Home > ஆலய தரிசனம் (Page 6)

நந்தம்பாக்கம் கோதண்டராமர் கோவில் பரமபத வாசல் திறப்பு – ஒரு நேரடி கவரேஜ்!

பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் திருக்கோவில், மற்றும் பிருந்தாரண்ய க்ஷேத்ரம் என்று வழங்கப்படும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் உள்ளிட்ட பல வைணவ திருத்தலங்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதி்காலை 4.30 மணியளவில் பரமபதவாசல் என்றழைக்கப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும், நாம் நந்தம்பாக்கத்தில் எழுந்தருளியிருக்கும் கோதண்டராமர் திருக்கோவிலில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பில் பங்குகொண்டு சொர்க்கவாசல் புகும் பாக்கியம் பெற்றோம். நந்தம்பாக்கம் கோவில் அடிப்படையில்

Read More

தவறுகளை மன்னித்து நல்வாழ்வுக்கு வழிகாட்டும் ஒரு தலம்!

சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உந்தப்பட்டு தவறு செய்கிறவர்கள் அநேகம் பேர் உள்ளனர். நாம் செய்த தவற்றை மூடி மறைத்து யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம். ஆனால் மனசாட்சியை ஏமாற்றவே இயலாது. அறிந்தோ அறியாமலோ அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப மனிதர்கள் பலவித தவறுகள் செய்கின்றனர். பின்னர் அதை எண்ணி வாழ்நாள் முழுதும் வருந்துகின்றனர். "குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி ஏது" என்னும் பாடலுக்கிணங்க, ஒரு நொடியில் அவசரப்பட்டு செய்த தவறானது வாழ்க்கை முழுதும் மனவருத்தத்தை சிலருக்கு தந்து

Read More

கார்த்திகையன்று ஏற்றப்பட்ட மூன்று விளக்குகள் – ஒரு நேரடி அனுபவம்!

இந்த வார பிரார்த்தனை கிளப், கார்த்திகை தீபத்தன்று வந்தபடியால் அந்த நேரம் குன்றத்தூர் கோவிலில் இருக்கவேண்டும் என்பது தான் நமது விருப்பமாக இருந்தது. ஆனால் மனமெங்கும் திருவண்ணாமலையில் தான் இருந்தது. சரி... அடுத்த முறை நிச்சயம் அண்ணாமலையில் இருக்கவேண்டும். இம்முறை குன்றத்தூர் குமரனிடம் இருப்போம் என்று முடிவு செய்தேன். நங்கநல்லூர் நிலாச்சாரல் ராதாகிருஷ்ணன் அவர்கள் சில நாட்களுக்கு முன்னர் நமக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் ஒரு வசதியற்ற பெண்ணின் திருமணத்திற்கு

Read More

கந்தனின் கருணையில் திளைத்து அதில் மூழ்கி எழுந்த ஒரு ஆத்மானுபவம்!

இது வழக்கமான பதிவு அல்ல. கந்தனின் கருணையில் திளைத்து அதில் மூழ்கி எழுந்த ஒரு ஆத்மானுபவம். இந்த ஒரு பதிவு பல பதிவுகளுக்கு சமம் (நீளத்தில்) என்றால் மிகையாகாது. இறைவனுக்கு தொண்டு செய்யவேண்டும் என்று நாம் நினைத்தாலே போதும் தகுந்த நபர்களை இணைத்து அவன் அதை சிறப்பாக நடத்தி கொள்வான் என்பதை அனுபவப்பூர்வமாக அவன் நமக்கு மற்றுமொருமுறை உணர்த்திய நிகழ்வு இது. நம் தேவைகள் அனைத்தையும் அவன் அறிவான்... அவன் ஒவ்வொரு

Read More

உணவின்றி இறந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் பசுக்கள் – எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

பசுக்களை தெய்வமாக நாம் பூஜித்து வரும் வேளையில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கோ-சாலையில் பசுக்களும் கன்றுகளும் போதிய உணவின்றி இறந்தது தொடர்பாக வெளியான தினமலர் செய்தியை நம் வாசகர்கள் சிலர் நமக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தனர். அது தொடர்பாக ஏதேனும் செய்யும்படியும் கேட்டுக்கொண்டனர். அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் போன்ற மக்கள் லட்சக்கணக்கில் வந்து செல்லும் வருமானம் மிகுந்த கோவிலின் கோ-சாலை பசுக்கள் இறந்தது நிச்சயம் உணவுப் பற்றாக்குறையினால் இருக்க முடியாது. பராமரிப்பு இல்லாமையால்

