Home > பக்திக் கதைகள் (Page 4)

நெல்லுக்கு வேலியிட்ட நிமலன் – அதிதி தேவோ பவ – (3)

ஆங்கிலத் தேதிப்படி இன்று அடியேன் பிறந்த நாள். பெற்றோர் காலில் விழுந்து ஆசிபெற்றுவிட்டு ஏதேனும் தொன்மையான ஆலயம் சென்று இறைவனை தரிசித்துவிட்டு அலுவலகம் சென்று இன்றைய பணிகளை கவனிப்பது மட்டும் தான் இன்று நமது அதிகபட்ச நடவடிக்கை. தமிழ் மாதத்தில் வரக்கூடிய நமது பிறந்த நட்சத்திரம் அன்று தான் பிறந்தநாளை கொண்டாடுவது நமது வழக்கம். நட்சத்திரப்படி வரும் பிறந்த நாள் தான் சரியான ஒன்று. மேலும் நமது பாரம்பரியங்களில் ஒன்று. ஆங்கிலத்

Read More

குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதை பாருங்கள்…!

வாசகர்களுக்கு வணக்கம். தீபாவளி விடுமுறைக்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றவர்களும் அலுவலகத்திற்கு நீண்ட விடுப்பு எடுத்திருந்தவர்களும் இன்று நிச்சயம் வந்திருப்பீர்கள். தீபாவளி பரபரப்பிலும் கூட நம் தளம் இடைவிடாமல் இயங்கி பல பதிவுகளை அளித்திருப்பதை பார்த்திருப்பீர்கள். சென்ற வாரம் அளிக்கப்பட்ட பதிவுகள் அனைத்தையும் தவறாமல் பார்க்கவும். ஒவ்வொரு பதிவும் அன்பும் அக்கறையம் கொண்டு உங்களுக்காக தயாரிக்கப்பட்டவை. நமது தீபாவளி முன்னெப்போதையும் விட அருமையாக ஆத்மார்த்தமாக கழிந்தது. தீபாவளியன்று குன்றத்தூரில் திருமுறை விநாயகருக்கு

Read More

ஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள் – அதிதி தேவோ பவ – (2)

தானத்தில் சிறந்ததும் உயர்ந்ததுமான அன்னதானத்தின் அவசியம் பற்றியும், மகத்துவம் பற்றியும் நாம் நம் தளத்தின் பல்வேறு பதிவுகளில் விளக்கியிருக்கிறோம். இருப்பினும் அன்னதானத்தின் மகத்துவத்தை ஒரு சில பதிவுகளில் அடக்கிவிடமுடியுமா என்ன? அன்னதானத்திற்கே உரிய தனிச்சிறப்பு என்னவென்றால் யார் வேண்டுமானாலும், எந்த சூழ்நிலையிலும் செய்யலாம் என்பது தான். பூமி தானம், வஸ்திர தானம், ஸ்வர்ண தானம், கோ தானம் முதலிய ஏனைய தானங்கள் அனைத்தும் அதற்குரிய தகுதியுடையோர் தான் செய்ய இயலும். தகுதியுடையோர்க்கு

Read More

உங்கள் கணக்கை பதிக்க வேண்டிய ஏடு எது தெரியுமா?

நமது கணக்கு வேறு இறைவனின் கணக்கு வேறு என்பதை உணர்த்தும் ஒரு அருமையான சம்பவம் இது. நமக்கு பல பாடங்கள் இதில் ஒளிந்திருக்கின்றன! மகாராஷ்டிர மாநிலத்தில் 16 ஆம் நூற்றாண்டு அவதரித்த மகான் சமர்த்த ராமதாஸர். மாவீரன் சத்ரபதி சிவாஜியின் குரு இவர். தான் வாழ்ந்த காலத்தில் பல அதிசயங்களை இவர் புரிந்திருக்கிறார். தனது யோக சக்தியின் மூலம் சத்ரபதி சிவாஜியை பல ஆபத்துக்களில் இருந்து காப்பாற்றியிருக்கிறார். பதிமூன்று அட்சரங்கள் கொண்ட ஸ்ரீராமபிரானது

Read More

அமிழ்தினும் உயர்ந்த அன்னையின் ‘வாயூறுநீர்’ நிகழ்த்திய அற்புதம்!

