Home > சுய முன்னேற்றம் (Page 4)

உருவு கண்டு எள்ளுபவரா நீங்கள்?

நமது முகநூலில் நேற்றைக்கு இதை பகிர்ந்திருந்தோம். தளத்திலும் வெளியிடும்படியும், பலர் படித்து தவறுகளை திருத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்றும் நண்பர்கள் கூறியதையடுத்து இங்கு பதிவு செய்கிறோம். உடல் பருமனான ஒருவர் சற்று ஒல்லியான பெண்ணுடன் மணக்கோலத்தில் உட்கார்ந்திருப்பதை 'அண்டாவை ஏன் டம்ளர் மேலே கவுக்குறீங்க?" என்று கேலி செய்து முகநூலில் ஒரு படம் அதிகம் பகிரக் கண்டேன். சற்று மெச்சூர்டானவர்கள் கூட அதை ஒரு வேகத்தில் பகிர்ந்து எள்ளியது அதிர்ச்சியளித்தது. 'உருவு கண்டு

Read More

“பணத்திற்கும் காது உண்டு”- பொருளாதாரத் தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் – Part 6

சில நேரங்களில் நமது கவனக்குறைவினாலும் மறதியினாலும் நமது பணம் அது சிறிதோ பெரிதோ நம்மை விட்டுப் போய்விடும். அது போன்ற நேரங்களில் எப்படி நடந்துகொள்வது என்பதை இந்தப் பதிவின் மூலம் பார்க்கலாம்.  சமீபத்தில் அனுமத் ஜெயந்தி பதிவுக்காக காக்களூர் சென்றிருந்தோம் நினைவிருக்கிறதா? காக்களூர் தவிர திருவெண்பாக்கம், நம்பாக்கம் ஆகிய தலங்களுக்கும் அன்று சென்றிருந்தோம். அம்மா திருவெண்பாக்கம் மின்னொளி அம்மையை தரிசிக்கவேண்டும் என்று நீண்டநாட்களாக கேட்டு வந்ததால் ஒரு கால் டாக்ஸி புக் செய்து

Read More

கொடுக்கும் பணம் நன்கு விருத்தியாக திரும்ப… பொருளாதாரத் தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் – Part 5

'பொருளாதார தன்னிறைவு' - இந்த ஒரு இலக்கை நோக்கி தான் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம். சிலர் குறுக்கு வழிகளில் ஓடிப்போய் கீழே விழுகிறார்கள். கைகால்களை உடைத்துக் கொள்கிறார்கள். சிலர் மீள முடியாத பாதாளத்தில் விழுகிறார்கள். சிலர் நேர்வழிகளில் ஓடுகிறார்கள். இலக்கை அடைகிறார்கள். அவரவருக்கு இருக்கும் சந்தர்ப்ப சூழ்நிலையை பொறுத்து வேகமாகவோ, மெதுவாகவோ ஓடுகிறார்கள். அதை பொறுத்தே அவர்கள் எவ்வளவு சீக்கிரம் அந்த இலக்கை அடைகிறார்கள் என்பதை தீர்மானிக்க முடிகிறது. நாம் ஏற்கனவே சொல்லியிருக்கிறோம்.... நாம் மேலே ஏறுவது

Read More

உங்கள் பிள்ளை நன்றாக தேர்வெழுதி நல்ல மதிப்பெண்களை பெற…!

மழை வெள்ளத்தால் பள்ளிகளுக்கு விடப்பட்ட தொடர் விடுமுறையை ஈடுகட்ட பள்ளிகள் தற்போது கூடுதல் நாட்களும் கூடுதல் நேரமும் இயக்கப்படுகின்றன. மாணவர்களின் தேர்ச்சி விகிதம் எந்த சூழ்நிலையிலும் பாதித்துவிடக்கூடாதே என்று ஆசிரியர்களும், பிள்ளைகள் நன்றாக தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்களை பெறவேண்டுமே என்று பெற்றோர்களும் கவலைப்படுகிறார்கள். மாணவர்களுக்கு இதனால் ஒருவித மன-அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையை எளிதில் சமாளித்துவிடலாம். முதற்கண் பெற்றோர்கள் செய்யவேண்டியது, மாணவர்களுக்கு பரீட்சை முடியும்வரை அவர்கள் சில தியாகங்களை செய்யவேண்டும். பிள்ளைகள் மனம் பாதிக்கும்படி

Read More

யார் உங்கள் தலைவர்?

