Home > ஆன்மிகம் (Page 4)

கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று கருணையும் தாயும் கடவுளும் ஒன்று!

நண்பர் ஒருவரின் முகநூலில் படித்தது இது. படித்தவுடன் நம் கண்களில் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. உடனே உங்களுடன் பகிர்கின்றோம்... இதில் உள்ள அத்தனை வரிகளும் நம்மில் சிலர், மன்னிக்க பலர் வாழ்வில் நடந்தவை... நடப்பவை!! அம்மா... நான் பிறந்து விழுந்த போது... உன் சேலைதான் ஈரமானது...!!! நான் உறங்க... உன் சேலைதான் ஊஞ்சல் ஆனது..!!! நான் பால் அருந்தும் போது... உதட்டினை துடைத்து உன் சேலை தான்...!!! எனக்கு பால் கொடுக்கும்போது... உன் சேலை தான் எனக்கு திரையானது...!!! நான் மழையில் நனையாமல் இருக்க... உன் சேலை தான் குடையானது...!!! நீச்சல் பழக... என் இடுப்பில் கட்டியதும் உன் சேலை தான்...!!!! மழையில் நனைந்த என்

Read More

இல்லற வாழ்வில் மக்கள் எளிதாகக் கடைப்பிடிக்கக் கூடிய தர்மங்கள் என்னென்ன? – கந்தசஷ்டி SPL 4

இன்று கந்தசஷ்டி நான்காம் நாள். இன்று வாரியாரைப் பற்றி பார்ப்போம். தேனும் அதன் சுவையும் போல வாரியார் சுவாமிகளையும் முருகப்பெருமானையும் பிரிக்கவே முடியாது. வாரியார் சுவாமிகளை நினைக்கும்போதெல்லாம வள்ளி மணாளன் நினைவுக்கு வருவான். அதே போன்று வள்ளி மணாளனை நினைக்கும்போதெல்லாம் வாரியார் நினைவுக்கு வருவார். இது எத்தனை பெரிய பேறு...! அவரை பற்றிய பதிவு இல்லாமல் கந்தசஷ்டி சிறப்பு பதிவுகள் பூரணம் பெறுமா? குமுதம் இதழுக்காக பிரபல புத்தக வெளியீட்டாளர் திரு.வானதி திருநாவுக்கரசு

Read More

‘ஆண்டவன் பிச்சி’ என்னும் அதிசயப் பிறவி – கந்தசஷ்டி SPL 3!

அள்ள அள்ள குறையாத அருட்சுரங்கம் அன்னை ஆண்டவன் பிச்சி அவர்களின் சரிதம். அந்தளவு பிரமிக்க வைக்கும் பல விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. பல விஷயங்களுக்கு ஆதாரம் இல்லை என்பது தான் சோகம். இருப்பினும் நமது தேடலில் ஆராய்ச்சியில் கிடைத்த நம்பகமான தகவல்களை இங்கே பகிர்ந்துகொள்கிறோம். சில சந்தேகங்களுக்கும் விளக்கமளித்திருக்கிறோம். (இந்த பதிவின் முதல் பாகத்திற்கு : 'உள்ளம் உருகுதையா' தந்த ஆண்டவன் பிச்சி என்கிற மரகதம் - கந்தசஷ்டி SPL 2) (இந்த பதிவில் அன்னை

Read More

‘உள்ளம் உருகுதையா’ தந்த ஆண்டவன் பிச்சி என்கிற மரகதம் – கந்தசஷ்டி SPL 2

கந்த சஷ்டியின் சிறப்பு தொடரின் இந்த இரண்டாம் நாள் பதிவை தயாரிப்பது மிக மிக சவாலாக இருந்தது. நதிமூலமும் ரிஷிமூலமும் கண்டுபிடிப்பது அத்தனை சுலபமா என்ன? இருப்பினும் கிடைத்த ஆதாரத்தை உறுதி செய்து கொள்ள பிராட்வேயில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கே நேற்று நேரில் சென்றுவிட்டோம். இந்த தொடரின் முதல் பாகத்திலேயே நாம் சொன்னது நினைவிருக்கிறதா? இந்த தொடர் சற்று கடினமான பணி தான். அதை நிறைவேற்றித் தரவேண்டியது அந்த முருகனின் பொறுப்பு!