பாண்டிநாட்டில் புகழ்பெற்ற வைணவத் தலமாக விளங்குவது திருமோகூர். நூற்றியெட்டு திவ்யதேசங்களில் ஒன்று இது. இங்கு மடப்பள்ளியில் பரிசாரகராக (தலைமை சமையற்காரராக) இருந்தார் பெரியவர் ஒருவர். பழுத்த வைணவரான அவரது மகன் வரதன். தந்தையின் அடியொற்றி வரதனும் சமையல் கலை கற்று நளபாகமாக சமைப்பதில் வல்லவன் ஆகினான். இந்நிலையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தின் மடப்பள்ளிக்கு சமையற்காரர் ஒருவர் தேவை என்பதை அறிந்த வரதன், அங்கு பணிக்கு சேர்ந்தான். பெரிய கோவில், நல்ல ஊதியம். ஸ்ரீரங்கத்தின்

Read More

சூளைக்குள் சிக்கிய பூனைக்குட்டிகள் – பாண்டுரங்கன் புரிந்த அதிசயம்! கிருஷ்ண ஜெயந்தி SPL

இன்று ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி. கலிதீர்க்க கண்ணன் பிறந்த நாள். தன் பெருமையை பேசுவதைவிட தன் அடியவர்களின் பெருமையை பேசுவதையே இறைவன் மிகவும் விரும்புவான். எனவே இந்த இனிய நாளில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மெய்யடியார் ஒருவரது வரலாற்றை  பார்ப்போமா? "பக்தி பண்ணி பிழைக்கச் சொன்னான். பலன் கருதாமல் உழைக்கச் சொன்னான்" என்று ஸ்ரீமத் பகவத் கீதையின் சாரத்தை இரண்டே வாக்கியங்களில் கூறினார் மகாகவி சுப்ரமணிய பாரதியார். ஆனால் அப்படி பயனை

Read More

ஜகந்நாதன் சாப்பிட்ட மாம்பழங்கள் – உண்மை சம்பவம்! திருமால் திருவிளையாடல் (3)

பூரி ஜகந்நாதரின் ஆத்யந்த பக்தர்களுள் ஒருவர் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாஸியா பாவுரி. ஒரு ஏழை நெசவாளர் குடும்பத்தில் பிறந்த தாஸியா பாவுரி நெசவுத் தொழில் செய்து தான் தன் குடும்பத்தை காப்பாற்றி வந்தார். பலிகான் என்னும் கிராமத்தில் ஒரு சிறிய குடிசையில் தனது மனைவி மாலதியுடன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். பல நாட்கள் இரண்டு வேளை சாப்பாட்டை கூட இத்தம்பதியினர் சாப்பிட்டது கிடையாது. அப்போதெல்லாம் கிராமங்களில் ஒரு

Read More

திருமலை பாதயாத்திரை; அம்மன் நிகழ்த்திய அற்புதம்! ஆடி ஸ்பெஷல் (2)

அவர் ஒவ்வொரு வருடமும் இரண்டு முறை திருமலைக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர். அவருடைய குழுவில் குறைந்தது நூறு பேராவது அவருடன் பாதயாத்திரை செல்வது வழக்கம். அதில் பத்து பதினைந்து பெண்களும் அடங்குவர். சென்ற ஆண்டு இதே நேரம் அவர் தனது குழுவினருடன் பாதயாத்திரை மேற்கொண்டபோது அலமேலுமங்காபுரத்திற்கு நான்கைந்து கிலோ மீட்டர்கள் முன்னே 'பிராமணப்பட்டு' என்னுமிடத்திற்கு வரும்போது உடன் வந்த இரண்டு பெண்கள் மேற்கொண்டு நடக்க முடியாமல் சிரமப்பட்டனர். எனவே அங்கு ஒரு

Read More

ராமநாமத்தின் விலை!

அண்மையில் நாம் படித்து ரசித்து வியந்த கதை இது. நாம் எழுதுவதற்கே எண்ணற்ற பதிவுகள் இருக்கும்போது பிற தளங்களில் இருந்து பதிவுகள் எதையும் நாம் மீள்பதிவு செய்ய விரும்புவதில்லை. மேலும் நமது நமது தளத்தின் தனித்தன்மை நமது பிரத்யேக ஆக்கங்களே என்பதை நாம் அறிவோம். இருப்பினும் வேறு எங்கேனும் நல்ல பதிவோ விஷயங்களோ படிக்க நேர்ந்தால் அதை நம் வாசகர்களிடம் பகிர்ந்துகொள்ள தயங்குவதில்லை. அந்த வகையில் இது ஒரு அற்புதமான கதை! 'தினமும் காலை, நாராயண

Read More

ஆடியின் சிறப்பு & துர்முகனை வதைத்த சதாக்ஷி – ஆடி ஸ்பெஷல் (1)