யாரை உங்கள் வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள்? அவரது பண்புகள் என்ன? அவர் உங்களை சரியாக வழி நடத்துகிறாரா? உங்கள் குழப்பங்களை தீர்த்துவைக்கிறாரா? சுயநலமற்று இருக்கிறாரா? காட்சிக்கு எளியரா? எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? எல்லோரும் தலைவனாகிவிடமுடியாது. தலைவனாக திகழ்பவனுக்கு பிறரை வழி நடத்தி செல்லும் திறமைகள்  இருக்கவேண்டும். நல்ல பண்புகள் இருக்கவேண்டும். அப்போதுதான் அவனை பின்பற்றி செல்பவர்களும் இந்த உலகும் நன்மை அடையும். தீய பண்புகள் உடைய தலைவர்கள் திறமை உடையவர்களாக இருப்பினும் நல்ல பண்புகள் இல்லாவிட்டால்

Read More

பாக்கியங்களுள் முதன்மையான பாக்கியம், செல்வங்களுள் தலையாய செல்வம்!

ரைட்மந்த்ரா குடும்பத்தினர் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். 2016 அனைவருக்கும் ஏற்றமும் மாற்றமும் தரும் ஆண்டாக அமையும் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு பதிவையும் ஒரு சிற்பி செதுக்குவது போல கவனமாக நாம் அளிப்பது நீங்கள் அறிந்ததே. இந்த ஆண்டின் முதல் பதிவு இது. அப்படின்றால் நாம் எந்தளவு கவனமாக இதை எழுதியிருப்போம் என்று நினைத்துப் பாருங்கள். நம் வாசகர்கள் அனைவருக்கும் நாம் கொடுக்ககூடிய இந்த ஆண்டிற்கான மெசேஜ் இது தான். இந்த பதிவு

Read More

நண்பா… நீ மனிதனல்ல தெய்வம்!

நம் தளத்திற்காக எழுதுவது என்பது பல நேரங்களில் நமக்கு ஒரு சிற்பி சிற்பத்தை செதுக்குவது போலத் தான். அது ஆன்மீக பதிவுகளானாலும் சரி, சுயமுன்னேற்ற பதிவுகளானாலும் சரி. ஆனால் சில பதிவுகள் 'தவம்' போல. அத்தகைய பதிவுகளில் ஒன்று இது. ஒரு வரி விடாமல் படியுங்கள். ஒன்றல்ல இரண்டல்ல... பல பாடங்கள் இதில் ஒளிந்துள்ளன! FORTUNE FAVOURS ONLY THE BOLD! "உன்னால் எதுவுமே செய்ய முடியாது என்று இந்த உலகம் என்னிடம்

Read More

சேவை இங்கே சுலபமல்ல!

ஒவ்வொரு ஆண்டு பருவ மழையின் போது சென்னை சற்று திக்கி திணறினாலும் முன்னெப்போதும் இல்லாத அளவு இந்த முறை தான் கதி கலங்கிப் போனது. அதற்குரிய காரணங்களுக்கு சென்றால் அரசியலோடு கூடிய பதிவை அளிக்கவேண்டியிருக்கும். எனவே நாம் அதில் போகவேண்டாம். இந்த மழை வெள்ள பாதிப்பை இரண்டு கட்டங்களாக பிரிக்கலாம். நவம்பர் துவக்கத்தில் பெய்த மழை & டிசம்பர் ஒன்றாம் தேதி பெய்த மழை. முதல் கட்டத்தில் கொட்டித் தீர்த்த மழையால் முடிச்சூர், தாம்பரம்,

Read More

அக்கினிக் குஞ்சு மூட்டிய காட்டுத் தீ ! – தனி ஒருவன் (1)

மக்களுக்கு இன்று தெய்வ நம்பிக்கையைவிட தன்னம்பிக்கையே அதிகம் தேவைப்படுகிறது. தெய்வநம்பிக்கை இல்லாதவர்கள் கூட வாழ்க்கையில் ஜெயித்துவிடலாம். ஆனால், தன்னம்பிக்கை இல்லாதவர் வாழ்க்கையில் ஜெயிக்கவே முடியாது. அவர்கள் முன்பு அந்த கடவுளே வந்து உதவிக்கு நின்றாலும் அவர்களால் முடியாது. எனவே தான், சமீபத்திய வேலூர் சொற்பொழிவின் தலைப்பை கூட, "சோதனைகளை சாதனைகளாக்குவோம்!" என்று தேர்ந்தெடுத்தோம். சொற்பொழிவின் முதலில் நாம் சொன்னது என்ன தெரியுமா? "நீ என்ன பார்க்கிறாயோ அது விதி. அதை எப்படி பார்க்கிறாயோ