Read More

சிவபெருமானைப் போல முருகனுக்கும் பன்னிரு திருமுறை உண்டு தெரியுமா? கந்தசஷ்டி SPL 1

இன்று கந்தசஷ்டி துவங்குகிறது. வரும் சனிக்கிழமை சூரசம்ஹாரம். இந்த ஒரு வாரமும் இயன்றவரை முருகப் பெருமானின் பெருமைகளைப் பற்றி நம் தளத்தில் பேசுவோம். தளத்தில் சிறப்பு பதிவுகள் தொடர்ந்து வெளிவரும். நீங்கள் கேள்விப்படாத புதுப் புது விஷயங்களை தரவேண்டும் என்று உறுதி பூண்டிருக்கிறோம். இதை நிறைவேற்றித் தரவேண்டியது முருகப் பெருமான் தான். அடியேன் ஒரு கருவி மட்டுமே. மனிதன் நினைப்பதை முடிப்பவன் இறைவனல்லவா? கந்தசஷ்டி முதல் நாளின் சிறப்பு பதிவாக 'முருகவேள்

Read More

பண்டிகை, விஷேட நாட்களும் ஆலய தரிசனமும்! தீபாவளி SPL 1

வாசகர்கள் அனைவரும் தீபாவளி பரபரப்பில் இருப்பீர்கள். சினிமா பத்திரிக்கையாளர் சங்கத்தின் தீபாவளி சிறப்பு மலரில் அடியேன் எழுதிய ஆன்மீக கட்டுரை ஒன்று முதல் கட்டுரையாக பிரசுரமாகியுள்ளது. திருவருள் துணைக்கொண்டு நம் Rightmantra.com தளத்தையடுத்து இனி வார மாத இதழ்களுக்கும் எழுத தீர்மானித்துள்ளேன். இந்த கட்டுரையில் வரும் செய்தி தான் அடியேனின் தீபாவளி மெசேஜ். நாமெல்லாம் தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாடி மகிழும் நேரங்களில், அத்தியாவசிய சேவைகளுக்காக தீபாவளித் திருநாளிலும் பணியில் இருக்கப்போகும் பேருந்து ஓட்டுனர்கள் & நடத்துனர்கள்,

Read More

தர்மம் தலைகாத்த உண்மை சம்பவம் – அதிதி தேவோ பவ – (5)

'அதிதி போஜனம்' என்பது நமது தலையாய அறங்களுள் ஒன்று. காலம்காலமாக நமது முன்னோர்கள் பின்பற்றி வந்த தருமம். ஆனால் இன்று அந்த வார்த்தைக்கே அர்த்தம் போய்விட்டது. அக்காலங்களில் அதிதி போஜனத்துக்காக என்னவெல்லாம் தியாகம் செய்திருக்கிறார்கள் என்று அறியும்போது நெஞ்சம் நெகிழ்கிறது. கண்கள் பனிக்கின்றன. விருந்தோம்பலால் கெட்டவர்கள் என்று உலகில் யாரும் இல்லை. சொல்லப்போனால் தலைமுறைகளை தழைக்கச் செய்வது அதிதி போஜனமே ஆகும். இந்த ஒப்பற்ற அறத்தின் சிறப்புக்களையும் அதன் பின்னணியில் நடைபெற்ற

Read More

திருமுருகாற்றுப்படையும் அறுபடைவீடுகளும்! ஒரு சுவாரஸ்யமான வரலாறு!!

இது தண்டபாணித் தெய்வம் புரிந்த மற்றுமொரு திருவிளையாடல். முருகப் பெருமானுக்கு எத்தனையோ தலங்கள் உள்ளன. இருப்பினும் குறிப்பிட்ட தலங்களை தேர்ந்தெடுத்து அவற்றை 'அறுபடை வீடுகள்' என்று சொல்லும் வழக்கம் எப்படி வந்தது? அறுபடை வீடுகளின் பின்னணி என்ன என்பது பலருக்கு தெரியாது. //இப்பதிவுக்காக நமது தளத்தின் ஓவியர் பெரியவர் திரு.சசி அவர்கள் வரைந்த பிரத்யேக ஓவியம் இடம்பெற்றுள்ளது.// தலைசிறந்த முருகனடியார்களுள் ஒருவர் புலவர் நக்கீரர். (ஆம் 'நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றமே குற்றமே' என்று தலைவரையே

Read More

95 வயது மூதாட்டியும் அவரது வைராக்கிய சிவபக்தியும்!

மூன்று நாள் எட்டயபுரம், தூத்துக்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர் & திருப்பராய்த்துறை பயணம் இனிதே நிறைவடைந்து நேற்று நள்ளிரவு சென்னை திரும்பிவிட்டோம். பயணம் மிக மிக அற்புதமாக அமைந்தது. நமது அலைபேசி தான் மக்கர் செய்து தனது ஆயுளை முடித்துக்கொண்டுவிட்டது. பலரது தொடர்புகள் விடுபட்டுப்போயிருக்கின்றன. எனவே ஏற்கனவே நட்பில் இருந்த நண்பர்கள், நட்புக்கரம் நீட்ட விரும்பும் அன்பர்கள் யாவரும் E-MAIL, SMS, WHATSAPP இவற்றில் ஏதாவது ஒன்றின் மூலம் தங்கள் அலைபேசி எண்ணை

Read More

தீட்டு என்றால் என்ன? இறைவழிபாட்டில் விலக்க வேண்டிய தீட்டுக்கள் யாவை?