இந்த ஆடி மாதம் முழுதும் தேவியின் மகாத்மியத்தை பறைசாற்றும் சிறப்பு பதிவுகள் வெளியாகும். சொன்னதையே சொல்லாமல் புதிதாக ஏதேனும் சொல்லவேண்டும் என்று விரும்புகிறோம். கீழே தேவியின் புனித சரிதம் ஒன்றை அளித்திருக்கிறோம். இதை கேட்பவர், படிப்பவர், பிறருக்கு சொல்பவர் யாவரும் எல்லா நன்மைகளையும் பெற்று, சகல விருப்பங்களும் ஈடேறி தேவியின் உலகை அடைவார்கள் என்பது உறுதி. (ஆடியின் சிறப்புக்களை ஏற்கனவே நமது தளத்தில் அளித்த பதிவுகளில் இருந்தும் இதர பல மூலங்களில் இருந்தும்

Read More

பக்தனுக்காக தேரோட்டத்தை நிறுத்திய ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (2)

புருஷோத்தம ஷேத்ரம் எனப்படும் பூரியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஜகந்நாதர் தன் அடியவர்கள் வாழ்வில் நிகழ்த்திய திருவிளையாடல்களின் தொகுப்பு இந்த குறுந்தொடர். சென்ற அத்தியாயத்தில் மனோகர் தாஸ் என்னும் அடியவரிடம் ஜகந்நாதர் நிகழ்த்திய திருவிளையாடலை கண்டோம். தற்போது ரசிக முராரி என்ற பக்தரிடம் அவர் நிகழ்த்திய திருவிளையாடலை காண்போம். ஒரிஸ்ஸாவில் உள்ள பாலசோர் மாவட்டத்தில் பாயும் சுபர்ணரேகா என்னும் நதி தீரத்தில் அமைந்துள்ள ரோகினி நகர் என்னும் ஊரில் 1590 ல் பிறந்தவர் ரசிக முராரி

Read More

விரட்டப்பட்ட பக்தர், தடுத்தாட்கொண்ட பூரி ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (1)

லீலைகளிலும் திருவிளையாடல்களிலும் பெயர்பெற்றவர் சிவபெருமான் மட்டுமல்ல மகாவிஷ்ணுவும் தான். தெற்கே திருவரங்கம், மேற்கே பண்டரிபுரம், கிழக்கே திருமலை திருப்பதி, வடக்கே பூரி என்ற இந்த நான்கு ஷேத்ரங்களிலும் அவர் பக்தர்களிடம் நிகழ்த்திய லீலைகளும் திருவிளையாடல்களும் எண்ணிலடங்கா. ஈசன் மதுரையை மையமாக கொண்டு நிகழ்த்திய திருவிளையாடல்கள் சுமார் 1500 ஆண்டுகளுக்கும் பழமையானவை. சம்பந்தர் மற்றும் நாவுக்கரசர் காலத்துக்கு முந்தியவை. ஆனால் திருமால் நிகழ்த்திய திருவிளையாடல்கள் யாவும் அதற்கு பிந்தியவை. அதாவது கி.பி.

Read More

எது நிஜமான பக்தி?

சமீபத்திய 'சக்தி விகடன்' இதழில் படித்த கதை இது. சிறிய கதை தான். ஆனால் வலுவான மெசேஜ். அதுவும் குருவாரத்தில் பகிர்வதற்கு ஏற்றாற்போல் குருவின் உபதேசத்துடன் சேர்ந்து இருந்ததால் இங்கே பகிர்கிறோம். பிளஸ்டூ தேர்வுக் காலம் துவங்கி முடிவுகள் வரும் வரையிலும் பக்திப் பழமாகத் திகழ்ந்தான் பக்கத்து வீட்டு பார்த்தசாரதி. விடியற்காலையில் தெருமுக்கு பிள்ளையாருக்கு 108 தோப்புக்கரணம், வீட்டில் பூஜையறையில் உட்கார்ந்து அனுமனிடம் பிரார்த்தனை, மாலையில் சிவாலயத்தில் நவகிரக தரிசனம்... மற்றபடி

Read More

பாண்டுரங்கன் சுமந்த மூட்டை!

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பண்டரிபுரம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு தலமாகும். மதுரையில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரப் பெருமான் எப்படி எண்ணற்ற திருவிளையாடல்களை நிகழ்தியுள்ளாரோ அதே போன்று பண்டரிபுரத்தில் எழுந்தருளியிருக்கும் பாண்டுரங்கன் எண்ணற்ற லீலைகள் நிகழ்த்தியுள்ளார். சோமசுந்தரக் கடவுள் நிகழ்த்திய லீலைகள் யாவும் 1100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை. ஆனால் பண்டரிபுரத்தில் பாண்டுரங்கன் நிகழ்த்தியுள்ள லீலைகள் யாவும் வெகு சமீபத்தில் அதாவது 14 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு

Read More