Read More

‘எல்லாம் இருந்தும் எதுவுமில்லை..!’ MUST READ

சென்னையை புரட்டிப்போட்டுள்ள மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமை இன்னும் சீரடையவில்லை. தாம்பரம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, கொரட்டூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல புறநகர் பகுதிகளில் பல வீடுகள் இன்னும் நீரில் மூழ்கியிருக்கின்றன. ஆசை, ஆசையாய் கடன்பட்டு கஷ்டப்பட்டு பாடுபட்டு வாங்கிய வீடு, கார், பைக், டி.வி, பிரிஜ், வாஷிங் மெஷின், இப்படி பல சொத்துக்களை அப்படியே விட்டுவிட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று மேற்கூறிய இடங்களில் மக்கள் வீட்டைவிட்டு

Read More

விவேகானந்தர் செய்த சித்திகள் & நவக்கிரகங்களை குளிர்விக்கும் தசாவதார சுலோகம்!

பாரதி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், அப்துல் கலாம், இப்படி நம் தேசம் வியக்கும் ஆளுமைகள் பலர் விவேகானந்தரை கொண்டாடியிருக்கிறார்கள். இவர்களை போன்றவர்கள் மனதில் விவேகானந்தர் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயமல்ல. சித்துக்களை செய்தால் தான் ஒருவரை மகான் என்றே சாமானிய மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் சித்துக்கள் புரியாமலே விவேகானந்தர் பலர் தன்னை பின்பற்ற வைத்தார் என்பது தான் விஷயமே. 39 ஆண்டுகளே வாழ்ந்தாலும் 3,000 ஆண்டுகளில்

Read More

சேவைக்கு சுவாமி விவேகானந்தர் கொடுத்த பரிசு!

நமது பயணத்தில் நமக்கு கிடைக்கும் அனுபவங்கள் நம்மிடம் ஏற்படுத்தும் தாக்கத்தினால் (?!) திடீர் திடீரென்று ஒரு சந்தேகம் நமக்கு வந்துவிடும். "ஆமாம்... நாம போற பாதை சரிதானா?" என்கிற சந்தேகம்தான் அது. எப்போதெல்லாம் தன்னம்பிக்கை குறைகிறதோ, எப்போதெல்லாம் செய்யும் பணிகளில் சவால்கள் தென்படுகின்றனவோ அப்போதெல்லாம் நமக்கு உற்ற துணையாக விளங்குவது மூன்று விஷயங்கள் : 1)திருக்குறள் 2)சுவாமி விவேகானந்தரின் உரைகள் & 3)பாரதியார் கவிதைகள். இவற்றில் மூழ்கும்போது நமக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு ஏதோ

Read More

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

நமது நூல் வெளியீட்டு விழாவுக்கு சில நாட்கள் முன்பு விழாவின் ஸ்டேஜ் பேக்-டிராப் டிசைனை நமது அலுவலகத்தில் அமர்ந்து செய்து முடித்த நேரம்.... முதல் ப்ரூஃப் (MAIDEN DESIGN) திருப்திகரமாக இருந்தது. இன்னும் சிலச் சில நகாசு வேலைகள் செய்துவிட்டு பிரிண்டிங் அனுப்பிவிடலாம் என்று கருதி அனைத்தையும் முடித்து டிசைனை இறுதி செய்துவிட்டோம். ஆனால், பேனரில் ஏதோ ஒன்று மிஸ்ஸாவது போல இருந்தது. திரும்ப திரும்ப பார்த்தோம் ஒன்றும் புரியவில்லை.

Read More

சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடுமா?

சென்னை புறநகர்ப் பகுதி ஒன்றில் ஹவுஸிங் போர்டு குவார்ட்டர்ஸ் ஒன்று உள்ளது. அந்த குவார்ட்டர்ஸில் குடியிருக்கும் ஒருவர் பூண்டி ஊன்றீஸ்வரர் கோவிலுக்கு செல்லும்போது நமது 'தினசரி பிரார்த்தனை' படத்தை அங்கு பார்த்திருக்கிறார். அந்த பிரார்த்தனை வரிகள் பிடித்துப் போக, அதை மொபைலில் படமெடுத்துக்கொண்டு வந்தவர், அதிலிருந்த அலைபேசி எண் மூலம் நம்மை தொடர்புகொண்டு அந்த படம் தமக்கும் வேண்டும் என்றார். நாம் சாஃப்ட் காப்பியை மின்னஞ்சல் அனுப்பி அவரை பிரிண்ட் எடுத்துக்கொள்ளச்

Read More