Read More

புத்திர பாக்கியம் நல்கி சுகப்பிரசவமும் அருளும் திருக்கருகாவூர் கர்பரக்ஷாம்பிகை

ஒரு பெண் கருத்தரித்து, அக்கரு நல்ல முறையில் வளர்ந்து, அவளுக்கு சுகப்பிரசமாகி குழந்தை ஆரோக்கியமாக ஜனிக்கும் வரை பல விஷயங்கள் மனித சக்திக்கு அப்பாற்ப்பட்டது. கடவுள் நம்பிக்கையின்றி தான்தோன்றித் தனமாக திரிபவர்கள கூட, இந்த காலகட்டங்களில் இறைவனே கதியென்று அவனை சரணடைந்துவிடுகின்றனர். ஒரு பெண் தாய்மையடைந்து கருவை சுமக்கும் அந்த 10 மாத காலம் மிகவும் முக்கியமான காலகட்டமாகும். தாய் சொல்வது, செய்வது, கேட்பது, புசிப்பது, என அனைத்தும் அக்குழந்தையை பாதிக்கும். எனவே

Read More

கேட்காமலே அள்ளிக் கொடுப்பவனிடம் கேட்க என்ன இருக்கிறது?

இது நம் அன்னாபிஷேக தரிசன அனுபவம். கடந்த வெள்ளிக்கிழமை அக்டோபர் 18 அன்னாபிஷேகத் திருநாள். ஐப்பசி பௌர்ணமியில் சிவலிங்கத்தை அன்னத்தால் மூடி பலவித அலங்காரங்கள் செய்து வழிபடுவார்கள். ஈசனின் திருமேனியில் சாற்றப்படும் ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம். எனவே, அன்று சிவதரிசனம் செய்தால் கோடிலிங்க தரிசனத்துக்குச் சமம். இந்த அபிஷேகத்தைக் காண்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பது ஐதீகம். இதனால் தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்ற வழக்கு

Read More

திருமகளின் புகுந்த வீட்டில் (திருநின்றவூர்) நமக்கு உழவாரப்பணி வாய்ப்பு கிடைத்த கதை !

தேவாரப் பாடல் பெற்ற சைவத் தலமான திருஇலம்பையங்கோட்டூரை அடுத்து இந்த முறை, வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள் கோவிலில் உழவாரப்பணி செய்ய நமக்கு அவனிடமிருந்து உத்தரவாகியுள்ளது. மகத்துவம் மிக்க இந்த கோவிலில் நமக்கு பணி செய்ய கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய பாக்கியம் என்று தான் சொல்வேன். அந்தளவு பல மேன்மைகள் பொருந்திய திவ்ய தேசம் இது. தாயார் லக்ஷ்மி தேவி ஒரு சமயம் பெருமாளிடம் கோபித்துக்

Read More

தீராத வினைகளை தீர்க்கும் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் – A must visit place!

சென்ற மாதம் மத்தியில் உறவினர் ஒருவரின் இல்ல திருமணத்தில் கலந்துகொள்ள கரூர் செல்லவேண்டியிருந்தது. அது பற்றி தளத்தில் நான் கூறியிருந்ததை பார்த்த சம்பத் குமார் என்கிற வாசக அன்பர், கரூரில் உள்ள நெரூர் சதாசிவ பிரம்மேந்திரரின் அதிஷ்டானத்திற்கு சென்று வரும்படி கேட்டுக்கொண்டார். நானும் நிச்சயம் செல்வதாக அவருக்கு உறுதி கூறினேன். தமிழகத்தில் மக்கள் வசிப்பதற்கு ஏற்ற அடிப்படை கட்டுமானங்கள் சிறப்பாக அமையபெற்றுள்ள நகரங்களில் கரூரும் ஒன்று என்றால் மிகையாகாது. போக்குவரத்து வசதி,

Read More

விரும்பிய வேலை கிடைக்க, மழலை வரம் கிட்ட, வாஸ்து தோஷம் நீங்க, மாதவிடாய்க் கோளாறுகள் நீங்க – பரிகாரம்… பரிகாரம்!

