்திற்கு :
சுந்தர்ஜி,
திரு அறிவரசன் அவர்கள் பெயருக்கு தகுந்தால் போல் சிறந்த அறிவோடு ஆக்கபூர்வமான அறிவியல் சமந்தப்பட்ட விஷயங்களை எளிதில் புரிந்து கொள்ள கூடிய வகையில் மாணவ மாணவியருக்கு சொல்லி கொடுப்பது பாராட்ட வேண்டிய ஒன்றாகும். really I hats of
Mr arivu .நமது ஆண்டு விழாவின் போது அவரை பார்த்தேன். ஆனால் அவர் ஒரு விஞ்ஜானி என்று தெரியாது.
சுந்தர்ஜி
இரண்டாவது ஹீரோ திரு. அறிவரசன் அவர்கள் அறிவியல் பணி மேலும் வெற்றி பெறட்டும். பெரும்பாலும் அரசு பள்ளிகளில் தேவையான சோதனைக் கூட வசதி இருப்பதில்லை .
அவர்களுக்கு திரு. அறிவரசன் குழுவினர் ஆற்றும் பணி மிகுந்த பயனளிக்கும்.
இப்படியெல்லாம் கூட நாட்டுக்கு சேவை செய்ய முடியும் என்று நமக்கு சொல்லி கொடுக்கிறது பரிக்ஷன் டிரஸ்ட். இன்றைய வணிக நோக்க உலகில் திரு அறிவரசன் போன்றவர்கள் மிகவும் அரிதானவர்கள். இவரை நம் தளத்தின் ஆண்டு விழாவில் பார்த்தபோது நிச்சயமாக இவ்வளவு ஆக்கபூர்வமான வேலையில் தன்னை அர்பணித்துள்ள்ளார் என்று நான் கற்பனை செய்துகூட பார்கவில்லை. விஞ்ஞான ரதம் என்கின்ற பெயரே நன்றாக இருக்கிறது.
திரு அறிவரசன் போன்றவர்களைபற்றி நம் தளத்தின்மூலம் தெரிந்துகொள்வது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி சுந்தர்.
unsung heros 2- mr,அறிவழகன்.
திரு ராஜா அவர்கள் ஒரு விதத்தில் ஆச்சிரியமுட்டினர் என்றால் திரு.அறிவழகன் இன்னொரு விதத்தில் பிரம்மிபுட்டுகிறார் .
I.T. முடித்துவிட்டு சேவை மனதுடன் இதை அவர் தேர்ந்தெடுத்துள்ளது அவரின் பரந்த மனதையும் ஆழ்ந்த சேவையையும் காட்டுகிறது.
மாணவர்களுக்கு பெரிதும் உதவிகரமான பெரிய தொண்டு.
விஞ்ஞான ரதம் பெயரிலேயே ஆராய்ச்சிக்கூடம் என்று கொண்டுள்ளது.
அறிவழகன் சார் செய்யும் சேவையால் மாணவர்களுக்கு ஒரு கடவுளாக தெரிவார்.
இன்னும் பல பள்ளிகளுக்கும், மற்றும் எல்லா இடங்களுக்கும் ரதம் சென்று பல மாணவர்களுக்கு நல்லதொரு முன்னேற்றத்தை கொடுக்கும்.
நன்றி சார்.
சுந்தர் சார் திரு அரிவரசன் அவர்களை நான் நம் ஆண்டுவிழாவின்போது பார்த்தேன் நான் அவர் யாரோ நம் வாசகர் போல என நினைத்துக்கொண்டேன் நான் அவரிடம் பேசியுள்ளேன் ,ஆனால் பொதுவாகத்தான் …இப்படி தெரிந்திருந்தால் இன்னும் நன்றாக கலந்துரயாடிரூப்பேன்..
வளர்க அவர் தொண்டு …
super ஸ்டார்ஸ்….இன் ரியல் லைப்.
ரியல் லைப் சூப்பர் ஸ்டார்ஸ்…..தேங்க்ஸ் சுந்தர் சார் ….