'தீட்டு' என்கிற சொல் புரிந்துகொள்ளப்படாமலேயே காலங்காலமாக பெரும்பாலானோரால் கையாளப்பட்டு வருகிறது. இது குறித்த உண்மையான அர்த்தமுள்ள பார்வை அனைவருக்கும் தேவை. இறைவழிபாட்டில் விலக்க வேண்டிய தீட்டுக்கள் குறித்து இந்தப் பதிவு தெளிவுபடுத்தும் என நம்பலாம். நமது முகநூலில் பகிர்ந்ததை இங்கு நமது ஓவியர் வரைந்த பிரத்யேக ஓவியத்துடன் தந்திருக்கிறோம். தீட்டு என்பது என்ன? இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுகள் ஆகாது! தீட்டு என்பது, தீண்டத் தகாததைத் தீண்டுவது. தீட்டுடன் இறைவனைக் கும்பிட்டால், இறைவன் ஏற்கமாட்டான்

Read More

சூலையும் முத்துமாலையும் – இது முத்துக்குமார சுவாமி திருவிளையாடல்!

ஒரு முறை தேவாசுர யுத்தம் முடிந்த பின்னர் தேவேந்திரன் தேவகுரு பிரகஸ்பதியை சந்திக்கச் சென்றான். தேவேந்திரனின் முகம் வாட்டத்துடன் இருப்பதை பார்த்த பிரகஸ்பதி, "அது தான் மகாவிஷ்ணுவின் உதவியால் வெற்றி பெற்றுவிட்டீர்களே இன்னும் என்ன கவலை?" என்று வினவினார். "குருவே போரில் வெற்றி பெற்றுவிட்டாலும், போரினால் ஏற்பட்ட காயம் மற்றும் காயத்தின் தழும்புகள் தேவர்களை வருத்தமுறச் செய்கின்றன. அவர்கள் வேதனையிலிருந்து எப்படி மீட்பது என்று தெரியவில்லை. எனவே தான் வாட்டத்துடன் இருக்கிறேன்!" "தேவேந்திரா

Read More

சர்வம் சிவார்ப்பணம் – ஆனைக்கா அண்ணலின் அற்புதம்!!

"நவராத்திரி சிறப்பு பதிவுகள் எதுவும் அளிக்கவில்லையா?" என்று சில வாசக அன்பர்கள் கேட்டார்கள். சென்ற ஆண்டே நாம் நவராத்திரி தொடர்பாக பல பதிவுகள் அளித்தபடியால் அளிக்கவில்லை. மற்றபடி அம்மையப்பனை பற்றி எழுதுவதைவிட நமக்கு இனிமையான விஷயம் வேறு கிடையாது. அதை படிப்பதைவிட உங்களுக்கு மகிழ்ச்சியைப் தரக்கூடிய விஷயமும் வேறு இருக்காது என்பது நமக்கு தெரியும். நாம் பிறந்த ஊரான திருவானைக்காவில் எழுந்தருளியிருக்கும் ஆனைக்கா அண்ணலை பற்றியும் அங்கிருந்தபடி அகிலத்தையே ஆண்டுகொண்டிருக்கும் அன்னை அகிலாண்டேஸ்வரி

Read More

‘பிரசாத புத்தி’ யாருக்கெல்லாம் இருக்கு?

"இந்த உலகம் என்பது யானை என்றால், நாம் ஒரு எறும்பு போல..." என்று சொல்வார்கள். எறும்பால் எந்தக் காலத்திலும் யானையின் முழு உருவத்தை பார்க்கமுடியாது. அது இன்னதென்று புரிந்துகொள்ளவும் முடியாது. இந்த உலகம் தான் யானை. நமது அறிவு தான் எறும்பு. எனவே நடக்கும் நிகழ்வுக்கெல்லாம், காரணம் என்ன என்று ஆராய்ந்துகொண்டிருக்காமல், இறைவனிடம் பரிபூரண சராகதி அடைந்துவிடவேண்டும். அவன் எதைக் கொடுத்தாலும் இன்முகத்தோடு ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த வாழ்க்கை என்பது புதிர் நிறைந்தது.

Read More

சுந்தரமூர்த்தி சுவாமிகள் என்ற கலங்கரை விளக்கம்!

தேவாரம் தந்த திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பதிகம் பாடி நிகழ்த்திய அற்புதங்கள் யாவும் உண்மையினும் உண்மை, காலம் கடந்தும் நிற்பவை என்பதை இந்த உலகிற்கு ஆதாரபூர்வமாக எடுத்துக் கூறவேண்டும் என்பது நமது லட்சியங்களுள் ஒன்று. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் நமது தளத்தின் 'ஆலய தரிசனம்' பகுதிக்காக சுந்தரர் அவதரித்த திருநாவலூர், ஈசன் அவரை வழக்கிட்டு ஆட்கொண்ட திருவெண்ணெய்நல்லூர் உள்ளிட்ட திருத்தலங்கள் சென்று வந்தது நினைவிருக்கலாம். நீண்டநாட்களாக

Read More