பாரம்பரியமிக்க ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு. சக்தி உண்டு. அந்தந்த கோவிலின் வரலாற்றுடன் தொடர்புடையவர்கள் - மற்றவர்கள் நன்மைக்காக - குறிப்பிட்ட கோரிக்கைகளை வரமாக பெறும்போது அது பரிகாரத் தலமாகிறது. அந்த வகையில் பிரசித்தி பெற்று விளங்கும் சில பரிகாரத் தலங்களை பார்ப்போம். மழையின் காரணமாக வீட்டில் பிராட்பேண்ட் இணைப்பு பழுதடைந்துள்ளது. புகார் அளித்துள்ளேன். எனவே முன்னெப்போதோ தயார் செய்த இந்த பதிவை STANDBY பதிவாக அளிக்கிறேன். நம்பிக்கையுடன் பரிகாரம் செய்யுங்கள்.

Read More

எங்கே ‘தேடல்’ உள்ளதோ அங்கே தோல்வியில்லை!

நம் தளம் சார்பாக கடந்த மார்ச் மாதம் (சிவராத்திரி) முதல் உழவாரப்பணி தொடங்கி இதுவரை நான்கு கோவில்களில் செய்துவிட்டோம். நண்பர்களும் திரளாக பங்கேற்று இறைபணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் 'பரவாயில்லையே... கோவிலை தேர்வு செய்து உழவாரப்பணி செய்வது சுலபமாக இருக்கிறதே' என்று ஒரு எண்ணம் ஏற்பட்டது. ஆனால் அது எத்தனை தவறு என்று பிறகு தான் புரிந்தது. காரணம், இம்முறை பணி செய்ய கோவில் கிடைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. நாம் உழவாரப்பணி

Read More

ஆலய தரிசனத்தை பிக்னிக்காக மாற்ற வேண்டாமே…

ஆலய தரிசனத்தின் அடிப்படை விதிகளை தெரிந்துகொண்டு அதன்படி ஆலய தரிசனம் செய்தால் தான் ஆலய தரிசனம் செய்ததற்குரிய முழு பலன்கள் கிட்டும். உதாரணத்திற்கு சண்டிகேஸ்வரரை சொடக்கு போட்டு வணங்குதல் கூடாது, துவிஜஸ்தம்பம் என்னும் கொடிமரத்திற்கு அப்பால் தான் விழுந்து நமஸ்கரிக்கவேண்டும் போன்ற அடிப்படை விதிகளை கூட பலர் அறியாமல் இருக்கிறார்கள். ஆலய வழிபாட்டில் ஆர்வமுள்ளவர்களும் ஆன்மீக அன்பர்களும் இந்த எளிமையான அடிப்படை விதிகளை ஓரளாவாவது தெரிந்துகொண்டு அவற்றை பின்பற்ற வேண்டும், இறையருளை முழுமையாக

Read More

மருந்தே மலையாக அமைந்த பழனி திருத்தலம் – ஆடிக்கிருத்திகை ஸ்பெஷல்!

ஆடி கிருத்திகை முருகனுக்கு மிகவும் உகந்தநாள். அவரது ஜென்ம நட்சத்திரமும் கூட! அன்றைய தினம் காவடி எடுத்து, பாலாபிஷேகம் செய்து தண்டபாணியை வணங்குவர். ஆறு கார்த்திகைப் பெண்கள், முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தனர். ஈசன் அருளால் ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பாக, கிருத்திகை நட்சத்திரமாக வானில் இடம் பெற்றனர். அவர்களை சிறப்பிக்கும் வண்ணம் ஆடிக் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. எல்லா முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு அர்ச்சனை,

Read More

ஜொலிக்கப்போகும் சிங்கீஸ்வரர் – ஓரடி எடுத்து வைத்தவர்களிடம் நூறடி எடுத்து வைத்த ஈசனின் பெருங்கருணை!!

சென்ற மாதம் நமது உழவாரப்பணி செலவுகளுக்கு குறிப்பாக உழவாரப்பணியில் பங்கு பெறும் நண்பர்களின் உணவு செலவுக்கு என்று நண்பர் ஒருவர் பணம் அனுப்பியிருந்தார். கூடவே அந்த தொகையில் வருவாய் குறைவாக உள்ள  கோவில்களில் விளக்குகளுக்கு எண்ணை தேவைப்பட்டால் வாங்கி தரும்படியும் கூறியிருந்தார். பணி முடிந்த தருவாயில் தான் அந்த பணம் கிடைத்தது. எனவே அப்போது பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. இதையடுத்து "நீங்கள் கூறியவாரே நிச்சயம் செய்கிறோம். ஆனால் சற்று பொறுமையாக இருக்க வேண்டும்"

Read More